Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் அழிவுக்கு காரணம் பெண் தெய்வம் கண்ணகியா?...

த‌மிழ்ப்பெண் க‌ண்ண‌கியைக் க‌ட‌வுளாக‌ வ‌ழிபடும் முறை த‌மிழ்நாட்டில் வ‌ழ‌க்கொழிந்து போனாலும் அது ஈழத்த‌மிழ‌ர்க‌ளிட‌மும், முன்னாள் சேர‌நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளாகிய‌ ம‌லையாளிக‌ளிட‌மும், சில‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளிட‌மும் இன்றும் காணப்ப‌டுகிற‌து. த‌ம‌து முன்னோர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் என்ப‌தை ஒப்புக்கொள்ள‌ ம‌றுக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கூட‌ த‌ம‌து தமிழ் முன்னோர்க‌ள் வ‌ழிப‌ட்ட‌ க‌ண்ண‌கியை 'பத்தினி   தெய்யோ' இன்றும் வ‌ண‌ங்குவ‌தைக் காண‌லாம். த‌மிழ்நாட்டில் த‌ன‌து ம‌க்க‌ள்(த‌மிழ‌ர்க‌ள்) த‌ன‌க்கிழைத்த‌ கொடுமையை அதாவ‌து தன்னுடைய‌ க‌ண‌வ‌னை அநீதியாக‌க் கொன்று த‌ன்னை அனாத‌ர‌வாக்கிய‌தால் கோப‌முற்ற‌ சில‌ப்ப‌திகார‌ நாய‌கி க‌ண்ண‌கி ம‌துரையை எரித்துக் கோப‌த்தைத் தீர்த்த‌வுட‌ன், மேலும் த‌மிழ்நாட்டில் வாழ‌ விரும்பாம‌ல், அதாவ‌து த‌ன‌து பிற‌ந்த‌ வீட்டுக்கு வித‌வையாக‌ப் போக‌ விரும்பாம‌ல், ஈழ‌த்திலுள்ள‌ த‌ன‌து ம‌க்க‌ளுட‌ன் வாழ‌த் தீர்மானித்து இல‌ங்கைக்கு குடிபெயர்ந்த‌தாக‌வும் அவ‌ள் இல‌ங்கையில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌ங்கிய‌ பின்ன‌ர் க‌டைசியாக‌ ப‌த்தாவ‌து இட‌த்தில் இளைப்பாறுவ‌த‌ற்கு த‌ங்கிய‌ இட‌ம் தான் ந‌ந்திக்க‌ட‌ல் அருகில் இருக்கும் ஊராகிய‌ இன்று வ‌ற்றாப்ப‌ளை என‌ அழைக்க‌ப்ப‌டும் ப‌த்தாம் ப‌ளை என‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து.  இன்று கூட‌ த‌ன‌து சொந்த‌ ஊரில் அனாத‌ர‌வாக்க‌ப்ப‌ட்டு, அல்ல‌து புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்டு அப‌லைக‌ளாக்க‌ப் ப‌ட்ட‌ பெண்கள் த‌ம‌து உற‌வின‌ர்க‌ள் அல்ல‌து ப‌ங்காளிக‌ள் வசிக்கும் இன்னொரு ஊரில் போய்த்த‌ங்குவ‌து ந‌டைமுறையில் காண‌ப்ப‌டும் வ‌ழ‌க்க‌மாகும். 

க‌ண்ண‌கி - ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் காவ‌ல் தெய்வ‌ம்!......

கிழ‌வி உருவ‌த்தில் வ‌ற்றாப்ப‌ளையில் க‌ண்ண‌கி

வ‌ட‌க்கு - கிழ‌க்கு த‌மிழ‌ர்க‌ளிடையே பேச்சு வ‌ழ‌க்கு, சாதிப்பிரிவுக‌ள், த‌மிழ்  உச்ச‌ரிப்பு என்ப‌வ‌ற்றில் சில‌ வேறுபாடுக‌ள் இருந்தாலும் வ‌ட‌க்கிலும் கிழ‌க்கிலுமுள்ள‌ பெரும்பான்மையான த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் பொதுவான‌தொன்று எதுவென்றால் அது க‌ண்ண‌கி வ‌ழிபாடு தான். வ‌ட‌க்கிலும், கிழ‌க்கிலும் க‌ண்ண‌கிய‌ம்ம‌னுக்குக் கோயில்க‌ள் இல்லாத‌ இட‌மில்லையென்றே கூற‌லாம்.  சோழ‌நாட்டில் பிற‌ந்து த‌ன‌து க‌ண‌வ‌னுட‌ன் பாண்டிய‌ நாட்டுக்கு பிழைப்புக்காக‌ச் சென்று அங்கிருந்து சேர‌நாடு சென்ற க‌ண்ண‌கி க‌டைசியில் ஈழ‌நாட்டில் சென்று தான் த‌ங்கினாள். தமிழ்மண் அனைத்தையும் தொட்ட ஒரு கதை எதுவென்றால் அது கண்ணகியின் கதையாகத் தானிருக்க முடியும். உண்மையில் த‌மிழ‌ர்க‌ளனைவ‌ருக்கும் பொதுவான‌ தெய்வம் க‌ண்ண‌கி தான். த‌மிழ‌ர்க‌ளை வ‌ட‌நாட்ட‌ர‌ச‌ர்க‌ள் கனக விசயர்கள் ப‌ழித்தார்க‌ள் என்ப‌த‌ற்காக‌ அவ‌ர்க‌ள் மீது ப‌டையெடுத்த‌ சேர‌ன் செங்குட்டுவ‌ன்,  அவ‌ர்க‌ளின் தலையில் சும‌ந்து வ‌ந்த க‌ல்லைக் கொண்டு சிலையெடுத்த‌தும்-  வீர‌ம், க‌ற்பு, நாடுகாத்த‌ல் போன்ற‌வ‌ற்றுக்காக‌ உயிர்த்தியாக‌ம் செய்த‌வ‌ர்க‌ளைத் தெய்வ‌மாக வணங்கும் தமிழர்களின் வ‌ழ‌க்க‌ப்ப‌டி, தெய்வ‌த்துள் வைக்க‌ப்ப‌ட்ட த‌மிழ்ப்பெண் க‌ண்ண‌கிக்குத் தான். கண்ணகியைத் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் இலங்கையின் காவல் தெய்வங்களிலொன்றாக வணங்குகிறார்கள். 

கண்ணகியும், கிறித்தவர்களும், தமிழ்பேசும் முஸ்லீம்களும்

க‌ண்ண‌கி வ‌ழிபாடு இந்தும‌த‌த்தின் ஒரு அங்க‌மாக‌ அல்லாது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ப‌ண்பாட்டின், க‌லாச்சார‌த்தின் அங்க‌மாகத் தான் இருந்து வ‌ந்த‌து. கிராம‌தேவ‌தையாக‌ ஈழ‌த்திலிருந்த‌ கண்ண‌கி கோயில்க‌ளையெல்லாம் அம்ம‌ன் கோயில்க‌ளாக‌, வைதீக‌ம‌ய‌ப்ப‌டுத்திய‌வ‌ர் சிறுதேவ‌தை வ‌ண‌க்க‌த்தை எதிர்த்த‌ சைவ‌த்தின் வ‌ஹாபிஸ்ட் ஆறுமுகநாவ‌ல‌ர். 1850 வ‌ரை புக‌ழ்பெற்ற‌ ம‌டுமாதா கோயில் க‌ண்ண‌கிய‌ம்ம‌ன் கோயிலாக‌த் தான் இருந்த‌து ஆனால் அந்த‌க் கோயிலைச்சேர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் க‌த்தோலிக்க‌ர்க‌ளாக‌ மாறிய‌தும், அந்த‌க் கோயிலும் 1856 இல் மாதா கோயிலாக‌ மாற்ற‌ம‌டைந்த‌து என‌வும் கூறுவ‌ர்.  மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990 இற்கு முன்பு பல கிராமங்களில் கண்ணகை அம்மன் கோவில்களில் வழுந்து எனப்படும் அடுப்பில் பொங்கல் பானை ஏற்றுப‌வ‌ர் ஒரு முஸ்லிமாக‌வே இருப்பார். அதாவ‌து க‌ண்ண‌கி அம்ம‌ன் கோயிலின் முக்கிய‌ ச‌ட‌ங்கில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க‌ப்பட்டு வ‌ந்த‌து. இவ்வாறே முஸ்லிம்களின் முதல் கந்தூரி பெறுபவர் ஒரு தமிழராகவே இருப்பார். அப்படியான ஒரு கலாசார உறவு த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் மத்தியில் அண்மைக்கால‌ம் வ‌ரை நிலவி வந்தது.

புலிக‌ளும் வ‌ற்றாப்ப‌ளை க‌ண்ண‌கி அம்ம‌னும்

நினைத்துப்பார்க்க‌வே முடியாத‌ பல போர்க்க‌ள‌ வெற்றிக‌ளைக் க‌ண்ட‌ ஈழத்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப்போராட்ட‌ம் க‌டைசியில் ந‌ந்திக்க‌ட‌லில் த‌மிழ‌ர்க‌ளின் உயிர்ப்ப‌லியில் முடிந்த‌து ஏன் என்ற‌ கேள்விக்குப் ப‌தில் தேடும் ப‌ல‌ரும், பற்ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளைக் கூறுகின்ற‌ன‌ர். த‌ம‌து இய‌ல்புக்கேற்ற‌வாறு, த‌ம‌க்குப் புரிந்த‌ வ‌கையில் வெவ்வேறு கார‌ண‌ங்க‌ளைக் கூறி தம‌து ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்கின்ற‌ன‌ர்.
 ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கிடையே ஒற்றுமை இல்லாத‌தை கார‌ணமாக‌ச் சில‌ரும், ச‌கோத‌ர‌யுத்த‌மும், எங்க‌ளுடைய‌ ப‌ங்குக்கு அதிக‌மாக‌வே எம்மிடையே இருக்கும் துரோகிக‌ளும், ப‌ச்சோந்திக‌ளும் கார‌ண‌ம் என‌ ம‌ற்ற‌வ‌ர்களும், விடுத‌லைப்புலிக‌ளிடம் உல‌க‌நாடுக‌ளின் வெளிவிவ‌கார‌க் கொள்கைக‌ளைப் ப‌ற்றிய‌ அறிவு குறைவாக இருந்தது தான் கார‌ண‌ம் என‌ சில‌ அரசிய‌ல் வ‌ல்லுன‌ர்க‌ளும், இந்தியா ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்திய‌து தான் இத்த‌னை அழிவுக்கும் கார‌ண‌ம் என‌ ஏனையோரும் கூறுவ‌தை நாம் ப‌ல‌ரும் கேட்டிருக்கிறோம். ஆனால் அண்மையில் வ‌ன்னியிலிருந்து வ‌ந்திருந்த‌ பெரிய‌வ‌ர்  ஒருவர் புலிகளும், இவ்வளவு  த‌மிழ‌ர்க‌ளும் ந‌ந்திக்க‌ட‌ற் க‌ரையில் க‌ண்ண‌கி அம்ம‌னின்  கோயிலின் முன்னால் அழிந்த‌த‌ற்குக் கார‌ண‌ம் க‌ண்ண‌கி அம்ம‌னின்  கோப‌ம் தான் என்றார். ஏன் அப்ப‌டிச் சொல்கிறீர்க‌ள் என்றத‌ற்கு அவ‌ர் கூறிய‌ விள‌க்க‌ம் தான் இது.

விடுத‌லைப்புலிக‌ள் வ‌ன்னியில் நிலைகொண்டு சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் போரைத் தொட‌ங்கிய‌ ஆர‌ம்பகால‌த்தில் ஒவ்வொரு முக்கிய‌ தாக்குத‌லைத் தொட‌ங்கு முன்ன‌ரும் வ‌ன்னியிலுள்ள‌ வற்றாப்ப‌ளை க‌ண்ண‌கி அம்ம‌ன் கோயிலில் சிற‌ப்புப்பூசையை முடித்த‌ பின்ன‌ர் அல்ல‌து குறைந்த‌ ப‌ட்ச‌ம் அம்ம‌ன் கோயிலில் அர்ச்ச‌னை செய்து அம்ம‌னின் ஆசியைப் பெற்ற‌ பின்ன‌ர் தான் போருக்குச் சென்றார்க‌ளாம். அம்ம‌னின் ஆசியுட‌ன் ம‌ண்ணை மீட்க‌ச் சென்று போரிட்ட‌ ஒவ்வொரு போரிலும் விடுத‌லைப்புலிக‌ள் வெற்றி வாகை சூடினார்க‌ளாம். அத‌ன் பின்ன‌ர் எத்த‌னையோ முறை விடுத‌லைப் புலிக‌ள் வ‌ற்றாப்ப‌ளை க‌ண்ண‌கை அம்ம‌னுக்கு பொங்க‌லும் ந‌ட‌த்தியுமுள்ள‌ன‌ர். அதை விட‌ அக்கால‌த்தில் விடுத‌லைப்புலிக‌ளின் ப‌டையிலிருந்த‌ மட்ட‌க்க‌ள‌ப்பு த‌மிழ் இளைஞர்க‌ள் இய‌ற்கையாக‌வே க‌ண்ண‌கை அம்ம‌னில் ந‌ம்பிக்கையுள்ள‌வ‌ர்க‌ள் ஆத‌லால் வ‌ற்றாப்ப‌ளை கண்ண‌கியை வ‌ழிபட்ட‌ பின்ன‌ரே போருக்குச் சென்ற‌ன‌ராம்.

ஆனால் நாள‌டைவில் விடுத‌லைப்புலிக‌ளின் புக‌ழ் உல‌கள‌வில் பேச‌த்தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌தும், அவ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ ப‌ல‌ அர‌சிய‌ல் க‌ட்டுரைக‌ள் வெளிவ‌ரத்தொட‌ங்கிய‌தும், வெளிநாட்டு ஐரோப்பிய‌ப்ப‌த்திரிகையாள‌ர்க‌ளின் வ‌ருகையாலும், விடுத‌லைப்புலிகளின் ப‌டையில் கிறித்த‌வ‌ வீர‌ர்க‌ளும் பெரும‌ள‌வில் இருக்கும்போது, இந்தும‌த‌ம் சார்ந்த‌ ச‌ட‌ங்குக‌ளையும், ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளையும் விட்டுத‌ற‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் புலிக‌ளின் மேல்ம‌ட்ட‌த் த‌லைமைக்கு ஏற்ப‌ட்டதாம். எல்லோரும் சேர்ந்து இந்துத்துவா ப‌ட்ட‌த்தைப் புலிக‌ளின் த‌லையில் க‌ட்டி விடுவார்க‌ளோ என்ற‌ ப‌ய‌த்திலும், ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்துக்கு த‌ம‌துயிரைப் ப‌ண‌ய‌ம் வைத்து உழைத்த‌ சில‌ கிறித்த‌வ‌ப்பாதிரிமாரின் ஆலோச‌னைக‌ளின் பேரிலும் விடுத‌லைப்புலிக‌ள் வ‌ற்றாப்ப‌ளை க‌ண்ண‌கி அம்ம‌னுக்குப் பொங்கி அவ‌ளின் ஆசியுட‌னும் அனும‌தியுட‌னும் போருக்குச் செல்வ‌தை நிறுத்திக் கொண்டார்க‌ளாம். ஆனால் ஈழ‌த்தமிழ‌ர்க‌ள் ம‌த்தியில் சைவ‌-கிறித்த‌வ‌ ந‌ல்லிண‌க்க‌ம் இருப்ப‌தால் புலிக‌ள் வ‌ற்றாப்பளை அம்ம‌ன் கோயிலுக்குச் சென்ற‌தை கிறித்த‌வ‌ விடுத‌லைப்புலிவீர‌ர்க‌ள் யாருமே எதிர்க்க‌வில்லையாம். வ‌ன்னியின் காவ‌ல் தெய்வ‌ம் வ‌ற்றாப்ப‌ளை க‌ண்ண‌கிய‌ம்ம‌னை உதாசீன‌ம் செய்த பின்ன‌ர் தானாம் காட்டிக் கொடுப்புக‌ளும், பிரிவினைக‌ளும் போரில் தோல்விக‌ளும் ஏற்ப‌ட‌த் தொட‌ங்கின‌......  வன்னியின் காவ‌ல்தெய்வ‌த்தை  உதாசீன‌ப்ப‌டுத்தி விட்டு போருக்குச் சென்ற‌தை வ‌ற்றாப்ப‌ளை க‌ண்ண‌கி அம்ம‌ன் பொறுத்துக் கொள்ள ‌வில்லையாம்.

அதே வேளையில் ம‌கிந்த‌ ராஜப‌க்ச‌வும் அவ‌ர‌து ப‌டையின‌ரும் த‌வ‌றாது இல‌ங்கையின் காவ‌ல்தெய்வ‌ம் க‌ண்ண‌கியின் கோயில்க‌ளுக்கு அடிக்க‌டி செல்ல‌த் தொட‌ங்கின‌ர். அது ம‌ட்டும‌ன்றி க‌ண்ண‌கிய‌ம்ம‌ன் பொங்க‌லையும் பூசைக‌ளையும் அல‌ரிமாளிகையிலேயே ப‌ல‌முறை  ந‌ட‌த்தினாராம் இல‌ங்கை ஜ‌னாதிப‌தி ராஜ‌ப‌க்ச‌.

இவரது கருத்தில்  எந்த‌ள‌வுக்கு உண்மையிருக்கிற‌து என்ப‌து என‌க்குத் தெரியாது. ஏனென்றால் நான் இல‌ங்கையில் வாழ்ந்த‌ கால‌ம் குறைவு. அதனால் வன்னியில் புலிகள் எப்படியான வழிபாடுகளைக் கைக்கொண்டார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் பிரபாகரன் அவர்கள் பாரம்பரிய. யாழ்ப்பாணத்துச் சைவக்குடும்பத்திலிருந்து வந்தவர்.
அவரது முன்னோர்கள் பல கோயில்களையும் தமது ஊரில் கட்டியவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததொன்று.

(நந்திக்கடலில்  புலிகளின்  வீழ்ச்சி  நிகழ்ந்தமைக்கு
கண்ணகி காரணமா?...  என்ற  பதிவு  ஒன்று  எமக்கு
அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.)

(யாழ் நாதம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com