Contact us at: sooddram@gmail.com

 

தேசத்துரோக சக்திகளின் சதிமுயற்சிகள் மக்களால் முறியடிக்கப்படும்

எல்.ரி.ரி.ஈ.யிற்கு எதிரான யுத்தம் நிறைவுபெற்று இரண்டரை வரு டங்கள் முடிவடைந்து, நாட்டில் மீண்டும் சமாதானமும், அமைதியும் திரும்பியிருப்பதனால் மக்கள் தங்கள் கடந்த கால துன்பங்களை மறந்து, நிம்மதியான வாழ்க்கையை மேற்கொண்டு வரும் இவ்வேளையில், மீண்டும் இலங்கைக்கு எதிரான தேசத்துரோக சக்திகள் தங்கள் சதி வேலைகளை சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வருகின்றன.

இதற்கு பின்னணியில் இருந்து எதிர்க்கட்சியினரும் உறுதுணை புரிந்து வரு வது குறித்து நாம் உண்மையிலேயே வேதனைப்படுகின்றோம். எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சமீபத்தில் பாராளுமன்றத்தில் கற் றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக் கையை ஆதரிப்பது போன்ற ஒரு கருத்தை தெரிவித்து, தனது முழு உரையையும் பேசாமலேயே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை ஹன்சாட்டில் இணைத்துக் கொள்ள எத்தனித்த போது, இதற்கான முன் அறிவித்தல் கொடுக்காத காரணத்தினால் இதனை ஏற்றுக்கொள்ள முடி யாது என்று சபாநாயகர் அறிவித்திருந்தார்.

அதையடுத்து எதிர்க்கட்சித்தலைவர் தமது அறிக்கையை பாராளுமன்றத்தி ற்கு வெளியில் செய்தி நிருபர்களிடம் கையளித்தார். பிரதம மந்திரி என்ற முறையில் 2002ல் ரணில் விக்கிரமசிங்க, எல்.ரி.ரி.ஈ. தலைவர் வேலு ப்பிள்ளை பிரபாகரனுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக் கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை தவறான ஒருதலைப்பட்சமான அறிக்கை என்றும், சனல் 4 பிரிட்டிஷ் தொலைக்காட்சி சேவை வெளியிட்ட செய்தி படங்கள் உண்மையானவை என்ற நிலைப்பாட்டுக்கு ஒப்பான கருத்தையும் ரணில் விக்கிரமசிங்க இவ்வறிக்கையில் சேர்த்திருப்பதை உண்மையிலேயே தேசப்பற்றுடைய மக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

அதேபோன்று ரணில்விக்கிரமசிங்க யுத்தம் நடந்து கொண்டிருந்த போதிலும் எமது நாட்டின் இராணுவவீரர்களை கொச்சைப்படுத்தக்கூடிய வகையில் கருத்துக்களை வெளியிட்டு கிண்டலும் செய்திருக்கிறார். தொப்பிகலை என்று சிங்களத்தில் அழைக்கப்படும் குடும்பிமலையை எமது இராணு வத்தினர் எல்.ரி.ரி.ஈ.யிடம் இருந்து கைப்பற்றிய போது ரணில் விக்கிரம சிங்க இந்த குடும்பி மலை மக்கள் சஞ்சரிக்காத ஒரு அடர்ந்த காடு என்று உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்டார்.

அது போன்று ரணில்விக்கிரமசிங்கவின் சேனாதிபதிகளில் ஒருவரைப் போன்று இருக்கும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இராணுவத்தினர் அலிமன்கடவுக்கு, அதாவது ஆனையி றவுக்கு போகிறது என்று எங்களை ஏமாற்றி அவர்களை பாமன்கடைக் கும், கிளிநொச்சிக்கு அனுப்புகிறோம் என்று கூறி மதவாச்சிக்கும் இரா ணுவத்தினரை அனுப்பி போலி யுத்தத்தை மேற்கொண்டார்கள் என்று பாராளுமன்றத்தில் அன்று கிண்டல் செய்தார். இவ்விதம் எதிர்க்கட்சி யினர் அரசாங்கத்தைப் பார்த்து கடந்த காலத்தில் கேலி கிண்டல் செய்த போதிலும், அஞ்சா நெஞ்சமும், மன உறுதியும் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், வெளிநாடுகளின் அழுத்தங்களை பொரு ட்படுத்தாமல் தொடர்ந்தும் எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்தத்தை மனிதாபி மான முறையில் அப்பாவி பொதுமக்களுக்கு ஏற்டக்கூடிய உயிராபத்தை தவிர்த்துக் கொண்டு, வெற்றிகரமாக நடத்தி நாட்டு மக்களை பயங்கர வாத பிடியில் இருந்து மீட்டெடுக்கும் சாதனையை ஏற்படுத்தி சர்வதேச ரீதியில் பாராட்டைப் பெற்றார்.

இன்று முழு உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களில் மிகவும் கொடுமையான இயக்கமாக கருதப் பட்ட எல்.ரி.ரி.ஈ.யை படுதோல்வியடையச் செய்ததைப் பார்த்து சில நாடு கள் மறைமுகமாக மகிழ்ச்சியடைந்தாலும், பல்வேறு அரசியல் காரணங் களுக்காக அவை இந்த யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப் பட்டன என்ற போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே நவனீதம்பிள்ளையின் அறி க்கை, தருஸ்மன் அறிக்கை மற்றும் சனல் 4 செய்தி வீடியோ காட்சிகள் போலி ஆதாரங்களை மேற்கோள் காட்டி தயாரிக்கப்பட்டமை குறிப் பிடத்தக்கது.

கடந்தாண்டில் இலங்கைக்கு எதிராக இதே தேசத்துரோக சக்திகள் எல்.ரி. ரி.ஈ.யின் அடிவருடிகளாகி அவ்வியகத்தின் பணபலத்திற்கு அஞ்சி, இல ங்கைக்கு எதிராக எடுத்த முயற்சிகள் படுதோல்வியடைந்தன. இந்தத் தடவை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெ றும் சர்வதேச மனித உரிமைகள் மகாநாட்டில் இதே பிரச்சினையை இல ங்கைக்கு எதிராக கிளப்பி அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொண்டு வர இந்த தேசத்துரோக சக்திகள் மீண்டும் சதித்திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவின் சமீபத்திய இந்த அறிக்கையும் அந்தத் திட்டத் தின் ஓர் அங்கமாகவே இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் இப் போது சந்தேகம் எழுந்துள்ளது. 1971ம் ஆண்டில் இருந்து நாட்டை சீர் குலைப்பதற்காக வன்முறைகளை மேற்கொண்டு வந்த ஜே.வி.பியினரும் இந்த தேசத்துரோக முயற்சிகளுக்கு இப்போது தங்களின் பூரண ஒத்து ழைப்பை நல்கி வருகிறார்கள்.

தேர்தல் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை அடுத்த பல்லாண்டுகளு க்கு தோல்வியடையச் செய்ய முடியாது என்ற உண்மையை உணர் ந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. போன்ற அரசியல் கட்சி கள் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அரசாங் கத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு குந்தகம் செய்வதற்கு எடுத்து வரும் முயற்சிகள் இலகுவில் வெற்றிபெறப் போவதில்லை. அரசாங்கம் நாட் டின் முன்னேற்றத்திற்கு மேற்கொண்டு வரும் அபிவிருத்தி பணிகள் தங் கள் எதிர்கால சந்ததியினரின் மேம்பாட்டுக்கு சிறந்த அடித்தளமாக அமையும் என்பதை உணர்ந்திருக்கும் இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்த சதி முயற்சிகளை முறியடித்து அரசாங்கத்தின் பலத்தை மேலும் அதிகரிப்பதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் அர சாங்கத்திற்கு அளிப்பது திண்ணம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com