Contact us at: sooddram@gmail.com

 

ஹலால்..ஹலால்..!!

சமூக வலைத்தளங்கள், சமூக ஆர்வலர்கள், சிறியோர் பெரியோர் முதல் இன்றைய நாளில் ஒவ்வொரு இலங்கை முஸ்லிம் குடிமகனையும் அறிந்தோ அறியாமலோ இன்று வந்து சேர்ந்திருக்கும் விடயம் ஹலால் சான்றிதழ் பற்றிய விவகாரம். அதிலும் குறிப்பாக சிங்கள இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவிக்கொண்டு வரும் இஸ்லாமிய எதிர்ப்பு விவகாரங்களில் ஹலால் விவகாரம் முக்கியமான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது. விளைவு, சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் ஹலால் உணவுகளுக்கு எதிரான நுண்ணறிவுடனான எதிர்ப்புப் பரப்புரைகள், அதனை எதிர்கொள்ள சோனகர்களின் எதிர்ப்புப் பரப்புரைகள் என விடயம் சூடு பிடித்திருக்கிறது. நவீன உலகம் ஒவ்வொரு மனிதரின் வாழ்வுரிமையும் அவர் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று (பேச்சளவிலாவது) கங்கணம் கட்டியிருக்கிறது, அதற்கேற்பாற்போல தீவிரவாதமும், பழமை வாதமும் கூடவே வளர்ந்து உலகின் இயக்கத்தை சமப்படுத்திக்கொள்கிறது.

விருப்பு,வெறுப்பு என்பது அவரவர் தனிப்பட்ட விடயங்கள், ஆயினும் அதில் பல அந்தந்த மனிதரின் சமூகம் சார்ந்ததாகவும், நம்பிக்கை சார்ந்ததாகவும் கூட இருப்பதனால் அதன் தாக்கம் பல வகையில் பொதுவானதாகவும், சில நேரங்களில் தனிப்பட்ட அனுபவமாகவும் பார்க்கப்படலாம், ஏற்றுக்கொள்ளவும் படலாம்.

சோனக சமுதாயத்தைப் பொறுத்தவரை (முஸ்லிம்கள்) இலங்கையில் அறியப்பட்ட வரலாற்றுக் காலம் முதல் மிக வலுவான ஏக இறைக் கொள்கையுடையவர்களாகவும் கடந்த 13 நூற்றாண்டுகளாக இஸ்லாமிய நம்பிக்கையில் மிக உறுதியான ஓர் சமூகமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் நம்பிக்கையைத் தீண்டவும், சமூக வலையமைப்பைக் குழப்பவும், அறிவியல் ரீதியாக அவர்களை பலவீனப்படுத்தவும் அவ்வப்போது முயற்சிகள் நடந்துகொண்டே தான் இருந்து வந்திருக்கிறது.

எனினும், முஸ்லிம்களாக இன்று பரவலாக வாழும் சோனகர்கள் இந்த நாட்டின் ஆணிவேர்களாகத் தம் நிலைப்பாட்டில் உறுதியாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கி.பி 8ம் நூற்றாண்டளவில் இஸ்லாம் இலங்கைத் தீவை வந்தடைந்த போது தாம் காலா காலமாகக் காத்திருந்த நற்செய்தியும், தமக்கே உரிய ஏக இறை வணக்கத்தை மிகத் தெளிவாகக் கொண்டுவந்து தம்மிடம் சேர்த்த நபியவர்களையும், அவர் காட்டித் தந்த வாழ்க்கை முறை இஸ்லாத்தையும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அன்று முதல் இன்று வரை நம்பிக்கை ரீதியாக, அடிப்படை விடயங்களில் ஒருமைப்பாட்டுடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.

தாம் ஏற்று வாழும் மார்க்கத்தினை நடைமுறைப் படுத்துவது தொடர்பில் நவீன காலத்தில் சில மாற்றுவழிகள் முன் மொழியப்பட்டு, அதை ஏற்றுக்கொள்வதும் இல்லாததும் அவரவர் சுய விருப்பாகப் பார்க்கப்பட்டு, சில நேரங்களில் கூட்டாகவும் தனியாகவும் தம் கொள்கை ஏற்பை நடைமுறைப்படுத்தும் அன்றாட வாழ்க்கை தவிர, இஸ்லாம் காட்டித்தந்த பல அடிப்படை விடயங்களில் இலங்கை முஸ்லிம்கள் மாத்திரமல்ல உலகில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் ஒரே பார்வையுடன், ஒரே மனதுடன் தான் இருக்கிறார்கள்.

இது பொருளாதார மயப்படுத்தப்பட்ட நவீன உலகுடன் எவ்வாறு முட்டி மோதிக்கொள்கிறது என்பது தான் இன்றைய உலகில் நாம் காணும் இஸ்லாமிய எதிர்ப்பின் வடிவங்களாகவும் காணப்படுகிறது.

அதில் குறிப்பாக, ஹலால் எனும் சொல்லை அறியாத மேற்குலகினர் கூட இல்லையெனும் அளவுக்கு இந்தச் சொல் உலகளவில் அறியப்பட்ட மிகப் பிரபலமான ஒரு வார்த்தையாக இருக்கிறது.

இந்த முக்கியம் ஏன்? என்பதற்கான மிகத் தெளிவான விடை “பொருளாதாரம்” என்பது பலர் விளங்கிக்கொள்ளத் தவறினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிரற்ற விடையாகும்.

சமூக மட்டத்தில் மாத்திரம் புழக்கத்திலிருந்த “ஹலால்” எனும் வார்த்தை வெளியுலகை வந்தடைவதற்கு நவீன வியாபார முறைகளும் அதன் தேவைகளும் தான் அடிப்படைக் காரணம் என்பதில் அதை எதிர்ப்பவர்களுக்கும் கூட மிகத் தெளிவான அறிவு இருக்கிறது.

ஆனாலும் அதை எதிர்க்க வேண்டும் என்றே எதிர்ப்பவருக்கும் ஏற்பவருக்கும் பல காரணங்கள் இருக்கும், அதில் சில நியாயங்களை முஸ்லிமானவர்களும் தார்மீகக் கடமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, வேற்று மத நம்பிக்கையில் வாழும், ஆனால் மற்ற மத நம்பிக்கையாளர்கள் அவர்கள் உணர்வுகள் மதிக்கப்படுவது போன்றே, தன் நம்பிக்கையும் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆங்கிலேயருடன் ஹலால் விடயம் தொடர்பாக உரையாடிய ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன்.

தன்னைப் பொறுத்தவரை, தன்னுடைய சிந்தனையைப் பொறுத்தவரை, தன்னுடைய நம்பிக்கையைப் பொறுத்தவரை, ஒரு மிருகத்தினைக் கொல்லும் போது, அதற்கு வேறு கால அவகாசம் வழங்காமல் ஒரே நொடியில் கொன்று விடுவதே சாலப் பொருந்தும், அதையே தன் நம்பிக்கையும் சொல்வதனால், தான் நம்புவதனால், மெதுவாகக் கொல்லப்படும் மிருக இறைச்சியை உண்பதற்குத் தான் விரும்புவதில்லை என்பது அவரது உணர்வு, விருப்பம் என்பதாக அவர் தெரிவித்தார்.

ஹலால் உணவைத்தான் உண்ண வேண்டும் என்று விரும்புபவர்களின் உணர்வு எவ்வாறு மதிக்கப்பட வேண்டுமோ அவ்வாறே அதை உண்ணக்கூடாது என்று நினைக்கும் தன் உணர்வும் மதிக்கப்பட வேண்டும் என்பது அவர் அவாவாக இருந்தது.

ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் விருப்பத்தைத் தேர்வு செய்யும் உரிமை இருக்கிறது, அதுவே அவரது விருப்பமாக இருக்கும் போது அதைத் தடுக்க வேண்டும் அல்லது அதற்கு மேலாக அவர் மீது ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்பதை விட, ஒரு வேளை நீங்கள் முஸ்லிம்கள் ஏன் ஹலால் உணவை உண்ண விரும்புகிறார்கள் அதன் நன்மை தீமை என்ன என்பதைத் தேடிப்பார்க்கலாமே? அந்த நியதியின் அடிப்படை அல்லது அந்தப் பழக்கத்தின் தேவை என்ன? எங்கிருந்து வருகிறது? ஏன் உருவாக்கப்பட்டது போன்ற விடயங்களையும் அலசிப்பார்க்கலாமே என்று நாகரீகமாக அவருக்கு முன்மொழிந்த விடயங்கள் மூலமாக நாளடைவில் அவர் அதைத் தேடிப்பார்த்திருப்பார், ஒரு வேளை அந்த வழிமுறையின் அடிப்படையான இஸ்லாத்தையும் அலசி ஆராய்ந்திருப்பார் என்பது எனது நம்பிக்கையாக இருந்தது.

அப்படியொன்று உடனடியாக நடைபெறவில்லையென்றாலும் நாளை நடைபெறலாம் என்கிற நம்பிக்கை போக, உங்கள் விருப்பத்திற்குத் தடையாக இருப்பது எது? எனும் கேள்விக்கு அவரளித்த பதிலானது தற்போதைய உணவகங்கள் பெரும்பாலும் ஹலால் சான்றிதழ்களைப் பெரும்பாலும் ஒட்டி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் எனவே என்னால் அப்படியான உணவகங்களுக்குப் போக முடியவில்லை என்றார்.

