|
||||
|
நட்பு
நாடான ரஷ்யாவின்
மூலம் நாம் தேசிய
பொருளாதாரத்தை
மேம்படுத்த
முடியும்
மனித உரிமை மீறல்
குற்றச் செயல்களில்
கடுமையாக
தண்டிக்கப்பட
வேண் டிய
சில மேற்கத்திய
வல்லரசு நாடுகள் இலங்கையில்
மனித உரிமைகள்
மீறப்படுகின்றன
என்ற குற்றச்சாட்டுகளை
சுமத்துவது
நாகரீகமான
செயல் அல்ல என்று
இலங்கையில்
புதிய ரஷ்ய தூதுவராக
பதவியேற்றுள்ள
எலக்ஸாண்டரே
கர்ச்சாவா
கண்டனம் தெரிவித்தார்.
சிலர் மற்றவர்கள்
கண்ணில் தூசி படிந்திருக்கிறதென்று
கிண்டல் செய்வார்கள்.
ஆனால், அவர்கள் மாலைக்கண்
பார்வையுடையவர்களாக
இருப்பார்கள்
என்று தெரிவித்த
ரஷ்யத் தூதுவர், மேற்கத்திய,
அபிவிருத்தி
அடைந்த நாடுகள் இலங்கையின்
நிலைப்பாட்டை
அபிவிருத்தி
செய்வதற்கான
ஆலோசனைகளை
தெரிவிப்பது
தவறில்லை
என்றும் அந்த ஆலோச
னைகளை நிறைவேற்றுமாறு
இலங்கை அரசாங்கத்திற்கு
அழுத்தங்களை
கொண்டுவருவது
மன்னிக்க
முடியாத குற்றம் என்று கூறினார்.
இவ்விதம்
மேற்கத்திய
நாடுகள் சில நடந்து
கொள்வது இலங்கையின்
உள்நாட்டு
விவகாரங்களில்
அந்நாடுகள்
அநாவசியமாக
தலையிடுவதையே
உறுதிப்படுத்துகிற
தென்றும்
அவர் கூறினார். ரஷ்ய
தூதுவரின்
கூற்றை நாம் மனப்பூர்வமாக
அங்கீகரிக்கின்றோம். யுத்தம் முடிந்து
மூன்று ஆண்டுகளில்
இலங்கையில்
தரைக்கண்ணி
வெடிகளை அகற்றுவதில்
அதிக முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளன.
பயங்கரவாதிகளினால்
புதைக்கப்பட்ட
இந்த தரைக்கண்ணி
வெடிகள் இன்னும் சிறிதளவு நிலப்பரப்பிலேயே
அகற்றப்படாத
நிலையில்,
இலங்கை அரசாங்கம்
இராணுவத்தினரதும்
இந்தியா, சீனா போன்ற
நாடுகளின்
நிதி உதவியுடனும்
வெளிநாட்டு
தொண்டர்களின்
உதவியுடனும்
கண்ணி வெடிகளை அகற்றும் பணியை வெற்றிகரமான
முறையில்
நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறது. கம்போடியா
போன்ற நாடுகளில்
யுத்தம்
1970ம் ஆண்டு
தசாப்தத்தில்
முடிவடைந்தது. ஆயினும் இன்றும்
கூட கம்போடியாவில்
புதையுண்
டிருக்கும்
தரைக்கண்ணி
வெடிகள் முழுமையாக
அகற்றப்படவில்லை.
இதிலிருந்து இலங்கை
கண்ணி வெடிகளை அகற்றுவதில்
உலக சாதனையை
மூன்றாண்டு
என்ற குறுகிய
காலத்தில்
ஏற்படுத்தியிருப்பது
பெருமைக்குரிய
விடயமாகும். ரஷ்யா
என்றென்றும்
சீனா, இந்தியா
மற்றும் பாகிஸ்தானைப்
போன்று இலங்கையின்
நெருங்கிய
நட்பு நாடாகும். அன்று இலங்கையில்
இரண்டு பல்கலைக் கழகங்களே இருந்தன. கொழும்பு பல்கலைக்கழகமும்,
பேராதனைப்
பல்கலைகழகமும்
இருந்த காலத்தில்
நம் நாட்டு
பிள்ளைகளுக்கு
வைத்தியம்,
விஞ்ஞானம்,
கலை, வர்த்தகம்,
பொறியியல்
துறைகளில்
பட்டப்படிப்பு,
முதுமாணிப்
படிப்பு, கலாநிதிப்
படிப்புகளை
மேற்கொள்வதற்காக
ரஷ்யா போன்ற வளர்முக
நாடுகளின்
மாணவ, மாணவிகளுக்காக
லுமும்பா
சர்வதேச பல்கலைக்கழகத்தை
ஏற்படுத்தி
எமது நாட்டு
இளம் சந்ததியினருக்கு
இலவச கல்வி
அறிவை பெற்றுக் கொடுத்த ஒரு தார்மீக
பொறுப்புள்ள
நாடாக திகழ்ந்தது. லுமும்பா பல்கலைக்கழகத்தில்
பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான
டாக்டர்கள்,
பொறியியலாளர்கள்
மற்றும் விஞ்ஞானிகள்
இன்று இலங்கையிலும்
வெளிநாடுகளிலும்
உயர் பதவிகளில்
இருந்து தாங்கள் வாழும் நாட்டு மக்களுக்கு
மகத்தான சேவையை செய்து வருகிறார்கள். இலங்கைக்கும்
ரஷ்யாவுக்கும்
இடையில் இராஜதந்திர
உறவு ஏற்படுத்தப்பட்டு
55 வருடங்கள்
பூர்த்தியாகின்றன. இந்த காலப்பகுதியில்
இருநாடுகளில்
வர்த்தக உறவு பெரும்
வெற்றியை
அளித்திருக்கிறது.
ரஷ்யா இலங்கையின்
மின்சக்தி,
எரிசக்தி
துறைக்கு
பெரும் பங்களிப்பை
அளித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து
நாம் தேவையான
போதெல்லாம்
எரிபொருளை
வாங்கி வருகின்றோம். வியட்னாம்
உட்பட பல நாடுகளில்
அணுசக்தியின்
மூலம் மின்சக்தியை
உருவாக்கும்
தொழிற்சாலைகளை
அமைத்து கொடுத்து வருகின்றது. வியாட்னாமும் ரஷ்யாவிடம்
இருந்து அணுசக்தி மின் உற்பத்தி
ஆலை ஒன்றை
பெற்றுள்ளது.
இலங்கை தேயிலையை
பெருமளவில்
இறக்குமதி
செய்யும்
ஒரு நாடாக
ரஷ்யா இருந்து வருகின்றது.
இது விடயத்தில்
நாம் ஓர்
உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான்
வேண்டும்.
நாம் ரஷ்யாவிடம்
இருந்து கணிசமான அளவு பொருட்களை
இறக்குமதி
செய்யாததனால்
எங்கள் இருநாடுகளுக்கிடையிலான
வர்த்தகத்தில்
பாரிய இடைவெளி தோன்றியது. இன்று
இலங்கை ரஷ்ய பரஸ்பர
வர்த்தகம்
500 மில்லியன்
அமெரிக்க
டொலர் பெறுமதியை
மட்டுமே கொண்டிருக்கிறது. இந்த பரஸ்பர
வர்த்தக உறவை பெருக்குவதற்கு
இலங்கை அரசாங்கம்
இப்போது ரஷ்ய செல்வந்த
உல்லாசப்
பயணிகளை இலங்கைக்கு
ஈர்ந்தளிக்கும்
ஒரு பாரிய
பிரசாரத்தை
ஆரம்பித்திருக்கிறது. 2011ம்
ஆண்டில் 21 ஆயிரம் ரஷ்ய உல்லாசப்
பயணிகளே இங்கு வந்தார்கள். ரஷ்யா வருடத்திற்கு
சுமார் 7 முதல் 8 மாதங்கள்
கடும் குளிருடனான
மாரிகாலத்தை
கொண்டிருக்கிறது.
இதனால் ரஷ்ய செல்வந்தர்கள்
பூமத்திய
ரேகைக்கு
தெற்கில்
அமைந்திருக்கும்
உஷ்ண சீதோஷ்ண
நிலையை கொண்டிருக்கும்
இலங்கைக்கு
வந்து தங்கள் விடுமுறையை
மகிழ்ச்சியோடு
கழிப்பதற்கு
மிகவும் விரும்புகிறார்கள். அவர்கள்
எங்கள் நாட்டின் நாலா பக்கத்திலும்
அமைந்திருக்கும்
நீலக்கடற்கரையின்
சூரிய ஒளியில் குளிர்காய்வதற்கு
விரும்புகிறார்கள். அவர்களின்
ஆசைக்கனவை
நிறைவேற்றுவதற்காக
தென்னிலங்கையில்
ஹிக்கடுவை,
கிழக்கிலங்கையில்
அருகம்பே,
பாசிக்குடா,
நிலாவெளி
போன்ற கடற்கரைகளை
அடுத்து நடுத்தர வகுப்பினரும்
செல்வந்தர்களும்
தங்கியிருக்கக்கூடிய
பல ஹோட்டல்கள்
ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு
செயற்பட்டுக்
கொண்டிருக்கின்றன. 21ம்
நூற்றாண்டில்
வெளிநாட்டு
நாணயமாற்றை
சம்பாதிக்கக்கூடிய
முதன்மைத்
தொழிலாக உல்லாசப் பயணத்துறை
இருந்து வருகின்றதென்ற
உண்மையை உணர்ந்திருக்கும்
எமது அரசாங்கம்
அந்தத் துறையை முன்னேற்றி
அதன் மூலம்
எமது நாட்டின்
தேசிய வருமானத்தை
பெருக்குவதற்கு
எடுத்துவரும்
முயற்சிகள்
நிச்சயம்
வெற்றியடையும்
என்ற நம்பிக்கை
எமக்குண்டு.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |