Contact us at: sooddram@gmail.com

 

காலநிலைமாற்ற இரகசியத்தை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள்...

உலக நாடுகள் உட்பட, இந்து மாசமுத்திரத்தில் அமைந்துள்ள இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் எவரும் எதிர்பாராதவாறு கடந்த 6 மாத காலமாக நிலைபெற்று வரும் காலநிலை மாற்றம் இந்நாடுகளில் வாழும் மக்களுக்கு பாரிய பொருள் இழப்பையும், உயிர் இழப் பையும் ஏற்படுத்துவதுடன் அந்நாடுகளின் பயிர்ச் செய்கையையும், பொருளாதார வளர்ச்சியையும் சீர்குலைத்து, மக்கள் வாழ்க்கையை சின்னா பின்னப்படுத்தி வருகிறது.

முன்னைய ஆண்டுகளில் இலங்கையில் பருவ காலங்கள் குறிப்பிட்ட மாதங்களில் மாத்திரம் ஏற்படுவதுண்டு. அதனால் மக்கள் எந் தெந்த மாதங்களில் வட கீழ் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சி கிடை க்கும், எந்தெந்த மாதங்களில் தென் மேற்கு பருவபெயர்ச்சி மழை வீழ்ச்சி கிடைக்கும் என்று நன்கு அறிந்திருந்து அதற்கு ஏற்பு டைய வகையில் தங்களின் பிரதான நெற் செய்கையை மேற் கொண்டு, எந்த மாதங்களில் நெல்லை விதைக்க வேண்டும், எந்த மாதங்களில் பெரும்போக, சிறுபோக அறுவடைகளை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள்.

அதன் மூலம் எமது விவசாய பெருமக்கள் நாட்டிற்கு தேவை யான அரிசி உணவை தங்குதடையின்றி மக்களுக்கு பெற்றுக் கொடுத்தார்கள். மழை காலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு நாட்க ளுக்குள் மழையோ, அடை மழையோ பெய்தாலும் அது கொழு ம்பு மாநகரம் போன்ற பிரதான நகரங்களில் எவ்வித திட்டமு மின்றி, சதுப்பு நிலங்களில் வீடுகளை கட்டி வந்த காரணத்தினால் மாத்திரம் சிறு வெள்ள பெருக்குகளை ஏற்படுத்துவதுண்டு.

இத்தகைய வெள்ளப்பெருக்குகள் கிராமப்புறங்களில் அரிதாகவே ஏற்படுவதுண்டு. ஒரு சில வருடங்களில் அளவுக்கதிகமான மழை வீழ்ச்சியினால் வெள்ளப் பெருக்குகள் நாட்டின் பல பகுதிகளில் ஏற்படுவதுண்டு.

காலநிலையை எவ்வளவு நவீன காலநிலை ஆய்வு உபகரணங்களை வைத்து, இன்று ஆய்வு நடத்தினாலும், காலநிலை அவதானி களுக்கு எப்போது மழை பெய்யும் என்று சரியான முறையில் முன்கூட்டியே அறிவிக்க முடியாத அளவுக்கு காலநிலை திடீர் திடீரென்று மாறிக்கொண்டிருக்கிறது.

இந்த எதிர்பாராத சீரற்ற காலநிலை அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்தும் இடம் பெற்றால், இலங்கை போன்ற பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள நாடுகளுக்கு எதிர்கால த்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று, காலநிலை பற்றிய நிபுணர்கள் அபாய அறிவித்தலை விடுத்துள்ளார்கள்.

இந்த ஆபத்தை நன்கு உணர்ந்துள்ள இலங்கை- இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் கடந்த வியாழன் அன்று, கொழும்பில் கூடி, காலநிலை சமீபகாலமாக எதிர் பாராதவாறு மாற்றமடைவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய் வதற்கான மகாநாடு ஒன்றை நடத்தினார்கள்.

இந்து சமுத்திரத் திலிருந்து குறிப்பாக, வங்காள விரிகுடாவிலிருந்து உருவாகும் தாழ் அமுக்கமே இந்நாடுகளில் சீரற்ற காலநிலை ஏற்படுவதற்கு பிரதான காரணம் என்று முன்னர் வானிலை ஆய்வாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

இன்று, அதைவிட ஏதோ ஒரு வினோதமான இயற்கை மாற்றமே இதற்கான காரணம் என்று வானிலை ஆய்வு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றார்கள். கொழும்பில் நடைபெறும் இந்த விஞ்ஞானி களின் மாநாட்டில், இந்து சமுத்திர நாடுகளில் காலநிலை இவ்விதம் பாரதூரமான வகையில் மாற்றமடைவதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிவதில் விஞ்ஞானிகள் தங்கள் முழுக் கவனத்தையும் திருப்பியுள்ளார்கள்.

அதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களை வானிலை ஆய்வாளர்கள் எவ்விதம் சரியான முறையில் ஆய்வு செய்வதற்கும், உதவக் கூடிய வழிமுறைகளையும் இந்த விஞ்ஞானிகள் கண்டறிவார்கள். இந்த ஆய்வுக்கு ஆசிரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் வட பகுதியில் ஆகாயத்திலும், கடலிலும் ஏற்படும் காலநிலை மாற்றம் என்று இந்த ஆய்வுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் எவ்விதம் கடற் பிரயாணத்திற்கும், கடல் தொழிலா ளர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இவர்கள் ஆராய்ந் தார்கள். இந்த மகாநாட்டில் அமெரிக்கா மற்றும் இலங்கை கடற் படையின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டார்கள். இதில் இலங்கையைச் சேர்ந்த இந்து சமுத்திரம் பற்றிய நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் அரேந்திர ஜோசப் பெர்ணான்டோவும் கலந்துகொண்டார்.

இந்த சமுத்திரவியல் காலநிலை விஞ்ஞானிகளின் ஆய்வு இலங்கை போன்ற இந்து சமுத்திர நாடுகள் அடுத்து வரும் ஆண்டுகளில் காலநிலை மாற்றத்திற்கு இப்போது இருப்பதை விட உரிய தயார் நிலையில் முகம் கொடுத்து, பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் என்று நம்புகிறோம். மகாநாட்டில் கலந்துகொண்ட விஞ்ஞானிகள் விரைவில் தங்கள் ஆய்வறிக்கையை வெளியிடவுள்ளார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com