|
||||
|
இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சனையும்
ஒரு விரிவான ஆய்விற்கான
முன்வரைபுக் குறிப்புகள்
(யதீந்திரா)
இந்தியாவிற்கு
அருகில் ஒரு குட்டித்
தீவு கடந்த இரண்டாயிரம்
ஆண்டுகளாக தன்னைப்
பேணிப் பாதுகாத்துக்
கொண்டிருக்கிறதென்றால்,
அதற்கு ராஜதந்திரம்
தேவை – இது பேராசிரியர்
இந்திரபாலாவின்
கருத்து. கொழும்பின்
ராஜதந்திர அணுகுமுறைகள்
குறித்து பலரும்
அவ்வப்போது வியந்து
பேசியிருக்கின்றனர்.
இது பற்றி அதிகம்
தமிழில் பேசியவர்,
ஈழத்தின் மூத்த,
முன்னனி அரசறிவியலாளரான
மு.திருநாவுக்கரசு
ஆவார். கொழும்பின்
ராஜதந்திரம் பற்றிய
அவதானங்கள் எவையுமே
மிகைப்படுத்தல்களல்ல.
ஆனால் இந்த ராஜதந்திரத்தின்
அடிப்படையாக இருப்பது
எங்கள்பக்க தவறுகள்தான்,
என்பதை புரிந்து
கொள்வதில்தான்,
ஈழத் தமிழ்த் தேசியவாதிகள்
என்போரும், அந்தத்
தேசியவாதிகளின்
கருத்துக்களை
மறுப்பின்றி ஆமோதித்து
வரும் தமிழ்நாட்டு
ஆதரவு சக்திகள்
என்போரும் தொடர்ந்தும்
தடுமாற்றங்களை
வெளிப்படுத்திவருகின்றனர்.
இது குறித்து
ஒரு முதிர்ச்சியற்ற
போக்கே தொடர்கிறது.
90களுக்கு
பின்னரான இலங்கையின்
வெளியுறவுக் கொள்கையை
எடுத்து நோக்கினால்
ஒரு விடயம் தெளிவாகும்,
அது கொழும்பு,
இந்தியாவை அச்சாணியாகக்
கொண்டே தனது சர்வதேச
உறவுகளை திட்டமிட்டு
வருகிறது என்பதுதான்.
90களுக்கு பின்னரான
இலங்கையின் வெளியுறவுக்
கொள்கை என்பதே
ஒரு இந்திய முதன்மைவாத
கொள்கைதான். ஆனால்
இலங்கையின் இத்தகைய
நகர்வு, இந்தியாவின்
மீதான விசுவாசத்தின்
வெளிப்பாடல்ல,
மாறாக தெற்காசியாவில்
இந்தியாவின் (ஐநெஎவையடிடந
கயஉவழச) தவிர்க்க
முடியாத இடத்தை
ஆழமாக புரிந்து
கொண்டிருப்பதன்
வெளிப்பாடாகும்.
இந்தியாவை
முன்னிலைப்படுத்தித்தான்
கொழும்பு தனது
ஒவ்வொரு மூலோபாய
நகர்வுகளையும்
முன்னெடுத்து
வருகிறது. இதனை கொழும்பு
தனது கடந்தகால
பட்டறிவிலிருந்தே
உள்வாங்கிக் கொண்டது.
இந்தியாவின்
விருப்பங்களுக்கு
மாறாகச் செயற்பட்டதன்
விளைவாகவே 1987இல்
இந்தியா இலங்கை
பிரச்சனையில்
நேரடியாகத் தலையீடு
செய்தது அல்லது
இந்தியா கொழும்மை
தண்டித்தது. இந்த அனுபவத்தையே
கொழும்பு தனது
பிற்கால வெளியுறவுக்
கொள்கை நெறிக்கான
பாலபாடமாகவும்
பற்றிக்கொண்டது.
கொழும்பின்
ஆளும் பிரிவு,
தங்களது ஒவ்வொரு
மூலோபாய நகர்வுகளிலும்
மிக நுட்பமாக இந்திய
முதன்மைவாதத்தை
உள்ளெடுத்துக்
கொள்கிறது. இந்தியா பின்வாங்கும்
போது, அதனைக் காரணம்
காட்டியே இந்தியாவுடன்
முரண்படும் சீனா,
பாக்கிஸ்தான்
போன்ற சக்திகளை
அரவணைத்துக் கொள்கிறது.
கொழும்பின்
இவ்வகை ராஜதந்திர
அணுகுமுறையானது,
சதா கொழும்பை அவதானித்துக்
கொண்டிருக்க வேண்டிய
நிலைக்கு இந்தியாவைத்
தள்ளியுள்ளது.
இது – கொழும்பின்
கடந்த இருதாசாப்தகால
ராஜதந்திர நகர்வுகளுக்கு
கிடைத்த மிக முன்னேறிய
வெற்றியாகும்.
இந்தியா
1987இல் நேரடியாக
தலையிட்ட போது,
அது எவ்வாறு நீண்டகால
நோக்கில் தமிழ்
மக்களுக்கு சாதகமாக
அமையக்கூடுமென்பதை
ஆழமாக புரிந்து
கொண்டிருந்த ஒரு
சிங்களத் தலைவரென்றால்,
அது இலங்கையின்
முன்னாள் ஜனாதிபதி
ரணசிங்க பிரேமதாசா
என்பதில் சந்தேகமில்லை.
உண்மையில்
சிங்கள மக்கள்
கோவில் கட்டிக்
கும்பிட வேண்டிய
தலைவரும் பிரேமதாசாதான்.
அதற்கான அடித்தளத்தை
பிரேமதாசவின்,
அரசியல் வழிகாட்டியான
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவே
உருவாக்கிக் கொடுத்திருந்தார்.
ஜே.ஆர். வேறு வழியில்லாமல்
இந்தியாவுடன்
உடன்பட வேண்டியேற்பட்டாலும்,
புலிகளின் அரசியல்
முதிர்சியற்ற
தன்மையை மதிப்பிட்டிருப்பார்
என்பதில் ஜயமில்லை.
புலிகள்-இந்திய
மோதலை பிரேமதாச
நுட்பமாகப் பயன்படுத்திக்
கொண்டார். ஈழத் தமிழரின்
பக்கமாக இருக்க
வேண்டிய இந்தியாவை
ஈழத் தமிழரைக்
கொண்டே அப்புறப்படுத்தும்
தந்திரோபாயத்தில்
கொழும்பு வெற்றிபெற்றது.
இந்த இடத்தில்தான்
புலிகள் தவறிழைத்தனர்.
இந்த நேரத்தில்
கேட்கப்பட்ட ஒரு
கேள்விக்கு புலிகளின்
பதிலோ இவ்வாறு
அமைந்திருந்தது
– இது, இருதரப்புக்குமான
(ஊழnஎநபநnஉந ழக ஐவெநசநளவ)
பொதுவான நலன்சார்
முடிவாகும். இது மாவோ சேதுங்குக்கும்
– சியாங்கே Nஷக்கிற்கும்
இடையிலான உடன்பாட்டிற்கு
ஒப்பானது. ஆனால்
இந்த நகர்வில்
நன்மையடைந்தது
கொழும்பேயன்றி
தமிழர்களல்ல. பிரேமதாசவை
கொலை செய்ததன்
ஊடாக தாங்களே வெற்றிபெற்றதான
ஒரு தோற்றப்பாட்டை
வெகுசனப்படுத்துவதில்
புலிகள் வெற்றிபெற்றனர்
ஆனால் உண்மையில்
ஈழத் தமிழர்களின்
நலனில்நின்று
நோக்கினால் இது
ஒரு மிகப் பெரிய
பின்னடைவாகும்.
ஒரு வரலாற்றுத்
தவறாகும். அந்தத் தவறுதான்
இன்றைய ஈழத் தமிழரின்
அனைத்து அவலத்திற்கும்
காரணமாகும்.
இந்தியாவின்
கேந்திர முக்கியத்துவத்தை
விளங்கிக் கொள்ள
வேண்டிய பொறுப்பு,
ஈழத் தமிழரின்
உரிமை தொடர்பில்
குரலெழுப்பி வரும்
அனைத்து தரப்பினருக்கும்
உண்டு. ஆனால் துரதிஸ்டவசமாக
கடந்தகாலம் என்னும்
சிறையிலிருந்து
வெளியில் வருவதற்கு
நம்மில் அனேகர்
விரும்பாததால்,
இது குறித்து ஒரு
வகையான தயக்கமும்
தடுமாற்றமுமே
எஞ்சியிருக்கிறது.
இந்தியாவிற்கும்
இலங்கைக்குமான
புவியியல் சார்
தொடர்புகள் எத்தகைய
நிலையில் இருந்திருக்கிறது
என்பதை தெளிவுபடுத்துவதற்கு
காலணித்துவ காலத்தில்
நிகழ்ந்த ஒரு சில
விடயங்களை இங்கு
எடுத்தாளுகின்றேன்.
இலங்கை தொடர்பில்
இந்தியா எவ்வாறானதொரு
வகிபங்கைக் கொண்டிருக்கிறது
என்பதை விளங்கிக்
கொள்வதற்கான ஒரு
உசாத்துணையாகவும்
இவைகள்; இருக்க
முடியும்.
‘இலங்கையின்
கரையோர மகாணங்களில்
பரவிய தொற்றுநோய்
பிரித்தானியப்
படைகளைப் பாதித்தது. குறிப்பாக
51ம் படைப் பிரிவில்
மாத்திரம் 300 படை
வீரர்கள் இறந்தார்கள்.
படைவீரர்களின்
எண்ணிக்கையில்
ஏற்பட்ட வீழ்சியைத்
தொடர்ந்து கொழும்பு
கட்டளைத் தளபதி
இந்திய அரசிற்கு
அவசரசமான கடித்ததை
எழுதினார். திருகோணமலையில்
ஏற்பட்டிருக்கும்
படைவீரர்களின்
பற்றாக்குறை திருகோணமலையின்
கோட்டையின் பாதுகாப்புக்கு
ஆபத்தானது என இந்தியாவில்
இருந்த பிரித்தானிய
கட்டளைத் தளபதி
தீர்மானித்ததைத்
தொடர்ந்த 1803இல்
ஊயி.நுஎநசயசன தலைமையில்
சென்னையில் இருந்த
34ம் படையணி உடனடியாகத்
திருகோணமலைக்
கோட்டைக்குள்
தங்க அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து
2 வங்காளச் சிப்பாய்
படையணிகளும் திருகோணமலைக்கு
செல்லுமாறு பணிக்கப்பட்டது.
’1879
அசாதாரண வரட்சியால்
ஏற்பட்ட விலை ஏற்றத்தைக்
கட்டுப்படுத்த
இந்தியாவில் இருந்து
அரிசி இறக்குமதி
செய்யப்பட்டது. பிரித்தானியாவில்
பதிவு செய்யப்பட்ட
அரபுக் கப்பல்
ஆழாரளளயn கல்கத்தாவில்
இருந்து பெருந்தொகையான
அரிசியுடன் திருகோணமலை
துறைமுகத்திற்கு
வந்து சேர்ந்தது’
’1867
தம்பலகாம நில உடமையாளர்கள்
விதை நெல் இல்லாமல்
வறுமையில் கானப்பட்டார்கள். இதனால்
திருகோணமலை அரச
அதிபர் து.று.று.
டீசைஉh வட்டியில்லாத
விதை நெல் வழங்கும்
திட்டத்தை அறிமுகம்
செய்தார். இந்தியாவில்
இருந்து விதை நெல்
கொண்டுவரும் திட்டத்தை
சிபார்சு செய்தார்’
(காலணித்துவத்
திருகோணமலை – கலாநிதி
சரவணபவன்)
இந்தத்
தகவல்கள் இந்தியாவிற்கும்
இலங்கைக்குமான
புவிசார் தொடர்பை
தெளிவாக படம்பிடித்துக்
காட்டுகின்றன. எப்போதுமே
இலங்கையில் ஒரு
விடயம் என்றால்
அதன் முதலாவது
தொடர்பாளராக இந்தியாவே
இருந்திருக்கிறது.
இலங்கையில்
இருந்த மன்னர்கள்
தமக்கிடையிலான
பிணக்குகளை தீர்ப்பதற்கு
தென்னிந்திய மன்னர்களை
அழைத்த வரலாறுதான்
நம்மிடமுண்டு.
நவீன அரசியலிலும்
இதுதான் நடந்தது.
இந்தியா
பணிப் போர் காலத்தில்,
சோவியத்யூனியனைச்
சார்ந்திருந்தது. சோவியத்
– அமெரிக்க பணிப்
போர் காலமென்பது,
பிறிதொரு வகையில்
புதிய நாடுகளின்
உருவாக்கத்திற்கு
ஆதரவான காலமாகவும்
இருந்தது. இந்த அரசியல்
அலையின் வெளிப்பாடாகத்தான்
மூன்றாமுலக நாடுகள்
பலவற்றிலும் பல்வேறு
விடுதலை அமைப்புக்கள்
வேர்கொண்டன. அவ்வாறு
உருக்கொண்ட போராட்ட
அமைப்புக்கள்
அனைத்தும் சுதந்திர
நாட்டிற்கான சுலோகத்தையே
உயர்த்திப் பிடித்;தன. இதன்
காரணமாகத்தான்
அநேகமான விடுதலைப்
போராட்ட அமைப்புக்கள்
தம்மை இடதுசாரிகளாகவும்
அடையாளப்படுத்திக்
கொண்டன. இப்படியொரு
பின்புலத்தில்தான்
இலங்கையிலும்
பல விடுதலைப் போராட்ட
அமைப்புகள் வெளிக்கிளம்பின.
இவற்றில் அனேகமானவை
இடதுசாரித்துவ
சுலோகங்களையே
தாங்கியிருந்தன.
அவ்வாறு தோற்றம்
பெற்ற விடுதலை
அமைப்புக்கள்
அனைத்தும், இலங்கையின்
வடகிழக்கு பகுதிகளை
முன்னிறுத்தி
தனிநாடு ஒன்றுக்காகவே
போராடியுமிருந்தன.
இந்த இடத்தில்
இதுவரை எவருமே
உரையாடாத அல்லது
பார்க்காத விடயமொன்றும்
உண்டு. உண்மையில்,
இலங்கையின் வடகிழக்கு
பகுதிகளை அடிப்படையாக்
கொண்டு மேலெழுந்த
தனிநாட்டுக்கான
பிரகடணம் என்பதே,
இந்தியாவை கருத்தில்
கொண்டு முன்வைக்கப்பட்ட
ஒன்றுதான். இந்த விடயம்
ஈழத்து மற்றும்
தமிழ் நாட்டுச்
சூழலில் இதுவரை
ஆழமாக உரையாடப்பட்டிருக்கவில்லை.
தமிழ் நாட்டின்
ஈழ ஆதரவாளர்கள்
என்போருக்கு இது
ஒரு புதிய தகலாகவே
இருக்கும்
1970களில்
தமிழர்களை கடவுள்தான்
காப்பாற்ற வேண்டுமென்று
கூறிய, ஈழத் தமிழ்
மக்களின் தேசியத்
தந்தையாகக் கருதப்படும்
எஸ்.ஜே.வி. செல்வநாயகம்,
(தந்தை செல்வா)
1976,இலோ ஈழத்
தமிழர்கள் பிரிந்து
சென்று தனிநாடு
அமைப்பதற்கான
பிரகடணத்தை முன்மொழிகின்றார்.
இதனைத் தொடர்ந்து
1977இல் இடம்பெற்ற
தேர்தலில் அப்போது
வடகிழக்கு வாழ்
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய
தமிழர் விடுதலைக்
கூட்டணி பெருவாரியான
வெற்றிiயும் பெறுகிறது.
இதுவே பிரிந்து
செல்வதற்கான மக்கள்
ஆணையாகவும் கொள்ளப்பட்டது.
ஆனால் செல்வநாயகத்தின்
மேற்படி நிலைப்பாடானது
தெற்கின் சிங்களத்
தலைவர்களை எச்சரிக்கும்
நோக்கம் கொண்டதேயன்றி,
அடிப்படையில்
பிரிந்து சொல்லும்
நிலைப்பாடல்ல
என்று வாதிப்போரும்
உண்டு. சிலர்
இதனை, ஈழத் தமிழ்
மக்களை உணர்வு
நிலையில் ஒருங்கிணைக்கும்
ஒரு தேர்தல் உக்தி
என்றும் சொல்வதுண்டு.
ஆனால் 1970 இற்கும்
1976 இற்கும் இடைப்பட்ட
காலத்தில் இடம்பெற்ற
சில சம்பவங்களை
ஆராயும் போது,
செல்வநாயகம் இந்தியாவைக்
கருத்தில் கொண்டே
பிரிவினைக் கோரிக்கையொன்றை
முன்வைக்கும்
நிலைக்கு முன்னேறியிருக்கிறார்
என்ற முடிவுக்கே
வரவேண்டியிருக்கிறது.
தமிழ்
மக்களை கடவுள்தான்
காப்பாற்ற வேண்டுமென்று
கூறிய செல்வா,
1972,பெப்ரவரி-20
இல் தமிழ் நாட்டிற்கு
சென்று காங்கிரஸ்
மற்றும் தி.மு.க
கட்சிகளின் தலைவர்களை
சந்திக்கின்றார்.
தமிழ் மக்கள்,
பிரிந்து சென்று
தனிநாடு அமைக்கும்
கோரிக்கையை வலியுறுத்தி
வருவதாகவும், அது
ஒன்றே தங்களை பாதுகாத்துக்
கொள்வதற்கான ஒரேயொரு
மார்க்கமென்றும்
தங்களை நிர்பந்தித்து
வருவதாகவும் மேற்படி
சந்திப்பின் போது,
செல்வா குறிப்பிடுகின்றார்.
இதனைத் தொடர்ந்து
செல்வா, 1972 ஒக்டோபரில்
தனது பாராளுமன்ற
பதவியை ராஜினாமா
செய்கின்றார்.
செல்வாவின்
இந்த நடவடிக்கைகள்
அணைத்துக்கும்
ஒரு உந்துசக்தியாக
இருந்தது 1971இல்
இடம்பெற்ற பங்களாதேசின்
உருவாக்கமாகும்.
பங்களாதேசின்
பிறப்பின் பின்னால்
இந்தியா இருந்தது
என்பதொன்றும்
இரகசியமானதல்ல.
(கலாநிதி.ஏ.ஜே.வில்சன்)
பங்காளதேஸ் தனிநாடாகியமை
தமிழரின் அரசியல்
முன்நகர்வில்
தவிர்க்க முடியாத
தாக்கத்தை ஏற்படுத்தியது.
சமஸ்டி நிலைப்பாட்டை
கைவிட்டு, தனிநாட்டை
பிரகடணம் செய்யும்படியான
உத்தேவகத்தையும்
ஏற்படுத்தியது.
மேலும் கலாநிதி
வில்சன் பதிவு
செய்திருக்கும்
பிறிதொரு விடயம்,
இங்கு மிகுந்த
முக்கியத்துமுடையதாகும்
– தமிழகத் தலைவர்களை
சந்தித்த மேற்படி
பெப்பிரவரியில்,
வடக்கின் கரையோரக்
கிராமமான வல்வெட்டித்துறையில்
அனைத்துக்கட்சிகளின்
கூட்டமொன்று இடம்பெறுகிறது.
காணி உரிமைகள்,
பிராந்தியரீதியான
சுயாட்சி, குடியேற்றக்
கொள்கை மற்றும்
தொழில் வாய்ப்புக்களின்
புறக்கணிப்பு
ஆகியவற்றுக்கு
எதிரான (ளுiஒ-pழiவெ
கழசஅரடய) ஆறு அம்சக்
கோரிக்கையொன்று
அங்கு முன்மொழியப்பட்டது.
இது பங்களாதேசின்
சுதந்திர யுத்தத்திற்கு
முன்னர், (ளூநiமா
ஆரதiடிரச சுயாரஅயn)
Nஷக் முஜிபு ரகுமானால்
அரசியலமைப்புப்
பேரவைக்கு சமர்பிக்கப்பட்ட
ஆறு அம்சக் கோரிக்கைகளை
மீள்நினைவுபடுத்துவதாகவே
இருந்தது.
மேற்படி
தகவல்கள், செல்வாநாயகம்
இந்தியாவை கருத்தில்
கொண்டே தனிநாட்டுக்
கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்
என்ற முடிவுக்கு
வருமாறு நம்மை
நிர்பந்திக்கிறது.
பங்களாதேசுக்கு
உதவியது போன்று, இந்தியா ஈழத்
தமிழர்களுக்கும்
உதவ முன்வரும்
என்னும் நம்பிக்கையே
செல்வநாயகத்திடம்
இருந்திருக்கிறது.
பங்களாதேஸ் சுதந்திர
நாடாக உருவாகிய
அதே 1971இல் இலங்கையின்
தெற்கு பகுதிகளில்
ஜே.வி.பி எனப்படும்
இடதுசாரி இளைஞர்
குழு, அரசை வீழ்த்துவதற்கான
கிளர்சியிலும்
ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
மேற்படி ஜே.வி.பி
இடதுசாரித்துவத்தையும்,
மாவோவின் இந்திய
விஸ்தாரிப்புவாத
சுலோகத்தையும்
ஒருங்கே சுமந்து
கொண்டிருந்த அமைப்பாகும்.
தெற்கில் மேலெழுந்திருக்கும்
இந்திய எதிர்ப்பு
வாதத்தை எதிர்கொள்ளும்
நோக்கில். இந்திய ஆதரவு
நிலையை வெளிப்படுத்திவரும்
ஈழத் தமிழர்களுக்கு
இந்தியா பக்கபலமாக
இருக்கும் என்னும்
கணிப்பும் செல்வாவிடம்
இருந்திருக்கக்
கூடும். எனது
சில ஊகங்களை கட்டுரைக்கு
வலுச் சேர்க்கும்
வகையில் கையாண்டிருக்கிறேன்.
1971 கிளர்சியை
கட்டுபடுத்துவதற்கு
சிறிமாவோ அரசிற்கு
இந்தியா உதவியது
என்பதும் கவனிக்கத்தக்கது.
1970களில்
வேர்கொள்ளத் தொடங்கிய
ஆயுத ரீதியான போராட்டச்
சிந்தனைகள், படிப்படியாக
ஈழத் தமிழர்களுக்கான
போராட்டத்தை இளைஞர்களின்
பக்கமாக இடம்மாற்றிக்
கொண்டிருந்தது. அவ்வாறு
தோற்றம்பெற்ற
அனைத்து ஆயுத விடுதலை
இயக்கங்களும்
எஜ.ஜே.வி.செல்வநாயக்கத்தின்
தமிழீழ சுலோகத்தையே
தங்களது சுலோகமாகவும்
வரித்துக் கொண்டன.
அன்றைய சூழலில்
சுமார் 32 ஆயுத ரீதியான
அமைப்புக்கள்
இயங்கியதாக சில
பதிவுகள் கூறுகின்றன.
அதில் முதன்மையான
ஒரு சில அமைப்புக்களும்
பல்வேறு சிறு குழுக்களும்
அடங்கும்.
ஜனநாயக
அரசியல் தளத்தில்
தனிநாட்டுக் கோரிக்கை
வழிமொழியப்பட்ட
அதே காலப்பகுதியில்
இலங்கையில் ஆட்சி
மாற்றமொன்றும்
இடம்பெறுகின்றது. பெரும்பாண்மை
பலத்துடண் ஜே.ஆர்.ஜயவர்த்தன
தலைமையிலான தாராளவாத
நிலைப்பாடுகொண்ட
ஜக்கிய தேசியக்
கட்சி ஆட்சியை
கைப்பற்றுகின்றது.
1977இல் செல்வநாகம்
(தேர்தலுக்கு முன்பதாக)இறக்கின்றார்.
லெ;வநாயகத்திற்கு
பிற்பட்ட அரசியல்
என்பது செல்வநாயகத்தன்
தமிழீழ சுலோகத்தை
ஆயுதரீதியான விடுதலை
அமைப்புக்கள்
தத்தெடுத்துக்
கொண்ட காலமாகவே
கழிந்தது. விடுதலைப்புலிகள்
இயக்கம் ஏனைய பிரதான
விடுதலை அமைப்புக்களை
பலவீனப்படுத்தி
தடைசெய்ததைத்
தொடர்ந்து, செல்வநாயகத்தின்
தமிழீழ சுலோகத்தின்
ஏகபோ உரித்தாளர்களாகினர்.
ஆனால் செல்வநாயகத்தின்
நேரடி வாரிசுகளான
கூட்டணித் தலைவர்களோ,
தமிழீழ கொள்கையை
எப்போதோ கைவிட்டிருந்தனர்.
இந்தியாவை
நம்பி முன்னிறுத்தப்பட்ட
தமிழீழ கோட்பாட்டை
உண்மையிலேயே இந்தியா
எவ்வாறு நோக்கியது?
இந்தியா
தமிழீழ சுலோகத்தை
தாங்கியிருந்த
ஈழத்து ஆயுத இயக்கங்களுக்கு
பயிற்சியளித்ததும்,
ஆயுதங்கள் வழங்கியதும்,
தமிழ் நாட்டில்
சுயாதீனமாக இயங்குவதற்கு
அனுமதித்திருந்ததும்,
இந்தியா தமிழீழத்திற்கு
ஆதரவாக இருப்பது
போன்ற தோற்றத்தை
ஏற்படுத்திய உண்மைதான்.
இந்தியாவிடம்
பயிற்சி பெற்ற
இயக்கங்களிடமும்
அத்தகையதொரு நம்பிக்கையே
மேலோங்கியிருந்தது.
ஆனால் இந்தியாவிடம்
அப்படியான நிலைப்பாடு
எதுவும் இருந்திருக்கவில்லை.
1987இல் இந்தியா
இலங்கை பிரச்சனையில்
நேரடியாக தலையீடு
செய்த போது, இது
வெள்ளிடைமலையானது.
ஏனெனில் இலங்கை
பாக்கிஸ்தான்
அல்ல. ஆனால் இலங்கையை
ஒரு கட்டுக்குள்
வைத்திருக்க வேண்டிய
தேவை இந்தியாவிற்கு
இருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின்
வெளிவிவகாரக்
கொள்கை இந்தியாவை
எரிச்சலடையச்
செய்தது. சோவியத்
சார்பாக இயங்கிய
இந்தியாவின் பிராந்திய
நலன்கள், ஜே,ஆரின் மேற்குசார்பான
நிலைப்பாட்டால்
அச்சுறுத்தலுக்குள்ளாவதாகவே
இந்தியா கருதியது.
இதன் தொடர்சியாகத்தான்
இந்தியா ஈழத் தமிழர்
பிரச்சனையை கையில்
எடுத்தது. இது
பற்றி கொழும்பின்
ஆளும் பிரிவினரின்
நெருங்கிய நன்பரும்,
தீவிரவாத நிபுனருமான
ரொஹான் குணரத்தின
பதிவு செய்திருக்கும்
விடயமொன்று இங்கு
எடுத்தாளத்தக்கது
– நீங்கள் (ழேn யடடயைnஉந)
அணிசாரா பொறுப்பிற்கு
வெளியில் செல்கின்றீர்கள்.
நீங்கள் (ஏழiஉந
ழக யுஅநசiஉய) வொயிஸ்
ஓப் அமெரிக்க நிலையத்திற்கு
இடமளித்திருக்கின்றீர்கள்.
நீங்கள் திருகோணமலை
துறைமுகத்தை,
(யுஅநசiஉயn கடநநவ)
அமெரிக்க கடற்படைக்கு
வழங்கியிருக்கின்றீர்கள்,
அங்கு (ழுடை ளவழசயபந)
எண்ணெய் சேமிப்பு
வசதிகள் இருக்கின்றது.
நீங்கள் இஸ்ரேலிய
நலன்பிரிவுக்கு
இடமளித்திருக்கின்றீர்கள்.
நீங்கள் தென்னாபிரிக்க
கூலிப்படையினர்
வருவதற்கு அனுமதித்திருக்கின்றீர்கள்.
இவையெல்லாம் இந்திய
நலன்களுக்கு இடையூறானவை
– இந்திய வெளியக
உளவுத் துறையான
றோவின் ஸ்தாபகத்
தலைவரான, ஆர்.என்.காவோ
தன்னிடம் இவ்வாறு
கூறியதாக ரொஹான்
பதிவு செய்திருக்கின்றார்.
இந்தப்
பின்னனியில்தான்
இந்தியா, கொழும்பை
தனது வழிக்கு கொண்டுவருவதற்காக
இலங்கையின் வடகிழக்கில்
கொதித்துக் கொண்டிருந்த
இனப்பிரச்சனையை
கையில் எடுத்தது. அதுவரைக்கும்
இலங்கையின் உள்ளக
விடயமாகக் கருதப்பட்ட
தமிழர் பிரச்சனை,
இந்தியாவின் பிராந்திய
நலன்களுடன் இணைக்கப்பட்டது.
எனவே இலங்கை பிரச்சனையை
இந்திரா காந்தி
கையில் எடுத்தமை
என்பது, முழுக்க
முழுக்க இந்திய
நலன்களை இலக்காகக்
கொண்டது என்பதை
விளங்கிக் கௌ;வதில் சிரமப்பட
வேண்டியதில்லை.
(சங்கரன் கிருஸ்ணா)
இந்திராகாந்தி
இலங்கையின் இனப்பிச்சனையை
ஆக்க குறைந்தது
தனது இரு இலக்குகளை
அடையப் பயன்படுத்திக்
கொண்டார்-முதலாவது
ஜெயவர்த்தனவை
இந்திய முன்னுரிமைகளுக்கு
ஏற்றவாறு ஆட்டுவித்தல்,
இரண்டாவது 1967இல்
நழுவிவிட்ட தமிழ்
நாட்டில் மீண்டும்
காங்கிரஸ் ஆட்சியை
நிலைநிறுத்தல்.
அகாலி தளத்தை நிலைகுலையச்
செய்வதற்காக, இந்திராகாந்தி
எவ்வாறு காலிஸ்தான்
தீவிரவாத குழுவிற்கு
ஆதரவு வழங்கினாரோ,
அதனையொத்த அணுகுமுறையையே
ஜெயவர்த்தன விடத்திலும்
கைக்கொண்டார்.
இந்தியாவின் பிராந்திய கொள்நெறிச்
சட்டகத்திற்கு
வெளியில் சென்று
கொண்டிருந்த ஜெயவர்த்தனவிற்கு,
பாடம் புகட்டுவதற்காக
ஈழ விடுதலை இயக்கங்களை
ஆதரிக்கும் முடிவை
எடுத்தார் இந்திரா.
தாயாரால்
அடித்தளமிடப்பட்ட
விடயத்தையே ராஜீவ்
காந்தி பொறுப்பேற்றார். ஒரு சில
ஈழத் தேசியவாத
ஆய்வாளர்கள் மிகைப்படுத்திச்
சொல்வது போன்று,
இந்திராகாந்தி
இருந்திருந்தால்
இவ்வாறு நடந்திருக்காது,
என்பதெல்லாம்
வெறும் மாயை என்பதே
என் வாதம். அவ்வாறான
மதிப்பீடுகள்,
இந்திய அமைதிப்படைக்
காலத்தில் நடைபெற்ற
சில கசப்பான சம்பவங்களின்
உந்துதல்களேயன்றி
வேறில்லை. இந்திரா
காந்தியும் சரி
அவரது இடைவெளியை
நிரப்பிய ராஜீவ்
காந்தியும் சரி,
ஈழத் தமிழ் இயக்கங்களின்
தனிநாட்டுக் கோரிக்கையை
எந்தவொரு சந்தர்ப்பத்திலும்
ஆதரித்திருக்கவில்லை.
ஆனால் அவர்கள்
அத்தகையதொரு உள்நோக்கம்
கொண்டு இயங்கியதாக
சிங்கள அடிப்படைவாதிகள்
அளவுக்கதிகமாகவே
பேசியிருக்கின்றனர்.
இதன் வெளிப்பாடுதான்,
கடற்படை அணிவகுப்பொன்றின்
போது, படைச்சிப்பாய்
ஒருவர் ராஜீவ்
காந்தியை தாக்க
முற்பட்டிருந்தார்.
ஆனால் இலங்கையின்
சிறுபாண்மை தமிழ்
மக்களின் பிரச்சனைக்கு
ஓர் நியாமான தீர்வு
காணப்பட வேண்டுமென்னும்
ஆர்வம் அவர்களிடம்
இருந்தது ஆனால்
அது எவ்வாறு அமைய
வேண்டுமென்பதை
இந்தியாவே தீர்மாணிக்கும்
என்னும் முடிவும்
அவர்களிடம் இருந்தது.
குறிப்பாக
ராஜீவ் காந்தி
(சங்கரன் கிருஸ்ணா)
இனப்பிரச்சனையை
இழுத்தடிப்பதைவிட,
அதற்கு தீர்வு
காணப்பட வேண்டுமென்பதில்
நேர்மையான ஆர்வத்தைக்
கொண்டிருந்தார்.
ராஜீவ்
காந்தியின் ஆர்வத்திற்கும்
பிரபாகரனின் ஆர்வத்திற்கும்
இடையில் எவ்வாறானதொரு
இடைவெளி இருந்தது
என்பதுதான் பிற்கால
அரசியலானது. இந்தியாவின்
பிராந்திய அக்கறைகளை
விளங்கிக் கொண்டு
முடிவுகளை எடுக்கும்
ஆற்றல் விடுதலைப்புலிகளிடம்
இருந்திருக்கவில்லை.
புலிகளின்
அரசியல் முதிர்சியற்ற
அணுகுமுறையானது
இறுதியில், இந்திய
ஆளும் பிரிவினருடன்
ஒரு தீராப் பகையை
தோற்றுவிப்பதாக
முடிவுற்றது.
இந்தியாவை வெளியேற்றுவதில்
பிரேமதாசவுடன்
பொதுநலன்சார்
இணக்கப்பாட்டை
ஏற்படுத்திக்
கொண்ட பிரபாகரன்,
அத்தகையதொரு இணக்கப்பாட்டை
ராஜீவ் காந்தியுடன்
ஏற்படுத்திக்
கொள்ள முன்வராததுதான்
அனைத்து பிரச்சனைகளினதும்
அடிப்படையாக இருந்தது.
ஆனால் ஆரம்பத்தில்
விடுதலைப்புலிகள்
விடயத்தில் ராஜீவ்
காந்தி கடும்போக்காளராக
இருந்திருக்கவில்லை.
ஆனால் காலப்
போக்கில் அத்தகையதொரு
நிலையை நோக்கி
முன்னகர வேண்டிய
நிலைக்கு ராஜீவ்
தள்ளப்பட்டார்.
மிக இளம் வயதில்,
இந்தியாவின் சர்வவல்லமை
பொருந்திய நபராக
வெளித்தெரிந்த
ராஜீவ் காந்தியின்
அயலுறவு தொடர்பான
முதலாவது நகர்வே
தோல்வியில் முடிவடைவதை
ரஜீவால் சகித்துக்
கொள்ளமுடியவில்லை.
ஒரு சில தேசியவாத
எழுத்தாளர்கள்
மிகைப்படுத்துவது
போன்று புலிகளை
பூண்டோடு அழிக்க
வேண்டுமென்னும்
எண்ணம் இந்தியாவிற்கு
இருந்திருக்கவில்லை.
ஆனால் புலிகளை
பலவீனப்படுத்தாமல்
தாங்கள் விரும்பும்
ஒரு அரசியல் இணக்கப்பாட்டை
ஏற்படுத்த முடியாதென்ற
நிலைமை இருந்தது.
ஒரு
நாட்டின் வெளிவிவகாரக்
கொள்கை என்பது,
அந்த நாட்டின்
நலன்களை அடிப்படையாகக்
கொண்ட ஒன்றாகும். எந்தவொரு
நாடும் தனது நலன்களை
புறம்தள்ளிவிட்டு
பிறிதொரு நாட்டிற்கு
அல்லது அமைப்புக்களுக்கு
உதவுவதில்லை.
இது ஒரு சாதாரண
வெளிவகார உண்மையும்
கூட. இந்த அடிப்படையில்தான்
இந்தியத் தலையீட்டின்
அரசியலையும் நாம்
புரிந்துகொள்ள
வேண்டும். இந்தியா தனது
பிராந்திய நலன்களை
முன்னிறுத்தியே
எங்களைக் கையாண்டது
ஆனால் நாங்கள்
எங்களது நலன்களில்
நின்று இந்தியாவை
கையாண்டிருக்கவில்லை.
இந்தியாவின் ஆர்வங்களுடன்
எங்களது நலன்களை
எவ்வாறு பொருத்துவது
என்னும் சூட்சுமம்
எங்களுக்குத்
தெரிந்திருக்கவில்லை
குறிப்பாக தமிழீழ
விடுதலைப்புலிகளுக்கு
தெரிந்திருக்கவில்லை.
இந்திய
அமைதிப் படைக்
காலத்தில் நடைபெற்ற
சம்பவங்கள் எவற்றையும்
நான் இங்கு நியாயப்படுத்தவில்லை. ஆனால்
எந்தவொரு அரசியல்
நிலைப்பாட்டிற்கும்
ஒரு படிமுறைசார்ந்த
வளர்ச்சிப் போக்கிருக்கிறது.
கிடைக்கும்
சந்தர்பங்களை
கையாண்டு, அவற்றின்
போதைமையை நடைமுறைரீதியாக
நிரூபித்து முன்னேறுவதே
சரியானதொரு அசியல்
அணுகுமுறையாகும்.
ஆனால் இந்தியாவின்
நேரடித் தலையீட்டின்
போது அத்தகையதொரு
அரசியல் முதிர்சியை
புலிகள் காட்டியிருக்கவில்லை.
(டி.பி.எஸ்.ஜெயராஜ்)
விடுதலைப்புலிகளின்
தேவை ஒரு நடைமுறைசார்
அரசு என்றால்,
அது குறித்தும்
நான் பேசத் தயாராக
இருக்கின்றேன்
என்று ராஜீவ் முரசொலி
மாறனிடம் கூறியிருக்கின்றார்.
ஆனால் விடுதலைப்புலிகள்
இந்தியாவிற்கு
போதுமான கால அவகாசத்தை
கொடுத்திருக்கவில்லை.
மகாணசபை முறைமை
ஈழத் தமிழர் உரிமைகளை
நிறiவுசெய்யப்
போதுமானதல்ல என்பதை
இந்தியாவை வைத்துக்
கொண்டே நாம் நிரூபித்துக்
காட்டியிருக்க
வேண்டும். ஆனால் பிரபாகரனோ
இந்தியாவை அரசியல்
அரங்கிலிருந்து
வெளியேற்றுவதன்
மூலம் தனது இலக்கை
அடையமுடியுமென்று
நம்பினார். மிகச்
சிறியதொரு அணியான
விடுதலைப்புலிகள்
அமைப்பு, தெற்காசியாவின்
பலம்பொருந்திய
இந்தியாவின் படைகளை
இராணுவரீதியாக
எதிர்கொண்டமையானது,
வெகுசனங்கள் மத்தியிலும்
ஒரு கிளர்ச்சியூட்டக்
கூடிய உளவியலை
கட்டமைத்தது. விடுதலைப்புலிகளிடமும்
அத்தகையதொரு பார்வையே
இருந்தது. இந்திய
இராணுவம் வெளியேறிய
பின்னர் இலங்கை
இராணுவம் தமிழர்களுக்கு
எதிராக திரும்பினால்
என்ன செய்வீர்கள்
– என்ற கேள்விக்கு
அவர்கள் அளித்த
பதில், புலிகள்
ஒருவகை துணிகர
உளவியலால் பீடிக்கப்பட்டிக்கின்றனர்
என்பதையே காட்டியது
– தமிழீழ விடுதலைப்புலிகள்
வலிமைவாய்ந்த
100,000 இந்திய படைகளை
எதிர்கொண்டிருக்கின்றனர்
எனவே இலங்கை இராணுவத்தை
எதிர்கொள்ளுவதென்பது
சிக்கலாக இருக்காது.
எனது கணிப்பில்
விடுதலைப்புலிகளிடம்
இராணுவவாதம் மேலோங்கி,
அரசியல் உபாயங்கள்
மீதான நம்பிக்கை
கடைநிலைக்குச்
செல்வதில் மேற்படி
சம்பவமே முக்கிய
பங்காற்றியது.
இந்தியாவை பகைத்துக்
கொண்டு தன்னால்
ஒரு தமிழீழத்தை
எடுக்க முடியுமென்னும்
நம்பிக்கையும்
பிரபாகரனுக்குள்
குடிகொள்;ளவும்
இதுவே காரணமாகியது
எனலாம்.
பிற்காலத்தில்
அவர் இலங்கை அரசுக்கு
எதிராக பெற்றுவந்த
இராணுவ வெற்றிகளும்
அவரை மீளமுடியாதவாறான
இராணுவ மனோநிலைக்குள்
சிறைப்படுத்தியது.
ஆனால்
இந்தியாவிற்கு
சண்டித்தனம் காட்டிக்
கொண்டு அல்லது
இந்தியாவை ஓரங்கட்டிக்
கொண்டு ஒரு தீர்வை
ஈழத் தமிழர்கள்
பெறமுடியாது, என்பதையே
கடந்தகால வரலாறு
தெட்டத் தெளிவாக
நிரூபித்திருக்கிறது.
ஆனால் கொழும்பு
இந்த விடயத்தை
கெட்டியாகப் பிடித்துக்
கொண்டது. பிரபாகரன்
இந்தியாவை தவிர்த்துச்
சிந்திக்க, கொழும்போ
இந்தியாவை முதன்மைப்படுத்தி
தனது அயலுறவைத்
திட்டமிட்டது.
எங்களது தவறுகளால்
வெளித்தெரிந்த
இடைவெளியை கொழும்பு
தனது ராஜதந்திர
அணுகுமுறைக்கு
பயன்படுத்திக்
கொண்டது. ‘பிரதமர்
ராஜீவ்காந்தி தெற்காசியக்
கப்பலின் கேப்டன்.
அவர் அழைத்துச்
செல்லும் இடத்திற்குத்தான்
நாங்கள் செல்வோம்.
அவரையும் இந்தியாவையும்
பொருத்துத்தான்
எல்லாம். ஆனால்
அவர் எங்களை சரியான
திசையில் அழைத்துச்
செல்கிறாரா என்பதுதான்
என் கவலை’ – 1985இல்
ஜே.ஆர்.ஜெயவர்த்தன
இந்தியாவின் பிரபரல
பத்திரிகையாளரும்,
இந்திரா காந்தியின்
நன்பருமான குல்திப்
நய்யாரிடம் குறிப்பிட்டவைகளே
இவை. ஜெயவர்த்தனவின்
புரிதல் இவ்வாறிருக்க.
பிரபாரகனின் பார்வையோ
கேப்டனை இல்லாமலாக்கிவிட்டால்,
தெற்காசியக் கப்பல்
வேறு பக்கம் போவிடும்
என்பதாக இருந்தது.
இதுவே பிரபாகரன்
பின்னர் ஒரு வலாற்றுத்
தவறை நோக்கிப்
பணிக்கவும் காரணமாகியது
இன்று
ஒரு புதிய சூழல்
உருவாகியிருக்கிறது. எவர்
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
இது முற்றிலும்
புதியதொரு சூழல்
என்பதுதான் உண்மை.
இதுவரைக்கும்
இந்திய மத்திய
அரசிற்கு எது பகையுணர்வுமிக்க
நெருக்கடியாக
இருந்ததோ அது இப்போது
இல்லை. ஈழத்
தமிழ் அரசியல்
சக்திகள் இந்தியாவையும்.
இந்தியா ஈழத்
தமிழ் சக்திகளையும்
அணுகுவதில் இருந்த
தடைகளும் இப்போது
இல்லை. எனவே இந்த
புதிய சூழலை ஈழத்
தமிழ் அரசியல்
சக்திகளும், ஈழத்
தமிழர்களின் உரிமைகளுக்காக
குரல் கொடுத்துவரும்
தமிழ் நாட்டின்
அதரவு சக்திகளும்
எவ்வாறு கையாளாப்
போகின்றனர் என்பதுதான்
கேள்வி. நமது
இச்சைகளில் இருந்து
அரசியலை பார்க்காமல்,
சூழலில் இருந்து
அரசியலை பார்க்கும்
அணுகுமுறையொன்று
நமக்குத் தேவைப்படுகிறது.
1987இல் இருந்த
இந்தியாவல்ல இப்போது
இருப்பது. 90களில் இருந்த
உலகமல்ல இப்போது
இருப்பது. அன்று
(ஜெயவர்தனவின்)
எந்த அணுகுமுறையை
இந்தியா பிரச்சனையாகப்
பார்த்ததோ, அத்தகைய
பிரச்சனைகள் எவையும்
இன்றைய இந்தியாவிற்கு
பிரச்சனையான விடயங்களல்ல.
சோவியத் சார்புநிலை
பிராந்தியக் கொள்கையல்ல
இப்போதைய இந்தியாவின்
கொள்கை. சமீபகாலமாக
அமெரிக்கா கொழும்பின்
மிது, குறிப்பாக
அரசின் போர்க்
குற்றச்சாட்டுக்கள்
குறித்து அழுத்தங்களை
வெளியிட்டுவருவதை
இந்தப் பின்னனியிலேயே
நாம் விளங்கிக்
கொள்ள வேண்டும்.
கொழும்புடனான
சீன நெருக்கம்
இந்திய-அமெரிக்க
மூலோபாய நலன்களுக்கு
குந்தகமாக இருக்கிறது
ஏனெனில் இது நிக்சன்
காலத்து சீனாவல்ல.
எனவே எதிர்காலத்தில்
இலங்கை பல்வேறு
முரண்பாடுகளின்
களமாக மாறக் கூடும்.
இத்தகைய மாற்றங்களுக்கு
ஊடாகவெல்லாம்
பயணிக்க வேண்டிய
நிலையில்தான்
இன்றைய ஈழத் தமிழர்
அரசியல் இருக்கிறது.
கொழும்பின்,
சீனா-பாக்கிஸ்தானிய
உறவு நிட்சயமாக
இந்தியாவின் விருப்புக்குரிய
ஒன்றல்ல. அதே போன்று
கொழுபின் ஈரானிய
உறவு அமெரிக்க
விருப்புக்குரிய
ஒன்றல்ல. கொழும்பின்
சீன-பாக்கிஸ்தானிய
உறவானது நிட்சயமாக
இந்தியாவை ஒருவகை
நிதான நிலைக்குள்
முடக்கிவைக்கும்
சாணக்கியமாகும்.
ஆனால் அமெரிக்காவை
எந்தவொரு வரையறைக்குள்ளும்
முடக்க முடியாது.
இப்படியான
பல்வேறு விடயங்களை
நாம் பரீசீலிக்க
வேண்டியவர்களா
இருக்கிறோம்.
சிலர்
விவாதிப்பது போன்று
ஈழத் தமிழர் பிரச்சனை
தொடர்பில் இந்தியா
87இற்கு திரும்ப
முடியாது. ஆனால்
இந்தியாவிற்கு
ஒரு தீர்வு குறித்து
அழுத்தத்தை கொடுப்பதற்கான
கடப்பாடுண்டு.
அந்தக் கடப்பாட்டை
யார் வலியுறுத்துவது.
உலகிலேயே ஈழத்
தமிழர் பிரச்சனை
தொடர்பில் இந்திய
மத்திய அரசிற்கு
அழுத்தம் கொடுப்பதற்கான
ஆற்றல் தமிழ் நாட்டிற்கு
மட்டுமே உண்டு.
இதற்கு முதலில்
கடந்த கால வரலாற்றிலிருந்து
நாம் அதிகம் கற்றுக்
கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தியாவின் பிராந்திய
நலன்களை புறம்தள்ளும்
வகையிலான அரசியலை
கைவிட்டு, அவற்றுடன்
ஒத்திசைந்து போய்
எவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு
உதவ முடியுமென்று
பார்க்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகள்
முன்னிறுத்திய
அரசியலை கைவிட்டு,
புதிய நிலைமைகளுக்கு
ஏற்றதான அரசியலை
முன்னிறுத்த வேண்டும்.
புலிகளை முதன்மைப்படுத்திக்
கொண்டு இந்திய
மத்திய அரசை அணுக
முடியாது, குறிப்பாக
காங்கிரஸ் இந்தியாவை
அணுக முடியாது.%0 |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |