Contact us at: sooddram@gmail.com

 

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதலின் பின்னர் நடந்தது என்ன?

ஜனா­தி­பதி புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்­தி­களை ஊட­கங்கள் மூலம் முஸ்­லிம்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருந்த மறுதினம் கொழும்பு நகரில் பள்­ளி­வா­ச­லொன்று தாக்­கப்­பட்­டு­விட்­டது என்ற செய்­தியை அறிந்­ததும் ஜனா­தி­பதி நிலை தடு­மாறிப் போய்­விட்டார். கடந்த 10 ஆம் திகதி முஸ்­லிம்கள் மஃரிப் தொழு­கையை ஆரம்­பிக்க முற்­பட்­ட­போது பெளத்த தேரர் ஒரு­வ­ரது தலை­மையில் வந்த குழு­வினர் கிராண்ட்பாஸ் மஸ்­ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்­ளி­வா­சலைத் தாக்­கி­னார்கள். கண்­ணா­டிகள் உடைந்து சித­றின. இந்­நி­லை­யிலும் அங்கு இரண்டாம் மாடியில் தொழுகை நடை­பெற்­றது. தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து ஜனா­தி­பதி, பாது­காப்புச் செய­லாளர்,  ுஸ்லிம் அமைச்­சர்­க­ளுக்கு செய்­திகள் பர­வின. சுமார் இரவு 7 மணி­ய­ளவில் தாக்­குதல் சம்­ப­வத்தை ஜனா­தி­பதி அறிந்து கொண்டார். பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­பவம் உட­ன­டி­யாக கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வ­ரப்­ப­டா­விட்டால் நாட்டில் ஏற்­ப­டப்­போகும் அசா­தா­ரண நிலை­மையை ஜனா­தி­பதி நன்கு உணர்ந்­தி­ருந்தார். முஸ்லிம் அமைச்­சர்­களும், ஜனா­தி­ப­தியின் முஸ்லிம் நண்­பர்­களும் நிலை­மையை ஜனா­தி­ப­திக்கு விளக்­கி­னார்கள்.

சம்­ப­வத்தின் நிலைமையை பாது­காப்பு தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து பூர­ண­மாக அறிந்து கொண்ட ஜனா­தி­பதி பாது­காப்புச் செய­லா­ள­ருடன் கலந்­து­ரை­யா­டினார். அத­னை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பெள­ஸியின் இல்­லத்­துக்கு விஜயம் செய்தார். நிலை­மையை கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்பில் அமைச்சர் பெள­ஸி­யுடன் கலந்­து­ரை­யா­டினார். சம்­பவம் தொடர்­பாக பாது­காப்புத் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து அறிக்­கை­யொன்­றினைப் பெற்­றுக்­கொள்­வ­தா­கவும் நிலை­மையைச் சமா­ளிக்க உத­வி­பு­ரியும் படியும் பெள­ஸியை வேண்டிக் கொண்டார்.

மறுநாள் ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை நீதி­ய­மைச்சர் ஹக்கீம்இ சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெள­ஸியின் இல்­லத்­துக்கு விஜயம் செய்தார். சிரேஷ்ட அமைச்சர் பெளஸி அனு­பவம் வாய்ந்­தவர் என்­பதால் அவரைச் சந்­தித்து கலந்­து­ரை­யாடி மஸ்­ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு தீர்வு காணு­வ­தற்கே அதி­காலை விஜ­யத்­தினை மேற்­கொண்­ட­தாக அமைச்சர் ஹக்கீம் தெரி­வித்தார்.

