|
||||
|
இன்று
ரஜனிக்கு பிறந்த
நாள்
தமிழக,
கர்நாடக எல்லையோரத்தில்
கிருஷ்ணகிரியிலிருந்து
4 கிலோ மீற்றர்
தூரத்தில் இருக்கும்
நாச்சிக்குப்பம்
பகுதி யில் வசித்த
குடும்பம் தான்
ரானோவ்ஜி ராவ்
கெய்குவாட் குடும்பம்.
அவர் மனைவி
யின் பெயர் ராம்பாய்.
இவர்களுக்கு
பிறந்தவர்தான்
சிவாஜிராவ் கெய்குவாட்.
கர்நாடக காவல்துறையில்
கான்ஸ்டபிள் உத்தியோகம்
பார்த்தார். ஓர்
அக்கா, இரண்டு
அண்ணன்கள் என்று
சிவாஜிராவு க்கு
உடன் பிறந்தவர்கள்
மூன்று பேர். கடைக்குட்டியாய்
பிறந்தவர் தான்
இந்த சிவாஜிராவ்.
அதனால் செல்லமாகவே
வளர்ந்தார். சிறு
வயதிலேயே தாயாரின்
அரவணைப்பை இழந்து
தவித்தார் சிவாஜிராவ். ராம்பாய் வைத்தியாசலையில்
அனுமதிக்கப்பட்டபோது,
துடியாய் துடித்தார்.
இறப்பதற்கு
சற்று முன்னர்
தாயாரிடம் இருந்து
அவருக்கு கிடைத்தது,
கடைசி முத்தம்.
தாயை இழந்த
சிவாஜி ராவுக்கு,
எல்லாமே, மூத்த
அண்ணன் சத்தியநாராயணன்
தான். இவர்
சிவாஜிராவை விட
5 வயது மூத்தவர். சத்தியநாராயணவுக்கு
சிவாஜி மீது பற்றும்
கவனமும் கண்டிப்பும்
அதிகம். சிவாஜிராவை
விட 7 வயது மூத்த
சகோதரி அஸ்வத்
பாலு பாய். அவர் இப்போது
உயிரோடு இல்லை.
சின்ன அண்ணன்
நாகேஸ்வரராவ்,
இரண்டு வயது மூத்தவர்.
இவர் 1971 இல் இந்திய
– பாகிஸ்தான் போரில்
கலந்து கொண்ட இந்திய
இராணுவ வீரர்.
இராணுவத்திலிருந்து
விலகி பின்னர்
காவலாளியாக கடமையாற்றி
44 வயதிலேயே மரணம்
எய்தினார். குடும்பத்தில்
கொஞ்சம் கஷ்டஜீவனம்
தான். வீட்டில்
எல்லோரும் வறுமைப்பட்ட
வர்களாகவே, வாழ்ந்தனர்.
அதிலும் சிவாஜிராவின்
பாடுதிண்டாட்டம்
தான். இதை, அவரே
படையப்பா வெள்ளிவிழா
விலும் குறிப்பிட்டார்.
அப்பாவிடமும்
பணம் இல்லாததால்,
சத்தியநாராயணராவ்
தான் பணம் கொடுத்தார்.
ஏழ்மையில்
வளர்ந்ததால், சிவாஜியால்
ஷிஷிழிவி வரை மட்டுமே
படிக்க முடிந்தது. 18 வயதை எட்டிய
போது ரவுடிகள்
சகிதம் ஊர் சுற்றிக்கொண்டிருந்த
சிவாஜிராவ். பெண்களை கிண்டல்
செய்து, கலாட்டா
பண்ணி, காவல் துறையின்
கேடி லிஸ்டில்
இடம்பெற்றார்.
சிவாஜிராவின்
முன்கோபம், பல
பிரச்சினைகளை
கொண்டு வந்தது.
இதே
முன்கோபம் தான்
60 களின் பிற்பகுதியில்,
சென்னைக்கும்
அழைத்து வந்தது. ஆனால் சிவாஜிராவுக்கு
சென்னையில் சின்ன
வேலை கிடைப்பதும்,
கஷ்டமாகவே இருந்தது.
பஸ்ஸில் போய்
வேலை தேடக்கூட
காசில்லாமல், நடந்தே
சென்னையை சுற்றி
வந்தால். ஒரு
வழியாக இராயப்பேட்டை
யில் மூடை தூக்கும்
வேலை கிடைத்தது.
பகல்
முழுவதும் வேலை
செய்துவிட்டு
இருட்டு ஆரம்பித்ததும்
பிளட் பாரத்திலேயே
படுத்து தூங்கிவிடுவார். அதற்கு பின்னர்
சித்தாள் வேலை
கிடைத்தது. ஒரு கட்டத்தில்
அந்த வாழ்க்கையும்
பிடிக்காமல் போக
ஒரு வழியாக திரும்ப
ஊருக்கே போக புறப்பட்டார்.
பெங்களூர்
போகக்கூட காசில்லாமல்
ரயிலில் டிக்கட்
எடுக்காமல் திருட்டுத்தனமாக
போய் சேர்ந்தார்.
இனிமேலும்
படிப்பை தொடர முடியாது
என்று நினைத்த
அவர், மீண்டும்
பெங்களுரில் மளிகைக்கடை,
தச்சுப்பட்டறை
என்று சில இடங்களில்
வேலை செய்துவிட்டு
மீண்டும் மூடை
தூக்கும் வேலைக்கே
வந்துவிட்டார்.
கால் போன போக்கிலேயே
வாழ்ந்த சிவாஜிராவ்.
சினிமாவில்
சூப்பர் ஸ்டார்
ஆகுவோமென்று நினைத்திருக்கவே
மாட்டார். ஏன் கர்நாடகாவில்
பஸ் கண்டக்டர்
வேலை கிடைக்குமென்று
கூட நினைத்திருக்க
மாட்டார். பட்டை சாராயமும்
பாக்கெட் சிகரெட்டுடனும்
சினிமா பைத்தியமாக
சுற்றித் திரிந்தவருக்கு.
1970 களில் கண்டக்டர்
வேலை கிடைத்தது.
சிவாஜிராவ்,
அடுத்தவர்களை
கவருவதற்காக சிகரட்டை
தூக்கி போட்டு
ஸ்டைல் காட்ட ஆரம்பித்ததும்,
அப்போதுதான், கலாட்டாக்களும்,
இன்ன பல சங்கதிகளும்
சர்வசாதாரணமாக
அரங்கேறும். சிவாஜி
ராவிடம் சினிமா
ஆசையை கொண்டு வந்தது
அவருடைய பஸ் ஓட்டுநர்
ராஜ்பகதூர் தான். ரஜினி மறுத்த
போதும் ராஜ்பகதூர்
சவுத் இந்தியன்
பில்ம் இன்ஸ்டிடியுட்டுக்கு
விண்ணப்பிக்க
வைத்தார். அதனை தொடர்ந்து
1973 இல் சென்னை வந்தார்.
சிவாஜிராவ்
தனது வாழ்க்கையில்
தோல்வி, அவமானத்தையெல்லாம்
அதிகமாக சந்தித்தது
அந்த கால கட்டத்தில்தான். கதாநாயகனாக
நடிப்போம் என்றெல்லாம்.
நம்பிக்கை
அவருக்கு இருந்ததில்லை.
பாடநெறி முடிய
இரண்டு மாதங்கள்
இருக்கும் போதே
வாய்ப்புக்களை
தேடி அலைய ஆரம்பித்து
விட்டார். ராஜா
சின்ன ரோஜா படத்தில்
சினிமா வாய்ப்புக்
கேட்டு வரும் அவர்,
ஏ. வி. எம்.
ஸ்டுடியோ காவலாளி
கழுத்தை பிடித்து
வெளியே தள்ளினாலும்,
காலில் விழுந்து
ஸ்டுடியோவுக்குள்
நுழைந்து விடுவார்.
ஆனால் நிஜத்தில்
சிவாஜிராவுக்கு
அந்த தைரியம் இருக்கவில்லை.
திடீரென ஒரு
செய்தி அவர் காதுக்கு
எட்டுகிறது. அதுதான். அவர்
படிக்கும் கல்லூரிக்கு
தென்னிந்தியாவின்
பிரபல இயக்குனர்
படம்
எடுக்கப்போகும்
செய்தி. வழக்கம்போல
நேராக பாத் ரூமுக்குள்
சென்ற சிவாஜிராவ்,
பாலசந்தரை பார்த்தால்
எவ்வாறு பேச வேண்டும்,
என்ன பேச வேண்டும்,
எப்படி பேச வேண்டுமென்ன,
கண்ணாடி முன் உரையாடிப்
பார்த்தார். அவரை தன்பக்கம்
ஈர்க்க வேண்டுமென்பதற்காகவே,
சிவாஜிராவ் மெனக்கட்டார்.
பாலசந்தரை
கண்டதும் கேள்வி
மேல் கேள்வி கேட்டார்.
சில
கேள்விகள் பாலசந்தரை
கோபப்படுத்தினாலும்,
இந்த கறுத்த உருவத்திற்குள்
ஏதோவொன்று ஒழிந்திருப்பதை,
புரிந்து கொண்டார். பாலசந்தர் சிவாஜிராவிடம்
கேட்டார் தமிழ்
தெரியுமா? கொஞ்சம் கொஞ்சம்
தெரியும் என்றார்
சிவாஜிராவ். பேசிய தமிழின்
தரத்தை அறிந்து
கொண்ட இயக்குனர்
இமயம் பாலசந்தர்,
உனக்கு தமிழ் தெரியாது,
முதலில் அதை கத்துக்கோ
என்றார். திரும்பவும்
நடிக்க அலைந்த
சிவாஜிராவ் எங்குமே,
எந்த வாய்ப்பும்
கிடைக்காமல் வெறுத்து
போய் சினிமாவில்
வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும்
பரவாயில்லை. பஸ் கண்டக்டர்
வேலையை வைத்தே
காலத்தை ஓட்டிவிடலாமென
நினைத்த அவர்,
பஸ்ஸில் ஏறி, ஊருக்கு
புறப்பட்டார்.
ஆனால்
சனி பகவான் முன்னதாகவே
பெங்களூர் போய்
சிவாஜிராவின்
வருகைக்காக காத்திருந்தார். 1975
இல் ஒரு நல்ல செய்தியினை
சுமந்து வந்தது
கலாகேந்திரா அலுவலர்,
பாலசந்தர் உன்னை
கூட்டிட்டு வரச்
சொன்னார் என்றார்
வந்த உதவியாளர். வேகமமாக பறந்தது
சிவாஜியின் மனது
பாலசந்தரை சந்தித்தார்.
அவரும் நடிக்க
சொன்னார் துக்லக்
நாடக காட்சியை
நடித்துக் காட்டினார்.
இயக்குனருக்கும்
பிடித்து போக அடுத்த
நாள் 5 மணிக்கு
நேராக படப்பிடிப்பு
நடக்கும் இடத்திற்கே
வரச் சொன்னார்.
மாத கணக்கில்
மனதில் அடக்கி
வைத்திருந்த கனவு,
நனகாகப் போவதாக
சிவாஜிராவ் உணர்ந்தார்.
1975
ஜனவரி மாதம் அழுக்கு
சட்டையுடன் 10 நாள்
தாடியுடனும், வாயில்
பற்ற வைத்த பீடியுடனும்,
ஒரு கறுப்பு உருவம்
கேட்டை திறக்கும்
காட்சியை, கெமரா
படம்பிடிக்கிறது. முகத்தில் ஓடி
களைத்த களைப்புடனும்,
எதிர்காலத்தை
பற்றிய விரக்திகளுடனும்,
ரஜினிகாந்தாக
நாமகரணம் சூடப்பட்டிருக்கும்
சிவாஜிராஜ் கேட்டை
திறக்கிறார்.
கூடவே
சுருதி பேதம் என்று
தலைப்புப் போடுகிறார்கள். பாலசந்தர் மீட்டிய
சுருதி, அட்சரம்
கூட பிசகாமல் பரபரப்பான
படமாக, பாலசந்தரின்
பெயர் சொல்லும்
படமாக அமைந்துவிட்டது
அபூர்வ ராகம்.
படத்தில் 15 நிமிடங்களே
வந்து கிளைமேக்ஸில்
பரிதாபமாக உயிரை
விடும் ரஜினியை
அன்று கண்டுகொள்வார்
இல்லை. ஆனால்
பாலசந்தர் ‘அந்த
ஆளு கண்ணுல தெரியுர
பரபரப்ப பாருப்பா,
ஒருநாள் தமிழ்
நாட்டையே திரும்பி
பார்க்க வைப்பான்’
என்று, தனது சகா
அனந்துவிடம் பாலசந்தர்
சொன்னது வெகு சீக்கிரமே
உண்மையானது. அபூர்வ
ராகங்கள் படத்தை
ஆரம்பிக்கும்
போது, அடுத்த படத்திற்கும்
ரஜினி தான் வில்லன்
என்பதை அவர் முடிவு
செய்திருந்தா. ரஜினியின்
பாத்திரத்தை வழக்கமான
வில்லனாகவோ, கதாநாயகனாகவோ
சித்தரிக்காமல்,
காதல் பொறாமையில்
பொசுங்கி; உயிர்
நண்பன் உயிரிழக்க
காரணமாகும் வில்லனிசத்தை
வெளிப்படுத்தியிருந்த
மூன்று முடிச்சு,
ரஜினியின் சினிமா
உலக வாழ்க்கைக்கு
ஒரு வலுவான முடிச்சை
போட்டது. நடிப்பதென்பதோ
ரஜினிக்கு கஷ்டமாகவே
இருந்தது. மூன்று முடிச்சு
படப்பிடிப்பு
சமயத்தில் நடிப்பே
உனக்கு வராது என்று
பாலசந்தரே வெறுப்பேற்றிய
அவர், அதே வாயால்
படம் முடிந்ததும்
பாராட்டையும்
பெற முடிந்தது.
4 வார்த்தை தமிழில்
பேசுவதற்கே தடுமாறிக்கொண்டிருந்த
ரஜினி, 16 வயதினிலே
படத்திற்காக 4
பக்க உரையாடலை
நாலே நிமிசத்தில்
பேசி நடிக்கும்
அளவுக்கு தேறிவிட்டார்.
இப்படத்திற்கு
அவர் வாங்கிய சம்பளம்
வெறும் 2 ஆயிரத்து
500 மட்டும் தான். ரஜினியின்
நடிப்பு திறமையை
பாலசந்தர் எதிர்மறையாக
காட்ட முடிந்த
பாலசந்தருக்கு
நினைத்தாலே இனிக்கும்,
தில்லு முல்லு
ஆகிய படங்களின்
மூலம் ரஜினியின்
நகைச்சுவை உணர்வை
வெளிச்சத்திற்கு
கொண்டு வந்தது.
பாலசந்தர்
தான். எஸ். பி. முத்துராமனும்,
பஞ்சு அருணாசலமும்
தான் வில்லனாக
நடித்ததை குணச்சித்திர
நடிகராக்கி கதாநாயகனாகவும்
சூப்பஸ்டார் ஆகும்
வரை உடன் இருந்தவர்கள்
இவர்கள் இருவரும்
தான் எஸ். பி.
எம். என்.
இயக்கத்தில்தான்
ரஜினி அதிக படங்களை
நடித்திருக்கிறார்.
எதிர்மறையாக
நடித்துக் கொண்டிருந்த
ரஜினியை புவனா
ஒரு கேள்விக்குறி
மூலம் குணச்சித்திர
நடிகராக உயர்த்தினார்.
அதுவரை கதாநாயகனாக
நடித்த சிவகுமார்
ரஜினிக்காக வில்லன்
ஆனார். நட்புக்கு
முதலிடம் கொடுத்து
உயர்ந்து நின்று
பொம்மை கணவனாக
ஆதரவு கிடைக்காமல்
அல்லாடும் சாமானியனாக
ரஜினியின் பாத்திரப்
படைப்பு படத்திற்கு
பெரிய பலம் ரஜினியின்
அலட்டல் இல்லாத
நடிப்பு விருதுகளையும்
அள்ளிக் கொண்டது.
பின்னாலே
ஏவிஎம் விடம் கூட்டணி
கொடுத்த வெற்றிகளெல்லாம்
தமிழ் சினிமாவை
வாழ வைத்த திரைப்படங்கள்,
ரஜினியின் நடிப்பு
திறமையை வெளிக்கொணரும்
விதத்தில் 6 இலிருந்து
60 வரை, எங்கேயோ கேட்ட
குரல் போன்ற திரைப்படங்களையும்
எஸ்பிஎம் வழங்கினார்.
ரஜினியின்
சம்பளம் ஆயிரங்களில்
முன்னேறி முள்ளும்
மலரும் படத்தில்
35 ஆயிரத்தை தொட்டது. பட வாய்ப்புக்கள்
அதிகரித்துக்
கொண்டே போனதால்
சம்பளத்தை உயர்த்த
வேண்டிய நிர்ப்பந்தம்
ரஜினிக்கு ஏற்பட்டது.
தமிழில் முக்கியமான
கலைப்படமாக கருதப்படும்
முள்ளும் மலரும்
படத்தில் வரும்
காளி பாத்திரப்
படைப்பு கிராமத்து
முரட்டு அண்ணனை
கண் முன் நிறுத்தியது.
மகேந்திரனின்
இயக்கத்தில் வெளியான
இத்திரைப் படத்தில்
ரஜினியின் நடிப்பு
பலரது கவனத்தை
ஈர்த்தது. தம்பி
தங்கையை வளர்த்து
நல்ல முறையில்
ஆளாக்கி பொறுப்பான
இளைஞனாகவும் பின்னாளில்
வறுமையுடன் பேராடும்
எழுத்தாளனாகவும்
ரஜினி காட்டிய
பரிணா மத்திற்கு
கிடைத்த விருதுகள்
அதிகம்...... பஸ்
கண்டக்டராக இருந்த
போது மாதம் 350 ரூபா
சம்பளம் வாங்கிய
அவருக்கு இலட்சங்களில்
சம்பளம் கிடைத்த
போது நிலை தடுமாறி
போனார். கடுமையான உழைப்பும்,
பணமும் புகழும்
தன்னை படுக்கையில்
தள்ளியதாக ஒரு
தடவை ரஜினியே ஒரு
நேர் காணலில் குறிப்பிட்டிருந்தார்.
ஊடகங்களும்
ரஜினியை பற்றிய
தவறான செய்தியை
கொடுக்க ஆரம்பித்தன.
ரஜினி முடிந்து
போன கதை என்று
நினைத்தவர்களை
எல்லாம் புரட்டிப்
போட்டது தரும யுத்தம்
படத்தின் வெற்றி.
இது
1980 களின் ஆரம்பத்திலேயே
ரஜினி தன்னை மாற்ற
தொடங்குகிறார். பகலில் அமைதியாகவும்
பெளர்ணமி நேர இரவுகளில்
மனநோயாளியாகவும்
வித்தி யாசம் காட்டியிருந்த
ரஜினியின் படத்தை
குமுதம் தனது விமர்சனத்தில்
புகழ்ந்திருந்
தது. தொர்ந்து
வந்த தாதா கொலைகாரன்
என நெகட்டிவ் கெரக்டர்களையே
பொசுட்டி வாக சொன்ன
பில்லா, பொல்லாதவன்,
படங்களும் வெற்றிபெற்றன.
முரட்டுக்காளை
திரைப்படம் எம்.ஜி. ஆரு
க்கு பின்னர் விழுந்த
இடைவெளியை ரஜினியால்
நிரப்ப முடிந்திருக்கிறது
என்கிற செய்தியை
பட்டித்தொட்டி
எங்கும் பரப்பிய
படம் தமிழ் சினிமாவின்
உச்ச நட்சத்திர
மாக உயர்ந்து மசாலா
திரைப்படத்திற்கு
திரும்பவும் வாழ்க்கை
கொடுத்த படம்.
1980
களில் ரஜினிக்கு
தனி இரசிகர்கள்
வட்டமே உருவானது. சினிமா
நடிகர் ரஜினிக்கும்
இதய நோயுடன் பேராடும்
ஊனமுற்ற சிறுமிக்கும்
இடையேயான அன்பைச்
சொன்ன அன்புள்ள
ரஜினிகாந்த் ரஜினிக்கும்
குழந்தைகளுக்கும்
இடையிலான நெருக்கத்தை
இன்னொரு பரிமாணத்திற்கு
கொண்டு சென்றது.
ஸ்ரீ
ராகவேந்திரா திரைப்படம்
ரஜினியின் 100 வது
திரைப்படம் அவரது
ஆத்ம திருப்திக்காக
இத்திரைப்படம்
எடுக்கப்பட் டது. தோல்விப் படம்
என்றாலும் பலரை
ஸ்ரீ ராகவேந்தரரின்
பக்தர்களாக்கிய
திரைக் காவியம்
இதில் அவர் ஸ்ரீ
ராகவேந்தரரா கவே
வாழ்ந்து காட்டியிருந்தார்.
ஒரு பக்கம்
முரட்டுக்காளை,
போக்கிராஜா, மனிதன்
என்று அடித்தட்டு
மக்களை கவரும்
படங்களாக கொடுத்து
வசூலை வாறிக்கொண்டனர்.
அமிதாப்பச்சனோடு
இணைந்து நடித்த
அந்தா காணுன் ரஜினிக்கு
மிகப் பெரிய பெயரை
பெற்றுத் தந்தது. அதே நேரம் ரஜினியின்
சுறுசுறுப்பும்
ஸ்டையிலும் இந்தி
சினிமா ரசிகர்களின்
வரவேற்பை பெற்றதால்
அந்தா காணுன் வெற்றி
பெற்றதாக ஊடகங்கள்
செய்தி வெளியிட்டன.
தன்னால்
தனித்து நின்றே
வெற்றியை தர முடியும்
என்றே கங்குவா,
ஜான் ஜானி ஜனார்த்தனன்
போன்ற படங்களிலும்
நிரூபித்தார். ஒரே நடிகர் 3 வேடங்களில் நடிப்பது பொலிவூட்டை பொறுத்தவரைபெரிய விஷயம். ரஜினி 3 வேடங்களிலும் நடித்து படமும் வெற்றி பெற்றதை பொலிவூட் பரபரப்பாக பேசியது. இந்தி படங்களில் நடித்த தனக்கொரு சந்தோஷமான அனு பவம் எனக் கூறிக் கொண்டே ரஜினி மேலும் சில இந்தி படங்களில் நடித்தார். ஆயிரங்களில் இருந்த நடிகர்களின் சம்பளங்களை இலட்சங்களுக்கு கொண்டு சென்ற ரஜினி, 80 களின் இறுதியில் கோடிகளை தொட்டு இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார்.
அதிகாரப்
பதவியில் இல்லாத
எந்தவொரு தனிமனிதனுக்கும்
கிடைக்காத செல்வாக்கு
இக்காலகட்டத்தில்
மசாலா படங்களை
கொடுத்து தனது
ஸ்தானத்தை தக்கவைத்துக்கொண்ட
ரஜினி 90 களில் தொழில்நுட்ப
விடயங்களின் முக்கியத்துவத்தை
புரிந்துகொண்டு
கதையமைப்பிலும்
கவனம் செலுத்த
ஆரம்பித்தார்.
இரசிகர்களின்
எதிர்பார்ப்புக்களுக்கு
ஏற்றவாறு படங்களில்
அரசியல் நெடிவரும்
வசனங்களும் சேர்க்கப்பட்டன. வருடங்களுக்கு
3 படங்கள் நடித்துக்
கொண்டிருந்த ரஜினி
படங்களின் எண்ணிக்கையை
குறைத்து கொண்டு
2 வருடங்களுக்கு
ஒரு படம் நடிக்க
ஆரம்பித்தார்.
அந்த படங்கள்
நிறைய வசூல் சாதனைகளைப்
புரிந்தன. 95
இல் பாட்ஷா திரைப்படம்
ரஜினையை வானளவிற்கு
உயர்த்தி அரசியல்
எதிர்ப்பார்ப்பிற்கு
பிள்ளையார் சுழி
போட்டதுதான் பாட்ஷா
திரைப்படம். இத்திரைப்படம்
ரஜினி ரசிகர்களின்
ஒட்டுமொத்த சொய்ஸாக
இப்படம் அமைந்ததோடு
இதைவிட நல்ல எக்ஷன்
படம் எதுவும் தமிழ்
சினிமாவில் இதுவரை
வரவில்லை என்பது
சினிமா விமர்சகர்களின்
கருத்து. இது
தமிழக அரசியலின்
தவிர்க்கமுடியாத
சக்தியாகவும்
ரஜினியை கொண்டு
சென்றது. இதில் ரஜினி
பேசிய பஞ் வசனங்களும்
அவரை இந்தியாவின்
மிகப்பெரிய நடிகராகவும்,
வசூல் சக்கரவர்த்தியாகவும்
திரும்பி பார்க்க
வைத்தது. தெலுங்கு
பட உலகில் மீண்டும்
பாட்ஷா திரைப்படம்
ரஜினியின் தெலுங்கு
மார்க்கத்தை உயர்த்தி
கொடுத்தது. 150
வது படமாக வெளிவந்த
படையப்பா திரைப்படம்,
சுமார் 2 வருட இடைவெளிக்குப்
பிறகு வெளிவந்தது. 2 வருடங்கள் அவர்
ஓய்வெடுத்தாலும்
தமிழகத்தின் சூப்பர்
ஸ்டார் தான் தான்
என்பதை இத்திரைப்படத்தின்
மூலம் நிரூபித்தார்.
படமே நடிக்காவிட்டாலும்
தான் சூப்பர் ஸ்டார்
என்பதை நிரூபிக்க
அசுர சாதனைக்கு
சொந்தமான படம்
வெகுஜன சினிமாவின்
சக்கரவர்த்தி
ரஜினி தான் என்பது
படத்திற்கு கிடைத்த
அமோக ஆதரவு சொன்னது.
இப்படத்தில்
அமைந்த ஒரு சில
காட்சிகள் முதல்வர்
ஜெயலலிதாவிற்கு
எதிராக அமைக்கப்பட்டதாகவும்
கருதி ஒரு சில
ஊடகங்கள் செய்தி
வெளியிட்டிருந்தன. படம் மெகா ஹிட்டானது.
அமெரிக்கா
உள்ளிட்ட உலக நாடுகளில்
தமிழர்கள் வசிக்கும்
பகுதி எங்கும்
இத்திரைப்படம்
திரையிடப்பட்டது.
2
ஆயிரமாமாண்டு
காலப் பகுதியில்
ரஜினி பலத்த புகழை
சாம்பாதித்ததை
போன்றே அரசியல்
எதிரிகளையும்
சம்பாதிக்க தொடங்கினார். 96 இல்
தொடங்கிய அரசியல்
பிரச்சினை, காவிரி
வடிவில் மீண்டும்
வந்த அதே நேரத்தில்
2002 ஆம் ஆண்டில் வெளிவந்த
பாபா திரைப்படத்திற்கு
பெரும் நெருக்கடியையும்
சந்திக்க வேண்டி
ஏற்பட்டது. படமும் தோல்வியடைந்ததோடு
ரஜினியின் சினிமா
வாழ்க்கையும்
முடிந்ததென்று
எண்ணிய பலருக்கு
தான் குதிரை என்பதை
நிரூபித்தார்.
96
காலப் பகுதியில்
தமிழக அரசியலில்
நிலவிய குழப்பங்கள்
காரணமாக ரஜினியினால்
பார்த்துக்கொண்டிருக்க
முடியாமல் போனது. 1996 ஆம் ஆண்டு சட்ட
மன்ற தேர்தலில்
அ.தி.மு. 8. அரசிற்கு
எதிராக ரஜினி குரல்
கொடுக்கிறார்.
தி.மு.க., த.ம.க.
கூட்டணிக்கு வாக்களிக்குமாறு
ரஜினி மக்களை கேட்டுக்கொண்டார்.
இதற்கெல்லாம்
காரணம் ஜெயலலிதா
அரசின் ஜனநாயக
விரோத நடவடிக்கைகள்
தான் எதையும் மறைக்காமல்
வாக்குக் கேட்டு
யாராவது பணம்,
50, 100 கொடுத்தால் வாங்க
வேண்டாம் 500, 1000 கொடுக்குமாறு
கேட்டு வாங்கிக்
கொள்ளுங்கள் ஜெயலலிதா
ஆட்சிக்கு வந்தால்
தமிழகத்தை அந்த
ஆண்டவனாலும் காப்பாற்ற
முடியாதென்று,
என்ற ரஜினியின்
அதிரடியான பேச்சும்
ஜெயலலிதா அரசை
நடுங்க வைத்ததோடு
பெரும் சர்ச்சையையும்
ஏற்படுத்தியது.
கடைசியில்
தி.மு.க. கூட்டணி
வெற்றி பெறுகிறது.
தொடர்ந்து
1998 பாராளு மன்ற தேர்தலில்
ரஜினி எடுத்த நிலைப்
பாடும் முக்கியமானதாக
பார்க்கப்பட்டது.
2005
இல் சந்திரமுகி,
திரைப்படத்தின்
ஓடியோ வெளியீட்டில்
கலந்துகொண்டு
பேசிய போது, அவர்
அது பற்றி வெளிப்படையாகவே
பேசினார். படமும் வெளிவந்து
தமிழக சினிமா வரலாற்றில்
அதிக நாட்கள் ஓடிய
திரைப்படம் என்ற
சாதனையோடு ரஜினியின்
இடம் உயர்ந்தது.
இப்படத்தின்
திரைக்கதை, நகைச்சுவை,
போன்றவற்றால்
திரைப்படம் பெரும்
வெற்றியைப் பெற்றது.
ரஜினி சொன்னது
போல தான் யானையில்லை
குதிரையென்பதை
நிரூபித்தார்.
மிக நீண்ட நாள்
சினிமா ஆர்வலர்களின்
ஆவலாக இருந்த பிரமாண்ட
இயக்குனர் ஷங்கரும்
ரஜினியும் இணையம்
நேரம் வந்தது.
முதல்வனில்
இணைந்திருக்க
வேண்டிய இவ்விருவரும்
சிவாஜி தபாஸ் எனும்
திரைப்படத்தின்
மூலம் இணைந்து
மிகப்பெரிய வெற்றியை
கொடுத்தனர். ரஜினி இன்னும்
இளமையோடு இருப்பதையும்
இப்படம் நிரூபித்தது.
வட இந்தியாவிலும்
இப்படம் மிகப்பெரும்
சாதனையை படைத்தது.
இந்தியாவின்
மிகப் பெரிய நட்சத்திரம்
ரஜினிகாந்த் என்பதை
இத்திரைப்படம்
எடுத்துக் காட்டியது.
திரையிடப்பட்ட
சகல திரையரங்குகளிலும்
புதிய சாதனைகளை
படைத்த சிவாஜி
திரைப்படம் வட
இந்தியாவில் அபித்தாபிற்கா
ரஜினிக்காக மவுசு
அதிகம் என்பதை
கணக்கிடவேண்டிய
கட்டாயம் ஊடகங்களுக்கு
ஏற்பட்டது. கருத்து கணிப்பு
வெளியான போது ரஜினி
52 சதவீத வாக்குகளையும்
அமித்தாப்பச்சன்
48 சதவீத வாக்குகளையும்
பெற்றிருந்தனர்.
என். டி.
ரி.வியின்
2007 ஆம் ஆண்டிற்கான
சிறந்த பொழுதுபோக்காளருக்கான
விருதையும் பிரதமர்
மன்மோகன் சிங்கிடமிருந்து
ரஜினி பெற்றுக்
கொண்டார். ரஜினி
அதிக புகழையும்
பணத்தையும் செல்வாக்கையும்
பெற்றதோடு தன்
ரசிகர்களையும்
உற்சாக வெள்ளத்தில்
ஆழ்த்தினார். எயந்திரன்
என்ற இத்திரைப்படத்தின்
மூலம் உலக அளவில்
மாபெரும் சாதனையை
புரிந்த முதல்
தமிழ் திரைப்படம்
என்ற அந்தஸ்திற்கு
உயர்த்திய அதே
நேரத்தில், திடீரென
அனைவரினதும் கவனத்தை
ஈர்க்கவும் ஆரம்பித்தார்.
திடீரென
சுகவீனமுற்றதால்
பல கோடி நெஞ்சங்களில்
குடியிருக்கும்
அதிகாரமில்லாத
தனி மனிதனுக்குள்ள
செல்வாக்கை உலகிற்கு
சொன்னதோடு மிகப்பெரும்
கண்டத்திலிருந்து
தப்பி சினிமா ரசிகர்களை
மகிழ்ச்சிப்படுத்தும்
வித்தையை காட்ட
தயாராகின்றார்.
இந்தியாவின்
மிகப்பெரிய படைப்பாகவும்
சங்கரின் கனவு
படைப்பாகவும்
3 மொழிகளில் வெளியாகிய
இயந்திரன் திரைப்படம்
இந்திய படைப்பின்
உச்சமாக கருதப்பட்டது. 150 கோடி பட்ஜட்டில்
தயாரிக்கப்பட்ட
இயந்திரன் திரைப்படம்
சன் பிச்சர்ஸ்
தயாரித்த முதல்
திரைப்படமாகவும்
இது அமைந்தது.
இந்திய திரைப்படங்களில்
அனைத்து வசூல்
சாதனைகளை முறியடித்து
ரஜினியின் அந்தஸ்தினை
யும் புகழினையும்
வான் அளவிற்கு
உயர்த்தியது.
ஷங்கரின்
இயக்கம் பாராட்டப்பட்டதோடு
ரஹ்மானின் இசையும்
பேசப்பட்டது. ரஜினி இத்திரைப்படத்திற்காக
தன்னை முழுமையாக
அர்ப்பணித்துக்
கொடுத்தார். சாதாரணமாக 4 மாதங்கள்
கூட ஒரு படத்திற்காக
நாள் கொடுக்காத
ரஜினிகாந்த் இயந்திரன்
திரைப்படத்திற்காக
இரண்டரை வருடங்கள்
அயராது பாடுபட்டார்.
ஓடியோ வெளியீட்டின்
பொழுதும் மிகப்பெரிய
எதிர்பார்ப்பு
நிலவியதோடும்
ஓடியோ விற்பனையிலும்
புதிய சாதனை படைத்தது.
3
ஆயிரம் திரையரங்குகளில்
உகெங்கும் திரைப்படம்
வெளியானது. தமிழகத்தில்
மாத்திரம் தொளாயிரம்
திரையரங்குகளில்
திரையிடப் பட்டது.
அதிகாலை ஒரு
மணிக்கும் இப்படம்
திரையங்குகளில்
திரையிடப் பட்டது.
படம் திரையிடப்பட்ட
சகல நாடுகளிலும்
திருவிழா கொண்டாட்டம்
போல் அமைந்தது.
உலகம்
முழுவதிலும்
450 கோடிக்கு மேல்
இப்படம் வசூல்
செய்ததோடு இந்தியாவில்
மாத்திரம் 375 கோடி
ரூபா வசூல் செய்தது. இந்தியாவின்
வசுல் சக்கரவர்த்தி
ரஜினிதான் என்பதை
நிரூபித்தது.
பல சர்வதேச
நாடுகளில் இடம்பெற்ற
விருது வழங்கும்
விழாக்களிலும்
இப்படம் பாராட்டை
பெற்றது. இவ்வளவு
புகழ் கிடைத்த
போதும் ரஜினி அடக்கமாக
இருந்து அடுத்த
படத்தை ஆரம்பிப்பதற்கான
அறிவிப்பை வெளியிட்டார்.
மே
13 ஆம் திகதி அவரது
உடல்நிலை மோசமடைந்து
உடனடியாக அவர்
சென்னை இராமச்சந்திர
மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை
பற்றி மிக மோசமான
வதந்திகள் பரவ
துடிதுடித்து
போனார்கள் இரசிகர்கள்.
இராமச்சந்திரா
மருத்துவ மனைக்கு
முன்பு குவிந்தார்கள்.
இந்தியாவின்
சகல ஊடகங்களும்
இதை உற்றுநோக்கிக்
கொண்டிருந்தன.
ரஜினி மீது
அவரது இரசிகர்கள்
எந்தளவு அன்பும்
பக்தியும் கொண்டிருந்தார்கள்
என்பதை அந்த சந்தர்ப்பம்
படம் பிடித்து
காட்டியது. தலைவரின்
ஒரு புகைப்படத்தை
யேனும் வெளியிட
வேண்டுமென இரசிகர்கள்
கேட்டார்கள். தனுஷின் கெமரா
போனிலிருந்து
ஒரு படம் எடுக்கப்பட்டு
இரசிகர்களுக்காக
வெளியிடப்பட்டது.
அதே மருத்துவமனையில்
5 முறை டயாலிஸிஸ்
செய்யப்பட்ட பிறகு
ஓரளவு உடல் தேறினார்.
ஆனாலும் இரசிகர்கள்
தங்கள் தலைவருக்கு
நேர்ந்த கதியை
எண்ணி கலங்கி போனார்கள்.
அப்போதுதான்
ரஜினி சிங்கப்பூரிலிருந்து
மெளன்ட் எலிசபெத்
மருத்துவமனைக்கு
கொண்டுசெல்லப்பட்டார். தலைவன் தன் ரசிகர்களுக்கு
கனத்த குரலில்
தன் குரலை தன்
மகளின் தொலைபேசியில்
பதிவு செய்து தன்
ரசிகர்களுக்காக
ஊடகங்களில் ஒளிபரப்புமாறு
அனுப்பி வைத்தார்.
சகல ஊடகங்களும்
அதற்கு முன்னுரிமையளித்தன.
தன்
காந்த குரலால்
ரசிகர்களை கவர்ந்து
இழுத்த தலைவன்
குரல் கேட்டு பலரும்
கவலையின் உச்சத்திற்கே
போனார்கள். எல்லோரினதும்
குடும்பத்தில்
ஒருவராக பார்க்கப்படும்
ரஜினி தமிழக மக்களை
ஒரு கணம் துடிக்க
வைத்துவிட்டார்.
வைகோவும் ஒரு
கூட்டத்தில் இது
தொடர்பில் பேசினார்.
மெளன்ட் எலிசபெத்
மருத்துவமனையில்
சிகிச்சைபெற்ற
ரஜினியின் உடல்நிலை
படிப்படியாக சீரடைய
தொடங்கியது. இதன்போது
தான் ரஜினியின்
உடல் நிலை சீரடைய
வேண்டி உலகம் முழுவதிலுமுள்ள
அவரது ரசிகர்கள்
பிரார்த்தனைகளில்
தீவிரமாக ஈடுபட்டனர். திரையுலக பிரமுகர்களும்
அவருக்காக பிரார்த்தனை
செய்தனர். கோயில்களில்
அன்னதானம், மண்சோறு
சாப்பிடுதல், தீ
மிதித்தல், சர்வமத
பிரார்த்தனைகள்
உலகளாவிய கூட்டுப்
பிரார்த்தனைகள்
பாதை யாத்திரையென
அவரவருக்கு தெரிந்த
வகையில் கிட்டத்தட்ட
2 இலட்சத்திற்கும்
அதிகமான பிரார்த்தனைகள்
ரஜினிக்காக நடத்தப்பட்டன.
உலகில் எந்த
அதிகாரத்திலும்
இல்லாத ஒரு மனிதருக்கு
இத்தனை பிரார்த்னைகள்
நடத்தப்படுவது
இதுவே முதல் முறை.
பின்னர்
ஜூன் 14 ஆம் திகதி
பூரண குணமடைந்த
அவர் ஓய்வுக்காக
ஒரு மாதமளவில்
தங்கியிருந்து
தமிழகம் திரும்ப
தயாராகினார். எப்போது
அவர் சென்னை திரும்புவார்
என காத்திருந்த
ரசிகர்கள் அவர்
திரும்பும் திகதியை
முன்கூட்டியே
அறிவிக்க வேண்டுமென
லதா ரஜினியிடம்
நேரில் தெரிவித்தார்கள்.
அதற்கு
தனது ஒப்புதலையும்
அளித்த அவர் ஜுலை
13 ஆம் திகதியென
உறுதியாக தெரிவித்தார். அந்த செய்திக்காக
காத்திருந்த அவரது
ரசிகர்கள் சென்னை
விமான நிலையத்திலிருந்து
வீடு செல்லும்
வரை மகத்தான வரவேற்பளிக்க
தயாராகினார்கள்.
தன் தலைவனை
காண விமான நிலையத்திற்கு
2, 3 மணித்தியாலங்களுக்கு
முன்பே ரசிகர்கள்
கூடியிருந்தனர்.
தலைவனின் தரிசனம்
கிடைக்கிறது.
கூட்டம் மிகுதியால்
ரஜினிக்கும் ரசிகர்களை
நெருங்க முடியவில்லை.
தலைவனை
பார்த்த சந்தோஷத்தில்
ரசிகர்கள் மகிழ்ச்சியின்
உச்சத்திற்கு
போனார்கள் பாதுகாப்பு
கெடுபிடிகளால்
ரசிகர்கள் காவலாளிகளிடம்
அடியும் வாங்கினார்கள். தலைவன் தன் குடும்பம்
சகிதம் ரசிகர்களை
வணங்கியவாறு வீடு
சென்றார். ஆனாலும் இடையிடையே
அவரது ரசிகர்கள்
ஒட்டியிருந்த
போஸ்டர்கள் ரஜினியை
மெய்சிலிர்க்க
வைத்துவிட்டன.
அவர்
மீது ரசிகர்கள்
எந்தளவு பற்றும்
பாசமும் அன்பும்
வைத்திருக்கிறார்கள்
என்பதை அவரும்
சரியாக புரிந்துகொள்ளும்
சந்தர்ப்பமாக
இது அமைந்தது. தொடர்ந்தும்
ராணா படத்தில்
நடிக்க முடிவு
செய்த ரஜினி பல்வேறு
நிகழ்வுகளிலும்
கலந்துகொண்டார்.
அதிலும்
இயக்குனர் எஸ். பி. முத்துராமனுக்கு
விருது வழங்க ஏற்பாடு
செய்யப்பட்ட ஒரு
நிகழ்விலும் கலந்து
கொண்டு பேசிய உரை
சற்று பலரையும்
யோசிக்க வைத்தது.
அதனை தொடர்ந்து
ராணா படத்தை அடுத்த
ஆண்டு எடுக்க தீர்மானித்துவிட்டு
கோச்சடையான் எனும்
த்ரிடி எனும் எனிமேஷன்
திரைப்படத்தில்
ரஜினி நடிக்க இருப்பதாகவும்
செய்திகள் தற்சமயம்
வெளியாகியுள்ளன.
கோச்சடையான்
திரைப்படம் அடுத்த
ஆண்டு ஆகஸ்ட் மாதம்
வெளியாகவுள்ளது.
எம். ஜி. ஆர்க்கு
கிடைக்காத அதிர்ஷ்டம்
ரஜினிக்கு உண்டு
என்றால் அது அவரது
ரசிகர்கள்தான்.
ரஜினியின்
ரசிகர்களை ஒருவரை
யறைக்குள் அடக்கி
விட முடியாது.
5 வயது குழந்தை
முதல் 70 வயது ஷிதியோர்
வரையும், கூலி
தொழிலாளி முதல்
பொறியியலாளர்
வரை, படித்தவர்கள்,
பாமரர்கள் என்ற
பாகுபாடு இல்லாமல்
அவரது ரசிகர் வட்டம்
விரிந்து கொண்டே
செல்கிறது. விரிந்து செல்லும்
இவரது ரசிகர் வட்டமும்
இவரது தரமும் இவரை
கடைசியில் எங்கு
கொண்டு நிறுத்தும்
என்பது அவர் சொல்வது
போது ஆண்டவனுக்கு
தான் தெரியும். (இர்பான் மொஹமட்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |