|
||||
|
இரா. சம்பந்தன்
ஐயாவின் முரண்பாடான
அறிக்கைகள்
பிறக்கும் புதுவருடத்துடனாவது
தமிழ் மக்களுக்கு
ஒரு விமோசனம்
கிடைக்க்குமென
நம்பியிருந்தால்
அதிலும் மண்ணை அள்ளிப்
போடுவதில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தீவிரமாகவே
உள்ளது. வெளிநாடுகளுக்குச்
செல்வதில்
அர்த்தமில்லை,
எம்முடன்
பேச்சுவார்த்தை
நடத்தி தீர்வினைக்
காண முன்வாருங்கள்
என ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில்
வைத்து விடுத்த அழைப்பினை
ஏற்றுக் கொள்வதாகத்
தெரிவித்த
தமிழ்க் கூட்டமைப்பின்
தலைவர் இரா. சம்பந்தன் மூன்று
நாட்கள் கடக்க முன்னதாகவே
பாராளுமன்றத்
தெரிவுக்
குழுவில்
பங்கு பற்ற முடியாதெனத்
திட்டவட்டமாகத்
தெரிவித்திருக்கிறார்.
சம்பந்தன் ஐயாவின் இந்த முன்னுக்குப்
பின் முரண்பாட்டு
அறிவிப்புகள்
தமிழ் மக்களிடையே
பெரும் விசனத்தைத்
தோற்றுவித்துள்ளன. ஜனாதி
பதியின் அறைகூவலினால்
மகிழ்ச்சியால்
உந்தப்பட்ட
தமிழ்ச் சமூகம் அதனைத் தொடர்ந்து
வந்த சம்பந்தனின்
சாதகமான பதிலினால்
நெகிழ்ந்
திருந்தது.
இரு தலைவர்களும்,
இணைந்து நல்லதொரு தீர்வினைக்
கண்டு தமிழ் மக்களது
நீண்ட காலப் பிரச்சினைக்குத்
தீர்த்துவிடுவார்கள்
எனும் நம்பிக்கையிலிருக்கையில்
பாராளுமன்றத்தில்
ஜனாதிபதி
விடுத்த வேண் டுகோளுக்கு
வவுனியாவில்
வைத்து எதிர்மறையான
கருத்தினை
சம்பந்தன்
தெரிவித்திருக்கிறார்.
கடந்த காலங்களைப்
போலவே இம்முறையும்
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு
இனப்பிரச்சினைக்குத்
தீர்வு காணும் விடயத்தில்
இழுத்தடிக்கும்
செயற்பாடுகளில்
இறங்கியுள்ளது. அமைச்சர்
டக்ளஸ் தேவனாந்தா
அவர்கள் ஒருதடவை கூறியது போன்று இனப்பிரச்சினைக்குத்
தீர்வினைக்
கண்டுவிட்டால்
இந்த தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
அரசியல்வாதிகளுக்கு
இடமில்லாது
போய்விடுமோ
எனும் பயம் உள்மனதில்
உள்ளது. அதுதான் உண்மையும்.
அதனால்தான் கைக்கெட்டும்
தூரத்திற்கு
வரும் தீர்வு முயற்சிகளையும்
இவர்கள் பொய்யான காரணங்களைக்
கூறி தட்டிக்
கழித்து வருகின்றனர்.
இதுவரை காலமும்
அரசாங்கத்தைக்
குறை கூறி
வந்த தமிழ்க்
கூட் டமைப்பு
இன்று அதன் தலைவரான
ஜனாதிபதியே
பேச்சுக்கு
வருமாறு அழைப்பு விடுத்துள்ள
போதிலும்
அதனைத் தட்டிக் கழிக்க முனைவது அவர்களுக்கு
பிரச்சினைக்குத்
தீர்வு காண்பதில்
அக்கறையில்லை
என்பதைத்
தெளிவாக எடுத்துக்
காட்டுகிறது.
இத்தகையதொரு
சந்தர்ப்பம்
வராதா என ஏங்கி
அதனைச் சரிவரப்பயன்படுத்தக்
காத்திருக்க
வேண்டி யவர்கள் இன்று அது
கைகூடிய போதும் தட்டிக் கழிக்க காரணங்களைத்
தேடுவதில்
குறியாகவுள்ளமை
இவர்களது
சுயரூபத்தை
வெளிக்காட்டி
நிற்கின்றது.
பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கைகளை
முன்வைத்தமையைக்
கூட ஓரளவு
ஏற்றுக் கொள்ளலாம். ஆனால்
அடுத்தடுத்த
தினங்களிலேயே
அக்கோரிக்கைகளை
விஞ்சும்
விதத்தில்
பேச்சிற்கு
ஆணிவேராக
அமையவுள்ள
பாராளுமன்றத்
தெரிவுக்குழுவை
விமர்சிப்பதானது
இவர்களுக்கு
தமிழ் மக்களின் பிரச்சினையைத்
தீர்ப்பதில்
துளியளவும்
அக்கறையில்லை
என்பதை எடுத்துக்
காட்டுகிறது.