சிரேஷ்ட அமைச்சர் பெள­ஸி­யுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டிய பின் அறிக்­கை­யொன்­றினைத் தயா­ரித்து ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிப்­ப­தெ­னவும் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளுக்கு முடிவு கட்­டப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் சுயா­தீன விசா­ர­ணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­ப­ட­வேண்­டு­மென கோரு­வதா­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ரவூப் ஹக்கீம் பெள­ஸி­யுடன் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்­டி­ருந்­த­போது பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்நான்கு தட­வைகள் அமைச்சர் பெள­ஸி­யுடன் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு நிலைமை தொடர்­பாக வின­வி­ய­துடன் பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் நிலைமை சீராகும் வரை பாது­காப்பு நட­வ­டிக்­கை­களைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

கோத்­த­பாய ராஜ­பக்பெள­ஸியை தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்­ட­போது அமைச்சர் ஹக்­கீமும் என்­னுடன் இருக்­கிறார் அவ­ருடன் பேசு­கி­றீர்­களா என்று வினவி தொலை­பே­சியை ஹக்­கீ­மிடம் கைய­ளிக்க முயற்­சித்­த­போதும் ஹக்கீம் பாது­காப்புச் செய­லா­ள­ருடன் உரை­யா­டு­வதைத் தவிர்த்துக் கொண்டார்.

முஸ்லிம் அமைச்­சர்­க­ளினால் கையொப்­ப­மிட்ட அறிக்கை ரவூப் ஹக்­கீ­மி­னாலே தயா­ரிக்­கப்­பட்­டது. முஸ்லிம் அமைச்­சர்­க­ளுடன் அறிக்­கையில் மேல் மாகா­ண­சபை ஆளுநர் அலவி மெள­லா­னாவும் கையொப்­ப­மிட்டார்.

முஸ்லிம் அமைச்­சர்­க­ளினால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­ட­துடன் புத்­த­சா­சன சமய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சில் கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்­பாக கூட்­ட­மொன்று நடை­பெற்­றது. முஸ்லிம் அமைச்­சர்கள்இ பாரா­ளு­மன்ற உறுப்­பினர்கள்இ எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள்இ முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர்இ அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமாஇ பள்­ளி­வாசல்இ விகாரை நிர்­வா­கிகள்இ பாது­காப்பு தரப்­பினர் கலந்து கொண்ட கூட்டம் சுமார் 4 மணி­நேரம் நீடித்­தது.

கூட்­டத்தில் பொலிஸ் மா அதி­ப­ருக்கும்இ அமைச்சர் ரிசாத் பதி­யுதீ­னுக்­கு­மி­டையில் முறுகல் நிலை உரு­வா­கி­யது. பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­ப­வத்­தின்­போது பொலிஸார் நியா­ய­மாக நடந்து கொள்­ள­வில்லை என ரிசாத் பதி­யுதீன் பொலி­ஸாரைக் குற்றம் சுமத்­தி­ய­துடன் பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்­டு­மெ­னவும் வாதிட்டார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீ­னுக்கு ஜனா­தி­பதி தொலை­பேசி தொடர்­பினை ஏற்­ப­டுத்தி விவா­தங்­களில் ஈடு­ப­ட­வேண்­டா­மெ­னவும் பொலிஸ் மா அதிபர் தன்னால் நிய­மிக்­கப்­பட்­ட­வ­ரெ­னவும் கூறி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இத­னை­ய­டுத்து ரிசாத் பதி­யுதீன் கூட்டம் முடி­வு­றும்­முன்பே அங்­கி­ருந்து வெளி­யே­றினார்.

ரிசாத் பதியுதீனைகேசரிதொடர்புகொண்டு வினவியபோது ஜனாதிபதியிடமிருந்து எதுவித உத்தரவும் தனக்குப் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

கூட்­டத்தில் பழைய பள்­ளி­வாசல் திறந்து அங்கு முஸ்­லிம்கள் சமயக் கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்கும் பள்­ளி­வா­ச­லுடன் கூடிய அரச மரத்­தினை அகற்­று­வ­தற்கும் இணக்கம் காணப்­பட்­டது. புதி­தாக திறக்­கப்­பட்டஇ தாக்­கு­த­லுக்­குள்­ளான பள்­ளி­வா­சலை மூடி­வி­டு­வ­தற்கும் இரு தரப்­பி­னரும் இணக்கம் கண்­டனர்.

மஸ்­ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் ஆரம்­பத்­தி­லி­ருந்தே ஈடு­பாடு கொண்­டி­ருந்த சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெள­ஸியை தொடர்பு கொண்டு விவ­காரம் தொடர்­பாக வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்­ளி­வாசல் முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் அனு­ம­தி­யு­டனே புதிய கட்­டி­டத்­துக்கு இட­மாற்­றப்­பட்­டது. என்­றாலும் அதற்கு எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டதால் தவிர்க்­க­மு­டி­யாத கார­ணத்­தினால் அந்த அனு­மதி வாபஸ் பெறப்­பட்டு நோன்பு முடியும் வரை அதா­வது கடந்த 10 ஆம் திகதி வரை புதிய கட்­டி­டத்தில் பள்­ளி­வாசல் இயங்க திணைக்­களம் அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது.

நான் கடந்த 2 ஆம் திகதி இப்­பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்­பாக ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யா­டினேன். சம்­பந்­தப்­பட்ட பெளத்த குருக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி ஒரு சுமு­க­மான தீர்­வினை பெற்றுக் கொள்­ளு­மாறு ஜனா­தி­பதி எனக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார். இத­ன­டிப்­ப­டையில் கடந்த 10 ஆம் திகதி நான் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னர்­க­ளுடன் சுமு­க­மான பேச்­சு­வார்த்தை நடத்தி தீர்­வு­காண திட்­ட­மிட்­டி­ருந்தேன். அதற்­கான ஏற்­பா­டு­க­ளையும் செய்­தி­ருந்தேன்.

ஆனால் கடந்த 7 ஆம் திகதி முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் புத்­த­சா­சன மற்றும் சமய அலு­வல்­க­ளுக்­கான அமைச்சின் செய­லாளர் மூலம் கடி­த­மொன்­றினை சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு அனுப்­பி­வைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­துள்ளார். குறிப்­பிட்ட கடிதம் தொடர்ந்தும் பள்­ளி­வாசல் புதிய கட்­டி­டத்தில் இயங்­கு­வ­தற்­கான அனு­மதிக் கடி­த­மாகும். இத­னா­லேயே பள்­ளி­வாசல் மீதான தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

குறிப்­பிட்ட கடிதம் அனுப்பப்பட்டிருக்கா விட்டால் இந்தப் பிரச்சினையை சுமுக­மாகத் தீர்த்திருக்கலாம். எந்தவோர் பிரச்சினை­­யையும் பேச்சுவார்த்தைகள் மூலமே சுமுகமாக தீர்க்கமுடியும். அதிகாரங்களைப் பிரயோகிப்பதைவிட மனம் விட்டுப் பேசுவதன் மூலம் எவ்வளவோ நன்மைகள் ஏற்படும். குறிப்பிட்ட கடிதம் அனுப்பப்பட்டதே பிரச்சினை திடீரென உருவாகியமைக்கு காரணமாகும்.

முஸ்லிம் அமைச்சர்கள் ஆகிய நாம் ஜனாதிபதிக்கு மகஜரொன்றினைச் சமர்ப்­பித்­துள­்ளோம். சம்பவத்துக்கு விசாரணைக்குழுவொன்றினை நியமிக்கும் படியும் கோரியுள்ளோம். ஜனாதிபதி ஏற்பாடு களைச் செய்வார் என்று நம்புகிறேன் என்றார்.

இதேவேளைஇ பள்ளிவாசலுக்கு ஏற்பட்டுள்ள சேதவிபரங்களுக்கான மதிப்பீட்டினை மேற்கொள்ளும்படி முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம். ஸமீல் ஜனாதிபதியினால் பணிக்கப்பட்டுள்ளார்.

ஏ.ஆர்.ஏ.
பரீல்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com