|
||||
|
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு
திறந்த மடல்..!
இலங்கையில்
மாத்திரமல்லாது
சர்வதேச சமூகத்தின்
பாரிய எதிர்பார்ப்புக்கு
மத்தியில்
வடக்கு மாகாண சபைத்
தேர்தல் இடம்பெற்றது. வடக்கில் ஒட்டுமொத்த
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு
என்னவாக இருக்கிறது
என்பதை வெளிப்படுத்த
தமிழர்களுக்கு
சரியான சந்தர்ப்பமும்
அமைந்தது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு
வாக்களித்ததன்
மூலம் அந்த சந்தர்ப்பத்தை
மக்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டதுடன்
தமது எண்ணப்பாட்டை
வெளியுலகிற்கு
எடுத்துக்காட்டினர்.
ஆனால் கூட்டமைப்புக்கு
வாக்களித்ததன்
மூலம் தமிழ் மக்கள்
எதனை எதிர்பார்த்தார்களோ
அதற்கு மாறான செயற்பாடுகளே
தற்போது இடம்பெறத்
தொடங்கியிருக்கின்றன.
வடக்கு மாகாண சபையின் கன்னியமர்வுக்கு
முன்பாகவே
பல்வேறு சிக்கல்கள்
எழுந்துள்ளன.
தமிழ்த் தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம்
என்றெல்லாம்
வாக்கு கேட்டவர்கள்
பதவி மோகத்துக்காக
பிரிந்து
நிற்கின்றமை
வாக்களித்த
மக்களிடையே
பெருங்கவலையை
உண்டுபண்ணியுள்ளது.
தேர்தலுக்கு முன்பு
வடக்கின்
முதலமைச்சர்
வேட்பாளர்
தொடர்பில்
இழுபறி இருந்தது.
ஒருவாறாக சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்ட
போதிலும்
உட்கட்சிகளிடையே
முரண்பாடு
காணப்பட்டது. எது
எவ்வாறாயினும்
தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கூட்டமைப்பு
அமோக வெற்றிபெற்றது. அதற்குப் பின்னர்
இடம்பெற்ற
சில சம்பவங்கள்,
கூட்டமைப்பினரா
இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்
என்ற சந்தேகத்தை
தோற்றுவித்துள்ளது.
கூட்டமைப்பில்
அங்கம் வகிக்கும்
தமிழரசுக்
கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ்,
ரெலோ, புளொட்
ஆகிய கட்சிகளிடையே
முரண்பாடான
கருத்துக்கள்
தோன்றியுள்ளமையும்
ஒவ்வொரு கட்சியும்
கூட்டமைப்பின்
தீர்மானங்களை
ஏற்காமல்
தன்னிச்சையாக
இயங்கும்
நிலைமையையும்
இங்கு சுட்டிக்காட்ட
வேண்டும். முதலமைச்சராக
தெரிவு செய்யப்பட்ட
சி.வி.விக்னேஸ்வரன்
ஜனாதிபதி
முன்னிலையில்
பதவிப்பிரமாணம்
செய்துகொண்டமையை
அங்கத்துவ
கட்சிகள்
சில ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று முதலமைச்சர்
பதவியேற்புக்கு
முன்னர் கூட்டமைப்பின்
தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி
மகிந்தவை
நேரடியாக
சந்தித்துப்
பேசியிருந்தமையையும்
சில கட்சிகள்
விரும்பியிருக்கவில்லை. இந்நிலையில்
வடக்கு மாகாண சபை
அமைச்சர்களுக்கும்
உறுப்பினர்களுக்குமான
பதவிப்பிரமாண
நிகழ்வு கடந்த 11 ஆம்
திகதி வெள்ளிக்கிழமை
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்
நடைபெற்றது.
வரலாற்று முக்கியத்துவம்
மிக்க இந்த நிகழ்வை
வட மாகாண
சபைக்குத்
தெரிவான 9 உறுப்பினர்கள்
நிராகரித்திருந்தனர். இவ்வாறு
நடக்கும்
என்று தமிழ் மக்கள்
சற்றேனும்
நினைத்திருக்கவில்லை. கூட்டமைப்பினர்
ஒன்றுபட்டு
தமிழ் மக்களின் அபிலாஷைகளை
தீர்த்து
வைப்பார்கள்
என்று மக்கள் எதிர்பார்த்திருந்த
நிலையில்
அந்த நம்பிக்கைக்கு
மாறான நிகழ்வே இடம்பெற்றது. அமைச்சு
தெரிவுகள்
தமிழரசுக்
கட்சியின்
தனிப்பட்ட
முடிவு. அது தமிழ்த்
தேசிய கூட்டமைப்பின்
முடிவல்ல
என்றும் அதனை ஏற்றுக்கொள்ளாததால்
தாம் நிகழ்வில்
பங்கேற்கவில்லை
என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.
இன் செயலாளர்
நாயகமும்
பாராளுமன்ற
உறுப்பினருமான
சுரேஷ் பிரேமச்சந்திரன்
தெரிவித்திருந்தார்.
இதேநேரம்
பதவியேற்பு
நிகழ்வை நிரகரித்திருந்த
உறுப்பினர்கள்,
14 ஆம் திகதி
திங்கட்கிழமை
முள்ளிவாய்க்காலில்
பதவிப்பிரமாணம்
செய்துகொள்ளவுள்ளதாக
அறிவித்திருந்தனர்.
ஆயினும் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய
இராயப்பு
ஜோசப்பின்
வேண்டுகோளின்
பிரகாரம்,
கூட்டமைப்பின்
ஒற்றுமை கட்டிக்காக்கப்பட
வேண்டியதன்
அவசியத்தை
வலியுறுத்தியதற்கமைய
பதவிப்பிரமாண
நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது. எனினும்
அவரது வேண்டுகோளையும்
மீறி அதேநாள்
காலையில்
எம்.கே.சிவாஜிலிங்கம்
முள்ளிவாய்க்காலில்
பதவிப்பிரமாணம்
செய்துகொண்டார். அதேபோன்று புளொட்
அமைப்பின்
தர்மலிங்கம்
சித்தார்த்தன்
மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோரும்
யாழில் சத்தியப்பிரமாணம்
செய்துகொண்டனர். பல்வேறு
கட்சிகள்
இணைந்த கூட்டணியொன்றில்
சிறுசிறு
பிணக்குகள்
ஏற்பட்டு
மறைவது சகஜம்தான். ஆயினும் கூட்டமைப்பை
பொறுத்தவரையில்
தமக்குள்
ஏற்பட்டுள்ள
சிக்கல்களுக்கு
பேச்சுவார்த்தையின்
மூலம் தீர்வு காணாமல் தமது செயற்பாடுகளினூடாக
பிரிவின்
உச்சகட்டத்தை
வெளிக்காட்டுவதை
தமிழ் மக்கள் கவலையுடன்
நோக்குகிறார்கள். கூட்டமைப்பில்
அங்கம் வகிக்கும்
ஏனைய கட்சிகளின்
நிலைப்பாட்டை
அதன் தலைவர்
இரா. சம்பந்தன்
கவனத்திற்கொண்டு
செயற்பட வேண்டியது
அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்ற
அதேவேளை, வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த நிகழ்வுகளை
அங்கத்துவக்
கட்சிகள்
புறக்கணித்தமை
ஏற்றுக்கொள்ளக்
கூடியதாக
இல்லை என்பதையும்
சுட்டிக்காட்ட
வேண்டும்.
பதவி மோகம் கூட்டப்பினரின்
நோக்கத்தை
கெடுத்துவிட்டதோ
என்றும் எண்ணத் தோன்றுகிறது. வடமாகாண
சபைக்குத்
தெரிவான உறுப்பினர்களுக்கு
பாரிய வரலாற்றுக்
கடமைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட மாகாணமொன்றுக்கு
சேவையாற்றுவதற்காக
முதன்முதல்
தெரிவானதால்
பொறுப்புக்கள்
நிறைந்திருக்கின்றன.
இந்நிலையில் வடமாகாண
சபையின் கன்னியமர்வு
ஆரம்பமாவதற்கு
முன்பாகவே
பிளவுகளும்
சாடல்களும்
ஆரம்பித்துவிட்டன. அப்படியாயின்
காத்திரமான
நீண்டகாலப்
பயணத்தினூடாக
தமிழ் மக்கள் அடைய விரும்பும்
அபிலாஷைகள்
தீர்க்கப்படுமா
என்ற சந்தேகம்
எழுவது நியாயமானது. கூட்டமைப்பின்
வெற்றியின்
பின்னர் அவர்களுடைய
அடுத்த கட்ட நடவடிக்கையை
சர்வதேசம்
எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறது. இந்நிலையில்
வடக்கு மக்களின் ஏக பிரதிநிதிகளாக
தெரிவு செய்யப்பட்ட
கூட்டமைப்பு
உறுப்பினர்கள்
தங்களுக்குள்
ஏற்பட்டிருக்கும்
பிணக்குகளை
குறுகிய காலத்தில்
பேசித் தீர்மானிக்க
முன்வர வேண்டியது
காலத்தின்
தேவையாகும். கூட்டமைப்பினர்
கட்சி ரீதியாக பிளவுபடும்
பட்சத்தில்
நிச்சயமாக
அது தமிழ்
மக்களையே
பாதிக்கும். அதேபோன்று தென்னிலங்கையிலிருந்து
கூச்சலிடும்
இனவாத விஷமிகளுக்கும்
இந்த விடயம்
சாதகமாகிவிடும். அதுமட்டுமல்ல கூட்டமைப்பு
ஒரு மாபெரும்
சக்தியாக
உருவெடுப்பதை
விரும்பாத
சக்திகள்
இந்த நிலைப்பாட்டை
பயன்படுத்தி
அக்கட்சியை
மேலும் பலவீனமடையச்
செய்ய வாய்ப்பாக
பயன்படுத்திக்கொள்ளவும்
இடமுண்டு. தமிழ்ச்
சமூகத்தின்
பின்னடைவுக்கு
தமிழ்த் தலைமைகளிடையே
நீண்டகாலமாக
காணப்படும்
ஒற்றுமையின்மையும்
ஒரு காரணமாகும். ஆக, இனிமேலும்
அப்படியொரு
இக்கட்டான
நிலைக்கு
மக்களை தள்ளிவிடாமல்
மக்கள் பிரதிநிதிகள்
என்ற வகையில்
கடமை உணர்ந்து
அனைவரும்
செயற்பட வேண்டியது
அவசியமாகும். இல்லையேல்
இன்னுமொரு
வரலாற்றுத்
தவறு இடம்பெற்று
எதிர்காலத்தில்
ஏக்கங்கள்
மாத்திரமே
மிஞ்சும்
நிலை உருவாகக்
கூடும். அவ்வாறானதொரு
நிலை ஏற்படும்
பட்சத்தில்
தற்போதைய
தமிழ்த் தலைமைகளின்
பெயர் கறை படிந்த
கறுப்புப்
புள்ளியாய்
மக்கள் மனதிலும் வரலாற்றிலும்
இடம்பெறும்
என்பதில்
எவ்வித ஐயமுமில்லை.
(இராமானுஜம்
நிர்ஷன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |