Contact us at: sooddram@gmail.com

 

நேபாளத்தின் புதிய மாற்றங்களும் ஈழப் போராட்டத்தின் தொடர்பும்..

ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளைப் போராடி மட்டும் தான் பெற்றுக்கொள்ள முடியும். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போராட்டங்கள் வெற்றியின் உச்சிகளைத் தொட்டபோதிலும் ஆட்சியையும் அதிகாரத்தையும் நிலை நாட்டுவதில் தோல்வியையே தழுவியிருக்கின்றன. ஆரம்பத்திலிருந்தே திட்டமிடப்படாத ஈழப் போராட்டத்தின் சிறப்பான நிலைமைகள் வேறுபட்டவை எனினும், பெரு, நிக்கரகுவா போன்ற நாடுகளில் எல்லாம் போராட்டங்கள் வெற்றியை எட்டும் புள்ளியில் அழிக்கப்பட்டதாக போராட்டிய கட்சிகளும், இயக்கங்களும் கூறுகின்றன. இந்த நிலையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஜனநாயகத்திற்கான ஆயுதமேந்திய நேபாள மக்களின் போராட்டம் என்பது 21ம் நூற்றாண்டில் வெற்றிபெற்ற முதலாவது போராட்டமாகும்.

ஏகாதிபத்தியங்களதும் வல்லரசுகளதும் பின்பலமின்றி, கொல்லைப் புறத்திலிருந்து இந்திய அரசியல் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு போராட்டத்தின் முதலாவது கட்டடத்தை வெற்றிகொண்டது நேபாள மாவோயிசக் கட்சி. இந்திய ஆதரவு மன்னர் ஆட்சியின் கொடுமையை அழித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வரைக்கும் நகர்ந்திருக்கிறார்கள். மக்கள் பற்றோடு போராட்ட எண்ணுகின்ற ஒவ்வொருவருக்கும் நேபாளம் கற்கைக்காக பல படிப்பினைகளை விட்டுச் சென்றிருக்கின்றது. ஜனநாயகப் புரட்சி ஒன்றில் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படும் போது வர்க்க சக்திகளிடையேயான முரண்பாடுகளைக் காணலாம். ஒடுக்கப்படுவோரும் ஒடுக்கவோருக்கும் இடையான போராட்டம் தொடர்வது வரலாற்று நியதி.

போராட்டம் வெற்றிபெற்ற போது, உழைக்கும் மக்களுக்கு நிலங்கள் சொந்தமாக்கப்படுவதைக் பார்த்தோம். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமை பெற்றுக்கொள்வதைக் கண்டோம், சமூகக் குறைபாடுகளை ஒழிப்பதற்கான வாசற்கதவு திறக்கப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியுற்றோம். இவை அனைத்துமே இப்போது மாற்றனடைகின்றன. நிலங்கள் மறுபடி நிலப் பிரபுக்களுக்கு வழங்கப்படுகின்றன. அதுவும் நட்ட ஈடுகளோடு. இந்தியாவோடு சுமூகமான உறவு வேண்டும் என்ற தலையங்கத்தில் இந்திய அரசியல் இராணுவத் தலையீட்டை அனுமதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மக்கள் விடுதலை இராணுவத்தை நேபாள இராணுவத்தோடு இணைக்கிறார்கள்.

இவற்றிற்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்கிறது. மத்திய குழுவின் பெரும்பகுதியிலிருந்து, அடிமட்ட மக்கள் வரைக்கும் புதிதாக முளைத்துள்ள அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் போராட ஆரம்பித்துள்ளார்கள். பாபுராம் பட்டாராய், பிரசண்டா ஆகியோரின் தலைமை வகிக்கும் புதிய அதிகாரத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்கிறது. இதில் யார் வெற்றிகொள்கிறார்கள் என்பதிலிருந்தே புரட்சியின் முழுமையான வெற்றி தங்கியுள்ளதுஎன்று தனது கருத்தை லண்டனில் 02/11/11 அன்று நடைபெற்ற ஒன்றுகூடலில் கூறினார் தோழர் பசந்தா. தோழர் கிரன், தோழர் பசந்தா போன்றோர் நேபாளத்தில் தொடரும் புரட்சியின் முன்முகங்கள். உலகில் நடைபெற்ற போராட்டங்களில் எல்லாம் அப்போராட்டங்களின் ஒவ்வோர் திரும்பல் புள்ளியிலும் இவ்வாறான மாற்றங்களைக் காணலாம்.

ஒன்று கூடலின் முடிவில் கேள்விகளும் பின்னதாகக் கலந்துரையாடலும் முன்வைக்கப்பட்டது. நேபாளத்தின் இன்றைய நிலையில் புரட்சிகரப் பிரிவினர் பலம் பெறுவதன் அடிப்படைகள் குறித்து ஆராயப்பட்டது. நேபாளப் போராட்டத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் நடைபெறுகின்ற போராட்டங்களிடையே இயங்கியல் உறவ(dialectical interchange) ஒன்று அவசியமானது என்றும், ஒன்று மற்றையத்தைப் பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றும்இனியொரு சார்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் ராஜபக்ச அரசு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மூன்றே நாட்களில் அழித்து இனப்படுகொலை நடத்திய போது, இடதுசாரிகள் உரக்கக் குரல்கொடுக்கவில்லை. இதனைப் பயன்படுத்திக்கொண்ட ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசிற்கு எதிரான முழக்கங்களை தமது கைகளில் எடுத்துக்கொண்டு இனப்படுகொலைக்கு எதிரான முற்போக்கு அரசியலைச் சீர்குலைத்துவிட்டன. இனப்படுகொலைக்கு எதிராகவும், ராஜபக்ச அரசின் கொடுமைகளுக்கு எதிராகவும் நேபாள மாவோயிஸ்டுக்கள் போன்ற அமைப்புக்கள் மத்தியிலிருந்து தொடர்ச்சியான குரல் எழுப்பப்பட்டிருக்குமானால் அது ஈழ மக்கள் மத்தியில் இடதுசாரிகளைப் பலப்படுத்தியிருக்கும். இந்த உதாரணம் ஐரோப்பிய மக்களின் போராட்டங்களிலிருந்து அனைத்துக்கும் பொருந்தும். இவ்வாறான இயங்கியல் தொடர்பு போராட்ட சக்திகள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.

இனப்படுகொலைக்கு எதிராக நேபாள முற்போக்கு சக்திகள் மத்தியிலிருந்து குரல் எழுப்பப்பட்டிருக்குமானால் தெற்காசியாவில் மற்றொரு இடதுசாரி இயக்கம் உருவாவதற்கான ஆரம்பப்புள்ளியாகக் கூட அது அமைந்திருக்கும்என்ற இனியொரு.. சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஈரானிய இடதுசாரிகள் இன்னும் ஆழமாக வேறு உதாரணங்களோடு உறுதிப்படுத்தினர்.

பொதுவாக அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தாக இவ் விவாதம் தொடர, பசந்தா தனது முடிவுரையில் இவ்வாறான சர்வதேசத் தொடர்பாடல்களை ஆழப்படுத்த வேண்டும் என்பதை மேலும் வலியுறுத்தினார். இவற்றிற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமானது என்றார்.

பல்வேறு சமூகக் குழுக்கள் கலந்துகொண்ட இந்த உரையாடலில் இந்த நூற்றாடின் மிகப்பெரும் படுகொலையைச் சந்தித்த ஈழத்தமிழர்கள் மத்தியிருந்து ஒருவர் மட்டுமே கலந்துகொண்டதை சிலர் இறுதியில் சுட்டிக்காட்டினார்.

(நன்றி: இனியொரு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com