சரி, அப்படியானால் அந்த உணவகக்காரர்களிடம் நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இது என் உணர்வைப் புண்படுத்துகிறது என்று கேட்டுப் பார்த்திருக்கலாமே என்று கேட்டால், நான் கேட்டுப்பார்த்தேன் ஆனால் முஸ்லிம் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நாங்கள் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது, நீங்கள் விரும்பினால் ஹலால் இல்லாத உணவகங்களுக்குச் செல்லலாம் என்று உணவக உரிமையாளர் தனக்குப் பதிலளித்ததாகவும் வேதனை ததும்பச் சொன்னார்.

ஆக, பொருளாதார ரீதியில் முஸ்லிம்களைக் கவர வேண்டும் என்பதற்காக அவர்கள் இதனைச் செய்கிறார்கள், ஒவ்வொரு வியாபராமும் தமக்கு வருமானத்தை ஈட்டித்தரும் வாடிக்கையாளர்களைக் கவர முனைவதில் தவறில்லை தானே? என்று கேட்ட போது, ஆம் அதில் தவறில்லைத் தான் ஆனாலும் இஸ்லாமிய ஆளுமை மேலோங்குவதால் அது எனக்குப் பிடிக்கவில்லை என்றார்.

அப்படியானால் உங்கள் ஆதங்கம் உங்கள் உணர்வுகள் ஒரு குறிப்பிட்ட வியாபாரத்தளத்தில் மதிக்கப்படவில்லை என்பதை விட, நீங்கள் விரும்பாத ஒரு மார்க்கத்தின் ஆளுமை மேலோங்குவதாக இருக்கிறதே? அப்படியானால் நீங்கள் ஒரு துவேசமிக்க மனிதராக மாறிவிடுகிறீர்களே என்று கேட்ட போது, ஆம்! எனக்குள்ளே சிறு குழப்பம் இருக்கத்தான் செய்கிறது என்று ஏற்றுக்கொண்டார். அது போல இது ஒரு வியாபார உலகம், வாடிக்கையாளர்களைக கவர்வதற்காக அவர் விரும்பும் உணவகம் ஒரு விடயத்தைக் கையாள்கிறது அவ்வளவே எனும் சிறு வட்டத்திற்குள் இவ்விடயத்தைத் தான் பார்கக்கத் தவறியதையும் ஏற்றுக் கொண்டார்.

முஸ்லிம் சமுதாயம், குறிப்பாக உணவகங்களுக்குச் செல்லும் போது முடிந்தளவு தமது சமூக மக்களால் நடாத்தப்படும் உணவகங்களுக்கே செல்ல விரும்புகிறார்கள் ஏனெனில் அவர்கள் தாம் கேட்காமலேயே அல்லது சந்தேகத்துக்கிடமின்றி ஹலால் உணவுகளையே தயார் செய்வார்கள் எனும் நம்பிக்கையாகும். எனவே, இந்த நிலையை வென்று அந்த வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பிற சமூகங்களைச் சேர்ந்த வியாபார நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் தாமும் தமது உணவுகளை ஹலால் முறையில் உற்பத்தி செய்யுமாக இருந்தால், அது முழுக்க முழுக்க வியாபாரம் சம்பந்தப்பட்ட விடயம், அதன் விருப்பும் வெறுப்பும் முழுக்கவும் அவர்களைச் சார்ந்ததாகும்.

ஆயினும், அவர்கள் கூறுவது போன்று அது ஹலால் முறையில் தான் உருவாக்கப்படுகிறதா என்பதைக் கண்டறிந்து அதனை உறுதி செய்ய ஒரு நடைமுறை இருப்பதும் தேவையாக இருப்பதனால் இன்று சர்வதேச ரீதியில் இவ்வாறான இயக்கப்பாடு காணப்படுகிறது. பெரும்பாலும் ஒவ்வொரு நாட்டிலும் ஹலால் சான்றிதழ் வழங்க, ஒரு சமூக நிறுவனமோ அல்லது மார்க்க ரீதியான அமைப்போ செயற்பட்டுக் கொண்டு வருகிறது.

அவ்வாறு இங்கிலாந்தில் இயங்கும் ஒரு சமூக அமைப்பினருடன்  [http://www.halalhmc.org] இக்கட்டுரைக்காக உரையாடிய போது, ஹலால் சான்றிதழ் பெறும் ஒவ்வொரு நிறுவனத்திடமும் மாதம் ஒரு குறிப்பிட்ட சந்தாவினை (முப்பது பவுண்கள்) தாம் அறவிடுவதாகத் தெரிவித்தார்கள்.

இது நீங்கள் சார்ந்த சமூகத்தின் நலனிற்காகத்தானே, அதை ஏன் நீங்கள் இலவசமாகவே செய்யக்கூடாது என்று கேட்ட போது, நாங்கள் வாராந்தம் ஆகக் குறைந்தது நான்கு தடவைகள் வியாபாரத்தளங்களுக்கு விஜயம் செய்து, தேவையான “தரத்துடன்” விடயங்கள் கையாளப்படுகிறதா? உணவு தயார் செய்யும் இடங்களில் ஹலால் உணவுகள் வேறு ஹலால் இல்லாத உணவுப் பண்டங்களுடன் கலக்கப்படுகிறதா? மிருகங்கள் இறைச்சிக்காக அறுக்கப்படும் இடங்கள் தேவையான தரத்துடன் காணப்படுகிறதா?செயற்பாடுகள் திருப்திகரமாக இருக்கிறதா? என்பது முதல் வாடிக்கையாளர் உதவி சேவைகள் என்று பல்வேறு விதமான செயற்பாட்டைச் செய்கிறோம், எனவே எங்கள் செயற்பாட்டிற்கு இவ்வாறான சந்தா தேவைப்படுகிறது என்று விளக்கமளித்தார்கள்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை வேறு சில ஹலால் சான்றிதழ் வழங்கும் அமைப்புகளும் இருக்கின்றன, பொதுவாக அவர்கள் அனைவரது செயற்பாடும் இவ்வாறே காணப்படுகின்றன. எனினும், நாம் எதை அங்கு காணவில்லையென்றால் ஹலால் சான்றிதழ் வழங்காத இடங்களைப் பெயர் குறித்து அவ்வியாபார நிலையங்கள் தொடர்பான எதிர்ப் பிரச்சாரமாகும்.

எனவே, தாம் கொள்வனவு செய்யும் பொருள் ஹலால் சான்றிதழுடன் இருக்கிறதா? தாம் உணவருந்தச் செல்லும் வியாபார நிலையம் ஹலால் உணவுகளை வழங்குகிறதா? அதற்கான சான்றிதழ்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வதும், தேவையேற்படின் குறிப்பிட்ட நிலையங்களைத் தொடர்பு கொண்டு தம் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதும் “சாதாரண மக்களின்” கடமையாக்கப்படுகிறது. இதுவே ஏற்றுக்கொள்ளக் கூடிய நடைமுறையுமாகும்.

இன்னுமொரு மிகப்பிரபலமான எடுத்துக்காட்டினை நோக்குவோமாக இருந்தால் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக இங்கிலாந்துக்கு மாணவர்களாக செல்வோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. அவ்வாறு செல்வோர் தாம் இணைந்து கொள்ளும் கல்லூரியோ பல்கலைக்கழகமோ ஐக்கிய இராச்சியத்தின் அனுமதியுடன் இயங்குகிறதா? என்பதை அறிந்து கொண்டுதான் அதற்கான விண்ணப்பத்தை மேற்கொள்ள வேண்டும், தவறான வழி காட்டலில் அனுமதிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத கல்வி நிலையங்களுக்கு இவர்கள் விண்ணப்பித்தால் அது நிராகரிக்கப்படுகிறது, மேலும் அவர்களுக்கு பண இழப்புகளும் வருகிறது.

நேற்றைய அனுமதிக்கப்பட்ட பட்டியலில் காணப்பட்ட ஒரு கல்லூரி நாளை இல்லாமல் போகலாம், இருந்தாலும் நீக்கப்பட்ட நிறுவனம் தொடர்பாக ஐக்கிய இராச்சிய குடிவரவு,குடியகல்வுத் திணைக்களம் பிரச்சாரம் செய்யாது, இருப்பினும் ஒவ்வொரு நாளும், புதுப்பிக்கப்பட்ட பட்டியலை மாத்திரம் வெளியிடுகிறது, அதனைக் கண்டறிந்து உறுதி செய்து கொள்ளும் பொறுப்பு மாணவர்களுக்குரியது.

இவ்வாறான சில எடுத்துக்காட்டுகளுடன் இலங்கையின் தற்போதைய சிக்கலை எடுத்து நோக்கும் போது, ஹலால் சான்றிதழ் வழங்கப்படாத காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் கொள்வனவு நிலை எவ்வாறு இருந்தது, இப்போது இது எவ்வகையான மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது, அதன் நன்மை தீமைகள் என்ன என்பதை ஆராயும் தேவையிருக்கிறது.

இதற்கான சுருக்கமான விடையானது, யதார்த்தத்தில் இலங்கை முஸ்லிம்கள் தற்காலத்தில், தாம் கொள்ளவனவு செய்யும் பண்டங்களில் ஹலால் முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை விட, வேறு மாற்றங்களைப் பெரிய அளவில் காண முடியாது.

இந்த மாற்றத்தின் மூலம் உண்மையான நன்மையடையப்போவது பிற சமூகத்தவர்களால் நடாத்தப்படும் வியாபாரங்கள் தான் என்பது எள்ளளவும் சந்தேகிக்க முடியாத விடயமாக இருந்தாலும், இன்றைய தேதியில் ஹலால் முறை உணவு அல்லது ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட உணவுப்பண்டங்கள் தமக்கு வேண்டாம் அல்லது அதற்கான மேலதிக பணத்தினைச் செலுத்தத் தாம் தயாரில்லை எனும் தொனியில் தீவிரவாதப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன, அது குறித்து முஸ்லிம் சமூகமும் தம் பதிலை தனித்தனியாகவும் குழுக்களாகவும் வழங்கிக் கொண்டிருக்கிறது.

வியாபாரங்களைப் பொறுத்தவரை முஸ்லிம் சமூகத்தையும் சென்றடைவதற்கு இது ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது, எனவே அவர்கள் தம் உற்பத்திகளுக்கு ஹலால் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் தம் வியாபாரத்தைப் பெருக்க நினைக்கிறார்கள், அதற்காக இயங்கும் நிறுவனம் கட்டணம் அறவிட்டால் அந்தக் கட்டணத்தைச் செலுத்துவிட்டுத் தம் வாடிக்கையாளர்களுக்கு முயற்சி செய்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை.

எனினும், தம் பொருட்களின் விலையுயர்வுக்குத் தாம் ஹலால் சான்றிதழுக்காக வழங்கும் கட்டணம் தான் காரணம் எனும் தோற்றப்பாட்டை அவர்கள் உருவாக்குவதற்கு இன்றைய தேதியில் இலங்கையில் ஹலால் சான்றிதழ் விவகாரத்தை கையாளும் ஜம் இயதுல் உலமாவும் ஒரு காரணமா என்பது இங்கு அறியப்பட வேண்டிய விடயமாக இருக்கிறது.

அதற்காக ஜம் இயதுல் உலமாவை நாம் தொடர்பு கொண்ட போது, ஏறத்தாழ இங்கிலாந்தின் “halalhmc” நிறுவனம் போன்றே அவர்களது செயற்பாடும் இருப்பதை அதாவது ஹலால் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும் நிறுவனத்தாரை, அவர்களது தயாரிப்புக்களை தேவையேற்படின் ஒரு மாதத்திலேயே பல தடவைகள் சென்று பரீட்சிப்பது மாத்திரமன்றி வாடிக்கையாளருக்கு உதவுவதற்காக பிரத்யேக தொலைபேசி இலக்கமொன்றும் (011-7425225)பாவனையில் இருப்பது தெரிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட அமைப்பு இயங்குவதற்கும் அதன் தொழிற்பாடுகளுக்குமான செலவினை ஹலால் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்களிடமிருந்தே, சில வரையறைகளுக்குட்ப தாம் அறிவிடுவதாகவும், வேறு சில சான்றிதழ்கள் உதாரணமாக ISO சான்றிதழைப் பெறுவதற்காக வழங்குவதை விட மிகக் குறைந்த அளவிலேயே தம்முடைய கட்டணங்கள் இருப்பதாகவும், வேறு தரக் கட்டுப்பாடுகளை விட ஹலால் சான்றிதழ் என்பது ஒரு நிறுவனத்திற்கு வருவாய் ஈட்டித்தரும் மூலதனம் என்பதை அறிந்து தான் எந்தவொரு நிறுவனமும் ஹலால் சான்றிதழுக்காகத் தம்மிடம் விண்ணப்பிப்பதாக அ.இ.ஜ.உ பேச்சாளர் நமக்குத் தெரிவித்தார்.

இதுதான் நியதியும் நியாயமுமக இருக்க, இது தொடர்பான இஸ்லாமிய சமூகத்தின் விழிப்புணர்வு மிகவும் துல்லியமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதாவது, ஹலால் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள விரும்பும் நிறுவனங்கள் அததை விரும்பியே பெற்றுக்கொள்கின்றன அவர்களை யாரும் நிர்ப்பந்திப்பதில்லை.

எனவே, இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கையில் பொருளாதார மயமாகிப்போன அன்றாட வாழ்க்கையில் இதுவொரு அங்கமாகவே பார்க்கப்பட வேண்டுமே தவிர, இது ஒரு மார்க்கம் மற்ற சமூகத்துக்கு விதிக்கும் நிர்ப்பந்தமாகப் பார்க்கப்படக் கூடாது.

ஹலால் சான்றிதழ் புழக்கததில் இல்லாத காலத்தில் நம் முன்னோர்களும் நாமும் கொள்வனவு செய்தவை நம்பிக்கையின் அடிப்படையிலாக இருந்தது. அவ்வப்போது சில தயாரிப்புகளின் கலவை தொடர்பான வதந்திகள், சில வேளைகளில் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஆதாரங்களும் வெளியான போது அவ்வகையான தயாரிப்புகளை இஸ்லாமிய சமுதாயம் புறக்கணித்தது. தற்போது ஹலால் சான்றிதழ் மூலமாக நிறுவனங்கள் தம் வியாபாரத்தை நேரடியாக வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்குக் கொண்டு வருவதையும், முஸ்லிம்களின் நம்பிக்கையையும் வெல்கிறதே தவிர வேறு எதுவும் இங்கு இடம்பெறவும் இல்லை.

எனவே தம் தயாரிப்புகளின் உண்மையான நுகர்வோர் யார்? அவர்களைக் கவரத் தாம் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்ட வியாபாரம் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களின் விருப்பும், வெறுப்பும் முடிவுமே தவிர, இதில் இஸ்லாமிய சமூகம் இன்னோர் சமூகத்துடன் போட்டி போடவோ அல்லது போர் புரியவோ எதுவும் இல்லை.

இஸ்லாமிய வாடிக்கையாளர்கள் தமக்கு வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்ட காலத்துக்கு ஹலால் சான்றிதழைப் பெற்று, நம்பிக்கைய வளர்த்து விட்டுப் பின் அந்தக் கட்டணமில்லாமலேயே நுகர்வோரைத் தங்க வைக்கலாம் என்று நிறுவனங்கள் குறுக்கு வழியை நாடும் போது அ.இ.ஜ.உ தம் சமூகத்தை விழிப்புணர்வுடன் வைத்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டு சில எதிர்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவது இங்கு கவனித்தக்க விடயமாகும்.

இவ்வாறான செயற்பாட்டின் போது, பாதிப்புக்குள்ளாகும் நிறுவனங்களைப் பொறுத்தவரை ஹலால் சான்றிதழை வழங்குவது அ.இ.ஜ.உ சபையாக இருப்பதனால் அவர்கள் பார்வையும் போரும் அவர்களுடனேயே நேராகத் தொடுக்கப்படுகிறது, அதன் அடிப்படையில் அண்மைய பிரச்சாரத் தாக்குதல்களின் பிரதான இலக்காக அ.இ.ஜ.உ மாறியதும் தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.

இந்த இடத்தில் இரண்டு விடயங்கள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இஸ்லாமிய சமூகத்தில் அறிஞர்கள் சபையான அ.இ.ஜ.உ இதில் நேரடியாகப் பங்கெடுப்பது சரியா? அல்லது அதற்கான மாற்று அமைப்பு அல்லது தளம் இருக்கிறதா என்பதாகும்.

இரண்டு கேள்விகளுக்கும், மாற்று வழியோ தளமோ இருந்தால் நல்லது என்பது ஆழ்ந்த நோக்குடைய சமூக ஆர்வலர்களின் பதிலாக இருக்கும். அதன்போது, பல நேரடிச் சமூகப் பின்னல்களில் சிக்குண்டு தவிப்பதையும் தவிர்த்துக்கொள்ளலாம்.

ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஒன்றாக ” ஹலால் சான்றிதழுக்கு வழங்கும் பணத்தைத் தவிர்த்து எமக்கான விலையைக் குறை ” எனும் நுணுக்கமான வாசகங்கள் காணப்படுகின்றன. இது அடிமட்ட மக்களை எவ்வாறு சென்றடையும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது உண்மைதானா? என்பதைக் கேட்டறிய நாம் அ.இ.ஜ.உ சபையின் ஹலால் பிரிவினரை வினவியபோது “ஆம்” நாம் கட்டணம் அறவிடுகிறோம், அந்தக் கட்டணத்தை எம்மிடம் விண்ணப்பிக்கும் நிறுவனங்களிடம் அவர்களது தயாரிப்புக்களின் வகை, பெறுமானம் மற்றும் அவர்கள் உற்பத்தித் தளங்கள் அமைந்திருக்கும் தூரம் அல்லது சிறு தொழில், பெருந் தொழில் எனும் பிரிவுகள் மூலம் அறவிடுகிறோம் என்று நமக்கு பதில் கிடைத்தது.

இதை ஏகபோகமாக ஏற்றுக்கொள்வதற்கு இரண்டு நியாயங்கள் இருக்கின்றன. ஒன்று, ஹலால் சான்றிதழ் பெறுவதன் மூலம் முஸ்லிம் வாடிக்கையாளர்களைக் கவர முடியும் எனும் பொருளாதார நோக்கே வியாபாரங்களுக்கு இருப்பதனால் இதன் மூலம் அவர்கள் இழப்பதை விட அடைவதே அதிகமாக இருக்கப்போகின்றது எனவே அதற்கான கட்டணத்தை அவர்கள் செலுத்துவது ஏற்புடையது. இரண்டாவது, இவ்வாறான ஒரு சான்றிதழை அனுமதியை வழங்கும் செயற்பாட்டைச் சமூகப் பொறுப்புடன் செயற்படுத்த வேண்டிய கடமை அ.இ.ஜ.உ சபைக்கு இருப்பதனால் அவர்கள் நாட்டின் எந்தப் பாகத்திலிருந்து விண்ணப்பம் வந்தாலும் அந்தப் பாகத்தை நோக்கிப் பயணித்து, சில வேளைகளில் தேவையேற்படின் வாரத்திற்கு இரு தடவைகளும் பயணித்து, பரிசோதித்து, தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்து அதற்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் அதற்கான செலவீனம் ஈடு செய்யப்பட வேண்டும், ஆகவே கட்டணம் அறவிடப்படுவது நியாயமே என்று ஏற்றுக் கொள்ளப்படும்.

அதே போன்று, இந்தக் கட்டணம் கொள்வனவு விலையை அதிகரிக்கிறதா? என்பது கேள்விக்குள்ளாகும் விடயமாகவும் இருக்கிறது. அவ்வாறு இல்லையென்பதே அ.இ.ஜ.உ சபையின் பதிலாக இருப்பினும், இந்த ஆயுதம் ஆகக்குறைந்தது தீவிரப் போக்குடைய சக்திகளால் அல்லது அங்கீகாரம் மறுக்கப்பட்ட நிறுவனங்களால் அல்லது தமது சமூகத்தைப் பாதுகாக்கத்தானே அவர்கள் ஹலால் சான்றிதழ்கள் கேட்கிறார்கள் அதற்கு எதற்குக் கட்டணம் என்று நினைக்கும் ஒரு சாராரால் கூட தூக்கப்பட்டிருக்கலாம்,  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும் வரலாம்.

ஆயினும், வர்த்தக ரீதியான மேம்பாட்டிற்கே நிறுவனங்கள் (இஸ்லாமியர்களின் நிறுவனங்கள் உட்பட) ஹலால் சான்றிதழைப் பெற வருகின்றன எனும் அடிப்படையில் கட்டணம் அறவிடுவதன் நியாயம் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டும். எனினும், நாட்டின் எல்லாப் பாகத்திலும் ஒரே நேரத்தில் இயங்கும் ஆள் பலம் எம்மிடம் இல்லாததனால் எமது செலவுகளும் அதிகம் என்கிற அ.இ.ஜ.உ சபையின் விளக்கமும் இங்கு கவனிக்கத்தக்கது.

அப்படியானால், ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை தேசிய வலைப்பின்னலுக்குள் தனியான ஒரு செயற்பாடாக மாற்றி, அதன் பொறுப்பையேற்றுச் செயற்படக்கூடிய சுதந்திரமான அமைப்பொன்றை இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகம் ஏற்படுத்த முடியாதா எனும் கேள்வி இங்கு எழுகிறது.

அவ்வாறான ஒரு அமைப்பும் அதன் வேலைத்திட்டங்களும்  அ.இ.ஜ.உ சபையினால் வாரத்தில் அல்ல ஒரே நாளில் எத்தனை தடவைகள் பரீட்சிக்கப்பட்டாலும் அதில் தவறு காண யாரும் வரப்போவதில்லை. அறவிடப்படும் கட்டணத்திலிருந்து ஒரு பகுதியினை அ.இ.ஜ.உ பெற்றுக்கொண்டு இதற்கான செலவுகளை ஈடு கட்டிக்கொள்ள முடியாதா அல்லது இது நடைமுறை சாத்தியமில்லாத விடயமா என்பது குறித்து பொறுப்புள்ள அ.இ.ஜ.உ சபைதான் பதிலளிக்க வேண்டும் (அவர்கள் பதிலளித்தால் அதனை நாம் பிரசுரிக்கிறோம்).

அவ்வாறான ஒரு பரந்த செயற்பாட்டினை நிறுவுவதற்கு இலங்கையில் எவ்வாறான சிக்கல்கள் இருக்கின்றன என்பதை நன்கறிந்துள்ள இஸ்லாமிய சமூகம், அதற்கான பொறுப்புகளை யாரிடம் வழங்கலாம் எவ்வாறான அமைப்பு மூலம் ( உதாரணம்: பிராந்திய பள்ளிவாசல் நிர்வாகம்) அல்லது கல்வி மான்கள், மார்க்க அறிவு கொண்ட , சமூக அக்கறையும் கொண்ட ஒரு சிலர் அடங்கிய குழு என்று எப்படியான முறை மூலம் ஒரு நாட்டின் சமூகத்தின் மார்க்க அறிஞர்களின்  சபையை வார்த்தக, அரசியல் உலகோடு நேரடியாக மோதிக்கொள்வதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது குறித்தும் முடிவெடுக்க வேண்டும், தம் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

இஸ்லாமிய சமூகத்தின் தொடர்பாடல் நிலை குறிப்பிட்ட “வளர்ந்த” நிலையை இன்னும் அடையவில்லை என்று நமக்கு நாமே கருதிக்கொள்வதால் ஆகக்குறைந்தது, இஸ்லாமியர்கள் சார்ந்த ஊடகங்களும் தம் பொறுப்புகளை உணர்ந்து, அ.இ.ஜ.உ சபையின் தகவல்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கலாம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, வாராந்தமோ ஒவ்வொரு நாளுமோ, மாதாந்தமோ பிரசுரிக்கப்படும் (பிரசுரிக்கப்பட்டால்!?) ஹலால் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்,தயாரிப்புகளின் பட்டியலை தம் சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை ஒவ்வொரு இஸ்லாமிய ஊடகமும் ஏற்றுக்கொள்ளலாம். அதற்கு ஏதுவாக அ.இ.ஜ.உ சபை இஸ்லாமிய ஊடகங்களுடன் தம் தொடர்புகளையும் மேம்படுத்த வேண்டும், அறிக்கைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் ஊடகச் செயற்பாட்டின் அடிப்படைகளை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டும்.

அதற்கும் மேலாக, ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பையேற்று செயற்படும் அமைப்பு அல்லது பிரிவு, வாராந்தமோ நாளாந்தமோ அவர்கள் செயற்பாட்டின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலை ஒவ்வொரு ஊரின் ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் அனுப்பி வைக்கலாம். இன்றைய தினத்தில் ஊரில் ஒருவருக்காவது ஒரு மின்னஞ்சல் இல்லாமலா போகப்போகிறது எனும் நியாயம் இங்கு கவனிக்கப்படலாம் அல்லது ஆகக்குறைந்தது தபால் மூலமாகவாவது அனுப்பலாம்.

அத்துடன் அ.இ.ஜ.உ சபையோ அல்லது ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பிலிருக்கும் அமைப்போ  தம் இணையத்தளத்தில் வழக்கம் போல இதனைப் பகிரங்கப்படுத்தலாம், அதன் மூலம் மக்களை விழிப்புணர்வூட்டலாம், அத்துடன் பிற சமூகங்களுடன் நேரடி விளக்கக் கூட்டங்கள், எதிர்ப் பிரச்சாரங்கள் போன்ற விடயங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

இஸ்லாமிய வாடிக்கையாளர்கள் தேவையென்பதற்காக ஹலால் சான்றிதழ்களை நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன எனும் அடிப்படையை மிகத் தெளிவாக முன் வைத்துவிட்டால், அதன் பின் இஸ்லாமிய கட்டளைகள், மார்க்க முறைகள் தம் மீது நிர்ப்பந்திக்கப்படுகிறது எனும் வீண் தர்க்கங்களுக்கான வழி முறைகளும் எதிர்ப் பிரச்சாரங்களின் தேவைகளும் இஸ்லாமிய சமூகத்திற்கு இல்லாமல் போகின்றன.

ஆக மொத்தத்தில் இது முழு சமூகமும் பொறுப்புணர்வுடன் சிந்தித்துச் செயற்பட வேண்டிய ஒரு விடயம் என்பது ஒவ்வொருவராலும் உணரப்பட வேண்டும்.

இன்றைய நிலையில் இந்த விவகாரம் அரசியல் அரங்கில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது, அதன் மூலம் பெரும்பாண்மைத் தீவிரவாதத்திற்கு எவ்வாறு இது துணை போகின்றது என்று பல்வேறு வழிகளில் இதன் தாக்கங்கள் உணரப்பட வேண்டும்.

முஸ்லிம்கள் போன்றே, யூதர்களும் ஹலால் முறையை மிகக் கவனமாகப் பின்பற்றுகிறார்கள், அதனை kosher என்று அழைக்கிறார்கள், பொதுவாகவே தாம் வாழும் அனைத்து நாடுகளிலும் இஸ்ரேல் சமூகம் இந்த விடயத்தில் கவனமாக இருக்கின்றது. எனினும், ஹலால் உணவு எனும் சிக்கல் பிரச்சாரப்படுத்தப்படும் அளவிற்கு kosher பற்றிய வாதங்கள் வெளி வராமைக்குக் காரணம், சமய,சமூக விடயங்களை அவர்கள் கையாளும் நுணுக்கமாக இருக்குமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும் !

- மானா

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com