நாட்டின் தலைவரது
அழைப்பை ஏற்று பேசச்
சென்று அப்பேச்சில்
திருப்தி
இல்லாவிடின்
விமர்சனங்களைச்
செய்தால்
ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் இவர்களோ
பேச முன்னரேயே
விமர்சனம்
செய்வது சந்தேகத்தை
ஏற்ப டுத்தியுள்ளது.
கடந்த காலங்களில்
அரசாங்கத்துடன்
இவர்கள் நடத்திய பேச்சு வார்த்தைகளின்
போது இவர்களால்
நடத்தப்பட்ட
கபட நாடகங்கள்
பற்றி மக்களுக்கு
மட்டுமல்ல
அரசாங்க தரப்பிற்கும்
நன்கு தெரியும். உள்ளே நன்றாகப்
பேசிவிட்டு
வெளியே வந்து அங்கு
நிற்கும்
தமிழ் ஊடகங்கள் சிலவற்றின்
நிருபர்களுக்கு
அரசாங்கத்தைவிமர்சித்து
கருத்துக்களைக்
கூறுவர்.
இது பேச்சு
நடந்த ஏழு சுற்றுக்களின்
போதும் நடந்த ஒன்று.
அரசாங்கம் இதனை நன்கு அறிந்திருந்தும்
எப்படியாவது
பேச்சுவார்த்
தையை நடத்திமுடித்துத்
தீர்வினைக்
காண வேண்டும்
என்பதில்
குறியாக இருந்தது.
ஆனால் இடைநடுவில்
பேச்சைக்
குழப்பி சர்வதேசம்
செல்கிறோம்
என்று கூறி அமெரிக்கா,
கனடா, தென்னாபிரிக்கா,
இந்தியா எனச் சுற்றுலா
சென்று வந்தனர். இறுதியில் எதுவுமே
கைகூடா நிலையிலும்,
அனை வராலும்
கைவிடப்பட்ட
நிலையிலும்
விழுந்தவன்
மீசையில்
மண்பட வில்லையாம்
என்பதாக இங்கேயே திரும்பிவந்து
நின்றனர்.
தமிழ் மக்களுக்கு
நல்லதையே
செய்துவரும்
அரசாங்கத்தை
விமர்சித்து
தமிழ் மக்களின் மனங்களை மாற்றி தேர்தல்களில்
வென்று வருகின்றனர்.
இதுவும் சர்வதேசம்
போலவே இன்னும் நீண்ட காலத்திற்குச்
செல்லாது.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இனியும் தனது கபடத்த
னத்தினால்
தமிழ் மக்களை ஏமாற்றாது
பிரச்சினைக்குத்
தீர்வு காண முன்வர
வேண்டும். வடக்கில்
இன்று அரசாங்கத்தின்
நிதியில்
தமிழ் மக்க ளுக்கான
அபிவிருத்தியைப்
புறக்கணிக்கும்
தமிழ்க் கூட்டமைப்பு
தமக்கான தனிப்பட்ட
சகல வரப்பிரசாதங்களையும்
ஒன்றுவிடாது
அரசாங் கத்திடம் கேட்டு அனுபவித்து
வருகின்றது.
இவ்விடயம் மக்களுக்கு
இன்று நன்கு தெரியும்.
தமிழ்க் கூட்டமைப்பின்
பாராளுமன்ற
உறுப்பினர்களது
நிலை இதனை
விடவும் பிரகாசமானதாக
உள்ளது.
வன்னியில் கஷ்டப்பட்ட
பிள்ளைகளுக்கு
அரசாங்கம்
உதவிபுரிந்தால்
எள்ளிநகையாடும்
சில தமிழ்க்
கூட்டமைப்பின்
பாராளுமன்ற
உறுப்பி னர்கள் தமது பிள்ளைகளை
அரசாங்கத்தின்
புலமைப்பரிசிலில்
வெளிநா டுகளில் கல்வி கற்க
அனுப்பி வைத்துள்ளனர்.
போரினால்
பாதிக்கப்பட்ட
வன்னியிலுள்ள
ஏழை மக்களின்
வீடுகளை அரசாங்கம்
புரனமைப்பதை
விமர்சிக்கும்
இத்தகைய சிலர் இந்தியாவிலும்,
ஐரோப்பிய
நாடுகளிலும்
சொந்தமாகச்
சொகுசு வீடுகளை அரசாங்கத்தின்
பதவியினால்
கிடைக்கும்
சம்பளப்பணத்தில்
வாங்கி வைத்துள்ளனர்.
இனிமேலும் தமிழ் மக்களை
உங்களது அரசியல் இருப்பிற்காகவும்,
சொகுசு வாழ்விற்காகவும்
பகடைக் காய்களாக்க
வேண்டாம். பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக்
கண்டு மக்களை நிம்மதியாக
வாழவிடுங்கள்.
இதுவே மக்களது
கோரிக்கையாக
உள்ளது. இதற்காகவே மக்கள்
உங்களுக்கு
நம்பி வாக்களித்தார்கள்.
(editor.tknvm@lakehouse.lk) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |