|
||||
|
பல்லின மக்கள் வாழும் இலங்கையில்
தமிழ், சிங்கள மொழியறிவின்
அவசியம்
சுதந்திர
இலங்கைக்கு
பின்னரான
காலகட்டங்களில்
மொழி ரீதியான
பிரச்சினைகள்
பல ஏற்பட்டன. அதன் காரணமாக
இனங்களுக்கிடையிலான
புரிந்துணர்வின்மை
ஏற்பட்டது.
இருப்பினும் அண்மையக்
காலங்களில்
மாற்றுத்திட்டங்கள்
முன்வைக்கப்பட்டன.
அவ்வாறு முன்வைக்கப்பட்ட
திட்டங்களுக்குள்
முதன்மையானது
மொழி பற்றியதாகும்.
அந்த வகையில்
மொழி உரிமை
மிகவும் காத்திரமான
ஒரு செயற்பாட்டுக்கு
வித்திட்டது
எனலாம். தமிழ் பேசும்
மக்களின்
மொழி தொடர்பான
உரிமைகள்
மறுக்கப்பட்டு
மீறப்படுகின்ற
சந்தர்ப்பங்கள்
முன்னர் ஏற்பட்டன.
பின்னர் சிறுபான்மைச்
சமுதாயத்தின்
மொழி உரிமை
அரசியல் அமைப்புச்
சட்டத்தின்
பிரகாரம்
சீர் செய்யப்பட்டுள்ளது. 1978
ஆம் ஆண்டின்
அரசியலமைப்பில்
மொழி உரிமையானது
அடிப்படை
உரிமையாக
கொள்ளப்படுகிறது. அரசியலமைப்பின் 111 ஆம் அத்தியாயத்தின்படி
அடிப்படை
உரிமைகள்
பற்றிய ஏற்பாடுகளை
இது கொண்டுள்ளது.
சமத்துவத்திற்கான உரிமை, கலாசார உரிமை, மொழி
உரிமை ஆகியன அடிப்படை
உரிமைகளாகக்
கொள்ளப்படுகின்றன. அதாவது
சமத்துவத்திற்கான
உரிமைகள்
பற்றிய ஏற்பாட்டின்
பிரகாரம்
சட்டத்தின்
முன் அனைவரும்
சமமானவர்கள்
சட்டத்தினால்
சமமாகப் பாதுகாக்கப்பட
உரித்துடையவர்கள். இனம், மொழி, சமயம் போன்ற
காரணங்களினால்
எவருக்கும்
பாரபட்சம்
காட்டக்கூடாது. உயர்
பதவியில்
சேவையாற்றுகின்ற
போது தாய்மொழி
தவிர்ந்த
ஏதேனும் ஒரு மொழியை
அறிந்திருத்தல்
அவசியமானது. சர்வதேச
சாசனங்கள்
மொழி உரிமை
மற்றும் மொழி அடிப்படையிலான
பாகுபாட்டிற்கு
எதிரான சுதந்திரம்
என்பன பற்றிய ஏற்பாடுகளைக்
கொண்டுள்ளன. 1978
ஆம் ஆண்டின்
அரசியலமைப்பின்
1V ம் பிரிவின்படி
மொழி என்ற
தலைப்பில்
மொழி உரிமைகள்
பற்றிய ஏற்பாடுகளைக்
கொண்டுள்ளது. அரசியலமைப்பு 13வது திருத்தச்
சட்டமும்,
16 வது திருத்தச்
சட்டத்தின்படியும்
தமிழ் மொழியின் அரசியலமைப்பு
தொடர்பான
முன்னேற்றகரமான
ஏற்பாடுகளை
அறிமுகப்படுத்தி
நின்றன. தமிழ் மொழியானது
அரசகரும மொழி, தேசிய
மொழி, பாராளுமன்ற,
மாகாண சபை மற்றும்
உள்ளூராட்சி
சபை மொழி,
கல்வி மொழி, நிருவாக
மொழி, சட்டவாக்க
மொழி, நீதிமன்ற
மொழி ஆகியன
அரசியலமைப்பு
அந்தஸ்தினை
கொண்டுள்ளன. சிங்களமும்
தமிழும் அரசகரும மொழிகளாக உள்ளன. ஆங்கிலம் இணைப்பு
மொழியாகவும்
தேசிய மொழிகளாக சிங்களமும்
தமிழும் உள்ளன. ஆதலால் பாராளுமன்றத்திலும்,
மாகாண சபை, உள்ளூராட்சி
சபைகளிலும்
அதன் உறுப்பினர்கள்
தேசிய மொழியில் கடமையாற்றுவதற்கான
உரிமை கொண்டவர்களாகக்
காணப்படுகின்றனர்.
எந்தவொரு நபரும்
எந்தவொரு
தேசிய மொழியிலும்
கல்வி கற்பதற்கு
உரித்துடையவராவார்.
அரச பல்கலைக்கழகத்தில்
தனது கற்கையினை
ஏதேனும் ஒரு தேசிய
மொழியில்
கற்கவும்
(அவர் விரும்பும்
தேசிய மொழி அந்த
நிறுவனத்தில்
அமைந்திருக்க
வேண்டும்)
உரித்துடையவராவார். மேலும் பகிரங்க சேவை, நீதித்துறை,
மாகாண பகிரங்கச்
சேவை, உள்ளூராட்சி
சேவை அல்லது
ஏதேனும் பகிரங்க நிறுவனத்திற்கு
ஆட்களைச்
சேர்த்துக்
கொள்வதற்கான
ஏதேனும் பரீட்சை ஒன்றில் தேசிய மொழி
ஒன்றில் தோற்ற உரிமை
பெற்றவராகவும்
கணிக்கப்படுகின்றார்.
ஆயினும் அவரது கடமையை நிறைவேற்ற
ஏதேனும் தேசிய மொழியை
அறிந்திருத்தல்
அவசியமாயின்
அம்மொழியிலான
தகைமையைத்
தேடிக் கொள்வதும்
நன்று எனக் கூறப்படுகிறது. மேலும் சிங்களமும்,
தமிழும் நாடு முழுவதுக்குமான
நிருவாக மொழிகளாக இருப்பதுடன்,
வடக்கு, கிழக்கு மாகாணம் தவிர்ந்த இலங்கையின்
எல்லா மாகாணங்களிலும்
சிங்களம்
நிருவாக மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன்
பொதுப் பதிவேடுகளை
பேணுவதற்கும்,
பகிரங்க நிறுவனங்களில்
அலுவல்களை
சிங்கள மொழியில் நடத்துவதற்கும்
உரித்துடையன
எனவும் மேலுள்ள அத்தியாயத்தில்
கூறப்படுகின்ற
விடயங்களாகும். இதற்காகத்தான் இன்றைய பாடசாலைக்
கலைத்திட்டத்தில்
குறிப்பாக
ஆரம்ப வகுப்புக்களில்
மொழிப் பாடத்தின்
மீதான கண்ணோட்டங்களுக்கு
அதிக அக்கறை
செலுத்தப்பட்டு
வருகின்றது.
தாய் மொழியின்
மீதான பற்று உரிய
முறையில்
மாணவர்களுக்கு
ஊட்டப்படுவதுடன்,
இணைப்பு மொழியான ஆங்கிலத்தை
ஒவ்வொரு மாணவர்களும்
அறிந்து கற்றுணர வேண்டும் என்பதற்காகவே
செயற்பாட்டு
அடிப்படையிலான
வாய்மொழி
ஆங்கிலம்
தரம் ஒன்றிலிருந்தே
பயன்பாட்டில்
உள்ளது. இதன்
மூலம் அனைத்து மாணவர்களும்
ஆங்கிலத்தைப்
பயன்படுத்துதல்
தொடர்பான
அனுபவத்தைப்
பெறுகின்றனர். இதன் மூலம் மொழியின் அவசியம் ஆரம்பப்பருவத்தில்
உணர்த்தப்படுவதை
அவதானிக்கலாம். அது மட்டுமன்றி
இரண்டாம்
மொழி என்கிற
அடிப்படையில்
தமிழ் பேசுகின்றவர்களுக்கு
சிங்களமும்,
சிங்களத்தை
தாய்மொழியாக
கொண்டவர்களுக்கு
தமிழும் பாடசாலைகளில்
ஆரம்ப மட்டத்திலிருந்து
கற்பிக்கப்படுகின்றன.
