|
||||
|
''தவறு செய்தது
அமெரிக்கா
மட்டுமல்ல...
தேவயானியும்தான்!''
(அ.மார்க்ஸ்)
இந்தியாவில் மட்டுமின்றி
அமெரிக்க
ஊடகங்களிலும்
இன்று பரபரப்பாகப்
பேசப்படும்
செய்தி, அமெரிக்காவுக்கான
இந்திய துணைத் தூதர் தேவயானி
விவகாரம்தான். கடந்த
பத்தாண்டுகளாகக்
கிட்டத்தட்ட
அமெரிக்காவின்
எடுபிடிபோலச்
செயல்பட்ட
இந்திய அரசு, இந்தப்
பிரச்னையில்
சரமாரியாக
எதிர் நடவடிக்கை
எடுத்திருப்பது
எல்லோரையும்
வியக்க வைத்துள்ளது.
உலக நாடுகள்
பலவற்றையும்
அமெரிக்கா
உளவு பார்த்த
கதை சில
மாதங்களுக்கு
முன் ஸ்னோடென்
மூலம் வெளியானபோதுகூட,
இந்திய அரசு அடக்கியே
வாசித்தது.
ஐரோப்பிய யூனியன்
நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக்
கண்டித்தபோதும்
இந்தியா, 'உளவு எல்லாம்
இல்லை. சும்மா கம்ப்யூட்டர்
ஆய்வுதான்’
என்று சொன்னபோது
உலகமே நகைத்தது.
இத்தனைக்கும் உளவுத்
தகவல்கள்
அதிகம் சேகரிக்கப்பட்ட
நாடுகளில்
இந்தியாவும்
ஒன்று.
ஆனால், இன்று இந்தியா
எங்கும் உள்ள அமெரிக்கத்
தூதரக அதிகாரிகள்
மற்றும் அவர்களின்
குடும்பத்தினரின்
அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளன. விமான
நிலைய அனுமதிச் சீட்டுகளைத்
திரும்பப்
பெறும் நடவடிக்கைகள்
தொடங்கப்பட்டுள்ளன.
மது வகைகள்
உட்பட தேவையான சில பொருட்களை
இறக்குமதி
செய்துகொள்ளும்
சலுகைகள்
நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கத் தூதரகங்களில்
பணிபுரியும்
இந்திய ஊழியர்களின்
ஊதிய விவரங்களும்
கோரப்பட்டுள்ளன.
டில்லியில் உள்ள தூதரகத்தின்
முன் போடப்பட்டிருந்த
பாதுகாப்புத்
தடுப்புகளும்கூட
அகற்றப்பட்டுள்ளன.
ஏதோ போர் சூழல்போல இருக்கிறது
காட்சிகள்.
'உலகளாவிய பங்காளிகள்’(global partners) எனக்
கூறிக்கொ
ண்டு அமெரிக்காவுடன்
கைகோத்துத்
திரிந்த மன்மோகன் அரசுக்கு இப்போது திடீரென ஏனிந்த ஆவேசம்? அமெரிக்க போர்க் கப்பலான நிமிட்சின்
வருகை, இந்திய அரசின் இறையாண்மையையும்கூட
விட்டுக்கொடுத்து
இயற்றப்பட்ட
123 ஒப்பந்தம்,
நேரு காலத்திய
அணிசேராக்
கொள்கையில்
இருந்து விலகி அயலுறவுக்
கொள்கையில்
அமெரிக்கச்
சார்பு எடுத்தது...
ஆகியவற்றுக்கு
எழுந்த எதிர்ப்புகளை
எல்லாம் கண்டுகொள்ளாமல்
அமெரிக்காவை
ஆதரித்து
வந்தது காங்கிரஸ்
அரசு. அப்படிப்பட்ட அரசு, திடீரென அமெரிக்காவை
மிரட்டுவதைப்போல
எடுக்கும்
நடவடிக்கைகள்
எல்லோருக்கும்
வியப்புத்தான்.
தேர்தல் நெருங்குவது
ஒரு காரணமாக
இருக்கலாம்.
பி.ஜே.பி-யும் இந்தப்
பிரச்னையில்
முழுமையாக
அரசை ஆதரிக்கிறது.
துணைத் தூதர் தேவயானி
கோப்ரகடேக்கு
நேர்ந்த அவமானம் எல்லோரையும்
எரிச்சல்பட
வைத்துள்ளது
உண்மை. இந்தியாவில்
இருந்து அழைத்துவரப்பட்ட
வேலைக்காரப்
பெண்ணுக்கு
உரிய ஊதியம்
வழங்காமல்
அதிகம் வேலை வாங்கியதாக
அந்தப் பெண் கொடுத்த
புகாரின்
அடிப்படையிலும்,
அந்தப் பெண்ணுக்கு
விசா பெறுவதற்காகப்
பொய் ஆவணங்கள்
சமர்ப்பித்ததற்காகவும்
தேவயானி பொது இடத்தில்
வைத்துக்
கைதுசெய்யப்பட்டது,
விலங்கிட்டு
அழைத்து வரப்பட்டது,
ஆடைகளைக்
களைந்து சோதனையிடப்பட்டது
ஆகியன அனைவருக்கும்
ஆத்திரத்தை
ஏற்படுத்தியுள்ளன.
'தூதரக உறவுகளுக்கான
வியன்னா உடன்பாடு
(1961)’ தூதரக அதிகாரிகளுக்கு
சட்ட நடவடிக்கைகளில்
இருந்து சில காப்புரிமைகளை
(diplomatic immunity) வழங்கியுள்ளது.
எனினும், இந்தக்
காப்புரிமைக்கு
எல்லைகள்
உண்டு. காப்புரிமை உள்ளது
என்பதற்காக
ஒரு தூதரக
அதிகாரி உள்நாட்டுச்
சட்டங்களை
மீற இயலாது.
மேலும், தூதரகப்
பணிகள் தொடர்பான சட்ட மீறல்களுக்கு
மட்டுமே இந்தக் காப்புரிமை
உண்டு. இவற்றைச் சொல்லித்தான்
இன்று அமெரிக்கா
தன் செயலை
நியாயப்படுத்துகிறது.
ஆனால், மேற்குறிப்பிட்ட
நிபந்தனைகளை
வலுவான நாடுகள் அப்படியே ஏற்றுக்கொள்வது
இல்லை. தூதரக
அதிகாரிகளுக்கு
முழுமையான
காப்புரிமைகள்
உள்ளதாகவே
அவை எடுத்துக்கொள்கின்றன.
கடுங்குற்றச்சாட்டுகளில்கூட அவை தம் ஊழியர்களின்
காப்புரிமையை
விட்டுக்கொடுப்பது
இல்லை.
2004
டிசம்பரில்
ருமேனிய நாட்டின் புசாரெஸ்ட்
நகரில் அமெரிக்கத்
தூதரகத்தில்
பணிபுரிந்த
வான் கோதம்
என்கிற கடற்படை ஊழியர் குடித்துவிட்டு
காரோட்டிச்
சென்றதோடு,
சாலை விதிகளை
மீறிச் சென்று மோதியதில்
அந்த நாட்டு
இசைக் கலைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
மூச்சுப் பரிசோதனையில்
சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட
பின்னரும்
ரத்தப் பரிசோதனைக்கு
உடன்படாததோடு,
ஜெர்மனிக்கு
ஓடவும் செய்தார் வான் கோதம்.
அமெரிக்கா, தூதரகக்
காப்புரிமையை
விட்டுக்கொடுக்க
மறுத்தது.
அவரை ருமேனியாவுக்கு
அனுப்பாமல்,
தானே ராணுவ
விசாரணை ஒன்றை நடத்தி
தண்டனை அளித்தது.
ஆனால், சிறிய நாடுகள்
இப்படியான
நிகழ்வுகளில்
தம் அதிகாரிகளின்
காப்புரிமையை
விட்டுக்கொடுத்தன.
1997
ஜனவரியில்
ஒரு சம்பவம். அமெரிக்காவுக்கான ஜார்ஜிய
நாட்டுத்
துணைத் தூதர் குயோர்கொ
மகாரட்சே
குடித்துவிட்டு
காரோட்டி
மோதியதில்
நால்வர் காயமடைந்து
ஒரு பெண்
கொல்லப்பட்டார்.
ஜார்ஜியா தன் துணைத் தூதரின் காப்புரிமையை
விட்டுக்கொடுத்தது.
அமெரிக்க அரசு தன் நாட்டுச்
சட்டப்படி
அவரை விசாரித்துத்
தண்டனை வழங்கியது.
தான் உலக மேலாண்மை
வகிப்பதாகவே
அமெரிக்கா
இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தூதர்கள்
ஏதோ தங்கள்
காலனிகளைக்
கண்காணிக்க
வந்த அதிகாரிகள்
போலவே அந்தந்த நாடுகளில்
நடந்துகொள்கின்றனர்.
பிப்ரவரி 2007-ல் அப்போதைய
அயலுறவு அமைச்சரான
பிரணாப் முகர்ஜி ஈரானுக்குச்
சென்றார்.
அமெரிக்காவுடன் இந்தியா
123 ஒப்பந்தம்
செய்திருந்த
நேரம் அது. அப்போதைய
அமெரிக்கத்
தூதர் டேவிட் மல்ஃபோர்ட்
பத்திரிகையாளர்
சந்திப்பு
ஒன்றை நடத்தி, 'ஈரானுடன் பேச்சுவார்த்தை
நடத்தும்போது,
புதிய சட்டங்களின்பால்
இந்திய அரசு கவனம்
கொள்ள வேண்டும்’ என்றார். அந்தச் சந்திப்பின்போது
அவர் 'ரொம்பத்
திமிராக’ நடந்து கொண்டார் என நியூ
இந்தியன்
எக்ஸ்பிரஸ்
எழுதியது.
சில மாதங்களுக்குப்
பின் இங்கு
வந்த அமெரிக்க
ஆற்றல் துறைச் செயலர் ஈரானுடனான
உறவு குறித்து
இந்தியாவை
எச்சரித்தார்.
'எல்லாவிதமான
அயலுறவு மரபுகளையும்
அவர் மீறியதோடு,
ஏதோ இந்தியாவுடன்
சண்டைக்கு
வந்ததுபோல’
அவர் பேசியதாக
நாளிதழ்கள்
எழுதின.
இன்று காலம் வேகமாக
மாறி வருகிறது. அமெரிக்காவின் உலக மேலாண்மை இன்று பலவீனமாகி
உள்ளது. இந்தியா போன்ற நாடுகளின்
பேர ஆற்றல்
அதிகரித்து
வருகிறது.
ஐ.நா. அவையின் பாதுகாப்பு
கவுன்சிலில்
நிரந்தர உறுப்பினராகிற
கனவுடன் அது செயல்பட்டு
வருகிறது.
தனது பாரம்பரியமான
அணி சேராக்
கொள்கையில்
இருந்து விலகி மேட்டிமைக்
குழுக்களில்
(elite clubs) இடம்பெயர்வதில்
வெற்றி அடைந்துள்ளது.
இந்த நிலையின் ஒரு வெளிப்பாடாகவே
இன்றைய மோதலை நாம்
காண வேண்டியுள்ளது. ஆனால்,
இந்த மோதல்
எந்தப் பெரிய உறவு
விரிசலுக்கும்
இட்டுச் செல்லப்போவது
இல்லை. ஏனென்றால் அது நல்லதல்ல என இருவருக்குமே
தெரியும்.
இந்தியாவின் கண்டனத்தைக்
கவனத்தில்
கொண்டு கைது நிகழ்வை
ஆராய்வதாக
அமெரிக்கத்
தரப்பில்
இறங்கிவந்துள்ளனர்.
ஒன்றைச் சொல்லியாக
வேண்டும். இந்தப் பிரச்னையில்
இந்தியா, அமெரிக்கா
என்ற இரு
தரப்பையும்
தாண்டி மூன்றாவது
தரப்பும்
உள்ளது. அது, அந்த வேலைக்காரப்
பெண். தேவயானி மட்டுமல்ல;
அவரும் ஒரு இந்தியக்
குடிமகள்தான்.
தூதரக அதிகாரிகளுக்கு
ஏகப்பட்ட
சலுகைகள்,
ஊதியம் மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன.
ஒரு ஏழை
வேலைக்காரப்
பெண்ணை, குறைந்தபட்ச
ஊதியமும்
கொடுக்காமல்
கொடுமையாக
வேலை வாங்கியது
உண்மையானால்,
அது அவ்வளவு
எளிதாக விட்டுவிடக்
கூடியதல்ல.
அமெரிக்கா
மன்னிப்புக்
கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல...
தேவயானி உரிய முறையில்
சட்டத்தின்
முன் நிறுத்தப்படவும்
வேண்டும்! |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |