Contact us at: sooddram@gmail.com

 

காதலர் தினம் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்தை சீர்குலைத்துவிடும்

மேற்கு நாடுகளில் அறிமுகமான காதலர் தினம் இன்று இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற இந்து, இஸ்லா மிய கலாசாரம் வேரூன்றியுள்ள பண்டைய சம்பிரதாயங்களை சீர்குலைக்கும் அளவிற்கு இளம் சமுதாயத்தின் நற்பண்புகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. காதல் என்பது ஒரு புனிதமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் நிரந்தரமான அன்பையும், பாசத்தையும் வலுப்படுத்தும் ஒரு தூய்மை யான பாசப்பிணைப்பாகும். இன்று மேற்கத்திய நாகரீகம் காதலின் புனிதத்துவத்தை இழிவுபடுத்தக்கூடிய வகையில் காதலர் தினம் என்ற ஒரு புதிய தத்துவத்தை அறிமுகம் செய்து, அதனை வர்த்தக ரீதி யில் இலாபம் திரட்டுவதற்காக பயன்படுத்தி வருவது வேதனைக் குரிய விடயமாகும்.

ஆசிய நாடுகளில் காதலர் தினம் என்ற இந்த வர்த்தக சின்னம் இன்று அதிகாலை முதல் இரவு முழுவதும் ஒரு பெரும் களியாட்ட விழா வாக கொண்டாடுவதற்கான ஒழுங்குகளை பல்தேச நிறுவனங்களும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் மேற்கொண்டு வருகின்றன. இந்த காதலர் தின களியாட்ட விழாக்கள் கீழைத்தேய சம்பிரதாயத்திற்கும், கலாசாரத்திற்கும் நூற்றுக்கு நூறு வீதம் முரணானவையாகும்.

இந்து, இஸ்லாமிய, பெளத்த மற்றும் கிறிஸ்தவ கலாசாரங்களும், சம் பிரதாயங்களும் ஒரு இளம் பெண்ணுக்கும் ஒரு இளைஞனுக்கும் இடையில் ஒருவரை ஒருவர் மானசீகமாக காதலிப்பதை வெளிப் படையாக ஆதரிக்காத போதிலும், அது இருவருக்கிடையிலான உண்மையான பாசப் பந்தத்தின் பிணைப்பு என்பதை இரு தரப் பினரின் பெற்றோரும் மறைமுகமாக தெரிந்து கொண்டால், பெரிய வர்கள் கூடிப்பேசி இந்தப் பெண்ணுக்கு அந்த இளைஞன் மண மகனாக ஆவதற்கான தகுதிகளை கொண்டிக்கிறானா? என்று விசா ரித்து பார்த்த பின் அவ்விருவரையும் திருமண பந்தத்தில் இணை த்து வைப்பார்கள்.

பொதுவாக எல்லா நாடுகளிலும் காதலர் தினம் பள்ளிப் பருவத்தில் உள்ள சிறுவர், சிறுமியரையும் காதலர் தினத்தின் மீது மோகம் கொள் வதற்கு அடித்தளம் அமைப்பதாக இருக்கின்றது. பாடசாலைக்கு செல் லும் சிறுவர், சிறுமியரும் தங்கள் காதலர்களுக்கு சிவப்பு ரோஜாப் பூவை பரிசாக கொடுக்குமளவிற்கு இன்றைய உலகில் காதலர் தினம் சிறுவர் சமுதாயத்தின் ஒழுக்கத்தை சீர்குலைத்துக் கொண்டி ருக்கிறது.

மேற்கத்தேய நாட்டு சிறுவர்களின் ஒழுக்கம் சீர்குலைந்திருப்பதனால் எமது கீழைத்தேய நாடுகளின் சிறுவர்களைப் பார்த்து பொறாமைப் படுபவர்களே இந்த கலாசார நற்பண்புகளை சீர்குலைப்பதற்காக காதலர் தினத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள் என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

மேற்கத்தேய மோகத்தை விரும்பும் கொழும்பு 7, செல்வந்தக் குடும்பத் தைச் சேர்ந்தவர்களுக்கு காதலர் தினம் ஒரு வெறும் விளையாட்டு களியாட்ட விழாவாக இருந்தாலும், ஏழைக்குடும்பங்களைச் சேர் ந்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் இந்த காதலர் தினம் அவர்களின் உணர்வுகளை தூண்டி அவர்களுக்கு பிரச்சினையை உண்டாக்கும் ஒரு தவறான செயற்பாடாகவே அமைகின்றது.

இதனால் இன்றைய பெற்றோர் தங்கள் பிள்ளைகள் காதலர் தினத்தைப் பற்றி அதிகமாக கவனம் செலுத்திக் கொள்ளவோ, அலட்டிக் கொள் வதற்கோ இடமளிக்கலாகாது. காதலர் தினத்தன்று ஒரு இளைஞ னுக்கு பல பெண்கள் சிவப்பு ரோஜாக்களை பரிசாகக் கொடுத்து அவனுடைய காதலை வென்றெடுப்பதற்கு மேற்கத்தேய நாடு களில் கடைப்பிடிக்கும் ஒரு சம்பிரதாயம் இருக்கின்றது.

அதே சம் பிரதாயம் எங்கள் நாட்டில் வேரூன்றினால் இலங்கையில் திரும் பிய இடமெல்லாம் மன்மதர்களை நாம் எதிர்காலத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கும். இந்த மன்மதர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரியத்தில் வலுவூன்றியுள்ள எமது கீழைத்தேய சம்பிர தாயங்களை முற்றாக சீர்குலைத்துவிடுவதற்கு அடித்தளமாக அமை வார்கள்.

எனவே, இத்தகைய பிரச்சினைகளில் இருந்து எமது நாட்டின் பாட சாலை செல்லும் விடலைப் பருவத்தை அடைந்துள்ள சிறுவர், சிறுமி யரை நாம் காப்பாற்ற வேண்டுமாயின் சிவில் சமுதாய அமைப்பு களும், சமூகத் தலைவர்களும், கல்விமான்களும், மதத் தலைவர் களும் பெற்றோரும் இந்த காதலர்தின நிகழ்வுகளில் கலந்து கொள் வதற்கு தமது பிள்ளைகளுக்கு இடமளிக்கலாகாது என்ற வேண்டு கோளை நாம் மிகவும் வேதனையுடன் விடுக்க விரும்புகிறோம்.

காதலர் தினத்தை நாம் தொடர்ந்தும் மறைமுகமாக ஆதரிப்போமே யானால் மேற்கத்தேய உலகில் உள்ள விடலைப் பருவத்தை அடைந்துள்ள சிறுவர்களும், சிறுமியரும் தங்களின் காதலர்களை வீட்டுக்கே அழைத்து வந்து, பெற்றோரிடம் இவர்தான் என்னு டைய காதலன், அல்லது இவள்தான் என்னுடைய காதலி என்று அறிமுகம் செய்து வைக்கும் ஆபத்தும் எங்கள் ஒவ்வொருவரின் வீடுகளின் கதவை தட்டக் கூடிய சூழ்நிலை விரைவில் ஏற்படும் என்றும் நாம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

காதலர் தினம் வெறுமனே வணிகத்துறையினரின் வருமானத்தை பெருக்கும் ஒரு தந்திரம் என்ற உண்மையை நாம் எமது இளம் சந்ததியினரின் மனதில் வேரூன்ற வைக்கவேண்டும். இந்த முயற்சி யில் நாம் வெற்றிகண்டால் எமது பிள்ளைகளை அழிவில் இருந்து காப்பாற்றுவது சாத்தியமாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com