Contact us at: sooddram@gmail.com

 

கிழக்கிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் மக்களின் அவமானச்சின்னம் இரா சம்பந்தன்.

திரு இரா சம்பந்தனால் அண்மைக்காலமாக அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகங்களின் நிகழ்வுகளும், நினைவுகளும்.

அண்மைக்காலமாக  தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே எனக்கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபியாக்கள் (பிரபாகரனின் தலைமையில் உருவான பயங்கரவாதிகளாவர்) தமிழ் மக்களின் வாக்குகளை காலத்திற்கு. காலம் ஐ.தே.கட்சியினருக்கு குத்தகைமுறையில் விலைபேசி விற்பனை செய்யும் நிகழ்வுகள் திரு சம்பந்தனின் தலைமையில் இடம்பெறுகின்றது. ஏற்கனவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளென தம்மை அறிமுகப்படுத்திய அரசியல்வாதிகள் எவராலும் மேற்கொள்ளப்படாத வாக்கு விற்பனை இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபியாக்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் (10.05.2008ல்) இடம்பெற்றபோது தமிழ் மாபியாக்களால் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் ஒரு சாராரின் வாக்குகள் பல மில்லியன் ரூபாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு விற்கப்பட்டபோதும் அவ்விடயம் தோல்வியிலேயே முடிவுற்றது. அதனைத் தொடர்ந்து பிரபாகரனின் மறைவிற்குப் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாபியாக்கள் ஐ.தே.கட்சியினருடனும். திரு சரத் பொன்சேகா அவர்களுடனும் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைக்கமைய பல மில்லியன் டொலர்களுக்கு தமிழ் மக்களின் வாக்குகளை விலைபேசி வடக்கு. கிழக்கிலுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் மேடைகளமைத்து சரத் பொன்சேகாவின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்தனர். மேற்படி அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவுற்றபோதும் பல மில்லியன்  டொலர்களுக்கு சம்பந்தனும். சகாக்களும் உரிமையாளர்களாயினர்.

இன்று மீண்டும் கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினை தேர்வு செய்வதற்கான தேர்தல் இடம்பெறும் நிலையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினருடன் இணைந்து ஆட்சி அமைக்கப் போகின்றோமென கூறிய சம்பந்தன் மறு நாளே ஐக்கிய தேசியக் கட்சியினருடன் இணைந்து ஆட்சி அமைப்போமென தெரிவித்திருக்கின்றார்.

அவ்வாறாயின் சம்பந்தன் கூறும் சிங்களப் பேரினவாதிகள் யார்.?  அது வேறுயாருமல்ல சம்பந்தனுடன் இணைந்து தமிழ் மக்களின் வாக்குகளை கொள்வனவு செய்வதற்கு சம்மதம் தெரிவிக்காத திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரே தவிர. தமிழ் மக்களின் நிரந்தர எதிரிகளான ஐக்கிய தேசியக் கட்சியினர் அல்ல என்பது தெளிவாகின்றது. அதற்கமையவே கடந்த மே மாதம் முதலாந் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின விழாவின்போது இலங்கையின் தேசியக் கொடியான சிங்கக் கொடியினை தமது கைகளில் ஏந்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்கா அவர்களுடன் கை கோர்த்து தமது ஏகாதிபத்திய அடிவருடித் தனத்தினை இலங்கை வாழ் மக்களுக்கு சம்பந்தன் பகிரங்கமாகவே வெளிக்காட்டினார்.

 

இதுபோன்ற சம்பவங்களை ஏற்கனவே தமிழ் மக்களின் தலைவர்களென தம்மை அறிமுகப்படுத்திய எவரும் மேற்கொண்டதாக வரலாறு கிடையாது. சம்பந்தனின் அரசியல் வரலாறுகள் அனைத்தும் பணத்தினை குறிக்கோளாகக் கொண்டதேயன்றி மக்களின் நலன்சார்ந்ததல்ல என்பதனை தமிழ் மக்கள் அறிந்து கொள்வதற்காகவே இக்கட்டுரையினை நாம் வெளியிட்டுள்ளோம்.

 

கிழக்கு மாகாண சபை ஆட்சியை த.தே.கூ கைப்பற்றினால் எவரும் உதாசீனம் செய்யமுடியாத நிலை ஏற்படும்‘ சம்பந்தன் 12 .08.2012

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தால் அல்லது கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றினால் அது ஒரு திருப்பு முனையாக அமையும் என்றும் மற்றும் எவரும் எம்மை உதாசீனம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று முக்கிய வெளிநாடு ஒன்றின் தூதுவர் ஒரு சந்திப்பின்போது தெரிவித்தார்’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை புறநகர் பகுதியான பாலையூற்று முருகன் கோவில் வீதியில் நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசுகையில் இத்தகவலை வெளியிட்டார்.

முஸ்லிம் மக்களுடன் திடீரென முளைத்த நல்லிணக்கப்பாடு உலகத் தலைவர்களை துணைக்கு அழைத்து இரா. சம்பந்தன் பேச்சு தேர்தல் காலத்தில் மட்டுமே பிறக்கும் ஞானோதயம் (05.08.2012)

முஸ்லிம் மக்களுடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுவது இலகுவாக இருக்கும் என்று உலகத்தலைவர்கள் சிலருட னான சந்திப்பின்போது எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையிலேயே நாம் இன்று பேசி வருகின்றோம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷ்ரப்புடன் அன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது வடக்கு மாகாணத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை ஒன்றையும் கல்முனை சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளை இணைத்து தென்கிழக்கு மாகாண சபை ஒன்றையும் உருவாக்குவது பற்றி ஆரா யப்பட்டது.

அதன்படி வடக்கு மாகாண சபைக்கு தமிழ் முதலமைச்சராகவும் முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்றும் தென்கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச் சராகவும் தமிழ் ஒருவர் பிரதி முதலமைச்சராக வும் இருக்க வேண்டும் என்று அப்பேச்சு வார்த்தையின் போது பிரஸ்தாபிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற முஸ்லிம் களுடன் ஒற்றுமையாக வாழக்கூடியதாக தாராளமாக விட்டுக்கொடுத்து நீண்ட கால அரசியல் அபிலாசைகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதுமானதும் மற்றும் நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றை காண விரும்புகின்றோம்” என தெரிவித்தார். தொடர்ந்து 10 நாட்களின்பின்னர் வெளியிடப்பட்ட கருத்து

Sri Lanka Tamil party confident in setting up an administration with UNP in the East Thu, Aug 16, 2012, 11:01 am SL Time, ColomboPage News Desk, Sri Lanka.

Aug 16, Colombo: Sri Lanka’s major Tamil party, the Tamil National Alliance (TNA) has expressed confidence in setting up an administration in the Eastern provincial Council that will be led by the opposition political parties.

TNA Leader R. Sampanthan has said the TNA and the main opposition United National Party (UNP) together would be able to form an opposition-led administration in the Eastern Provincial Council following next month’s election. He has predicted that the TNA was likely to get 13 seats in the Eastern elections and if the UNP wins seven seats, the two parties could join forces and form the administration in the Council.

There are 35 seats in the Eastern Provincial Council and a majority would mean over 17 seats. According to Sampanthan’s calculation, the TNA and the UNP together would have 20 seats in the Council. Sampanthan has expressed these sentiments during a meeting with the Tamil Welfare Association in Trincomalee.

கல்வித்துறை குளறுபடிகளே பயங்கரவாதத்திற்கு வழிவகுத்தன: ரணில் விக்கிரமசிங்க  20. 08. 2012 (1977—1981—1983)களில் ஐ.தே.கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட கலவரத்தினையும். படுகொலைகளையும் அவர் மறந்துவிட்டார்.

 

கல்வித்துறையில் ஏற்பட்ட குளறுபடிகளே இலங்கையில் பயங்கரவாதத்திற்கு வழிவகுத்த பிரதான காரணி  என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று கூறினார்.பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவாக முடியாத நிலையிலேயே வடக்கில் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது என்பதை அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

“1973. 1974. 1975 ஆம் ஆண்டுகளில் இது நடந்தது. அரசாங்கம் இதை மனதில் கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் வடபகுதி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாத நிலையால் பெரும் குழப்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருந்ததாகவும் வசதியுடைய பெற்றோர் தமது பிள்ளைகளை பிரிட்டனுக்கு கல்வி கற்க அனுப்பியதாகவும் கூறினார்.

“ஈழ மாணவர் பொது ஒன்றியம் மற்றும் ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) முதலாவது மாணவர் அமைப்புகளாகின. அவர்கள் இரு பிரிவினராக பிரிந்தனர். அதுவரை தமிழர் போராட்டம் அரசியல் தலைமைத்துவத்தினால் கையாளப்பட்டது. இளைஞர்கள் அதில் ஈடபடவில்லை’ என அவர் கூறினார். தனது சகாவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும் பிரிட்டனில் கல்வி கற்ற ஒருவர் எனவும் பலஸ்தீனத்தில் ஆயுதபயிற்சி பெறுவதற்காக கல்வியை கைவிட்டவர் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் அளித்த வாக்குகளின்மூலம் பாராளுமன்ற பலகணியில் அமர்வதற்கான வாய்ப்பினை தமதாக்கிக் கொண்ட எம்.ஏ சுமந்திரன் அடுத்து வரும் தேர்தலில் அந்தப்புலுடா பலிக்காது என்பதனை அறிந்துவிட்ட நிலையில் கொழும்பில் தற்சமயம் காலியாக இருக்கும் ரீ. மகேஸ்வரனது இடத்தினையும். புலிகளின் கொழும்பு மாவட்ட அன்றைய தரகரான மனோ கணேசனது இடத்தினையும் ஏதோ ஒன்றினை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் அவர்களால் வடகிழக்கில் பட்டம் சூட்டப்பட்ட பேரினவாதிகளின் அனுசரணையுடன் (ரணில்) தற்போதே களமிறங்கியுள்ளார்.

ஏழு வருடங்களுக்குள்(1977—1983) மூன்று இனக்கலவரங்களை இலங்கையில் உருவாக்கி பல்லாயிரக்கணக்கான தமிழ மக்களின் உயிர்களை பலிகொண்டு. சொத்துக்களையும் சூறையாடிய  ஐ.தே.கட்சியினரும். அவர்களின் செல்லப்பிள்ளைகளும்.

 1 ஆட்சியமைத்து ஒரு வாரகால இடைவெளியில் (04.08.1977 –12.08.1977) முதலாவது இனக்கலவரம்.

2 (31.05.1981) இரண்டாவது இனக்கலவரம்

3. 1983ல் நடாத்த வேண்டிய பொதுத் தேர்தலை நடாத்தாது ஜனநாயக மரபுகளை உதாசீனஞ்செய்து சர்வஜன வாக்கெடுப்பு என்னும் பெயரில் ஓர் தேர்தலை (22.12.1982ல்) நடாத்தி மேலும் ஆறு வருடகாலங்கள் (8) உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியுடன் ஆட்சியினை தொடர்ந்தனர்.

3 (25.07.1983) மூன்றாவது இனக்கலவரம்

இக்கலவரங்கள்பற்றி எம்மால் வெளியிடப்பட்டுள்ள (இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும் என்னும் 516 பக்கங்களைக்கொண்ட) நூலில் விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் குடா நாட்டிற்கான பொருளாதாரத் தடை. யாழ் நூல் நிலையம் தீயிட்டு எரிக்கப்பட்டமை. வெலிக்கடை படுகொலைகள். ஐ.தே.கட்சியின் ஆட்சியின்போது படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளின் விபரங்கள் போன்ற பல அடாவடித்தனங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

இலங்கை அரசியலில் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக செயலாற்றி மக்களை ஏமாற்றிய ஆரம்பகால தலைவர்களின் வரலாறு.

 தமிழ் மக்களின் தலைவர்களென தம்மை அறிமுகம் செய்து கடந்த (30) முப்பது ஆண்டுகாலமாக (1947—1977) அரசியல் நடாத்திய திரு ஜி.ஜி பொன்னம்பலம். திரு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் மறைவினைத் தொடர்ந்து தமிழர்களின் தலைமையினைப் பொறுப்பேற்ற திரு அப்பாப்பிள்ளை. அமிர்தலிங்கம். திரு முருகேசு சிவசிதம்பரம் போன்றவர்கள் வழிநடாத்தியபோதும் தமிழ் மக்களின் நலன்சார்ந்த எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கமுடியாது தத்தமது வாழ்க்கையினை நிறைவு செய்தனர்.  மேற்கூறியவர்களில் முன்னைய இருவரும் தமது வதிவிடமாக கறுவாக்காட்டினை தளமாகக்கொண்டு தேர்தல் காலங்களில் மட்டும் யாழ் குடாநாட்டீல் பிரசன்னமாவதனையே வழமையாக்கிக்கொண்டு செயற்பட்டனர். பின்னையவர்கள் இருவரும் இலங்கையின் தலை நகரமான கொழும்பிலும். யாழ்ப்பாணத்திலுமென விமானப் பயணங்களை மேற்கொண்டு தத்தமது அரசியலை நடாத்தினர்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கென ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தமிழ் அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயலாற்றிய திரு ஜி.ஜி். பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலேயே திரு செல்வநாயகம் அவர்களும் ஏனைய நான்கு உறுப்பினர்களும் இலங்கையில் இடம்பெற்ற முதலாவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வடமாகாணத்திலிருந்து கட்சிரீதியாக தெரிவாகி பாராளுமன்றம் சென்றிருந்தனர். ஊர்காவற்றுறை. சாவகச்சேரி. மன்னார். வவுனியா ஆகிய தொகுதிகளிலிருந்தும் நால்வர் சுயேச்சையாக களமிறங்கி வெற்றியீட்டியதன்மூலம் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையிலேயே திரு டி.எஸ் சேனநாயக்கா அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட முதலாவது பாராளுமன்ற ஆட்சிக்காலத்தின்போது இலங்கையின் மத்திய பிரதேசமான மலையகப் பிரதேசங்களில் தோட்டப்பயிர்ச்செய்கையினை மேற்கொண்டிருந்த இந்திய வம்சாவழி மக்கள் (975.000) மக்களின் வாக்குரிமையும். குடியுரிமையும் இல்லாதொழிக்கப்பட்டது. மேற்படி சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தமிழ் காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த (04) நால்வர் ஆதரவாக வாக்களித்த நிலையில் எஸ். ஜே.வி. செல்வநாயகம். எஸ். சிவபாலன் ஆகிய இருவர் மட்டும் பிரேரணையினை எதிர்த்து வாக்களித்தனர். மற்றும் கு வன்னியசிங்கம். வி. குமாரசாமி. சி.சிற்றம்பலம். சி. சுந்தரலிங்கம் ஆகியோர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது  ஒதுங்கிக்கொண்டனர். இவ்விடயம் தொடர்பான மேலதிக விபரங்களை அடுத்த கட்டுரையில் தெரிவிக்கின்றோம்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினரே அன்றைய இனவிகிதாசாரத்திற்கமைய இலங்கையில் வாழ்ந்த மொத்த தமிழ் மக்களில் (53%) தமிழர்களின் வாக்குரிமையினை இல்லாதொழித்தமைக்கு பிரதான பங்காளிகள் என்பது உறுதிசெய்யப்பட்டது. மேற்படி சட்டமூலத்தினை ஆதரிக்க விரும்பாத ஐ. தேகட்சியின் உறுப்பினர்கள் (07) பேர் வாக்களிப்பில் பங்குபற்ற விரும்பாது வெளிநடப்புச் செய்தநிலையிலேயே தமிழர்களின் பாதுகாவலர்களாக புறப்பட்ட வடபகுதி அரசியல்வாதிகள் மந்திரிப்பதவிக்காக உடன்பிறப்புக்களான தமிழர்களின் வாக்குரிமையையும். குடியுரிமையையும் இல்லாதொழிப்பதற்கு அனுசரணை வழங்கியமையை எவ்வாறு நாம்விபரிப்பது.

பின்னையவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளைப் பயன்படுத்தி தத்தமது பொருளாதார வசதிகளை மேம்படுத்தினார்களே தவிர தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக வரலாறு கிடையாது. மாறாக வடமாகாண அரசியல்வாதிகள் அனைவரும் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளான ஐக்கிய தேசியக் கட்சியினரின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகவும். இடது சாரிக்கொள்கையினை தமது அரசியலாகக்கொண்ட எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் இணக்கப்பாட்டுடன் இணைந்து பணியாற்ற விரும்பாதவர்களாகவே செயற்பட்டுள்ளனர்.

உதாரணமாக 1956ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திரு எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்களின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி (51) ஆசனங்களை பாராளுமன்றத்தில் பெற்றதற்கமைய அரசாங்கத்தினை திரு பண்டாரநாயக்கா அவர்களின் தலைமையில் அமைத்தது. அரசாங்கம் அமைத்து இரு மாதகால இடைவெளியில் அதாவது (15.06.1956ல்) இலங்கையின் அரச நிர்வாக மொழி சிங்களம் என்னும் சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றினார்.

குறிப்பு— இலங்கையின் இனரீதியான புள்ளிவிபரங்களுக்கமைய 1960ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள மக்களின் விகிதாசாரம் (72%) வீதமாக அமைந்திருந்தது. மேற்படி சிங்கள மொழி அரசகரும மொழியாக்கப்பட்டபோது இலங்கையின் ஆட்சி மொழி ஆங்கிலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்தமை முக்கியமானதாகும். 1933ம் ஆண்டு அன்றைய அரசாங்க சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய ஆங்கிலம் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண அரசியல் தலைமைகள் தமிழ் மொழி பற்றி வாய் திறக்கவேயில்லை காரணம் அது அவர்களுக்கு தேவையற்ற ஒன்றாகவே காணப்பட்டது. அன்று வெள்ளையரின் ஆட்சியில் அரச இயந்திரத்தின் இயக்குனர்களாக செயற்பட்ட தமிழர்களுக்கே தமிழ் அறிவு பற்றாக்குறையாகவும். ஆங்கில மொழியில் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அவர்கள் இருந்தமையால் அவர்களுக்கு சாதாரண பொதுமக்கள்பற்றிய சிந்தனை அவர்களின் உள்ளங்களில் துளிகூட குடிகொண்டிருக்கவில்லை.

ஆனால் நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களாக அன்று இருந்த சிங்கள மக்கள் எதற்காக அன்னிய மொழியினை தமது தாய் மொழியாக ஏற்கவேண்டும் எனச் சிந்திப்பது நியாயமானதே!

 1956ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்  தேர்தல் பிரச்சாரங்களின்போது பின்வரும் வாக்குறுதிகள் திரு பண்டாரநாயக்கா அவர்களால் சிங்கள மக்கள்முன் வைக்கப்பட்டது.

1 தாம் ஆட்சியமைத்ததும் திருகோணமலை துறைமுகத்தில் நிலைகொண்டிருக்கும் பிரித்தானியரின் கடற்படையினரை ஒரு மாதகால இடைவெளியில் அங்கிருந்து அகற்றுவேன்.

2 கட்டுநாயக்க விமானத்தளத்தில் நிலைகொண்டிருக்கும் பிரித்தானியரின் விமானப்படையினரும் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

3.இலங்கையின் ஆட்சி மொழியாக கடைப்பிடிக்கப்படு்ம் ஆங்கில மொழியினை 24 மணித்தியாலங்களுக்குள் அகற்றி சிங்கள மொழியினை இலங்கையின் ஆட்சி மொழியாக பிரகடனப்படுத்துவேன் என வாக்காளர்களுக்கு உறுதி மொழி வழங்கினார்.

மேற்கூறிய மூன்று விடயங்களும் அவரின் ஆட்சியின்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் ஆங்கில மொழியில் கல்வி பயிற்றுவிக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷனரிகள் அனைத்தும் சுவீகரிக்கப்பட்டு அங்கு சுய மொழிகள் அதாவது (சிங்களம். தமிழ்)ஆகிய மொழிகள் கற்பிப்பதற்கான நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டன.

இந்நிலையில் ஏகாதிபத்தியங்களின் செல்லப்பிள்ளைகளாக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டதே 1956ம் ஆண்டு இனக்கலவரமாகும். இக்கலவரத்தின்போது காலி முகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடாத்தியவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களே என்பதும் அன்று நிரூபணமான விடயமே! ஏற்கனவே திரு ஜே.ஆர் ஜயவர்தனா அவர்கள் அரசாங்க சபையில் அங்கம்வகித்தபோது (1944ம்) ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்னும் பிரேரணையினை முதன் முதலாக  சபையில் சமர்ப்பித்தபோது அப்பிரேரணை அங்கீகரிக்கப்படாது தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள மொழியினை அரசகரும மொழியாக பிரகடனப்படுத்திய திரு பண்டாரநாயக்கா அவர்கள் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலையினை கருத்தில்கொண்டு திரு செல்வநாயகம் அவர்களுடன் ஒரு வருடகால இடைவெளியில் ஓர் உடன்படிக்கையினை கைச்சாத்திட்டு அதற்கான தீர்வினை காண்பதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டார். அதற்கமைய உருவாக்கப்பட்டதே (27.07.1957ல்) பண்டா—செல்வா உடன்படிக்கையாகும். இவ்வுடன்படிக்கைக்கு எதிராக சிங்கள பௌத்த பிக்குகளையும். பொதுமக்களையும் தூண்டிவிட்டதுடன் அவ்வுடன்படிக்கையினை உடனடியாக இரத்துச் செய்யவேண்டுமென பௌத்த மக்களின் புனிதத் தலமான தலதா மாளிகைக்கு ஊர்வலமொன்றினை நடாத்தியவரும் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான திரு ஜே.ஆர். ஜயவர்தனா என்பதனை தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முன்வரவில்லை காரணம் அவர்களின் ஏகாதிபத்திய உறவு அதற்கு இடம்கொடுக்கவில்லை.

தமிழ் மக்கள் அன்று பெரும்பான்மையாக வாழ்ந்த வடக்கு. கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி அரசியல் போன்ற ஒரு கட்டமைப்பினையும் அப்பிரதேசங்களின் ஆட்சி மொழியாக தமிழ் மொழியினையும் உறுதிப்படுத்தியதே அவ்வுடன்படிக்கையாகும். அவ்வுடன்படிக்கையினை கிளித்தெறிவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமன்றி தமிழ் மக்களுக்கு உரிமை வழங்குவதற்கு முன்வந்தமைக்காக பண்டாரநாயக்காவின் உயிரைப் பலிகொள்வதற்குமான (25.09.1959) நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொண்டவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்பதனை யாருமே மறுக்கமுடியாது.

தொடர்ந்து 1960ம் ஆண்டு மார்ச் மாதம் 19ந் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியினரோ அன்றி சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரோ பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினை அமைப்பதற்குரிய பெரும்பான்மையினை பெறவில்லை. இந்நிலையில் தமது நண்பர்களான தமிழரசுக் கட்சியினரின் ஆதரவு கிடைக்குமென எதிர்பார்த்த ஐ.தே.கட்சியினர் (23.03.1960ல்) அரசாங்கத்தினை அமைத்தனர். அதற்கமைய சிம்மாசனப்பிரசங்கம் இடம்பெற்றபோது தமிழரசுக் கட்சியினர் ஆதரவு தெரிவிக்க முன்வராமையால் ஐ.தே.கட்சியின் அரசு கலைக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் (46) உறுப்பினர்களை தம்வசம் கொண்டிருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர். தமிழரசுக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தமக்கு ஆதரவு தருமாறும் அவ்வாறு ஆதரவு வழங்கும்பட்சத்தில் பண்டா—செல்வா உடன்படிக்கையினை தாம் நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதியளித்தனர். ஆனால் அவர்களின் வேண்டுகோளை தமிழரசுக் கட்சியினர் நிராகரித்தனர்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இடைத்தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் (75) உறுப்பினர்களைப் பெற்று ஆட்சியமைத்தனர். பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரின் ஆட்சிக்காலம் முழுமையாக பூர்த்தி செய்ததன்பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சியினருடன் ஒர் இரகசிய உடன்படிக்கையினை ஐ. தே கட்சியினர் ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையிலும் அரசாங்கம் அமைப்பதற்கான போதிய பெரும்பான்மையினை ஐ.தே.கட்சியினர் பெறாதநிலையில் தமிழரசுக் கட்சியினரையும். தமிழ் காங்கிரஸ் கட்சியினரையும் தம்முடன் இணைத்ததுடன் (24.03.1965ல்) டட்லி—செல்வா உடன்படிக்கை என்னும் பெயரில் தமிழரசுக் கட்சியினருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியினருக்குமிடையில் ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

ஏற்கனவே தமிழ் மக்களுக்கான தனியான நிர்வாகம் ஒன்றினை வடக்கு. கிழக்கில் ஏற்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்தானபோது அதனை நிறைவேற்றவிடாது பாதயாத்திரை சென்ற ஐ.தே.கட்சியினருடன் தமிழரசுக் கட்சியினர் இணைந்தமை அவர்களின் ஏகாதிபத்திய சிந்தனையை வெளிக்காட்டியது. அத்துடன் அவ்வுடன்படிக்கை அரச தரப்பினராலேயே நடைமுறைப்படுத்தமுடியாதென தெரிவிக்கப்பட்டு செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் (27.05.1970ல்) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் மேற்குலக ஏகாதிபத்தியங்களை இலங்கையிலிருந்து முற்றாக வெளியேற்ற வேண்டுமென்னும் நோக்குடன் இலங்கையை சுயநிர்ணயமும். தன்னாதிக்கமுமுள்ள ஓர் குடியரசு நாடாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு (இலங்கை சோசலிஸ ஜனநாயகக் குடியரசு) என அரசியல் திருத்தத்தின்மூலம் நிறைவேற்றி பிரித்தானியாவிடமிருந்த அதிகாரத்தினை இலங்கை மக்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

(நன்றி: மகாவலி இணையம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com