இவ்வாறு இரண்டாம்
மொழி கற்பதன்
ஊடாக நாம்
இலங்கையர்
என்ற உணர்வு
வலுவடையும்.
தம்முடன்
வாழும் சகோதர மக்கள்
பயன்படுத்தும்
மொழியைக்
கற்று ஒருவரோடு ஒருவர் புரிந்துணர்வுடன்
செயற்படக்கூடிய
திறனை மாணவரிடத்தே
விருத்தி
செய்யும்
நோக்கைக்
கொண்டதாகவும்
அமையும். மேலும் உயிரோட்டமான
தேசிய ஒருமைப்பாட்டையும்
தேசிய ஒற்றுமையையும்
ஏற்படுத்துவதற்கு
அவசியமான
ஆரம்ப அடித்தளத்தை
இடுவதற்குமாக
இரண்டாவது
தேசிய மொழியை ஒவ்வொருவரும்
கற்றல் உறுதுணையாகுமென
எதிர்பார்க்கப்படுகிறது.
இது பிரச்சினைக்கு
தீர்வாகவே
அமைந்துவிடும்
என்பதனால்தான்
தேசிய மொழிகளை தேசமக்கள்
அனைவரும்
கற்றுக்கொள்வதற்கான
அடிப்படைகள்
பாடசாலை மட்டத்தில்
மொழித்தினங்கள்
போன்றன ஊடாகவும் இன்று முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறாக
இலங்கையில்
காணப்படுகின்ற
மொழியின்
உரிமைகள்
மீதான கண்ணோட்டத்தின்
பிரகாரம்
நமது தாய்
மொழியான தமிழுக்கும்
சம அந்தஸ்து
வழங்கப்பட்டுள்ளது. இன
நல்லுறவுக்கான
ஆரம்பம் மொழி ஆகும். அமைச்சர் வாசுதேவ
நாணயக்கார
அனைவரும்
இரண்டு மொழிகளைக்
கற்பதன் அவசியம், மும்மொழியிலான
பெயர்ப் பலகைகள் போன்றவற்றை
அமுல்படுத்துவதன்
அவசியத்தை
குறிப்பிட்டு
வருகின்றார்.
இவை வெற்றியளிக்கின்றபோது
நிச்சயம்
இன விரிசலுக்கான
சந்தேகப்
பார்வை இல்லாமலாகி
விடும் என்பதில் சந்தேகமில்லை. எனவேதான், நாட்டின் இன்னொரு பிரிவினர்
பேசுகின்ற
சிங்கள மொழியை நாமும், தமிழ் மொழியை
சிங்களவரும்
சரியான முறையில் கற்றுத் தேறுகின்ற
போது கடந்த
காலங்களில்
நாட்டில்
ஏற்பட்டிருந்த
தப்பபிப்பிராயங்கள்
இனிவரும்
காலங்களில்
ஏற்படாதிருக்கும்.
இன்று ஆங்கில
மொழி உயர்தரம்
கற்பதற்கும்,
பல்கலைக்
கழக மட்டத்தில்
பாடங்களைக்
கற்றுக்கொள்ளவும்
தேவையான ஒன்றாக காணப்படுறது.
ஆதலால்தான்
மாணவர்கள்
பாடசாலைகளில்
மொழியறிவினை
உதாசீனம்
செய்யாது
மொழியின்
அவசியத்தை
உணர்ந்து
உலக பொது
மொழியான ஆங்கிலத்தையும்
சரியான முறையில் கற்றுணர்கின்ற
போது நாமும்,
நாடும், நமது எதிர்காலமும்
சிறப்பாய்
அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும்
இல்லை. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |