Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் சிவில் சமூகத்தின் விண்ணப்பத்திற்கு கூட்டமைப்பின் பதில் என்ன?

(வி.தேவராஜ் )

தமிழர்கள் வாய்மூடி மௌனிகளாக தொடர்ந்தும் இருப்பதற்கு தயாராக இல்லை என்பதை தமிழ் சிவில் சமூகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தின் பகிரங்க விண்ணப்பம் இதனை உணர்த்தியிருக்கின்றது. வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் சார்பில் தமிழ் சிவில் சமூகம் இந்த பகிரங்க விண்ணப்பத்தை விடுத்துள்ளதாகவே கொள்ள வேண்டும். கூட்டமைப்பினரை நோக்கி விளக்கம் கோரி பல விடயங்களை தமிழ் சிவில் சமூகம் முன்வைத்துள்ளது.

1. ஐ.நா. மனிதவுரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த வேளை அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த தங்களது முடிவானது அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதத்தில் அமைந்து விட்டதாக நியாயமான விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. இதற்கான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது கூட்டமைப்பின் தார்மீகக் கடமையாகும்.

பதில் – ஒரு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது அய்யன்னா மனிதவுரிமை சபையில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்குப் போவதா? விடுவதா? என்பதை தீர்மானிக்க முடியாது. அப்படியிருந்தும் அய்யன்னா மனிதவுரிமை சபையில் செப்தெம்பர் 12 ஆம் நாள் சிறிலங்காவின் தூதுக்குழுவின் தலைவர் அமைச்சர் மகிந்த சமரசிங்கி நாட்டில் மும்மாரி பொழிகறிது என்று பேசியதை மறுத்து ததேகூ தலைவர் இரா. சம்பந்தன் அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து அல்லது மறுத்து ஒரு அறிக்கையை செப்தெம்பர் 14 ஆம் வெளியிட்டார். (hவவி:ஃஃறறற.hரஅயசெiபாவள.யளயைஃநெறளஃகழசறயசனநன-நெறளஃயுர்சுஊ-குளுவு-046-2011). இந்த அறிக்கையைப் பிடிக்காத அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ததேகூ பேச்சுவார்த்தைக் குழுவுக்கு தனது அதிருப்தியை – அதாவது அரசின் நிலைப்பாட்டை ததேகூ எதிர்ப்பதாக – ததேகூ குழுத் தலைவர் இரா. சம்பந்தரிடம் தெரிவித்தார். அப்படிப் பார்த்தால் நாள், நட்சத்திரம், இராகுகாலம், யமகண்டம் பார்த்துத்தான் ததேகூ பேச்சுவார்த்தைக்குப் போகவேண்டும் என்று தேவாராஜ் மற்றும் விண்ணபதார்ர்கள் சொல்வார்கள் போல் தெரிகிறது!  இது குழந்தைத்தனமான குற்றச்சாட்டு. தமிழ்க் காங்கிரசின் முகமூடியான தமதேமு முன்வைத்த குற்றச்சாட்டு. அதைத்தான் இப்போது இந்த தமிழ் சிவில் சமூகம் கிளிப்பிள்ளை போல் முன்வைத்திருக்கிறது.

2. வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் விட்டுக் கொடுக்க மறுக்கின்றது. இவை மூன்றும் மறுக்கப்படின் தொடர்ந்தும் பேசுவதில் அர்த்தமில்லை.

பேச்சுகளில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது கூட்டமைப்பின் கடமை.

பதில் - தேவராஜ  ாயிறு வீரகேசரி பதிப்பின் ஆசிரியர் என நினைக்கிறேன். அவருக்குமா இதற்கான விடை தெரியாது? அல்லது தெரியாதென்று நடிக்கிறாரா? தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை என்றால் தமிழர் தரப்பு பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டு வெளியேற வேண்டுமா? அப்படி வி.புலிகள் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு (2006)  ெளியேறியதை பன்னாட்டு சமூகம் எப்படிப் பார்த்த்து என்பது ஆயர் இராயப்பு யோசேப்புக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரு பிரபல செய்தித்தாளின் ஆசிரியருக்குமா தெரியாது? அல்லது நினைவுப் பஞ்சம்?

3. தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அதனை அழிப்பதற்கான ஒற்றுமையில் பயன் ஏதும் இல்லை.

பதில் – யார் இல்லை என்றது? தமதேமு என்ற காளான் கட்சியை கஜேந்திரகுமார் தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்க உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு தேசியம் சார்பான வாக்குகளைப் பிரித்தது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக வலிமை சேர்த்ததாகச  ொல்ல முடியுமா?

4. தேசியம், சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம் தனிநாட்டை கோருவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதன் அடிப்படையிலான தீர்வுக்கு நாம் செல்லத் தவறுவோமேயாயின் நாம் உண்மையான சுயாட்சியை பெற்றுக் கொள்ள முடியாததாகிவிடும். இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வு மட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வைத் தருவதோடு, இலங்கையில் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக் கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும், இவை பேரம் பேசும் பொருட்களும் அல்ல.

பதில் - தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை விட்டுக் கொடுக்காமல்தான் ததேகூ அரசோடு பேசுகிறது. ஆனபடியால்தான் வட – கிழக்கு இணைப்பை ஒரு முக்கிய பேசு பொருளாக பேச்சுவார்த்தை மேசையில் ததேகூ வைத்துள்ளது. வி.புலிகள் கூட தமிழீழத்தை விட்டுக் கொடுக்காமல் உள்ளக தன்னாட்சியை பேச்சு வார்த்தை மேசையில் வைத்ததை தேவராஜ் இவ்வளவு கெதியில் மறந்து விட்டா? இப்படி எடுத்ததுக்கு எல்லாம் மொ(மு)ட்டையில் மயிர் புடுங்கினால் எப்படி?

5. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாதது. பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதது. அழுத்தங்களுக்குப் பயந்து தமிழ்த் தேசியத்தின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தை மீள முடியாத பாழுக்குள் தள்ளக் கூடாது.

பதில் – யார் விட்டுக்கொடுத்தார்கள்? சாம்பிராணி காட்டமுன் சன்னதம் கொண்டு ஆடுவதன் நோக்கம் என்ன?

6. மாகாண சபைத் தேர்தல்கள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பிலே நாம் முன்னோக்கி நகர்வதற்கு பெரும் தடைக்கல்லாக அமையும்.

பதில் – இது கொலம்பஸ் கண்டுபிடிப்பு. சரி ஒரு வாதத்துக்கு அதை சரியென்று வைத்துக்கொண்டாலும் அது எப்படித  தடைக்கல்லாக முடியும்? ததேகூ போட்டியிடக் கூடாது ஆனால் சுயேட்சைகள் (?) போட்டி போடலாம்! அப்படியென்றால் ஆட்டோடு போபம் குட்டியோடு நட்பா? மாகாண சபை என்னதான் நோஞ்சலாக இருந்தாலும் அதற்கு சட்டப்படி சில அதிகாரங்கள் இருக்கிறது. ஆனபடியால்தான  அண்மையில் பட்டின, நாடு திட்டமிடல் சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டுவந்த போது உச்ச நீதிமன்றம் காணி அதிகாரம் மாகாணசபைக்கு இருப்பதால் மாகாண சபைகளின் ஒப்புதல் வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருக்கிறது. ழுடெல டயளவ றநநம வாந ளுரிசநஅந ஊழரசவ hநடன வாயவ வாந டீடைட iவெசழனரஉநன டில வாந புழஎநசnஅநவெ வழ யஅநனெ வாந ருசடியn ஊழரவெசல Pடயnniபெ ழுசனiயெnஉந வழ நயெடிடந யரவாழசவைநைள உழnஉநசநென வழ னநஉடயசந டயனெ யசநயள யள உழளெநசஎயவழைn யசநயள, pசழவநஉவநன யசநயள, யசஉhவைநஉவரசயட யனெ hளைவழசiஉயட யசநயள யனெ ளயஉசநன யசநயள ளை inஎயடனை யள வாந டிடைட றயள யடிழரவ ய அயவவநச (டயனெ) ளநவ ழரவ in வாந Pசழஎinஉயைட ஊழரnஉடை டளைவ யனெ ளாயடட ழெவ டிநஉழஅந டயற ரடெநளள வை hயன டிநநn சநகநசசநன டில வாந Pசநளனைநவெ வழ நுஏநுசுலு Pஊ. (hவவி:ஃஃறறற.டயமடிiஅயநெறள.டமஃiனெநஒ.pரி?)

7. மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு பொருத்தமற்றதென கூட்டமைப்பு நிலைப்பாடாக பேச்சுவார்த்தை மேசையில் சர்வதேசத்திடம் வலியுறுத்தும் தார்மீகக் கடப்பாடு கூட்டமைப்புக்கு உள்ளது.

பதில் – ஓகோ! இதற்கு மட்டும் பன்னாட்டு உதவி வேண்டும்? அரசோடு பேசுங்கள் என்று ததேகூ பன்னாட்டு சமூகம் சொன்னால் ததேகூ அதனைத் தள்ளிவிட வேண்டும்?  தலை விழுந்தால் எனக்கு வெற்றி பூவிழுந்தால் உனக்குத் தோல்வி!

8. கூட்டமைப்பு இன்னுமொரு தேர்தலில் தமிழ்மக்களின் ஆணையைப் பெற்றுத் தான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அறிவிக்க வேண்டுமென்பதில்லை. இதனை மீறி தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் கூட்டமைப்பு பங்கெடுக்கக் கூடாது. மாற்று உபாயங்கள் குறித்து மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்.

பதில் – அப்படியென்றால் 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தவிகூ கிடைத்த ஆணை போதுமே? பின் எதற்காக அடுத்து வந்த தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் போட்டியிட்டன? அதெல்லாம் பிழை என்று தமிழ் சிவில் சமூகம  ொல்கிறதா? அதற்கு தேவராஜ  தலையாட்டுகிறாரா?

9. தேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் தேசிய அரசியல் விடுதலை இயக்கமாக செயற்பட வேண்டுமென்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள் கூட்டமைப்பைக் கருதுகின்றனர். இதன் அடிப்படையிலேயே சகல தேர்தல்களிலும் மக்கள் கூட்டமைப்புக்கு ஆணையை வழங்கி வருகிறார்கள்.

பதில் – யார் இல்லை என்கிறார்கள்? ஆனால் த்தேகூ வாக்களித்த தமிழ்மக்கள் சார்பாக பேச நீங்கள் யார் என்று சொல்லமுடியுமா?

10. 75 பேர் கையெழுத்திட்டு கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ள மேற்படி விண்ணப்பம் கூட்டமைப்பின் கண்களைத் திறந்தாக வேண்டும்.

அப்படி வாரும் பிள்ளாய்!  இந்த விண்ணப்பத்தில் யாரும் கெயெழுத்து இடவில்லை. வெளிமாவட்டங்களை விட்டாலும் யாழ்ப்பாண மாவட்ட விண்ணப்பதாரார்கள் கூடக் கையெழுத்துப் போடவில்லை? முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் தமிழர் தாயகத்துக்குள் வரவில்லையா? சரி போகட்டும் அவற்றை விட்டு விடுவோம். இப்படிச் சொன்னால் நக்கீரன் உள்ளடகத்தைப் பாராமல் உருவத்தைப் பார்க்கிறார் என்று குற்றம் சாட்ட ஆட்கள் இருக்கிறார்கள்.  இருந்தும் அந்த கையொப்பகாரர்களில் பலர் வண பிதாக்கள். பலர் வைத்திய கலாநிதிகள். சிலர் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள். இவர்கள் எல்லோரும் தாமுண்டு தமது தொழில் உண்டு என்று இருப்பவர்கள். அது சரி. ததேகூ கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக தேவராஜ்க்கு யார் சொன்னது? சம்பந்தன் என்ன காலுக்கு மேல் காலைப் போட்டுக் கொண்டு சாய்மனைக் கதிரையில் ஓய்வாக இருக்கிறாரா?

11. ஒரு பாரிய வரலாற்றுக் கடமையை தமிழ் மக்களின் சார்பில் சுமந்துள்ள கூட்டமைப்புக்கு தமிழ் சிவில் சமூகத்தின் இந்த விண்ணப்பம் ஒரு ''துடுப்பாக'' அமையும் என்பதில் ஐயமில்லை. இதுவரை தனித்து நின்ற கூட்டமைப்பு இது போன்ற பல்வேறு தமிழ் சிவில் சமூகத்துடன் கைகோர்த்துப் பயணிக்க முன்வர வேண்டும்.

பதில் – ஆகா அருமையான யோசனை. கடந்த தேர்தலில் ததேகூ வாக்களித்த பொதுமக்கள், ஏழை பாளைகள், தொழிலாளர்கள், கமக்காரர்கள் உங்களுடைய கணிப்பில் ஒரு பொருட்டே இல்லை!

11. அரசாங்கத் தரப்பு கூட்டமைப்புக்கு நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்ற காலம் இது. வெற்றியின் மமதையிலான வார்த்தைகள் இன்னும் அரசாங்கத் தரப்பில் முடங்கிப் போகவும் இல்லை. முற்றுப் பெறவும் இல்லை. அரசாங்கத் தரப்பினரின் நாடாளுமன்ற உரைகள் இதனையே சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில் கூட்டமைப்புதான் அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும் சக்தி படைத்ததாக உள்ளது. ஏனெனில் அரசாங்கத்தின் 'பேச்சுத் துணைக்கு'' கூட்டமைப்பு தான் தேவைப்படுகின்றது. சர்வதேச நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசியாக வேண்டும்.

அது மாத்திரமல்ல கடந்த ஒருவருட காலமாக கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசாங்கம் 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு மேல் பேசியும் தீர்வு நோக்கி ஒரு அங்குலம் கூட நகர முடியாத நிலையே காணப்படுகின்றது.

ஆனால், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் 'சாட்சியங்கள் இல்லாத யுத்தமொன்று நடைபெற்றுள்ள நிலையில் உண்மைகள் கண்டறியப்பட்டால் மட்டுமே சரியான பாடங்களை கற்றுக் கொள்ள முடிவதுடன் நேர்மையான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும்'' என்ற உரையையடுத்து அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடும் தொனியில் உரையாற்றியுள்ளார். 'உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச விசாரணை மற்றும் ஐ.நா. பிரசன்னம் போன்ற விடயங்களை வரவேற்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுகளை பயன்பாடுடையதாக முன்னெடுக்க விரும்புகின்றதா அல்லது அதுவாக முறித்துக் கொள்ள முயற்சிக்கின்றதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

'விசாரணைகளில் நம்பிக்கையில்லையென்றும் சர்வதேச விசாரணை தேவையென்றும்'' சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

'அதை ஏற்க முடியாது. சர்வதேச விசாரணைகள் எமக்கு அவசியமில்லை. பிற நாடுகளை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அனுமதிக்கமாட்டோம். இந்த நாட்டுப் பிரச்சினையை சர்வதேச பொலிஸாருக்கு கையளிக்க நாம் தயாரில்லை. சர்வதேச பொலிஸ் எமக்கு அவசியமில்லை'' என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் பீரிஸ்.

ஒரு வருட பேச்சுவார்த்தையில் ஒன்றுமில்லை என்று சம்பந்தன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகப் போட்டுடைத்தது அரசாங்கத் தரப்புக்கு ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஊட்டியிருக்கலாம்.

ஆனால் அதுதான் உண்மை.

பதில் – மிக மிக அருமை!

12. இன விவகாரத் தீர்வுக்கு 13 ஐத் தருவோம். இதற்குமப்பால் 13 பிளஸ் தருவோம் என்று கூறிய அரசாங்கம் தான் இன்று 13 க்கே தயாராக இல்லையென்பதை ஒரு வருடமாக உணர்த்தி வருகின்றது. இதற்குப் பிறகும் பேச்சுவார்த்தை தேவையா? என்று சிவில் சமூகம் கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

பதில் - மெத்தச் சரி. ததேகூ பேச்சுவார்த்தையை முடி(றி)த்துக் கொண்டு மக்களை ஒன்று திரட்டி ஒரு சாத்வீக போராட்டத்தில் களம் இறங்கினால் இந்த விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டவர்கள் எத்தனை பேர் அதில் சேர்ந்து கொள்வார்கள்? வைத்திய கலாநிதிகள்? ஆயர் இராயப்பு யோசேப் அடிகளார்?

13. இந்த ஒரு நிலை உருவாகும் என்பதை எதிர்பார்த்தே இப்பத்தியில் தொடர்ச்சியாக கூட்டமைப்பு அரசியல் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.

தற்பொழுது ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தெரிவுக் குழுவில் பங்குபற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டமைப்புடன் அரசாங்கம் ஒருவருடமாக பேசியும் ஒன்றும் வெளிவரவில்லை.

பதில் - காணி அதிகாரம  ேவையில்லை, காவல்துறை அதிகாரம் தேவையில்லை என்று சொல்லும் இபிடிபி கட்சியோடு பின் எதைப்பற்றிப் பேசுவது?

13. இந்நிலையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் ஏதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுமளவிற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவில்லை. அமைச்சரைப் பொறுத்து அரசாங்கத்தில் ஓர் அங்மாக இருப்பவர். தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் பேசி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அந்த பெறுபேறுகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்பது குறித்தும் அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். இது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையும். அமைச்சர் அவர்கள் கூறுவது போல் தமிழ்த் தலைமைகள் பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டன என்பது உண்மையே. அரசுடன் இணைந்திருக்கும் அவருக்கு தீர்வு நோக்கிய காய்களை நகர்த்துவதற்கும் அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்த செல்வாக்கை பயன்படுத்தி தீர்வு நோக்கி பயணத்தை அவர் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும். அந்த வெற்றியே ஏனைய தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைவதிலும் தங்கியுள்ளது. வி.தேவராஜ்

பதில் – டக்லஸ் தேவானந்தா ஒரு அடிமை. 1994 தொடக்கம் ஆள்வோரது காலணிய  ாறி மாறி நக்கித் துடைத்துத் துப்பரவாக்கி வருபவர். அவரிடம் போய் 'அமைச்சர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தீர்வு நோக்கிய பயணத்தை அவர் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும்' என்று சொல்கிறீர்களே? இது உங்களுக்க  ியாயமாகப் படுகிறதா? இது நல்  நகைச்சுவையாக உங்களுக்குத் தெரியவில்லை? இந்த ஆண்டின் நகைச்சுவை மனனன் விருதை உங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதியெங்கே?

முடிவாக ததேகூ நன்றாக விமர்சியுங்கள். வேண்டுமட்டும் இடித்துரையுங்கள். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லாமலும் கெட்டுப் போவான் என்று வள்ளுவர் இடித்துரைக்கிறார். அதாவது கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத அரசன  தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவானாம்.

எனவே ததேகூ இடித்துச் சொல்லுங்கள். ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு அதன் மீது விமரிசனம் என்ற போர்வையில் சேறு பூசவேண்டாம். கால்தடம் போட வேண்டாம். குறுக்குச் சால் ஓட்ட வேண்டாம்.

இந்த விண்ணப்பத்துக்குப் பின்னால் நிற்பவர்கள் மாமரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்து அம்புவிட்டு வாலியைக் கொன்  ோழை இராமனைப் போன்றவர்கள்.

ஒரு நல்ல செய்தி. ததேகூ விளக்கம் விரைவில் வரும். அதுவரை பொறுமை காக்க. காக்கக் காக்க கனகவேல் காக்க!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com