சி.ஐ.ஏ. புலன்
விசாரணையும் வதை முகாம்களும்
கைதியின்
கால் பகு தியை தலையை விடவும் மேலே உயர்த்தி மல்லாக்கப் படுக்கவைக்க வேண்டும்.
வேறு முறையில் சொல்வ தென்றால் சற்று சரிவாக தலைகீழாக படுக்கவைத்து
கட்டிவைக்க வேண்டும். இப்போது கைதியின் முகத்தை துணி யால் மூட வேண்டும்
அல்லது வாய்க் குள் நெருக்க வேண்டும். சில வேளை களில் பிளாஸ்டிக்
சுருள்களும் பயன்படு த்தப்படும். இப்போது கைதியின் முகத்தில் மற்றும் மூக்கு,
வாய் துவாரங்களில் தண்ணீரை ஊற்ற வேண்டும். இவ்வாறு நீர் ஊற்றப்ப ட்ட ஒருசில
விநாடிகளிலேயே கைதி திணற ஆரம்பிப்பார். அந்த நேரத்தில் தண் ணீர் நுரையீரலில்
நுழைய ஆரம்பிக்கும்.
இந்த சூழலில் கைதி தான் மூழ்கடிக்கப் படுவதாக உணர்வார். அவர் அதிர்ச்சிக்
கும் தடுமாற்றத்திற்கும் ஆளாவார். அவர் துடிதுடிப்பார். இதனால் கைதியின்
மூளையில் சேதம் ஏற்படவும், எலும்பு முறிவடையவும், உளவி யல் பாதிப்புக்கு
உள்ளாகவும் செய்யும்.
இந்த கொ^ரமான சித்திரவதை முறைக்கு அகராதிகளை புரட்டி தமிழ் பெயர்
தேடியபோதும் கிடை க்கவில்லை. ஆனால் இதற்கு ஆங் கிலத்தில் என்றால்
பெயரிருக்கி றது. வோட்டர்போடிங் (Waterboar ding) என்பதுதான் அந்த பெயர்.
இந்த வோட்டர்போடிங் முறையை பிரபலமாக்கிய பெருமை அமெரிக்க உளவுப் பிரிவான
சி.ஐ.ஏவுக்குத் தான் சேரும்.
புலன் விசாரணைகளில் சி.ஐ.ஏ. வோட்டர்போடிங் உட்பட பல சித்திரவ தைகளை
செய்வதாக கடந்த ஒரு தசாப்தத் திற்கு மேலாக அந்த சித்திரவதைகளுக்கு
முகம்கொடுத்தவர்கள் மற்றும் உரிமைக் குழுக்கள் வாய் கிழிய கத்தி வருகின்றனர்.
ஆனால் அது வெறும் குற்றச்சாட்டாகவே இரு ந்து வந்தது.
இந்த நிலையில்தான் கடந்த வாரம் அமெ ரிக்க பாராளுமன்றமாக இருக்கும் செனட் சபை
யின் புலனாய்வுக் குழு சி.ஐ.ஏ. நடத்திவந்த நரகத்தின் உண்மையை
அம்பலப்படுத்தியது.
இந்த அறிக்கையை பார்த்த அமெரிக்க ஜனா திபதி பராக் ஒபாமா கூட அதிர்ச்சி அடைந்
தார். "செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் நாம் சில கொ^ரமான
நடவடிக்கையில் ஈடுப ட்டோம்" என்று ஒப்புக்கொள்கிறார் ஒபாமா. இது கொ^ரமானது,
தவறானது, எதிர்வி ளைவை ஏற்படுத்தக் கூடியது என்று அடித் துக் கூறுகிறார்
ஒபாமா. இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தும் அறி க்கையை வெளியிட்ட செனட்
குழுவின் தலை வரான டயானா பென்டைன், "மக்கள் நம்பி இருந்ததை விடவும் இது கொ^ரமானது"
என்று விபரித்திருக்கிறார். சர்ச்சைக்குரிய இந்த விசாரணை முறைகள் கொடுமையா
னது மற்றும் திறனற்றது என்று விமர்சித்தி ருக்கும் செனட் சபை இவ்வாறான முறை
களை கையாண்டதற்கு சி.ஐ.ஏவை கடுமை யாக சாடியது.
2001 செப்டெம்பர் 11 தாக்குதல் அமெரிக் காவை தலைகால் புரியாத நிலைக்கு ஆளா
க்கியது. சர்வதேச சட்டம், ஒழுங்கு எல்லாவ ற்றையும் குப்பையில் போட்டுவிட்டு
செயற்பட ஆரம்பித்தது. இந்த தாக்குதலை நடத்திய அல்கொய்தா அமைப்பின் சந்தேக
நபர்களை பிடிக்க, தடுத்துவைக்க, அவர்கள் மீது புலன் விசாரணை நடத்த
அமெரிக்காவின் அப்போ தைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்ய+ புஷ் சி.ஐ.ஏ. என்று
சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய புலனாய்வு நிறுவனத்திற்கு உத்தரவி ட்டார்.
இந்த உத்தரவுக்கு அமையவே சி.ஐ.ஏ. தனது வேலையை காட்ட ஆரம்பித்தது. பிடி பட்ட
அல்கொய்தா சந்தேக நபர்களிடம் இரு ந்து உண்மையை கக்க வைப்பதற்கு சி.ஐ.ஏ.
ஆட்கள் இனி இல்லாத சித்திரவதைகளை செய் திருக்கிறார்கள். அமெரிக்காவின்
சர்ச்சைக்கு ரிய குவன்தனாமோ பே சிறை, ஈராக்கின் அபூ கிரைப் சிறை, ஆப்கானின்
பக்ரம் சிறை மற்றும் பல இரகசிய இடங்களிலும் சி.ஐ.ஏ. தனது கைவரிசையை
காட்டியிருக்கிறது.
கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிப தியாக பொறுப்பேற்ற பராக் ஒபாமா முதல்
வேலையாக சி.ஐ.ஏவின் இந்த சித்திரவதை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தினார். ஆனால்
இதற்கு இடைப்பட்ட எட்டு ஆண்டுகளாக சி. ஐ.ஏ. நடத்திவந்த நரக வேதனைகளை அமெ
ரிக்க செனட் சபை விசாரிக்க ஆரம்பித்தது. செனட் குழு ஐந்து ஆண்டுகள்
செய்த விசா ரணையில் 6000 பக்கம் அறிக்கை வந்துவிட் டது. எல்லாவற்றையும்
அம்பலப்படுத்தினால் சிக் கலாகிவிடும். எனவே அந்த அறிக்கையையும்
சுருக்கினார்கள். இவ்வாறு சுருக்கியதில் 525 பக்கங்கள் வந்தது. இதனை
வெளியிடப்போ வதாக செனட் புலனாய்வுக் குழு வெளியிட்ட அறிவிப்பு அமெரிக்க
அரசுக்கு புளியை கரை த்தது. அமெரிக்க அரசின் கோரிக்கைகளால் அறிக்கையை
வெளியிடுவதில் தாமதம் ஏற் பட்டது.
என்றாலும் கடந்த டிசம்பர் 10ம் திகதி செனட் அறிக்கை சொன்னபடி
வெளியிடப்பட்டது. இத ற்கு பயந்து அமெரிக்க அரசு உலகெங்கும் தனது தூதரகங்கள்
மற்றும் ஏனைய வளாக ங்களில் பாதுகாப்பை அதிகரித்திருந்தது. உண் மையில் அந்த
அறிக்கையைப் பார்த்தால் அமெரிக்க அரசு பயப்படும் அளவுக்கு சி.ஐ. ஏ. மோசமாக
செயற்பட்டிருப்பது புரியும்.
தடுத்து வைக்கப்படும் கைதிகள் மூட்டுக் காயங்களுடன் பல மணி நேரங்களுக்கு
நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இருட்டறை யில் தடுத்து
வைக்கப்பட்டிருக்கிறார்கள், சில நேரங்களில் நிற்கவைத்து மற்றும் சில நேரங்
களில் கைகளை சங்கிலியால் தலைக்கு மேல் உயர்த்திக் கட்டி 180 மணிநேரம் வரை
தூங்கவிடாமல் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுமட்டுமல்ல எந்த மருத்துவ தேவையும் இன்றி கைதிகளின் மல வாயிலூடாக நீர் ஏற்
றப்பட்டிருக்கிறது. மேசமான வன்முறையை பய ன்படுத்தி மலக்குடல் சோதனைகள்
மேற்கொ ள்ளப்பட்டிருக்கின்றன. இந்த சித்திரவதையால் ஒரு கைதி மூலநோயால்
பாதிக்கப்பட்டிருப் பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டி இருக் கிறது.
இதோடு முடியவில்லை. கைதிகளை போலி யாக படுகொலை செய்வதுபோல் பயமுறுத்து வது,
துப்பாக்கியில் ஒரு தோட்டாவை மாத் திரம் போட்டு அதனை கழற்றி பின்னர் தலை
யில் வைத்து சுட்டு பயமுறுத்துவது, கைதி யின் குடும்பத்தினரை சித்திரவதை
மற்றும் கற் பழிப்பதாக பயமுறுத்துவது போன்ற கீழ்த்தர மான வேலைகளையும்
சி.ஐ.ஏ. பார்த்திருக் கிறது. இவ்வாறான நரகத்தை நடத்துவதற்காக சி.ஐ.ஏ. முகாம்
ஒன்று 2002 ஏப்ரலில் நிறுவ ப்பட்டிருக்கிறது. இந்த முகாமை கோபெல்ட் தடுப்பு
முகாம் (DETENTION SITE COBALT) என்ற குறியீட்டுச் சொல்லா லேயே செனட்
அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கி றது. இடமும் சரியாக குறிப்பி
டப்படவில்லை. பரவலாக அது ஆப்கானில் இருப்பதாக சுட்டிக்
காட்டப்பட்டிருக்கிறது. இந்த முகாம் மோசமான நிலையில் இருந்ததாக
விபரிக்கப்பட்டிருக் கிறது.
இந்த கோபெல்ட் முகாமை சி.ஐ.ஏ. தலைமை புலன் விசா ரணையாளர் 'ஒரு நிலவறை' என்று
சித்தரித்திருக்கிறார். இங்கு வெளிப்புறமாக மாத்தி ரம் தென்படும் இருண்ட
ஜன்ன ல்கள் கொண்ட 20 அறைகள் உள்ளன. தடுத்து வைக்கப்படு பவர்கள் முழுமையான
இருளி ல்தான் இருக்க வேண்டும். சங் கிலியால் பிணைக்கப்பட்டு தனி மையில்
வைக்கப்படும் கைதி யின் சிறை அறையில் கேட்க முடியாத அளவுக்கு உரத்த இசை
போடப்படும். மனிதக் கழி வுகளை அகற்ற ஒரேஒரு வாளி மாத்திரம் வைக்கப்படும்.
அந்த இடம் கடும் குளிராக இருக்கும். அந்த இடம் ஒருசில கைதிக ளின்
மரணத்திற்கும் காரண மாக இருந்திருப்பதாக செனட் அறிக்கை விபரிக்கிறது.
கைதிகள் நிர்வாணமாக மற் றும் கைகள் சங்கிலியால் பிணைத்து தலை க்கு மேலால்
கட்டப்பட்டு நிறுத்தப்படுவார் கள். சுமார் ஐந்து சி.ஐ.ஏ. அதிகாரிகளால்
தடுத்துவைக்கப்பட்டிருப்பவர் கடுமையாக நட த்தப்படுவார். இதன்போது கைதியின்
தலையை மாத்திரம் மூடிவிட்டு நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்படுவார்,
உதைக்கப்படுவார்.
சி.ஐ.ஏவின் இந்த இரகசிய கோபெல்ட் முகா மில் 2002ல் புலன் விசாரணைக்கு முகம்
கொடு த்தவர் குல் ரஹ்மான். இஸ்லாமிய தீவிரவாத சந்தேக நபர் என்று இவர்
அடையாளப்படுத்த ப்பட்டிருக்கிறார். இவர் 48 மணிநேரம் தூங்க விடாமல்
வைக்கப்பட்டிருக்கிறார். உரத்து இசை போட்டு செவிகள்
புன்னாக்கப்பட்டிருக்கிறார். கடும் இருட்டில் வைக்கப்பட்டிருக்கிறார்.
தனி மைப்படுத்தப்பட்டிருக்கிறார். கடும் குளிரில் மூழ்
கடிக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் வாக்குமூலம் பெறவே இந்த நடவடிக்கைகள்
முன்னெடுக்க ப்பட்டதாக சி.ஐ.ஏ. கூறுகிறது.
ரஹ்மானை தனது சிறையறையின் சுவரோடு இணைத்து சங்கிலியால் பிணைக்கும்படி
கோபெல்டில் இரு க்கும் சி.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் உத்தரவிடுகி றார். இதனால்
ரஹ்மான் கொன்க்ரீட் நிலத் தில் இருக்கவேண்டி ஏற்படுகிறது. இதன்போது அவர்
கடினமான மேலாடையை மாத்திரம் அணி ந்திருந்தார். விசாரணைக்கு ஒத்துழைக்காத
தால் அதனையும் அகற்றும்படி சி.ஐ.ஏ. அதி காரி உத்தரவிட்டார்.
அடுத்த நாள் வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். சி.ஐ.ஏ. மேற்கொண்ட
பிரேத பரிசோதனையில் ரஹ்மான் குறைவெப்ப உடல் நிலையில் மரணமடைந்திருப்பது
உறுதியா னது. ஆனால் அவரது மரணம் குறித்து சி.ஐ. ஏ. தலைமையகத்திற்கு
அதிகாரிகள் போலி யான தகவல்களையே அளித்திருக்கின்றனர். பலஸ்தீன
பு+ர்வீகம் கொண்ட சவு+தி நாட்ட வரான 43 வயது அபு+ சுபைதாஹ் தற்போது
குவன்தனாமோ பே சிறையில் தடுத்து வைக் கப்பட்டிருப்பவர். இவர் 2002ம்
ஆண்டு சு+ட்டுக் காயத்துடன் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட் டார்.
~~47 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிறை யில் வைக்கப்பட்டிருக்கும்
சுபைதாஹ் 2002 ஓகஸ்ட் மாதம் 20 நாட்கள் கொ^ரமான முறை யில் புலன் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு ள்ளார். வோட்டர்போடிங் சித்திரவதை சுபை தாஹ் மீது
நாளாந்தம் இரண்டு முதல் நான்கு தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று செனட்
சபை அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த காலப்பிரிவில் சுபைதாஹ் 266 மணி நேரம் சவப்பெட்டி ஒன்றுக்குள் அடைத்து
வைக் கப்பட்;டிருந்துள்ளார். சுபைதாஹ் மீதான முதல் நாள் புலன் விசாரணையில்
அவர், சங்கிலி யால் பிணைக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, சுவரில்
மோதவிடப்பட்டிருக்கிறார்.
~~சுபைதாஹ் மேலதிக தகவல்களை கொடு க்க மறுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்;
அவரது முகத்தில் அறையப்பட்டோ அல்லது முகத்தை நொருக்கியோ கொடுமைப் படுத்த
ப்பட்டிருக்கிறார்" என்று அந்த அறிக்கை குறி ப்பிடுகிறது.
யெமன் நாட்டவரான 42 வயது ரம்ஸி பின ல்'Pப் செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு
அடுத்த தினம் பாகிஸ்தானில் வைத்து கைதுசெய்யப் பட்டவர். குவன்தனாமோ பே
சிறையில் இருக் கும் இவர் மீதான வழக்கு விசாரணை இர ண்டு ஆண்டுகளுக்கு
முன்னர்தான் ஆரம்பிக் கப்பட்டது.
சி.ஐ.ஏ. தலைமையகத்தில் இடம் பெற்ற ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு பின ல்'Pப்
ஒத்துழைப்பு வழங்கி இருப்பதாகவும் அவர் மோசமான விசாரணை முறைக்கு முகம்
கொடுக்கவில்லை என்றும் செனட் அறி க்கை குறிப்பிடுகிறது. என்றா லும்;
2003இல் சுமார் மூன்று தினங்கள் அவர் தூங்க விடாமல் தடு க்கப்பட்டிருப்பதோடு,
நிர் வாணமாக்கப்பட்டுவைக்கப்ப ட்டுள்ளார்.
செப்டெம்பர் 11 தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் என சந்தேகிக்கப்படும் 49
அல் லது 50 வயதான காலித் n'ய்க் முஹமது 2003ம் ஆண் டில் பாகிஸ்தானில் வைத்து
பிடிபட்டார். குவன்தனாமோ பே சிறையில் இருக்கும் இவர் மீதான குற்றச்சாட்டு
நிரூபிக் கப்பட்டால் மரண தண்டனை க்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.
செனட் அறிக்கையில் கே.எஸ்.எம். என அடையாள ப்படுத்தப்பட்டிருக்கும் இவர்
மீதான புலன் விசாரணையி ன்போது, முகம் மற்றும் வயி ற்று பகுதிகளில் கடுமையாக
தாக்கப்பட்டிருப்பதோடு முக த்தை நெருக்கி சித்திரவதை க்கு உள்ளாகியுள்ளார்.
இவர் தனது கைகளை உயர்த்தி வைத்தபடி தூக்கமின்றி நிறு த்தி
வைக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று நிர்வாணமாக் கப்பட்டும், தண்ணீரில் ஊற
வைக்கப்பட்டுமுள்ளார்.
இதன்போது மல வழி நீரே ற்றப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டபோது வேதனை தாங்காமல்
சம்பந்தமே இல்லாத இருவர் பற்றி போலியான தகவல் வழங்கியிருக்கிறார். நல்ல
துப்புக் கிடைத்தது என்று நம்பி அந்த இருவ ரையும் சி.ஐ.ஏ. பிடித்து
விசாரித்தபோதுதான் சொன்னது பொய் என்று தெரிந்தது.
2003 மார்ச் மாதத்தில் n'ய்க் முஹமது இரண்டு வாரங்களுக்கு 15 தடவைகள் வோட்
டர்போடிங் முறையில் சித்திரவதை செய்யப்ப ட்டிருக்கிறார். அதேபோன்று அவர்
ஏழரை நாட் கள் தூக்கமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளார். இதிலே
எக்கச்சக்கமானவர்களை சி.ஐ.ஏ. தவ றான முறையில் பிடித்து புலன் விசாரணைக்கு
உட்படுத்தி இருப்பதையும் செனட்குழு கண்ட றிந்திருக்கிறது. இவ்வாறு 26 பேர்
முறையற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சி.ஐ.ஏயின் இந்த சித்திரவதை நடவடிக் கைகளை பார்க்கும்போது அரசின் நிறுவனம்
ஒன்று செய்யக்கூடிய வேலையாக தெரியவி ல்லை. குற்றக் கும்பல் ஒன்றையும் விடக்
கேவலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விடயங்கள் அம்பலத்திற்கு
வந்த போது தனது செயல்முறைகளை சி.ஐ.ஏ. இன் றும் கூட நியாயப்படுத்தி வருகிறது.
இந்த புலன் விசாரணைகளால் பல உயிர்கள் காப் பாற்றப்பட்டதாக சி.ஐ.ஏ. நியாயம்
கூறுகிறது. ஆனால் இந்த விசாரணை முறைகளால் உரு ப்படியான எந்த பயனும்
கிடைக்கவில்லை என்று செனட் குழு அடித்துக் கூறுகிறது. ஆனால் சி.ஐ.ஏ.
சித்திரவதை காலத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த டிக் சென்னி இந்த
செயல்களுக்காக மன்னிப் புக் கேட்க வேண்டிய தேவையில்லை என்று இறுமாப்புடன்
கூறுகிறார்.
~~என்னைப் பொறுத்தவரை சித்திரவதை என்பது… நிய+யோர்க்கின் உலக வர்த்தகக் கட்
டடத்தின் மேல் மாடி பற்றி எரிவதற்கு சற்று முன்னர் அங்கிருந்த அமெரிக்க
பிரiஜ ஒரு வர் கையடக்க தொலைபேசி மூலம் தனது நான்கு இளம் மகள்களுக்கு
பேசியதுதான் சித்திரவதை" என்று கடந்த வாரம் பொக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த
பேட்டியில் குறி ப்பிட்டிருந்தார்.
சி.ஐ.ஏ கையாண்ட மூர்க்கமான விசாரணை முறைகளை அனுமதித்த அமெரிக்க அதிகாரி கள்
மீது வழக்கு தொடுக்கப்படவேண்டும் என்று ஐ.நா. மன்றமும், மனித உரிமைக்
குழுக்க ளும் கோரியுள்ளன. சி.ஐ.ஏ.வின் இந்த சித் திரவதைகளை அப்போதைய
ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்ய+ புஷ் கூட தெரிந்து வைத் திருந்ததாக டிக் சென்னி
குறிப்பிட்டிருந்தார்.
~~ஒருவர் மீது வேண்டுமென்றே மேற்கொள் ளப்படும் உடல் அல்லது உளரீதியான வலி
அல்லது வேதனைதரும் நடவடிக்கைகள்" சித் திரவதையாகும் என்று சித்திரவதைக்கு
எதி ரான ஐ.நா. பிரகடனம் குறிப்பிடுகிறது. இந்த பிரகடனத்தில் அமெரிக்கா
கையெழுத்திட்டி ருக்கிறது.
வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் உடல் அல்லது உளரீதியான வலி அல்லது வேத
னைதரும் நடவடிக்கைகள்" சித்திரவதை என்று அமெரிக்க சட்ட ஒழுங்கில்
குறிப்பிடப்பட்டிருக் கிறது. அமெரிக்க அரசியலமைப்பில் கொ^ர மற்றும் அசாதாரண
தண்டனைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சி.ஐ.ஏ. நடவடிக்கைக ளில்
சித்திரவதை உள்ளடக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் பல உலக நாடுகள்
சாட்சியம் கூறியிருக்கின்றன.
சட்டங்கள் என்ன வியாக்கியானம் சென்னா லும் எவர் என்ன சொன்னாலும் கடைசியில்
அமெரிக்கா சொல்வதுதான் சட்டமும், தர்மமு மாக மாறியிருப்பதால் சி.ஐ.ஏவின்
சித்திர வதை குறித்த செனட் அறிக்கையையும் குப் பையில் தான் போட வேண்டும்.
(எஸ். பிர்தௌஸ்)
|