Contact us at: sooddram@gmail.com

 

அரசாங்க கட்சி இந்த தேர்தலிலும் வெற்றிவாகை சூடும்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பொய் வதந்திகளை தொடர்ந்தும் பரப்பி, அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது, தங்களின் தேர்தல் பிர சாரங்களை முடுக்கிவிட்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி யும், ஜே. வி. பி. யினரும் உட்கட்சி பூசல்களினால் நிலைதடுமாறி இருப்பதாக அரசியல் அவதானிகள் கூறு கிறார்கள்.

சஜித் பிரேமதாஸாவுக்கும், ரவி கருணாநாயக்காவுக்கு மிடையில் சில வாரங்களுக்கு முன்னர் கட்சி தலை மையகத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாற விருந்தது. அது தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும், அந்த பூசல் இப்போது கட்சியை இரண்டு அல்லது மூன்று அணிகளாக பிளவுபடுத்தி வருகிறது. ரவி கருணா நாயக்க முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஆர். பிரேமதாஸாவுக்கு எதிராக தெரிவித்த சில கண்டனக் கருத்துக்களுக்கு எதிராக அவர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்க வேண்டுமென்று சமீபத்தில், இளம் பாராளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்க கட்சியின் தலைமைத்துவத்துக்கு வேண்டுகோள் விடுத்துள் ளார். சஜித் பிரேமதாஸாவும் எங்கு சென்றாலும், என்னால் மட்டுமே ஏழை மக்களுக்கு நல்வாழ்வை பெற்றுக் கொடுக்க முடியும் என்று பேசி வருவதனால் ரணில் விக்கிரம சிங்கவின் தலைமைத்துவத்துக்கு அவர் பகிரங்க சவால்களை விடுத்தும் வருகிறார்.

இவ்விதம், பிளவுபட்டு மக்கள் ஆதரவை படிப்படியாக இழந்துவரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியில் ஏற்பட்டிருக்கும் தனது தலைமைத்துவத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாதவாறு, தன்னை பலப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறாரே ஒழிய, உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரசார கடமைகளில் ஈடுபடவில்லை என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் கவலை கொண்டுள்ளார்கள்.

இதே நிலையே மக்கள் ஆதரவை இழந்து வரும் ஜே. வி. பி. யினர் கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இப் போது செல்லாக் காசாக மாறி, சிறைக் கைதியாகி இருக் கும் சரத் பொன்சேகாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக் கையை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற முயற்சியில் வெற்றிக் கிண்ண சின்னத்தில் போட்டியிட்டும் படு தோல்விக்கு முகம் கொடுத்தனர். இதனால் ஜே. வி. பி.யினர் மீண்டும் தங்களின் பழைய மணி தேர்தல் சின்னத்துடன் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இரு தினங்களுக்கு முன்னர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன ஒரு வைபவத்தில் உரையாற்றும் போது, ராஜபக்ஷ அரசாங்கம் இன்று நாட்டை பல்வேறு துறைக ளில் அபிவிருத்தி செய்து வருகின்றது என்றும், எதிர்க் கட்சியினர் எவ்வளவு தான் முயன்றாலும், இந்த அரசாங் கத்தை அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு தோல்வியடையச் செய்ய முடியாது என்ற உண்மையை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இதேவேளையில் ஜனாதிபதி அவர்கள் தனது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அங்கத்தவர்களுக்கு ஒரு உண்மையை எடுத்துரை த்திருப்பது பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும். நானும் எனது அரசாங்கமும் மக்களின் பேராதரவுடன் புகழேணியின் உச்சத்தில் வீற்றிருக்கிறோம் என்பதனால், இந்த தேர்தலில் போட்டியிடும் அரசாங்க கட்சியினர், இத்தேர்தலில் கவனக்குறைவாக நடந்து கொள்ளலாகாது என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.

உண்மையைச் சொல்வேன், சொல்வதை செய்வேன் என்ற கொள்கையுடன் நல்லாட்சியை நடத்திவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ், இந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல்களிலும் அரசாங்க கூட்டணி எதிர்க் கட்சிகளை படுதோல்வியடையச் செய்து தனது மக்கள் ஆதரவை மீண்டும் வலுவான முறையில் தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com