|
||||
|
தமிழருக்காக குரல்
கொடுக்கும்
குதியை இழந்துவிட்டாராம்! உண்மையை வெளிப்படுத்திய
சம்பந்தனுக்கு
கிடைத்துள்ள
பரிசு
தலைமைப் பதவியை
மாவைக்கு
வழங்குமாறு
கடும் அழுத்தம்
டிசம்பர் 7ஆம்
திகதி சம்பந்தன்
நாடாளுமன்றத்தில்
ஆற்றிய உரை, உலகெங்குமுள்ள
பத்துக் கோடி தமிழ்
மக்களிடையேயும்
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் பெரும் அதிர்ச்சியினால்
வாயடைத்துப்
போயுள்ளனர்.
இனிமேலும் தமிழரின்
உரிமையைப்
பற்றிப் பேசும் தகுதியை சம்பந்தன்
இழந்துவிட்டார்.
எனவே, அவர் கூட்டமைப்பிலிருந்து
விலகி உபதலைவராக
இருக்கும்
மாவை சேனாதிராசாவை
தலைவராக்குவதற்கு
வழிவிட வேண்டும்.
“புரூட்டஸ்
நீயுமா?” என்றொரு வரலாற்றுக்
கேள்வி வழக்கிலுண்டு. அதைப்
போல் “சம்பந்தன்
நீங்களுமா?”
என்ற கேள்வி
உலகின் பெரும்பாலான
தமிழர்களிடையே
எழுந்துள்ளது.
அவர் நாடாளுமன்றத்தில்
டிசம்பர்
7 ஆம் திகதி
ஆற்றிய ஒரு பகுதி
உரை அவர்களின்
இதயங்களில்
ஈட்டியால்
குத்தியதாக
புலம்பெயர்
தமிழ் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தமிbழ விடுதலைப்
புலிகளைப்
பற்றிக் குறிப்பிட்டதுதான்
உலகத் தமிழர்களின்
கவலைக்குரிய
காரணமாக அமைந்துள்ளது.
விடுதலைப் புலிகள்
அமைப்பை ஒரு பயங்கரவாத
அமைப்பு என தமிழ்த்
தேசிய கூட்டமைப்பின்
தலைவர், அதிலும் தமிழ்த் தேசிய விடுதலைக்காக
புதல்வர்களை
அள்ளிக் கொடுத்த திருகோணமலைத்
தொகுதியைப்
பிரதிநிதித்துவப்படுத்தும்
சம்பந்தன்
அவ்வாறு தெரிவிக்கலாமா?
இலங்கை பல்கலைக்கழக
மாணவர் அமைப்பின்
தலைவர், யாழ் பல்கலைக்கழகத்தினுள்
இராணுவம்
அத்துமீறி
நுழைந்ததை,
பயங்கரவாதம்
என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால்,
சம்பந்தன்
அதற்கு எதிர்மைறையாக
விடுதலைக்காகப்
போராடிய ஓர் அமைப்பை
பயங்கரவாத
அமைப்பு என்று எங்ஙனம்
கூற முடியும்?
அவர் தமது
நாடாளுமன்ற
உரையில் முன்னாள் வெளிநாட்டமைச்சர்
கதிர்காமரை
புலிகள்தான்
கொலை செய்தார்கள்
என நாடாளுமன்ற
உறுப்பினர்களின்
பலத்த கைதட்டலுக்கும்
மத்தியில்
தெரிவித்தார்.
அவர் உண்மையை
ஒத்துக்கொண்
டுள்ளார்.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு
நாடாளுமன்ற
உறுப்பினர்
சிறிதரன்
இவருக்கு
முன்பு நாடாளுமன்றத்தில்
உரை நிகழ்த்தும்போது,
யாசீர் அரபாத் பாலஸ்தீனர்களுக்கு
தனிநாடொன்றைப்
பெற்றுக்கொடுத்ததைப்
போன்று, தமிbழத் தேசியத் தலைவரும் தமிழர்களுக்கு
அவ்வாறு பெற்றுக்கொடுப்பார்
எனத் தாம்
நம்புவதாகத்
தெரிவித்தார்.
அந்த உரையின் மீது எழுந்த
அரச அழுத்தங்களின்
பின்னணியில்
சம்பந்தன்
தமது உரையை
நிகழ்த்தியதாகக்
கருதினாலும்,
உண்மைக்கு
மாறான தகவல்களை அவர் தவிர்த்திருக்கலாம்.
முள்ளிவாய்க்காலுக்கு முன்பு
வரை தமிbழ
விடுதலைப்புலிகளின்
கட்டுப்பாட்டில்
இருந்த பகுதிகளில்
மேற்கொள்ளப்பட்ட
அபிவிருத்தித்
திட்டங்கள்
குறித்து
சம்பந்தன்
மாத்திரமல்ல
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மக்கள் பிரநிதிகள்
எவரும் அறிந்து வைத்திருக்கவில்லை.
அவ்வாறு ஆராய முற்பட்டால்,
தம்மையும்
புலிகளுடன்
இணைத்து இலங்கை அரசு கணித்துவிடும்
என்ற அச்சமும்
ஏழலாம்.
தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்ட
அமைப்பை மிக எளிமையாக? தமிழ்
மக்களுக்கு
இதுவரை எவ்வித நன்மையும்
செய்யாத சம்பந்தன்,
பயங்கரவாத
அமைப்பு என நாடாளுமன்றத்தில்
சர்வசாதாரணமாகக்
குறிப்பிட்டது
ஓர் இமாலயத்
தவறு என்பதை
இப்போது உணர்கின்றாரா?
விடுதலைப்புலிகள் இல்லாத
வெற்றிடமொன்று
முள்ளிவாய்க்காலின்
பின் ஏற்பட்டபோது,
அதனை முழுமையாக
நிரப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்
முடியாது
என்பதை உலகத் தமிழர்கள்
அறிவார்கள்.
தமிழரின்
தேசியப் பிரச்சினைக்குத்
தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்கவோ,
போரினால்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு
நிவாரணம்
ஒன்றைப் பெற்றுக்கொடுக்கவோ
முடியாது
என்பதை தமிழர்கள்
அறிவர்.
ஆனால், தாயக நிலைமைகளை
வெளிநாடுகளுக்கு
அறிவிக்கும்
பணியைத் தவிர வேறு
எதனையும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்
செய்ய முடியாது என்பதும் யதார்த்தமானது.
1977ஆம்
ஆண்டு முதல் திருகோணமலைத்
தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினராக
இருந்துவரும்
சம்பந்தன்,
கடந்த 35 ஆண்டு காலமாக
தமிழருக்கு
குறிப்பிட்டுச்
சொல்லக்கூடிய
சேவைகள் எதனையும் செய்யவில்லை.
அதேநேரத்தில், அவரின்
நாடாளுமன்ற
உரை கடந்த
முப்பதாண்டு
கால தமிழரின்
விடுதலைப்
போராட்டத்தை
கொச்சைப்படுத்துவதாகவே
அமைகின்றது.
எனவே, கடந்த டிசம்பர்
மாதம் 7 ஆம் திகதியுடன்
அவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி
விட்டது என புலம்பெயர்
ஊடகங்களும்
சுட்டிக்காட்டியுள்ளன. அவர் தானாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி
லிருந்து
விலகி, தற்போது உபதலைவராக
இருக்கும்
மாவை சேனாதிராசாவை
தலைவராவதற்கு
வழிவிட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தொடர்ந்தும்
தமது போராட்டத்தை
நடத்த முன்வர வேண்டும். நுணலும்
தன் வாயால்
கெடும் என்பதைப் போல, தமிழரின்
விடுதலையைக்
கேள்விக்குறியாக்கும்
விதத்தில்
உரையாற்றிய
சம்பந்தன்
இனிமேல் தமிழரின் உரிமைக்காக
குரல்கொடுக்கும்
தகுதியை இழந்துவிட்டார்.
க.சிவராஜா |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |