|
||||
|
நமது தவறுகள் குறித்த ஆகக் குறைந்த குற்றவுணர்வாவது நம்மவர்களிடம் உண்டா? - யதீந்திராஇன்று தமிழர்கள் நீதி கேட்டு, உலகெங்கும் அலைகின்றனர். ஆனால் விடுதலைப்புலிகள் தமிழரின் அரசியலை ஏக போகமாக தீர்மானித்துக் கொண்டிருந்த கடந்த மூன்று தசாப்தகால அரசியல் இயங்கு நிலையில், மனித உரிமைகள் குறித்து அவர்கள் கரிசனை கொண்டிருந்ததற்கான ஏதாவது சான்றுகள் உள்ளனவா? இதனைக்கருத்தில் கொண்டுதானோ, கூட்டமைப்பு, இறுதி யுத்தத்தில் இருதரப்பாலும் மீறப்பட்டதான குற்றங்கள் என்று குறிப்பிட்டு வருகின்றது போலும். அன்று எந்த மாகாணசபையை ஏற்றுக்கொண்டதற்காக, பிரபாகரன் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பை துரோகி என்றுரைத்தாரோ, அந்த மாகாணசபைதான் தமிழரின் இன்றைய அரசியல் தளமாக இருக்கின்றது.
ஒரு முறை முன்னாள்
வடக்கு கிழக்கு மாகாணசபையின்
முதலமைச்சர்
வரதராஜப்பெருமாளுடன்
பேசிக் கொண்டிருக்கும்
போது, அவர்
என்னிடம்
ஒரு கேள்வியை
கேட்டார். நாங்கள் எல்லாவற்றிலும்
சரி என்று
நான் வாதிடவில்லை.
ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் அரசியல்
அணுகுமுறைகள்
குறித்தும்,
அதன் வழிமுறைகள்
குறித்தும்
நீங்கள் விமர்சிக்கலாம்.
ஆனால் நாங்கள்
மாகாணசபையை
பொறுப்பேற்றதுடன்,
அதனைக் கொண்டு நடாத்த முற்பட்டமையும்
எந்தவகையில்
தவறாகும்?
சொல்லுங்கள் என்றார்.
இதற்கு எவரால்
பதில் சொல்ல முடியும்?
புலிகள் தங்களின்
தவறான அரசியல் வழிமுறைக்கு
சவால்விடுக்கக்
கூடியவர்களை
துரோகியாக்கியபோது,
நாங்களும்
சேர்ந்து
அவர்களை துரோகி என்றுரைத்திருக்கிறோம்
என்னும் ஆகக் குறைந்த
குற்றவுணர்வாவது,
நமக்கு அவசியம். எங்களது புலிமைய அரசியல் உரையாடல்களை
திரும்பிப்
பார்ப்போமானால்,
ஒரு விடயம்
துருத்திக்கொண்டு
தெரியும். தமிழ்
கருத்துருவாக்கப்பிரிவினர்
(இப்பத்தியாளர்
உள்ளடங்கலாக)
அனைவரும்
பிரபாகரனால் இயக்கப்பட்ட, ‘தவறுகளின்
ஆடுகளம்’ என்னும் திரைப்படத்திற்கு,
புகழுரை எழுதிக் கொண்டிருந்தவர்கள்
தான். தமிழர் அரசியலை
சற்று திரும்பிப்
பார்த்து,
நிதானமாக
ஒருவர் சிந்திப்பாராயின்,
தமிழர் அரசியல் என்றால் என்ன என்னும்
கேள்வியே
அவருக்குள்
எழும்.
மே 1986ஆம்
ஆண்டு, டெலோ இயக்க
உறுப்பினர்கள்,
யாழ்ப்பாணம்
திருநெல்வேலி
வீதியில்
வைத்து கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஏற்கனவே சில மனித
உரிமை ஆர்வலர்களால்
பதிவு செய்யப்பட்டுமிருக்கிறது.
ஏனைய இயக்கங்கள்
அனைவரும்
இயக்க மோதல்களின்
போது, காந்தியவாதிகளாக
நடந்து கொண்டனர் என்று இப்பத்தி
வாதிடவில்லை.
தமிழ் மக்களுக்கு
விடுதலை பெற்றுத் தருவதாக புறப்பட்ட
எந்தவொரு
இயக்கமும்,
கொலைகளுக்கு
அஞ்சியொதுங்கிய
அமைப்புக்கள்
அல்ல. மேலும்
எந்தவொரு
இயக்கமும்,
மனித உரிமை
விடயங்களை
தங்களது அரசியல் நிகழ்ச்சி
நிரலுக்குள்
உள்வாங்கியிருக்கவுமில்லை.
அனைவருமே கொலைகளுக்கு
நியாயம் கற்பிக்க முற்பட்டவர்கள்
தான். மனித உரிமை என்பது எப்போதும்
ஆட்சியாளர்களுக்கு
உரிய ஒன்றாகவே,
இத்தகைய இயக்கங்கள்
புரிந்து
கொண்டன. அந்த வகையில்
எவருமே தவறுகளுக்கு
அப்பாற்பட்டவர்களாக
இருக்க முடியாது.
ஆனால் புலிகள் அமைப்பு போன்று எந்தவொரு இயக்கமும்
அழித்தொழிக்கும்
நோக்கில்
திட்டமிட்டு
சகோதர மோதல்களில்
ஈடுபட்டிருக்கவில்லை. இன்று கடந்த காலத்தை
திரும்பிப்
பார்த்தால்,
தமிழர் அரசியலில்
மிகவும் முன்னேறிய
ஓர் இயக்கமாக
ஈழ மக்கள்
புரட்சிகர
விடுதலை முன்னணியையே
குறிப்பிட
முடியும். அவர்கள் தவறுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள்
என்பதல்ல
இதன்பொருள்.
ஆனால் ஒரு முக்கியமான
வரலாற்றுத்
திருப்புமுனையின்
போது பிராந்திய
சக்தியான
இந்தியாவின்
முக்கியத்துவத்தை
தெளிவாகப்
புரிந்துகொண்டு,
அதன் அனுசரணையின்
கீழான மாகாணசபையை
அவர்கள் பொறுப்பேற்றிருக்கின்றனர்.
1990
களுக்கு பின்னர் புலிகள் அல்லாத முன்னணி அமைப்புக்கள்
அனைத்துமே
மேற்படி யதார்த்தத்தை
புரிந்துகொண்டன. ஆனால்
அன்று அதனை ஒரு
துரோகமாவே
அனைவரும்
புரிந்துகொண்டனர்.
ஆனால் வரலாற்று
ஓட்டத்தில்
ஈ.பி.ஆர்.எல்.எப்
அன்று எடுத்திருந்த
முடிவு சரியென்றே
இன்று நிரூபணமாகியிருக்கிறது. அன்றைய சூழலில் இந்தியா குறித்தும்,
அதன் தவிர்க்கவியலாத
வகிபாகம்
(Inevitable role) குறித்தும்
பத்மநாபாவிடம்
தெளிவிருந்திருக்கிறது. இன்று
அதனை வரலாறு
துலாம்பரமாக்கியிருக்கின்றது.
இந்தியா என்பது
கருங்கற்பாறை.
அதில் தலையை முட்டினால்
எங்களது தலைதான் உடையும். இதுதான் அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ்விடம்
இருந்த அரசியல் புரிதல். அது சரியானதொரு
அரசியல் தான் என்பதை
தற்போது எல்லோராலும்
ஏற்றுக்கொள்ளமுடியும். எனவே இன்று அரசியல்
குறித்து
எழுதமுற்படுவோர்
நாம் தவறுகளின்
ஆடுகளமொன்றில்
அங்கத்தவர்களாகவோ
அல்லது அந்த களத்தின்
பார்வையாளர்களாகவோ
இருந்திருக்கின்றோம்
என்பதை மறக்கலாகாது. அதனை நாம் மறக்காமல்
இருக்கும்போதுதான்
மீண்டுமொரு
‘தவறுகளின்
ஆடுகளம்’ உருப்பெறுவதை
முன்னுணர்ந்து
எச்சரிக்கமுடியும்.
இன்றைய சூழலில்
அரசியலை பக்திவாதமாகச்
சுருக்க முற்படுவோருக்கு
எதிராக பேசுவதும்
எழுதுவதுமே
முதன்மையான
பணியாக இருக்கமுடியும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |