விவசாயத்தினையும் விட்டுவைக்காது
வால்மார்ட்!
(இ.
எம்.ஜோசப்)
சில்லரை
வர்த்தகத்தில்
அந்நிய நேரடி மூலதனம்
வந்தால், இந்நாட்டில்
வர்த்தகத்தில்
ஈடுபடுவோரின்
வாழ்க்கை யினை
அது நாசப்படுத்தி
விடும் என்பது
இந்நாட்டில் இயல்பான
அச்சமாக மாறி யிருக்கிறது.
எனவே, இதற்கான
எதிர்ப்பும் வர்த்தகத்தை
மையப்படுத்தியே
இருந்து வருகிறது.
நடைமுறையில்
வர்த்தகம் மட்
டுமல்லாது, விவசாயம்,
சிறு உற்பத்தித்
தொழில்கள் என பலவும்
பாதிப்புக்கு
உள் ளாகும் என்பதே
உண்மை. இந்தப்
பின் னணியில் இந்திய
விவசாயிகளை அந்நிய
மூலதனத்திற்கு
ஆதரவாக மாற்றும்
வகை யில், முதலாளித்துவ
ஊடகங்கள் இன்று
திட்டமிட்டு, ஒரு
கவர்ச்சிகரமான
பிரச் சாரத்தில்
ஈடுபட்டு வருகின்றன.
காதிலே
பூ
சில்லரை வர்த்தகத்தில்
அந்நிய நேரடி மூலதனம்
வந்தால், இந்தியாவில்
விவ சாயிகளுக்கு
அதிக வருமானம்
கிடைக் கும்; அதே
வேளையில் நுகர்வோருக்கான
விலைகளும் குறைந்து
விடும். இது
அந் நிய மூலதனத்தினை
வரவேற்பவர்களின்
வாதம். எதை இந்திய
அரசாங்கம் செய்ய
வேண்டுமென்று
நாம் விரும்புகிறோமோ,
எதை செய்யத் தவறுகிறது
என்று நாம் விமர்சனம்
செய்கிறோமோ, அதையெல்
லாம் வெளிநாட்டு
சில்லரை வர்த்தக
நிறு வனங்கள் செய்யுமாம்,
அதுவும் மிகத்
திற மையாகச் செய்யுமாம்.
இவ்வாறு இன்று
இந்திய மக்களின்
காதுகளில் பூ சுற்றும்
வேலை நடைபெற்று
வருகிறது.
விவசாயிகளிடமிருந்து
கூடுதல் விலைக்கு
வாங்கி, அதை நுகர்வோருக்கு
குறைந்த விலைக்கு
விற்றால் நஷ்டம்
தானே வரும்? ஆனாலும், இதைச்
செய் வது அரசாங்கத்தின்
கடமை என்று இடதுசாரிக்
கட்சிகள் கூறுகின்றன.
அந் தக் கோரிக்கை
தர்க்க ரீதியாக
சரியானது என்பது
மட்டுமல்ல; நடைமுறைச்
சாத் தியத்தினையும்
உள்ளடக்கியது.
இந்திய பெரு
முதலாளிகளுக்கும்,
பெருஞ்செல் வந்தர்களுக்கும்,
ஆண்டொன்றிற்கு
ஐந்து லட்சம் கோடி
ரூபாய்க்கு மேல்
அரசு கொட்டிக்
கொடுத்து வருகிறது.
இதில் ஐந்தில்
ஒரு பங்கு மட்டும்
செலவழித் தாலே,
உணவுப் பாதுகாப்பினை
உறுதி செய்து விட
முடியும் எனும்
நிலையில், அதில்
விவாதிப்பதற்கு
வேறொன்று மில்லை.
ஆனால், தனியார்
வர்த்தக கம் பெனிகள்
இதை எப்படிச் செய்ய
முடியும்? இருப்பினும்,
வால்மார்ட், டெஸ்கோ,
கேரிஃபோர் போன்ற
பல சில்லரை வர்த்
தகப் பன்னாட்டுக்
கம்பெனிகள் நஷ்டப்
பட்டேனும், இந்திய
மக்களுக்கு சேவை
செய்ய வேண்டுமென்று
கங்கணம் கட் டிக்கொண்டு
இங்கு வருகிறார்கள்
என்பது போல ஒரு
சித்திரம் வரையப்பட்டு
வரு கிறது. நம்
நாட்டில் விவசாயிகளின்
பிரதி நிதிகள்
என்று உரிமை கொண்டாடுவோர்
சிலரும், சில்லரை
வர்த்தக நிறுவனங்கள்
சிலவும் இதற்கு
ஆதரவாய் பேசி வரு
வதும் வேடிக்கையானது.
விவசாயிகளின்
நிலைமை பரிதாபமானதே!
இந்திய நாட்டின்
விவசாயிகளில்
5.88 கோடி பேர் சிறு
மற்றும் குறு விவசாயிகளே
யாவர். இவர்கள்
கைகளில் இருப்பதோ
சராசரியாக 5 ஸ்டாண்டர்டு
ஏக்கர் நிலம் மட்டுமே.
ஆஸ்திரேலியாவில்
இது 17,975 ஏக்கர், கனடாவில்
1798, அமெரிக்காவில்
1089, பிரிட்டனில்
432 ஏக்கர், பிரான்சில்
274 ஏக்கர். மற்ற
நாடுகளையெல்லாம்
கூட விட்டுவிடுவோம்.
சில்லரை வர்த்த
கத்தில் கொடிகட்டிப்
பறக்கும் அமெரிக்
காவில் விவசாயப்
பண்ணைகளின் சரா
சரி அளவு இந்தியப்
பண்ணைகளோடு ஒப்பிடும்போது
250 மடங்கு அதிகம்.
சில் லரை வர்த்தக
அமெரிக்கக் கார்ப்பரேட்
நிறுவனங்களுடன்
நடக்கும் ஒப்பந்தங்
களில், அத்தகைய
பண்ணைகளுக்கு
இருக்கும் பேர
சக்தியுடன் நம்
நாட்டு விவசாயிகளின்
பேர சக்தியினை
ஒப்பிட முடியும்?
சில்லரை வர்த்தக
பன்னாட்டுக் கம்பெனிகள்
பண்ணைகளுடன் ஒப்பந்
தம் செய்து கொண்டே
தொழில் நடத்து
கின்றன. இங்கு
இடைத் தரகர்கள்
இல்லை என்று சொல்ல
முடியாது. அந்த வேலையினைச்
செய்வதற்காக சில
துணை நிறுவனங்களை
வர்த்தக நிறு வனங்களை
உருவாக்கிக் கொள்கின்றன.
எனவே இந்தியாவில்
இடைத்தரகர்கள்
ஒழிக்கப்படுவார்கள்
என அவர்கள் குறிப்பிடுவது
நடைமுறையில் விவசாயி
களைத் தான்.
அமெரிக்காவின்
சில்லரை வர்த்தக
நிறுவனங்கள் அனைத்து
விவசாயிகளு டனும்
ஒப்பந்தம் செய்து
கொள்வதில்லை; மிகப்
பெரிய கார்ப்பரேட்
பண்ணைக ளுடன் மட்டுமே
செய்கிறார்கள்.
பெரிய பண்ணைகளுக்கு
அதிக விலையும்,
பிற சிறிய விவசாயிகளுக்கு
குறைந்த விலை யும்
நிர்ணயிக்கப்
படுகிறது. இருப்பினும்,
மற்ற விவசாயிகள்
மௌனமாக அவர்கள்
சொல்லும் விலையினை
ஏற்றுக் கொள் ளும்
நிர்ப்பந்தம்
இயல்பாக ஏற்பட்டு
விடுகிறது. வால்மார்ட்
வருவதற்கு முன்
னர், தானியங்களுக்கான
நுகர்வோர் விலையில்
அமெரிக்க விவசாயிகளுக்கு
கிடைத்தது ஒரு
டாலருக்கு 70 சென்ட்
(70 சதவீதம்). அதற்குப் பின்னர்
இன்று அது 7 சென்ட்
(10சதவீதம்) ஆகக்
குறைந்து விட்டது.
இதுதான் அமெரிக்காவில்
பல விவசாயிகள்,
விவசாயத்தை விட்டு
வெளியேறும் நிலைமைக்குத்
தள்ளியிருக் கிறது.
அமெரிக்காவிலும்,
கனடாவிலும் 1994 லிருந்து
2006 வரை, 35 வயதுக்குக்
கீழ் உள்ள விவசாயிகளின்
எண்ணிக்கை யில்
62 சதவீதம் சரிவு
ஏற்பட்டுள்ளது.
இன்று அமெரிக்க
மக்கள் தொகையில்
விவசாயத்தில்
ஈடுபடுவோர் 2
சதவீதம் மட்டுமே.
சாவிலும்
சம்பாத்தியம்!
இது தவிர வால்மார்ட்
உள்ளிட்ட வர்த்
தக நிறுவனங்கள்
பல தங்களது ஊழியர்
களுக்கு மிகக்
குறைந்த ஊதியமே
வழங் குகிறார்கள்.
வேலைகளின்
எண்ணிக்கை அடிப்படையில்
வால் மார்ட் தான்
அமெ ரிக்காவிலேயே
மிகப் பெரிய நிறுவனம்.
அதே வேளையில்
மிகக் குறைந்த
ஊதி யம் கொடுக்கும்
நிறுவனமும் அதுதான்.
அதையும் தாண்டி
இன்னொன்றும் அங்கு
நடைபெறுகிறது.
அதுதான் இறக்கும்
விவசாயத் தொழிலாளியின்
மீதான இன் சூரன்ஸ்
பாலிசி. இதில்
துயரம் என்ன வெனில்,
அந்த இன்சூரன்ஸ்
பாலிசி குறித்து
சம்பந்தப்பட்ட
தொழிலாளிக்கே
கூட சொல்வதில்லை
என்பதுதான். இன் றைய அமெரிக்கச்
சட்டங்கள் இவற்றை
யெல்லாம் அனுமதிக்கின்றன.
சுதந்திரச் சந்தையின்
இந்தச் சூதாட்டத்தினை,
அமெரிக்காவின்
பிரபல தயாரிப்பாளரும்,
இயக்குநருமான
மைக்கேல் மூர்
“முதலா ளித்துவம் : ஒரு காதல்
கதை” (ஊயயீவையடளைஅ
: ஹ டுடிஎந ளுவடிசல)
என்ற புகழ்பெற்ற
தனது திரைப்படத்தில்
தெளிவாகப் படம்
பிடித் துக் காட்டியிருக்கிறார்.
புற்று நோயினால்
தனது கணவன் இறக்கும்
போது பெரிதும்
துயரும் ஒரு பெண்,
அவனது பெயரில்
15 லட்சம் டாலருக்கான
ஒரு இன்சூரன்ஸ்
பாலிசி இருப்பது
தெரிந்து பொருளாதார
ரீதியாக சற்று
ஆறுதலடைகிறாள்.
ஆனால், அந்தப்
பணத்தினை அவனது
முதலாளி சட்டப்பூர்வமாக
அபகரித்துக் கொள்வதைக்
கண்டு எப்படி துடித்துப்
போகிறாள் என்பதை
அந்தப் படத்தில்
அவர் விவரித்திருக்கிறார்.
குடும்பத்
தலைவனின் மறைவிற்குப்
பின்னர், குடும்
பத்திற்கு உதவ
வேண்டிய பணம்,
முதலா ளியின் பணப்பெட்டிக்குள்
எப்படி நுழை கிறது
என்று பார்த்தீர்களா?
இதை யெல்லாம்
எதிர்த்த பண்ணைத்
தொழிலா ளர்களின்
இயக்கம், அமெரிக்காவில்
இன்று சமூக-அரசியல்
விவாதமாக மாறி
வருகிறது.
சரியான
நிர்ணயிப்பு!
இது தவிர சில்லரை
வர்த்தக நிறுவ
னங்கள், உற்பத்தியிலிருந்து
நுகர்வோர் விலை
நிர்ணயம் வரை அனைத்து
அம் சங்களையும்
இறுக்கமான கார்ப்பரேட்
கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வந்து விட்
டன. விவசாயி
மற்றும் விவசாயத்
தொழி லாளிக்கு,
சொல்லிக் கொள்வது
போல், எந்தப் பங்கும்
இல்லாத நிலைமை
அதி வேகத்தில்
தோற்றுவிக்கப்படுகிறது.
சராசரி 1089 ஏக்கர்
நிலமும், 250 மடங்கு
பெரிதான பண்ணை
அளவும் வைத்திருக்
கும் அமெரிக்க
விவசாயினுடைய
நிலை மையே இதுவென்றால்,
5 ஏக்கர் வைத் திருக்கும்
இந்திய விவசாயி
எங்கு போவான்,
என்ன ஆவான்?
விவசாயிகளை
உற்பத்தியிலிருந்து
வெளியேற்றும்
முயற்சி இந்தியாவில்
எதிர் விளைவுகளை
ஏற்படுத்தும்.
ஏனெனில், விவசாயிகளில்
34 சதவீதமாக இருக்கும்
சிறு-குறு விவசாயிகள்
தான் உற்பத்தியில்
41 சதவீதப் பங்கினை
அளிக்கிறார்கள்.
மற்ற விவசாயிகள்,
பண்ணைகளின் உற்
பத்தித் திறனை
விட இவர்களது திறன்
33 சதவீதம் அதிகம்
என இந்திய அரசின்
புள்ளி விவரங்கள்
கூறுகின்றன. திட்டக்
கமிஷனின் செயல்
திட்டக் குழு இவர்
களைப் பற்றிக்
கூறுவதைப் பாருங்கள்:
“சிறு-குறு விவசாயிகள்
இந்தியாவில் நீண்ட
காலம் நீடிக்கப்
போகிறார்கள். ஆனால், சோதனைகள்
பலவற்றைச் சந்
திப்பார்கள்.
அவர்களுக்கு
என்ன நேரப் போகிறதோ
அதைப் பொறுத்தே
கிராமப் புறத்தின்
எதிர்காலம் அமையும்”.
இது ஒரு சரியான
நிர்ணயிப்புத்
தானே? லட்சக்
கணக்கில் விவசாயிகள்
தற்கொலை செய்து
கொள்ளும் ஒரு நாட்டில்,
அவர் களுக்கு என்ன
நேர்ந்து கொண்டிருக்கிறது
என்பதைத் தெரிந்திருக்கும்
அரசுகளுக்கு, சில்லரை
வர்த்தகத்தில்
அந்நிய மூல தனம்
நுழைந்தால் அவர்களின்
எதிர் காலம் என்னவாகும்
என்பது மட்டும்
தெரி யாதா என்ன?
சூடுபடுத்தி உண்ணும்
வகையில் டின் களில்
அடைக்கப்பட்ட
உணவு வகைகள் ( ழநயவ யனே நுயவ
ஞசடினரஉவள) மேலை
நாடு களில் அதிகம்
என்பதால், அந்நாடு
களின் சூப்பர்
மார்க்கெட்டுகளில்
30 சத வீதம் வேளாண்
உற்பத்திப் பண்டங்கள்
இடம் பெறுகின்றன.
இந்த 30 சதவீதத்
தேவைக்காக மட்டுமே,
இந்தச் சில்லரை
வர்த்தக நிறுவனங்கள்
விவசாயிகளிடம்
கொள்முதல் செய்கின்றன.
மீதமுள்ள பண்டங்களில்
70 சதவீதம் விவசாயி
களுக்கு சம்பந்தம்
இல்லாதது. கொள் முதல் செய்த
தானியங்களைத்
தரம் பிரிக் கும்போது
மிச்சமாகும் தானியங்களை,
இந்நிறுவனங்கள்
பொதுச்சந்தையில்
விற்றுவிடுகின்றன.
இதனால் சந்தையில்
ஏற்படும் கூடுதல்
சப்ளை உணவு தானி
யங்களின் விலையினை
இறக்கிவிடு கின்றன.
அடுத்த கட்டத்தில்,
விவசாயி களிடம்
குறைந்த விலையில்
கொள்முதல் செய்வதற்கான
வர்த்தக பேர உத்தியாக
வும் இந்நிறுவனங்கள்
இதைப் பயன் படுத்துகின்றன.
உண்மை நிலைமை இப்படி
இருக் கும்போது,
சில்லரை வர்த்தகத்தில்
அந் நிய மூலதனத்தினை
அனுமதிப்பதில்,
விவசாயிகளின்
நலன்களைப் பற்றிப்
பேசுவதெல்லாம்,
உணர்ச்சி வசப்படுத்
தும் உத்திதானே
தவிர வேறல்ல.
நுகர்வோருக்கு
லாபமா?
இப்படி விவசாயிகளைக்
கசக்கிப் பிழி
வதனால், அதன் பயன்
நுகர்வோர் விலை
குறைப்பிற்கு
பயன்படும் வாய்ப்புள்ளதோ
என்ற கேள்வி இங்கு
இயல்பாகவே எழும்.
இதுவும் எவ்வளவு
மாயத்தோற்றம்
கொண் டது என்பதை
நாம் பார்க்கலாம்.
இன்றைய நிலையில்,
இந்திய விவசாய
உற்பத்திப் பண்டங்களில்
60சதவீதம் கிராமப்புற
மக்கள் மத்தியிலேயே
நிதானமான விலை
யில் கூலி மற்றும்
பல வடிவங்களில்
பரி வர்த்தனை செய்து
கொள்ளப்படுகிறது.
மீதியுள்ள
40 சதவீதத்தில்
35 சதவீதம் உள்ளூர்ச்
சந்தைகளில் விற்கப்படுகிறது.
மீதி 5 சதவீதம்
மட்டுமே நவீன நகரச்
சந் தைகளை அடைகிறது.
இப்போது, சில்
லரை வர்த்தக நிறுவனங்கள்
கிராமப்புறத்
தில் நுழையுமானால்,
நகர விலை நிர்ணய
முறை கிராமப்புறத்தில்
நுழைகிறது என்று
பொருள். இது
விலையினை ஏற்ற
உதவுமா அல்லது
குறைக்க உதவுமா?
இத்தகைய வருகையால்
கிராமப்புற பரஸ்பரப்
பரிவர்த் தனை முறை
தானாகவே முடிவுக்கு
வரும். அமெரிக்காவில்
வால்மார்ட் சூப்பர்
மார்க்கெட்டுகளில்
வெங்காயம் ஒரு
பவுண்டு 1.49 முதல்
1.89 டாலர் வரை விற்
கப்படுகிறது.
இதில் விவசாயிக்குக்
கிடைக்கும் விலை
17 செண்ட் மட்டுமே.
அமெரிக்காவில்
இன்று நடப்பது
போல, பெரும்பான்மையாக
இருக்கும் சிறு-குறு
விவசாயிகள் இங்கேயும்
குறைந்த விலைக்கு
விற்க நிர்ப்பந்திக்கப்
படுவார் கள் என்பதுதானே
உண்மை? இதன்
விளைவாக, இன்று
விவசாயிகளாக இருக்
கும் (நாளை என்ன
ஆகப் போகிறார்களோ
தெரியாது!) கிராமப்புற
நுகர்வோரே அதிக
விலை கொடுக்க வேண்டி
நேரிடும்.
சில்லரை வர்த்தக
நிறுவனங்களின்
வரவால், சில குறிப்பிட்ட
பருவங்களில் கிடைக்கும்
சில குறிப்பிட்ட
தானியங்கள், பழங்கள்
மற்றும் காய் கறிகளின்
விலை கள் ஓரளவு
குறையலாம். பிற பண்டங் களின்
விலைகள் குறைவதற்கு
வாய்ப்பே இல்லை.
இதுதான் இன்று
அமெரிக்கா வில்
நடைமுறையிலிருக்கிறது.
இயந்திர உற்பத்தி
நுகர்வுப் பண்டங்களின்
விலை மொத்தக் கொள்முதல்
காரணமாக சற்றுக்
குறையலாம்.
யாருக்கும்
லாபமில்லை!
நாட்டின் ஒட்டுமொத்தப்
பண்ட உற் பத்தி
பெருகுமானால்,
நுகர்வோருக்கான
விலை குறைவதற்குச்
சாத்தியமுண்டு.
சில்லரை வர்த்தக
அந்நிய மூலதனத்தின்
வரவு இங்கு பண்ட
உற்பத்தியினை
பெரி தாக்கப் போவதில்லை.
அவ்வாறெனில்,
நுகர்வோர் விலையும்,
பணவீக்கமும் எப்படி
குறையும்?
இவற்றை வரவேற்கும்
ஒன்றிரண்டு விவசாயிகள்
அந்நிய நிறுவனங்களுடன்
ஒப்பந்தம் செய்வதன்
மூலம் தங்களது
பண்ணைகளை பெரிதாக்கிக்
கொள்ள முடியும்
என்று நினைக்கின்றனர்.
அதே போன்று இந்திய
சில்லரை வர்த்தகத்தில்
இன்று கழுத்தறுப்புப்
போட்டி பெரிதாகி
வரும் வேளையில்,
தங்களது நிறுவனங்
களை அந்நியர்களுக்கு
கூடுதல் விலைக்கு
விற்கலாம் என்று
சில இந்திய நிறுவனங்
கள் நினைக்கின்றன.
தென் இந்தியாவில்
சுபிக்ஷா, வட மாநிலங்களில்
விஷால், சப்கா
பஜார் போன்றவை
இன்று தள்ளாட்
டத்தில் இருப்பது
நாம் அறிந்ததே.
இவை போன்ற நிறுவனங்கள்
தங்களது சொந்த
நலன் கருதி, அத்தகைய
நிலைப்பாட் டினை
எடுக்கின்றன.
சில்லரை வர்த்தகத்தில்
அந்நிய மூல தனம்
நுழைவதால், இந்தியாவில்
பண வீக்கமோ விலைவாசிகளோ
குறையப் போவதில்லை.
விவசாயிகளுக்கும்
சாதக மில்லை, நுகர்வோருக்கும்
சாதக மில்லை.
ஆனாலும், சில சில்லரைச்
சாத கங்களுக்காக,
இந்திய மக்கள்
மற்றும் இந்தியப்
பொருளாதாரத்தின்
நலன்களை காவு கொடுக்க
நினைப்பது, கண்களை
விற்றுச் சித்திரம்
வாங்கும் காரியமேயாகும்.