|
||||
|
நாளைய வெற்றிக்காக
இளைஞரை தயார் செய்வதே
புதிய கல்வித் திட்டத்தின்
இலக்கு தொழில் நுட்பக் கல்வி யானது
கணிதத் தையும் விஞ்ஞானத்
தையும் பிரயோகித்துப்
பணிகளைத்
திறமையாகவும்,
வேகமாகவும்,
திருத்தமான
முறையிலும்
சிக் கனமாகவும்
செய்து முடிக்கக்
கூடிய அறிவை வழங்குகிறது.
இதை உத்தேசித்தே
கலைப்பிரிவு
என்று ஒதுக்கி வைக்கப்படும்
மாணவர்களையும்
ஏனைய பிரிவினரோடு
சமப்படுத்தி
அவர்களின்
இயல்பான திறமைகளை இனங்கண்டு
சமூகத்திற்குப்
பயனுள்ள பிரஜைகளாக
உருவாக்க
கல்வி மறுசீரமைப்புத்திட்டம்
வழிவகுக்கிறது.
தேசிய கல்வி நிறுவகத்தின்
தொழில்நுட்பக்
கல்வித் திணைக் களமானது இந்த நடவடிக்கையில்
மும்முரமாக
ஈடுபட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள்,
உயர்தொழில்
நுட்பக் கல்லூரிகளிலுள்ள
அனுபவம் மிக்க பேராசிரியர்கள்,
சிரேஷ்ட விரிவுரையாளர்கள்
மற்றும் வெளிக்கள வேலைகளில்
திறன்மிக்க
பொறியி யலாளர்கள்,
தொழில்நுட்ப
நிபு ணர்களின்
ஒத்துழைப்பினைப்
பெற்று தொழில்நுட்பக்
கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரம் 12இல் அடிப்படை
வன் தொழில்
நுட்பம் என்னும் பாடநெறி தொழில்நுட்பக்
கல்வியைக்
கற்க விரும்பும்
அனைவரும்
கட்டாயம்
கற்க வேண்டிய
ஒன்றாகும்.
அதில் சித்தியெய்துபவர்கள்
தரம் 13இல் வன்தொழில்நுட்பம்,
மென் தொழில்நுட்பம்
என இரு
பெரும் பிரிவுகளிலுள்ள
மும்மூன்று
பாட நெறிகளில்
ஏதாவதொரு
கற்கை நெறியைத் தேர்ந்தெடுக்க
வேண்டும்.
தரம் 13இன் வன்தொழில்
நுட்பமானது
பொறிமுறைத்
தொழில்நுட்பம்,
குடிசார்பொறியியல்
தொழில்நுட்பம்,
மின்சார இலத்திரனியல்
மற்றும் தகவல் தொழில்நுட்பம்
எனும் பாடநெறிகளையும்,
மென் தொழில்
நுட்பமானது
உயிரியல்
மூலவள தொழில்நுட்பம்,
விவசாயத்
தொழில் நுட்பம் மற்றும் உணவுத் தொழில் நுட்பம் எனும் பாடநெறி
களையும் அடக்கியுள்ளது.
இந்த ஆறு கற்கை நெறிகளிலொன்றைத்
தெரிவு செய்யும் கலைப்பிரிவு
மாணவர்கள்
தங்கள் விருப்பத்திற்குரிய
கலைப்பாடங்களி
லொன்றைக்
கைவிட வேண்டும்.
இவ்வாறு தொழில்நுட்பக்
கல்வியைத்
தெரிவு செய்து கற்கும் மாணவர்கள்
தொடர்ந்து
கற்கவிரும்
பினால் தொழில்நுட்பக்
கல்லூரிகளில்
டிப்ளோமா
கற்கை நெறியைத் தொடர்ந்து
தேசிய வாழ்க்கைத்
தொழில்சார்
தகைமைகளைப்
பெறுவதுடன்
பட்டப்படிப்பினை
இரத்மலானையிலுள்ள
வாழ்க்கைத்
தொழில்சார்
தொழில்நுட்பப்
பல்கலைக்கழகத்தில்
தொடர முடியும்.
தொழில் நுட்பத்
தகை மையுடையவர்களுக்கு
நிறையவே வேலை வாய்ப்புகளும்
உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மாணவர் தெரிவு
செய்யும்
தொழில் நுட்பப்பாடம்
பல்கலைக்கழக
மானிய ஆணைக்குழுவின்
அங்கீகாரமும்
பெற்றுள்ளது.
தேசிய கல்வி ஆணைக்குழுவின்
ஒப்புதலும்
இதற்குக்
கிடைத்துள்ளது.
ஆகையால் மாணவர்கள்
தங்கள் மேற்படிப்பு
பற்றிப் பயம் கொள்ளத்
தேவையில்லை.
புதிய கல்விச்
சீர்திருத்தம்
காரணமாக திடீர் மாற்றத்தைப்
பலர் சந்தேகக்
கண்கொண்டு
பார்த்து
மாணவர்களை
இதன் வழி
ஊக்கம் கொடுக்காம
லிருப்பதையும்
நாம் அறிவோம். மாற்றங்களை சமூகம்
உடனடியாக
ஏற்றுக்கொள்ளாது
என்பதில்
உண்மை இல்லாமலுமில்லை.
ஆனாலும் துணிந்து
இம்மாற்றத்திற்கு
இசைந்து மாணவர்களை
ஊக்கப்படுத்திவரும்
அதிபர்களையும்
ஆசிரியர்களையும்
நாம் பாராட்டாமல்
இருக்க முடியாது.
அதிலும் பல மாணவிகள்
தொழில் நுட்பக் கல்வியைத்
தொடர முன்வந்திருப்பது
சமூகத்தின்
முன்னேற்றத்திற்கான
நல்ல சமிக்ஞையாகும்.
ஏற்கனவே இப்பாடநெறியைக்
கற்று க. பொ. த. உயர்தர
பரீட்சை எழுதிய மாணவர்கள்
சிறந்த பெறுபேறுகளைப்
பெற்றுள்ளனர்
என்பதைப்
பெரு மையோடு
கூறிக்கொள்ள
விரும்பு
கிறோம். மிகுந்த எதிர்பார்ப்புகளின்
மத்தியிலும்
இப்புதிய
கல்விச் சீர்த்திருத்தத்தின்
அடிப்படையில்
தொழில்நுட்பக்
கல்வியை கலைப் பிரிவு
மாணவர்களுக்குள்
அறிமுகப்
படுத்தி அவர்களின்
திறன்களை
வெளிப்படுத்தி
நாட்டிற்குப்
பயனுள்ள பிரஜைகளை உருவாக்க வேண்டும் என உறுதி
கொண்டு அயராதுழைத்து
மிகுந்த அர்ப்பணிப்புகளைக்
கல்வித் துறைக்காக
ஆற்றி அண்மையில்
ஓய்வுபெற்ற
தேசிய கல்வி நிறுவனத்
தின் விஞ்ஞான
தொழில்நுட்பப்
பீட த்தின்
உதவிப் பணிப்பாளர்
நாயகம் தேசமான்ய கலாநிதி இந்திரா லீலா மணி
கினிகே அவர்களை இங்கு நினைவு
கூறுவது மிகப்பொருத்தமான
தாகும்.
தொழில் நுட்பப்பாட
நெறிகளின்
பாடத் திட்டங்கள்,
ஆசிரியர்
அறிவுரை வழிகாட்டி
நூல்கள், வாசிப்பு வள நூல்கள்
என்பன தயாரிக்கப்பட்டு
வருகின்றன. இலங்கையின் தேசிய மொழிகளான சிங்களத்திலும்
தமிழிலும்
அவை தயாராகின்றன.
தொழில் நுட்பக் கல்வித் திணைக்களத்
தின் ஒரேயொரு
தமிழ் மொழிமூல செயற்திட்ட
அதிகாரியாக
உள்ள பட்டய
இயந்திரப்
பொறி யியலாளரின்
நியமனத்திற்ன்
பின்பு தமிழ் மொழி
பேசும் ஆசிரியர்களுக்குத்
தமிழ் மொழிமூலம்
பயிற்சி வழங்கப்பட்டு
பல பாடசாலைகளில்
தொழில் நுட்பக் கல்விப் போதனை தொடங்கப்
பட்டுள்ளது.
தொடர்ந்து
இப்பணி முன்னெடுக்கப்பட்டு
வருவதுடன்
இலங்கையிலுள்ள
சகல 1 திகி
தர முடைய
பாடசாலைகளிலும்
தொழில் நுட்பக் கல்வியைப்
புகுத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
தமிழில் மொழிபெயர்க்கப்
படும் உசாத்துணை
நூல்கள் யாவும் தமிழ் செயற்றிட்ட
அதிகாரியின்
பார்வைக்குக்
கொண்டுவரப்பட
வேண்டிய திருத்தங்கள்
மேற்கொள்
ளப்படுகின்றன.
தேசிய கல்வி நிறுவகத்தில்
பயிற்சி வழங்கப்பட
முடியாத பாடங்களுக்கு
திறந்த பல்கலைக்கழகம்,
மொறட்டுவ
பல்கலைக்கழகம்
மற்றும் தொழில்நுட்ப
ஆய்வுகூட
வசதியுள்ள
நிறுவனங்களி
லும் பயிற்சிகள்
வழங்க ஏற்பாடுகள்
செய்யப்படுகின்றன.
ஆறு பாடநெறி
களையும் தமிழ்மொழி
மூலம் கற் பிக்கவல்ல
வளவாளர்களைத்
தேடிக்கண்டுபிடிப்பதே
சிரமமாக உள்ளது. அவ்வாறு தொழில் நுட்பப் பாடங்களைத்
தமிழில் கற்பிக்கவும்
பயிற்சி வழங்கவும்
வல்ல வளவாளர்கள்
0777198675 0777198675 எனும் தொலைபேசி
இலக்கத்துடன்
தொடர்பு கொள்ளுமாறு
தமிழ் செயற்றிட்ட
அதிகாரி வேண்டிக் கொள்ளுகிறார்.
தமிழ் மொழி மூல
ஆசிரியர்களுக்குப்
பயிற்சி வழங்கி அதன் மூலம்
தமிழ் பேசும் மாணவர்களைத்
தொழில் நுட்பத்துறையில்
ஊக்குவிக்கும்
பணியை, பெருந்தொகை
சன்மானத்தை
எதிர்பாராமல்
ஒரு சமூகக்
கடமையாக ஆற்ற முன்வருமாறு
செயற்றிட்ட
அதிகாரி, வளவாளர்களை
அன்பாகக்
கேட்டுக்கொள்ளுகிறார்.
தொழில் நுட்பக் கல்வியைக்
கலைப்பிரிவு
மாணவர்கள்
மத்தியில்
அறிமுகப்படுத்த
விழையும்
பாடசாலைகளுக்குத்
தேவையான பெளதிக வளங்களைச்
சீபார்சு
செய்து கல்வியமைச்சின்
ஊடாகப் பெற்றுத்தர
தேசிய கல்வி நிறுவகம்
ஏற்பாடுகளை
மேற்கொண்டுள்ளது.
இதற்கென தேசிய கல்வி
நிறுவனத்தின்
தொழில்நுட்பக்
கல்விப் பிரிவின் சிபார்சின்
பேரில் சுமார் 10 இலட்சம் பெறுமதிவாய்ந்த
கருவிகளும்
உபகரணங்களும்
சில பாடசாலை
களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் அனைத்துப்
பயிற்சி நெறிகளையும்
தேசிய கல்வி நிறுவகத்திலேயே
நடாத்த நிறுவனத்தின்
பெளதீக வளங்கள் மேம்படுத்தப்பட
உள்ளன. பாடசாலைகளில் கலைப்பிரிவு
விஞ்ஞானப்
பிரிவு, கணிதப்பிரிவு
இருப்பது
போன்று தொழில்நுட்
பப்பிரிவு
ஆரம்பிக்கும்
திட்டமும்
உள்ளது.
ஆகவே தொழில்நுட்பம்
வளர்ச்சியடைந்து
வரும் வேகத்திற்கு
ஈடுகொடுத்து
அனைவரும்
கால வோட்டத்தோடு
இணைந்து கொள்ளத் தயாராகாவிட்டால்
நாம் நிச்சயம்
எட்டமுடியாத
அளவுக்குப்
பின்ன டைவை எதிர்நோக்க
வேண்டி ஏற் படும்.
மாற்றத்திற்கான
மனப்பாங்கினை
விரைந்து
பெற்றுக்கொண்டு
எமது எதிர்காலச்
சந்ததிகளான
மாணவச் செல்வங்களின்
முன்னேற்றத்திற்கு
உந்து சக்தியாக விளங்க வேண்டியது
ஒவ்வொரு பெற்றோரினதும்
கடமையாகும்
என்பதைக்
கூற வேண்டிய
அவசியமில்லை.
தற்போது தரம் 13 இல்
வன் தொழில்
நுட்பப் பாடங்களில்
ஒன்றான மின்சார, இலத்திரனியல்
மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை
ஒரு கலைப்பிரிவு
பாடத்தினை
விடுத்துக்
கற்கும் கலைப்பிரிவு
மாணவருக்கு
பல்கலைக்
கழகத்தில்
புதிதாக அறிமுகம் செய்யப் படவுள்ள தகவல் தொடர்பாடல்
தொழில்நுட்ப
வியல் முகாமைத்துவம்
எனும் பாடநெறி கற்கும் வாய்ப்பு கிட்டி யுள்ளது. இதற்காக தரம் 13இல்
அம்மாணவர்
புவியியலை
ஒரு பாடமாக
இணைத்து எடுக்க வேண் டும்.
இதேபோல் ஏனைய தொழில்
நுட்பப்பாடங்களான
பொறிமுறைத்
தொழில்நுட்பம்,
குடிசார்
தொழில் நுட்பம் என்பவற்றுக்கும்
இணைப் புப்பாடங்களை
ஏற்படுத்தி
தொழில் நுட்பப் பாட நெறிகளைப்
பயிலும் கலைப்பிரிவு
மாணவர்களுக்கு
பல்கலைக்கழகத்தில்
உயர்கல்வி
வாய்ப்பை
வழங்கவும்
ஏற்பாடுகள்
நடைபெறுகின்றன.
இதேபோல் மென்தொழில்நுட்பப்
பாடங்களையும்
கலைப்பிரிவு
மாணவர்கள்
மத்தியில்
அறிமுகம்
செய்ய விரிவான முயற்சி களை தேசிய
கல்வி நிறுவகம் மேற்கொண்டுள்ளது.
சா.சக்திதாசன் பட்டயஇயந்திரப்
பொறியியலாளர்
(செயற்றிட்ட
அதிகாரி) தொழில்
நுட்பக்கல்வித்துறை
தேசிய கல்வி நிறுவகம்
மகரகம.
(நேற்றைய தொடர்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |