Contact us at: sooddram@gmail.com

 

பேச்சுவார்த்தை குறித்த சில கேள்விகள்

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகள் ஐம்பது ஆண்டுகளாகப் பல்வேறு காலகட்டங்களிலும் நடைபெற்றுள்ளன. இந்தப் பேச்சுகளில் வெவ்வேறு தலைமைகள் பங்குபற்றி யிருக்கின்றன. இந்தப் பேச்சுகளின் விளைவாகப் பல உடன்படிக்கைகள் எட்டப்பட்டுமுள்ளன. ஆனால், அந்த உடன்படிக்கைகள் பின்னர் வலுவற்றதாகி செயலிழந்தன அல்லது மீறப்பட்டன. சில பேச்சுகள் முன்னகர முடியாமல் இடைமுறிந்ததும் உண்டு. உள்ளரங்கில் மட்டுமல்ல, அதற்கப்பால், வெளியே பிராந்திய அரங்கில் இந்திய மத்தியஸ்தத்துடனும் சர்வதேச அரங்கில் நோர்வேயின் மத்தியஸ்தத்துடனும் பேச்சுகள் நடைபெற்றுள்ளன. இவ்வளவும் நடந்தபோதும் அடிப்படையில் எந்தப் பேச்சும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்ந்ததாகவோ, சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை உருவாக்கியதாகவோ இல்லை.

மேலும் இதுவரை நடைபெற்ற ‘பேச்சுவார்த்தைகள்’ எல்லாம் முரண்பாடுகளையும் நம்பிக்கையீனங்களையுமே மேலும் அதிகரித்துள்ளன. அத்துடன் சமூகச்சிதைவுகளுக்குக் காரணமான விளைவுகளுக்குப் பின்புலமாகவும் இருந்துள்ளன. அல்லது ‘முரண்பாட்டைத் தீர்த்துக் கொள்ளும் அரசியற் செயற்பாட்டுக்கான ஒரு செயல்முறையே பேச்சுவார்த்தை’ என்ற அடிப்படையைக் கொண்டதாக நடைபெற்ற பேச்சுகள் எதுவும் இதுவரை இருக்கவில்லை. இதையே கடந்தகால வரலாறு சொல்கிறது.

இத்தகையதொரு வரலாற்றுப் பின்னணியில், தற்போது (2011 – 2012) நடைபெற்றுவரும் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைக் குறித்து இந்தப் பத்தி ஆராய முற்படுகிறது.

தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் தொடர்ந்து நடைபெறும் பேச்சுகள் தீர்வைச் சாத்தியப்படுத்துமா?

சாத்தியப்படுமாயின் எவ்வாறான தீர்வு சாத்தியமாகும்?

அந்தத் தீர்வு தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துமா?

தமிழ் மக்களின் விருப்பம் என்பது என்ன?

அந்த விருப்பத்தை எந்தத் தரப்புகள் அடையாளப்படுத்துகின்றன?

இந்த அடையாளப்படுத்தல்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியனவா?

எட்டப்படும் தீர்வை தமிழ்த் தரப்பிலுள்ள தீவிர நிலையாளர்கள் எவ்வாறு அணுகுவர்?

இதேவேளை தீர்வொன்று எட்டப்பட்டால், அந்தத் தீர்வைச் சிங்கள மக்கள் அங்கீகரிப்பார்களா? அவர்களுடைய எதிர்கொள்ளல்கள் எத்தகையனவாக இருக்கும்?

சிங்களத் தரப்பில் உள்ள தீவிரச் சக்திகள் தீர்வுக்கு இடமளிக்குமா?

இவை முதற் தொகுதிக் கேள்விகள்.

ஒரு பேச்சுவார்த்தையானது, நியாயமான தீர்வொன்றை எட்டவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடனும் நம்பிக்கையின் அடிப்படையிலும் நடைபெறவேண்டும். அந்த நம்பிக்கையைப் பேணத்தக்க விசுவாசத்தன்மை அந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோரிடம் அடிப்படையில் அமைந்திருக்க வேணும். ‘முரண்பாடுகளையும் பிணக்குகளையும் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கையே பேச்சுவார்த்தையாகும்’ என்ற புரிதலின் அடிப்படையில் பேச்சுகளில் ஈடுபடுவோர் செயற்பட வேண்டும். ‘தீர்வை நோக்கி நகர வேண்டும், தீர்வென்பது அவசியமானது’ என்ற உணர்வு பிரதானப்பட்டிருக்கும்போதே பேச்சுகள் அர்த்தபூர்வமான அடித்தளத்தை நிர்ணயிக்கும்.

பேச்சுவார்த்தை என்பது, கயிறு இழுத்தலைப் போன்று வெற்றி தோல்விகளை மட்டும் நிர்ணயிக்கும் ஒரு நிகழ்ச்சியல்ல. அல்லது அது ஒரு சதுரங்க விளையாட்டுமல்ல. அல்லது அது ஒரு போர்க்களமும் அல்ல. ஆனால், அதன் தோற்றப்பாடு சதுரங்கத்தைப்போலவே காணப்படுகிறது. இதனால், பேச்சுகளில் ஈடுபடும் தரப்புகளின் மனோநிலை அவர்களை அறியாமலே, வெற்றி தோல்வி என்ற விசையாக்கத்தின் அடிப்படையில் கட்டமைகிறது. இதைக் கடந்து, புரிந்துணர்வை உருவாக்கி, நம்பிக்கையை ஏற்படுத்தி, இணக்கத்தின் மையப்புள்ளியொன்றை நோக்கி நகரச் சித்தமான மனோநிலையை வளர்க்க வேண்டும்.

பேச்சுகளின்போது அதிகாரத்தைப் பகிர்வதற்குப் பதிலாக, ஒரு தரப்பின் மீது, மற்றத்தரப்பு அதிகாரத்தைப் பிரயோகிக்க முற்படுவது நிலைமையை எதிர்நிலைக்கே தள்ளும். பேச்சுகள் அமைதிப் பிராந்தியமொன்றின் உருவாக்கத்துக்கான உள்ளார்ந்தக் கோரிக்கைகளைக் கொண்டவை. விட்டுக்கொடுப்புகளற்ற முறையில் தமக்கென நிர்ணயிக்கப்பட்ட எல்லைப் புள்ளிகளை நோக்கி ஒவ்வொரு தரப்பும் மற்றத் தரப்பை இழுப்பதற்கு முனைப்புக் காட்டுவது எந்தநிலையிலும் தீர்வுக்கோ இணக்கத்துக்கோ வழிவகுக்காது.

இணக்கம் என்பது விட்டுக்கொடுப்பின் மூலமே சாத்தியமாகும். ஆனால், நிபந்தனையற்ற விட்டுக்கொடுப்புகளை யாரும் கோர முடியாது. இது அடிப்படையானது. ஒவ்வொரு விட்டுக்கொடுப்பும் கண்ணியமாக அணுகப்படவும் புரிந்துகொள்ளப்படவும் மதிக்கப்படவும் வேண்டும். எதற்காக அந்த விட்டுக்கொடுப்பு நிகழ்கிறது? அந்த விட்டுக்கொடுப்பின் பெறுமதி என்ன? என்ற புரிதல் விட்டுக்கொடுப்பைச் செய்வோரிடமும் வேண்டும். அந்த விட்டுக்கொடுப்பைக் கோருவோரிடமும் இருக்கவேண்டும்.

அதேபோல எதனை விட்டுக்கொடுக்கவே முடியாது என்பதைப் பற்றிய புரிதலும் அவசியமாகும். ஒரு தரப்பை மட்டும் விட்டுக்கொடுக்கக் கோருவதும் அதேபோல தாம் நிர்ப்பந்திக்கும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளக் கோருவதும் இணக்கப்புள்ளியை உருவாக்குவதற்கு உதவாது. அது மேலும் நிலைமைகளை மோசமாக்கும். இதைவிடுத்து, இரண்டு தரப்பும் இறங்கிச் செல்ல வேண்டிய இடங்களில் இறங்கியும் ஏற வேண்டிய இடங்களில் ஏறியும் ஒரு இணக்கப்புள்ளியைச் சென்றடைய வேண்டும். எப்படியான இணக்கப்புள்ளி பொதுநிலைகளில் ஏற்புடையதாகும் என்ற தெளிவு இருந்தாலே அந்த இணக்கப்புள்ளிக்கான நகர்வு சாத்தியமாகும்.

எனவே, போட்டி மனப்பாங்குக்குப் பதிலாக, இணக்கப்புள்ளிகளை அடைவதற்கான – மக்களின் எதிர்கால நன்மைகளை அடிப்படையாகக் கொள்வதற்கான – உயரியதொரு அவசியச் செயல் என்ற வகையில் நம்பிக்கைகளையும் முன்னோக்கிய வழிகளையும் பேச்சுகள் உருவாக்க வேண்டும்.

இதற்கான அர்ப்பணிப்பும் விசுவாசத் தன்மையும் கடுமையான உழைப்பும் திடசங்கற்பமும் ஆளுமை மிக்க உயர் குணாம்சங்களும் சம்மந்தப்பட்ட இரண்டு தரப்பிடமும் இருக்க வேணும். எட்டப்பட வேண்டிய இலக்கை நோக்கி இரண்டு தரப்பும் அதற்கான அடிப்படைகளின் வழியாக முன்னோக்கி நகர வேண்டும்.

இதற்குத் தடைகள், தாமதப்படுத்தல்கள், எதிர்ப்புகள் ஏற்படுமிடத்து அவற்றைப் புத்தி பூர்வமாகவும் நிதானமாகவும் எதிர்கொண்டு முன்னகரக் கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்கையில், எத்தகைய நிலையிலும் உள்நெருக்கடிகளும் வெளி அழுத்தங்களும் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் அவற்றை எதிர்கொள்வதற்கான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டிருப்பது அவசியம். அந்தப் பொறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்ச்சக்திகள் செயற்படும் முறைமையைக் கவனித்து, அவற்றை எதிர்கொள்வதற்கான துணைச் செயற்பாடுகளை அரசியல் ரீதியாகவும் சமூக நிலை ரீதியாகவும் முன்னெடுக்க வேண்டும்.

இதைப்போல மிக அவசியமான மேலும் சில அடிப்படைகள் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்குத் தேவையாக உள்ளன. பேச்சுக்கள் நடைபெறும்போது அந்தப் பேச்சுகள் முன்னகர்வதற்கு ஏற்ற வகையில் துணைச் செயற்பாடாக பேச்சுகளின் அவசியம் குறித்தும் தீர்வின் தேவையைக் குறித்தும் சமாந்தரப்பட்ட பரப்புரைகள் அவசியம். குறிப்பாக எதிர்நிலையாளர்களின் தடைப்படுத்தல் முயற்சிகளை தகர்ப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையான விழிப்பு நிலையிற் செய்யப்பட வேணும்.

அதிலும் இலங்கையில் இனப்பிரச்சினை உச்ச முரண்களை அதிகமாகக் கொண்டிருப்பதால், மேற்குறிப்பிட்ட அடிப்படைகளை உருவாக்காமலும் உள்வாங்காமலும் பேச்சுக்களை முன்னெடுக்கவே முடியாது. ஏனெனில், எப்போதும் பேச்சுகள் தீர்வை நோக்கி நகராமல் தடைப்படுத்தும் நடவடிக்கையில் எதிர்நிலைச் சக்திகள் இயங்குவது வழமை. அதேவேளை பேச்சுகளில் தீர்வை முன்வைக்காமற் தவிர்ப்பதற்காகத் தீவிர நிலையை எடுப்பதும் தீவிரநிலைப்பாடுடைய சக்திகளைத் தூண்டிவிடுவதும் மரபு. ஆகவே, இந்த நிலையை எதிர்கொள்வது மிகமிக அவசியமானதாகும்.

ஆனால், இத்தகைய அடிப்படைகள் தற்போது நடைபெறும் பேச்சுகளின்போது உள்ளடக்கப்பட்டுள்ளனவா?

மேலும் இந்தப் பேச்சுகளில் அவை உருவாக்கப்பட்டுள்ளனவா?

அல்லது, பேச்சுகளில் ஈடுபடும் இரண்டு தரப்புகளிடமும் மேற்குறிப்பிட்டவாறான அடிப்படைப் பண்புகளும் அவசியங்களும் உள்ளனவா?

அல்லது அவை இவற்றைக் குறித்துச் சிந்திக்கின்றனவா?

இல்லை, இனியாவது, இத்தகைய அடிப்படைகளின் அவசியம் குறித்துச் சிந்திப்பதற்கு இந்தத் தரப்புகள் தயாரா?

என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு தரப்பினரிடமும் இத்தகைய உணர்நிலை இல்லை என்றே துணிந்து சொல்வேன். இதைவிட அமைதியைக் குறித்தும் தீர்வைக்குறித்தும் சிந்திப்போரும் அதற்கான சூழமைவுகளைக் குறித்த புரிதலுடன் இல்லை என்றே தெரிகிறது.

ஏனெனில், முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகளையும் விடப் பலவீனமான நிலையில், பொறுப்பும் ஆர்வமும் குறைந்த நிலையில்தான் தற்போதைய பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பேச்சுகள் விருப்பின்மைகளின் மத்தியில், நம்பிக்கையீனங்களின் நடுவே, பொறுப்புணர்வற்ற முறையில் நடைபெறுகின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அத்துடன் வழமையான – தோற்றுப்போன பேச்சுகளின் அதே வடிவிற்தான் இந்தப் பேச்சுகளும் நடக்கின்றன.

ஆகவே, தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையானது, உடன்பாடின்மைகளில் மத்தியில் – நம்பிக்கையீனங்களின் நடுவே இரண்டு தரப்புகளாலும் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடகச் செயல் என்பதாகவே உள்ளது. அரசாங்கத்துக்கு வெளி அழுத்தங்களும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளதால் அது,பேச்சுவார்த்தையை நடத்துகிறது. இதைத்தவிர, இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வொன்றைக் காண வேண்டும் என்ற நோக்கத்தில் அது பேச்சுகளை அழுத்தமாக இன்னும் முன்னெடுக்கப்படவில்லை.

தீர்வைக்குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அடிக்கடி பேசிக் கொண்டாலும் மகிந்தவுடைய மனதில் அதைக்குறித்த தெளிவான சித்திரங்கள் இன்னும் உருவாகவேயில்லை. அப்படி ஒரு அடிப்படையான எண்ணக்கரு அவரிடம் தோன்றியிருக்குமானால், அரசாங்கத்தில் அது நிச்சயமாகப் பிரதிபலித்திருக்கும்.

அதுமட்டுமல்ல, இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டும் எனச் சிந்திக்கும் தரப்பினர் எவரும் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருப்பதாகவும் தெரியவில்லை. மகிந்த ராஜபக்ஸவைப் பொறுத்தவரை, அவர் தான் தீர்மானமெடுத்த காரியங்களைச் செய்து, தன்னுடைய அடையாளத்தைப் பொறிப்பதில் முனைப்புள்ள ஒருவராகவே இருந்துள்ளார். ஆர். பிரேமதாஸவைப்போல தன்னுடைய தீர்மானங்களுக்கான எதிர்விளைவுகளைப் பற்றி அதிகம் சிந்திக்காத ஒருவர் அவர். ஆனால், இனப்பிரச்சினைக்கான தீர்வைக்குறித்து அவர் அப்படி எதுவும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் – நிர்ப்பந்தங்கள் காரணமாகவே அது பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது என்பது பகிரங்கமான உண்மையாகும். இதை ஒத்த நிலையிற்தான் கூட்டமைப்பும் உள்ளது. கூட்டமைப்புக்கும் பேச்சுக்குச் செல்லவேண்டும் என்ற வெளி அழுத்தங்களும் உள் அழுத்தங்களும் அதிகமாகவே காணப்படுகின்றன. அதனுடைய அபிமானத்துக்குரிய சக்திகளான இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் விருப்பத்துக்காக அது பேச்சு மேசைக்குச் செல்கிறது. அல்லது அவற்றின் நிர்ப்பந்தத்திற்கமைய அது பேச்சுகளை விட்டு விலக முடியாதிருக்கிறது.

அதேவேளை இந்தப் பேச்சுவார்த்தையை விட்டால், அதற்கு அரசியல் ரீதியாக எந்த முக்கியத்துவமோ, எந்த வேலைத்திட்டமோ இல்லை என்ற நிலையும் உள்ளதால், எப்படியோ அது பேச்சுவார்த்தையிற் கலந்தே தீரவேண்டும் என்ற அவசியத்திலுமுள்ளது. ஏனெனில், அரசியற் தீர்வைத் தவிர, மக்களுக்கான வேறு சமூக வேலைத்திட்டங்களை கூட்டமைப்பு தன்னுடைய அகத்தில் கொண்டிருக்கவேயில்லை. இதனால், அரசியற் பிரச்சினையைக் குறித்த விவகாரத்துடனேயே அதனுடைய அரசியல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், எந்த நிலையிலும் இந்தப் பேச்சுகளின் மூலமாக எத்தகைய தீர்வும் கிட்டிவிடாது என்ற எண்ணத்தோடே அது பேச்சுகளிற் கலந்து கொள்கிறது. மகிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் முந்திய அரசாங்கங்களைப் போலவே காலத்தை இழுத்தடிக்குமே தவிர, தீர்வை முன்வைக்காது என்ற முன்னுணர்வுடன் – அச்சத்துடன் – நம்பிக்கையீனத்துடன் பேச்சுமேசையில் கலந்து கொள்கிறது கூட்டமைப்பு.

பேச்சுவார்த்தை தொடர்பாக கூட்டமைப்புத் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் செய்திகளையும் அறிவிப்புகளையும் நோக்கினாலே இது தெளிவாகத் தெரியும். இந்த அறிவிப்புகளில் அரசாங்கத்தின் மீதான அதனுடைய நம்பிக்கையீனங்களையும் குற்றச்சாட்டுகளையும் வெளிப்படையாகவே காணமுடியும்.

இதேவேளை, இதை ஒத்ததாகவே அரசாங்கத்தரப்பின் அறிவிப்புகளும் உள்ளன. கூட்டமைப்பினருடன் பேசுவதைக் குறித்து திருப்தியளிக்கக் கூடிய அறிவிப்புகளை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இதுவரை வெளியிட்டது கிடையாது. மறுதரப்பைக் கண்ணியமாக நடத்துவதன் மூலமே – மறுதரப்புக்கு அளிக்கும் மதிப்பின் மூலமே – நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் வளர்க்க முடியும் என அது சிந்திப்பதாகத் தெரியவில்லை.

பதிலாக, கிண்டலாகவும் குற்றம் சாட்டுவதாகவும் நம்பிக்கையீனங்களை வெளிப்படுத்துவதாகவுமே அதனுடைய போக்குள்ளது. அரசாங்கத் தரப்பிலிருந்து பேச்சுகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் அமைச்சரவைப் பேச்சாளரான ஹெகலிய ரம்புக்வெல, மிக மலினமான முறையில் – பேச்சுகளை உதாசீனப்படுத்தும் வகையிலேயே பேச்சுத் தொடர்பான அபிப்பிராயங்களை வெளிப்படுத்துகிறார். இதெல்லாம் பேச்சுகளின் மீதான நம்பிக்கையீனங்களையே – சாத்தியமின்மைகளையே வெளிப்படுத்துகின்றன.

ஆகவே, நம்பிக்கையீனங்களின் மத்தியில் நடைபெறும் பேச்சுவார்த்தையாகவே இந்தப் பேச்சுகள் உள்ளன. நம்பிக்கையீனங்களின் மத்தியில் நடைபெறும் எந்தப் பேச்சுகளும் வெற்றியளிப்பதில்லை. அவை ஒரு போதுமே முன்னோக்கி நகர்வதும் இல்லை. பேச்சுக்களின் அடிப்படைகளே மாறுபடும்போது அவற்றின் முன்னேற்றத்தைக் குறித்து யாரும் அதிகம் எதிர்பார்க்க முடியாது.

ஆகவே, இந்தப் பேச்சுகள் ஒரு தீர்வை நோக்கிச் செல்லவில்லை, செல்வதாகவும் இல்லை. அப்படி ஒரு தீர்வைக் காணவேண்டும் என்ற நோக்கில் செயற்படுத்தப்படவும் இல்லை.

எனவே முடிந்த முடிவாக நாம் ஒரு தெளிவுக்கும் தீர்மானத்துக்கும் வந்து விடமுடியும். தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைக்குக்கும் அரசாங்கத்துக்குமிடையில் தொடர்ந்து நடைபெறும் பேச்சுகள் தீர்வைச் சாத்தியப்படுத்தாது.

அவ்வாறாயின் பேச்சுகள் ஏன் நடைபெறுகின்றன?

அதுவும் முன்னரே சொல்லப்பட்டு விட்டது. வெளியுலகின் விருப்பங்களுக்காகவும் தேவைகளுக்காகவுமே இந்தப் பேச்சுகள் நடைபெறுகின்றன. அவற்றுக்காகவே இரண்டு தரப்புகளும் பேசுகின்றன.

பிறருக்காக அடங்கியிருத்தல், பிறருக்காக அடங்கிச் செயற்படுதல் என்ற வகையில் இந்த நிலைமை உருவாகியுள்ளது. சொந்த மக்களுடைய நலன்களைக் குறித்துச் சிந்திக்க வேண்டிய இலங்கையின் தமிழ் – சிங்கள அரசியற் தலைமைகள் பிறத்தியாருக்காகச் சேவையாற்ற – செயலாற்ற வேண்டியுள்ளது. ஆகவே, சொந்த மக்களைக் குறித்து இவர்களால் சிந்திக்க முடியாத நிலையை இவர்களே உருவாக்கியுள்ளனர். மேலும் அவ்வாறான ஒரு நிலையை பராமரித்தும் வருகின்றனர்.

ஆகவே, இந்தப் பேச்சுகள் வெளியுலகின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே நடக்கின்றன. எனவே இதன் போக்கும் அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே அமையும். அந்த நிகழ்ச்சி நிரல் எப்படி அமையும் என்பதே இன்றைய பெருங்கேள்வியாகும். அல்லது இந்த நிகழ்ச்சி நிரலை யார் எப்படிக் கையாளப் போகின்றனர் என்பது கேள்வியாகும்.

வெளித்தரப்பினுடைய நிகழ்ச்சி நிரலின்படியே இலங்கையில் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின் முடிவும் யுத்தத்தின் முடிவும் அமைந்தது.

இனப்பிரச்சினைக்கான ஆயுதப்போராட்டத்தின் முடிவானது வெளித்தரப்பின் நிகழ்ச்சி நிரலின்படியே நடந்து முடிந்திருக்கிறது. ஆயுதப்போராட்டத்தை வீங்க வைத்ததில் இந்தியா அதிக பங்கை அளித்திருந்தது. பின்னர் அதைச் சீரழித்ததிலும் அதுவே பெரும் பங்கை வகித்தது. இறுதியில் புலிகளை ஒடுக்கியபோதும் இந்தியாவின் பங்களிப்பிருந்தது. கூடவே மேற்குலகின் அனுசரணையும்.

ஒரு கூட்டு நடவடிக்கையாகவே யுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் தனித்து நின்றது எதிர்த்தரப்பிலிருந்த விடுதலைப்புலிகள் மட்டுமே. விடுதலைப் புலிகளை மையப்படுத்தி, அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையை, ஒரு கூட்டு நடவடிக்கையாக மேற்குலகமும் இந்தியாவும் இலங்கையும் இணைந்து மேற்கொண்டன. களத்தில் அதைச் செயற்படுத்தியது மட்டுமே இலங்கை.

இதை நாம் கீழ்க்கண்டவாறு விளங்கிக் கொள்ளலாம்.

1. விடுதலைப்புலிகளை ஒடுக்க வேண்டிய தேவை இலங்கைக்கு இருந்தது.

2. விடுதலைப்புலிகளை ஒடுக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது.

3. விடுதலைப்புலிகளை ஒடுக்க வேண்டிய தேவை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்துக்கு இருந்தது.

4. விடுதலைப்புலிகளை ஒடுக்க வேண்டிய தேவை இலங்கைக்கும் இருந்தது.

5. விடுதலைப்புலிகளை ஒடுக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கும் இருந்தது.

6. விடுதலைப்புலிகளை ஒடுக்க வேண்டிய தேவை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்துக்கும் இருந்தது.

முதல் நிலையானது, அவரவருக்கான தனித்தனியான பிரச்சினைகளின் விளைவின்படி உருவான தீர்மானம். அல்லது தேவை. இரண்டாவது நிலையானது, இந்தப் பிரச்சினைகளின் தேவை ஒரு பொதுப் புள்ளியில் இணைந்தது. அதன்படியே ‘இலங்கைக்கும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் தேவை’ என்ற ‘ம்’ விகுதியின் பாற்பட்ட ஒன்றிணைவாகும்.

ஆகவே மற்றவர்களுக்கான தேவையை மையப்படுத்தி, அந்த நிகழ்ச்சி நிரலுக்குள் தன்னுடைய தேவையையும் நிகழ்ச்சி நிரலையும் புகுத்திக் காரியமாற்றியது சிங்கள உயர்குழாம்.

எனவே, விடுதலைப்புலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட போரானது, சந்தேகத்திற்கிடமின்றி, ஒரு கூட்டு நடவடிக்கையே. அந்தக் கூட்டு நடவடிக்கையின் தன்னுடைய நலன்களை முழுமையாகப் பெற்றுக்கொண்டது இலங்கை.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் உள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் புலிகளுடன் மேற்குலகம் அதிக உறவையும் விட்டுக்கொடுப்புகளையும் செய்கிறது என்று சிங்களத் தரப்புக் கண்டனங்களை வெளியிட்டிருந்தது. அப்போது மேற்குக்கும் இலங்கைக்கும் இடையில் சற்று விலகல் இருந்தது. அப்படியிருந்த நிலையை போர் தொடங்கிய பின்னர் முற்று முழுதாகவே தனக்குச் சாதகமாக மாற்றிப் பயன்படுத்தியது சிங்களத் தரப்பு. இதுதான் சிங்களத் தரப்பின் சாணக்கியம்.

ஆகவே இந்தியா – மேற்கு இணைந்த படை நடவடிக்கையைக் களத்தில் செயற்படுத்தியது மட்டுமே இலங்கை அரசு. அதாவது, களத்தில் நின்று செயற்படும் ஒரு ‘கப்ரனை’ப்போல அல்லது ஒரு ‘லெப்ரினன்ற்’ தரத்தில் உள்ள போர் வீரனைப்போலக் கருமமாற்றியது இலங்கை.

யுத்தத்தைத் தீர்மானித்ததும் அதைத் திட்டமிட்டதும் அதனுடைய வியூகங்களையும் நடவடிக்கைகளையும் தீர்மானித்ததும் இந்தியா உள்ளிட்ட மேற்குலகமே. திட்டத்தை வகுக்கும் உயர் அதிகாரித் தரத்தில் இந்த நாடுகள் மறைமுகமாக நின்று செயலாற்றியுள்ளன.

ஆகவே, அவற்றின் விருப்பத்தின்படி, அவற்றின் தேவையின்படி, அவற்றின் நிகழ்ச்சி நிரலின்படியே இறுதி விளைவுகள் அமைந்தன. இந்த நிகழ்ச்சி நிரலை மாற்றும்படி – டில்லிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தமிழ் நாட்டு மக்கள், அரசியற் கட்சிகள், பொது அமைப்புகள், எனச் சகல தரப்பும் தொடர்போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், டில்லியின் இதயத்தில் எத்தகைய நிலைமாற்றங்களையும் அந்தப் போராட்டங்களும் அந்தக் குரல்களும் ஏற்படுத்தவில்லை. இறுதிவரை டில்லி தனது நிகழ்ச்சி நிரலை மாற்றவேயில்லை. அது தன்னுடைய இலக்கிலேயே குறியாக இருந்து அதில் வெற்றியும் பெற்றது.

அவ்வாறே, மேற்குலகின் அணுகுமுறைக்கு எதிராக – அதனுடைய அனுசரணையுடன் (வன்னியில்) நடைபெற்ற யுத்தத்துக்கு எதிராகப் புலம் பெயர் தமிழர்கள் பெரும் போராட்டங்களை வெளிநாடுகளில் நடத்தினார்கள். ஒப்பீட்டளவில் அவை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களால் நடத்தப்பட்ட மிகப் பெரும் போராட்டங்கள். அந்தப் போராட்டங்களை முன்னெடுத்த முறைகளைப்பற்றி யாருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அந்தப் போராட்டங்கள் முக்கியமானவை. அவற்றின் உணர்வு முக்கியமானது. சனங்களைக் குறிவைத்த யுத்தத்தை, சனங்கள் ஆயிரக்கணக்கில் பலியாகிக்கொண்டிருந்த யுத்தத்தை அந்தப் போராட்டங்கள் நிறுத்தக் கோரியதால், அவற்றுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது.

ஆனால், மேற்குலகம் அதைப் பொருட்படுத்தவேயில்லை. அன்பையும் கருணையையும் போதிக்கும் மேற்கின் மனச்சாட்சியை எந்தக் குரலும் உலுக்கவில்லை. மனிதாபிமானத்திலும் ஜனநாயக விழுமியத்திலும் மனித உரிமைகளிலும் அதிக கரிசனையுடையதாகக் காட்டிக் கொள்ளும் மேற்குலகம் தன்னுடைய முற்றத்தில் நடத்தப்பட்ட அந்தப் போராட்டங்களைக் கவனத்திற் கொள்ளவேயில்லை. அவை கோரிய மனிதாபிமானத்தை ஏற்கவில்லை.

இன்று போர்க்குற்றங்களைப் பற்றிக் கதைக்கும் அதே மேற்குலகம் அன்று அந்தப் போர்க்குற்றங்களைத் தடுக்கவில்லை. அந்தக் குற்றங்களில் மறைமுகப் பங்காளியாக இருந்தது. அதற்கு அதனுடைய தேவைகளே முதன்மையானவையாக இருந்தன. அதற்கு அதனுடைய நலன்களே முக்கியமானதாக இருந்தது. ஆகவே அது, தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்கே இடமளித்தது. அந்த நிகழ்ச்சி நிரலில் எத்தகைய குழப்பங்களோ, மாற்றங்களோ ஏற்பட அது விரும்பவில்லை.

எனவே, அந்தக் கூட்டுப்படை நடவடிக்கை அப்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை வைத்துத் தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொண்டது இலங்கை அரசு. விளைவு, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஏறக்குறைய இதை ஒத்த ஒரு நிலைதான் இப்பொழுது உருவாகியுள்ளது. அதாவது, இப்போது யுத்தம் முடிந்த பின்னரான சூழலிலும். இதை நாம் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டும். ஏனெனில், யுத்தச் சூழலில் இருந்ததைப்போல இப்பொழுதும் ஒரு ஆபத்தான் நிலைமையே தோன்றியுள்ளது.

யுத்தத்துக்குப் பின்னர் இலங்கையுடன் சற்றுக் கடினமான முறையில் நடந்துகொள்வதாகக் காட்டிக் கொண்டது மேற்குலகம். இதற்கான காரணங்கள் பல. அவற்றில் முக்கியமானது, மனித உரிமைகள் விடயத்தில் தான் எப்போதும் கண்ணியமாக நடந்து கொள்வதாக உலகத்துக்கு நிரூபித்துக் கொள்வது.

இரண்டாவது, போருக்குப் பிறகு, இலங்கை சற்று வெளிப்படையாகவே சீனாவின் பக்கமாகச் சாயத் தொடங்கியது. இதன்காரணமாக இலங்கைக்குச் சற்று வெளிப்படையான அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் கொடுப்பதற்கு மேற்கு முயற்சித்துக் கொண்டது.

அவ்வாறு அழுத்தத்தைக் கொடுத்து மீண்டும் இலங்கையைத் தன்னுடைய நிழலில் வைத்துக்கொள்வது. இதற்காக அது, இலங்கையின் மீதான குற்றங்களை பற்றி அக்கறை கொண்டது. இதன்படி, போரின்போது படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்ற மக்களை இலங்கை அரசாங்கம் நடத்திய விதத்தைப் பற்றித் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்ற வேண்டும். அவர்களுடைய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றவாறாக. பிறகு, இலங்கையின் மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், ஜனநாயக மேம்பாடு போன்ற விசயங்களைப் பற்றிய தன்னுடைய எதிர்பார்ப்புகள் என்ற வகையில் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியது.

இதேவேளை, எதிர்க்கட்சிகளை ஊக்கப்படுத்தி, யுத்த வெற்றியை அடிப்படையாக வைத்து தன்னை ஸ்தாபிக்கும் அரசாங்கத்தின் தீவிர நிலையைக் கட்டுப்படுத்த முனைந்தது. முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை அரசியலிற் களமிறக்கியதும் இந்த வகையிற்தான்.

பின்னர், இலங்கையின் போர்க்குற்ற விசாரணை, போர்க்குற்ற ஆதாரங்கள் என்ற வகையில் மென் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கொடுக்க முற்பட்டது.

ஆனால், இவையெல்லாம் முற்று முழுதாக மகிந்த ராஜபக்ஸ அரசை நெருக்கடிக்குள்ளாக்கி அதிகாரத்திலிருந்து நீக்குவதாக அமையாது. பதிலாக, சற்று மென் தீவிர நிலையில் ஒரு அழுத்தத்தைக் கொடுத்து தன்னுடைய நலன்களுக்கமைவாக அதை இயைபடைய வைப்பதற்காகவே. மற்றும்படி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தோ அல்லது அவர்களுடைய அரசியல் உரிமைகளை இலங்கை அரசு வழங்க வேண்டும் என்றோ இந்தக் கண்டனங்களை அது வெளிப்படுத்தவில்லை. இந்த நோக்கில் இலங்கைக்கான அழுத்தங்களை ஏற்படுத்தவும் இல்லை.

இதற்கு நல்ல ஆதாரம், போர்க்குற்றங்கள் பற்றிய பேச்சையும் போர்க்குற்ற ஆதாரங்கள் பற்றிய வெளிப்படுத்தல்களையும் இப்பொழுது, மேற்கு மெல்லத் தணிவு நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. மேலும் இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ற அறிக்கையினை இந்தியா உள்ளிட்ட மேற்கை மையப்படுத்திய சர்வதேச சமூகம் மென்தொனியில் வரவேற்றிருப்பது. இந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலங்கைக்கு ஆலோசனை கூறியதே இந்த அணிகள்தான் என்று நம்பகமான தகவல்கள் வேறு சொல்கின்றன.

ஆனால், இந்த அறிக்கை தொடர்பாக உள்ளுர் மட்டத்தில் – குறிப்பாகப் போரிலே பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் – அதிருப்தியான ஒரு நிலை இருக்கும்போதே வெளியுலகம் இந்த அறிக்கையை வரவேற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

இதுமட்டுமல்ல, இந்த மேற்கை மையப்படுத்திய சர்வதேச சமூகமே இப்போது இலங்கை அரசையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பேச்சுவார்த்தை மேசையிலும் அமர்த்தியுள்ளன. முன்னர் வெளிப்படையான மத்தியஸ்தத்தை நோர்வேயைக் கொண்டு செய்த மேற்கு தற்போது, அந்தப் பாத்திரத்தை இன்னொரு விதத்தில் மறைமுகமாக ஆற்றுகிறது.

பேச்சுகளை வலியுறுத்தும் இந்தத் தரப்புகள் எதுவும் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றோ, குறிப்பிட்ட கால எல்லை ஒன்றை நிர்ணயிப்பது தேவையானது என்றோ எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தாம் அதிகமாகத் தலையிட விரும்பவில்லை என்று இந்த நாடுகள் கூறலாம். ஆனால், இவை அதையும்விட அழுத்தமான பல தலையீடுகளைச் செய்வதையும் விட இவ்வாறு கருத்துக்கூறுவதொன்றும் பெரிய விவகாரமில்லை.

எனவேதான், பேச்சுகளைத் தொடர்வதில் பயனில்லை என்று தெரிகிறது. இவ்வாறு தெளிவாகத் தெரிந்த நிலையிலும் மேற்கு மற்றும் இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு அல்லது அந்த நிகழ்ச்சி நிரலைப் புறக்கணிக்க முடியாதவாறு பேச்சுகள் தொடர்கின்றன. முன்னர் குறிப்பிட்டிருப்பதைப்போல, இந்தக் கூட்டுத் தரப்பு தனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப யுத்தத்தை நடத்திய மாதிரியே தற்போது பேச்சுவார்த்தையையும் தனது நிகழ்ச்சி நிரலுக்கமைவாக நடத்த முற்படுகிறது.

எனவேதான் விருப்பமோ, நம்பிக்கையோ, உடன்பாடோ இல்லாத நிலையிலும் இரண்டு தரப்பும் பேச்சு மேசைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நிலையிற்தான் பேச்சுகளும் நடத்தப்படுகின்றன. அவ்வாறாயின் இவை இலங்கை மக்களுக்கானதாக இன்றி, யாருக்காகவோ நடத்தப்படுகிற பேச்சுகளாகத்தானே இருக்கின்றன?

ஆம், அதுதான் உண்மை.

எனவே, இந்தப் பேச்சுவார்த்தையில் எத்தகைய முன்னேற்றம் – எத்தகைய சாத்தியங்கள் உருவாகும்? என்றால், அமைதிக்கான தீர்வை நோக்கிய சாத்தியங்கள் நிச்சயமாக உருவாக முடியாது என்பது தெளிவாகவே புலப்படுகிறது. அதேவேளை இந்தப் பேச்சுகள் பிற தரப்பினரின் நிர்ப்பந்தத்தின்படி தொடர்ந்தால், அது ஏற்கனவே இலங்கை இந்திய உடன்படிக்கையின்போது முன்வைக்கப்பட்ட ஒரு தீர்வுத்திட்டத்தைப் போலவே அமையக்கூடும். அதற்கான சாத்தியங்களே இப்பொழுது அதிகமாகத் தென்படுகின்றன.

எனவேதான், போரை தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்கூடாக நடத்தி, புலிகளை ஒடுக்கி, நிலைமையைத் தனது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வர முயன்றதைப்போல, தற்பொழுது இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலமாக தனக்குச் சாதகமான ஒரு சூழலை இலங்கையில் உருவாக்கவே மேற்கும் இந்தியாவும் விரும்புகின்றன.

போரின்போது ஸ்திரமற்ற நிலையில் இருந்தது இலங்கை. போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலமாக ஒரு வகையான அச்சுறுத்தல் – புலிகளின் தரப்பிலிருந்து உருவாகக்கூடியதாக இருந்த அச்சுறுத்தல் நீங்கி விட்டது. எனவே, இப்பொழுது முழு இலங்கையிலும் தனக்கிசைவான ஒரு சூழலை உருவாக்குவதே மேற்கினதும் இந்தியாவினதும் விருப்பமும் நோக்கமுமாகும். மேற்கின் நிகழ்ச்சி நிரலுடன் தன்னுடைய நலன்சார் நிகழ்ச்சி நிரலையும் இந்தியா உருவாக்கியுள்ளதை இங்கே நாம் இணைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே, நிச்சயமாகத் தம்முடைய தேவைகளுக்காகவும் தம்முடைய நோக்கங்களுக்காகவுமே இந்தப் பேச்சுவார்த்தைக்கான ஒரு கூட்டு நடவடிக்கையை இந்தியாவும் மேற்குலகும் மேற்கொள்கின்றன. தமக்கிசைவான ஒரு பிராந்தியமாக இலங்கையை வைத்துக்கொள்வதே இவற்றின் நோக்கமாகும். இதற்கு இலங்கை அரசு வெளிப்படையாக எதிர்ப்புக் காட்டமுடியாத ஒரு நிலையில் உள்ளது. காரணம், இலங்கை அரசு கடந்த காலத்தில் மேற்கொண்ட தவறுகளும் குற்றச்செயல்களும் மனித உரிமை மீறல்களும் அதன் சுயாதீனத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளன. இவற்றை வைத்து மேற்கு இலங்கையைப் பணிய வைக்கிறது.

ஆனால், இவை தமிழ்த்தரப்பை அப்படிச் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஏனெனில் யுத்த நடவடிக்கைகளுடன் பேச்சுகளில் ஈடுபடும் கூட்டமைப்பு நேரடியாகச் சம்மந்தப்பட்டதல்ல. யுத்தக் குற்றங்களில் கூட்டமைப்பை யாரும் நேரடியாகக் குற்றம் சுமத்த முடியாது. அத்துடன், கூட்டமைப்பு தேர்தல் மூலமாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு தரப்பு. ஜனநாயக ரீதியாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு தரப்பு. ஆனாலும், தமிழ்த் தரப்புத் தன்னுடைய சுயாதீனத்தை இழந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?

இங்கேதான் கூட்டமைப்பின் அரசியல் திறன்களைக் குறித்தும் அர்ப்பணிப்புத் தன்மையைக் குறித்தும் கேள்விகள் – ஐயங்கள் எழுகின்றன. எதற்காகக் கூட்டமைப்புத் தடுமாற வேண்டும்? இந்தியா – மேற்குலகின் விருப்பங்களை கூட்டமைப்பு நிறைவேற்ற முனைவதனால், ஏதாவது பிரச்சினைகள் உருவாகுமா? தமிழ் மக்களுக்கு இதனால், என்ன நன்மை, தீமைகள் ஏற்படும்?

கூட்டமைப்பின் தடுமாற்றங்கள் அதனுடைய பிறவிப் பலவீனத்தின்பாற்பட்டவை. விடுதலைப் புலிகளின் காலத்தில் நிலவிய ஒரு தேவையின் நிமித்தமாக அதிரடியாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பானது, எதிர்பாராத நிகழ்ச்சிகள் – நிலைமைகளின் விளைவாக அரசியல் அரங்கில் நீடித்தும் நிலைத்தும் முன்னிலையிலும் இருக்க வேண்டிய அமைப்பாகியிருக்கிறது.

பின்னர் உருவாகிய காலமாற்றங்கள், சூழல் மாற்றங்கள், நிலைமைகளின் விளைவுகள் போன்றவற்றை உள்வாங்கி அது தன்னை ஒரு மக்கள் அமைப்பாக மாற்றிக்கொள்வதற்கு அது முயற்சிக்கவில்லை. எனவே அது நிரந்தரப் பலவீனத்துடன் தொடர்ந்தும் இருக்கிறது.

ஆகவே, இந்தப் பலவீனத்தை இந்தியாவும் மேற்குலகும் நன்றாகவே விளங்கிக்கொண்டு கூட்டமைப்பின் மீது நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துகின்றன. தவிர, வேறு எந்த மார்க்கங்களினூடாகவும் அரசியற் தீர்வுக்கு இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க முடியாத நிலையில் கூட்டமைப்பு இருக்கிறது என்றும் வெளியுலகத்துக்குத் தெரியும். ஆகவே, அது மிக இலகுவாகக் கூட்டமைப்பைத் தன்னுடைய இரண்டு கால்களுக்கிடையிலும் வைத்திருக்கப்பார்க்கிறது.

போரின்போது தனக்குச் சாதகமான ஒரு நிலையை எட்டுவதற்கு – விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு – இலங்கை அரசு மேற்குடன் ஒத்துழைத்து அதில் வெற்றியீட்டியது. அல்லது இந்திய – மேற்குக் கூட்டு நிகழ்ச்சி நிரலுக்கூடாகத் தன்னுடைய நலன்களையும் வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது என்று கண்டோம்.

ஆனால் இந்தக் கூட்டு நிகழ்ச்சி நிரலினால் தமிழர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இந்தக் கூட்டு நிகழ்ச்சி நிரலை உடைக்கக் கூடியதாகவோ, இதைப் பலவீனப்படுத்தக் கூடியதாகவோ தமிழ்த் தரப்பின் செயற்பாடுகளும் சாணக்கியங்களும் இருக்கவில்லை.

இப்போதும் அத்தகைய ஒரு நிலையை எட்டுவதற்கே இலங்கை அரசு முற்படுகிறது. ஆனால், இதை முறியடிப்பதற்கோ – இதைத் தமக்குச் சாதகமாகக் கையாள்வதற்கோ தமிழர்களிடம் எத்தகைய செயற்றிட்டங்களும் இல்லை. சிந்தனையும் இல்லை. கூட்டமைப்பிடம் மட்டுமல்ல, எந்தத் தமிழர்களிடமும் மாற்றுப்பொறிமுறை ஒன்று கிடையாது.

இத்தகைய நிலையில்தான் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, மிகப்பலவீனமான நிலையில் – எடுப்பார் கைப்பிள்ளைகளைப் போன்ற நிலையில் – தான் தமிழ்த்தரப்பினர் பேச்சுமேசைக்குச் செல்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், கடந்த மாதம் இலங்கை அரசுக்கு இருந்த நெருக்கடி நிலை இன்று இல்லை. பாராளுமன்றத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்ததன் மூலம் தனக்கான நெருக்கடியைச் சற்றுத் தணித்துள்ளது இலங்கை அரசு. பாராளுமன்றில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை ஐ.நா செயலாளர் பான்கி மூன் வரவேற்றிருப்பதை நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் நோக்க வேண்டும்.

இத்தகைய சாதுரியங்களைச் செய்வதில் சிங்கள இராசதந்திரம் மிகக் கெட்டித்தனமானது. போர்க்குற்றச்சாட்டுகள் பற்றிப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுதே – தேர்தலுக்கான சாத்தியங்கள் இல்லை என்று வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலே அது தேர்தல்களை நடத்தி, தன்னுடைய ஜனநாயக வெளிப்பாட்டுத்தன்மையைக் காட்டியது. இது ஒரு சாணக்கியமான செயற்பாடே.

ஆகவே, சிங்கள அதிகார வர்க்கம் மிகச் சாதுரியமாக அரசியலைக் கையாண்டு வெற்றியடைந்து வருகிறது. அல்லது தன்னுடைய நெருக்கடிகளைக் கடந்து செல்கிறது.

1. தன்னை நோக்கி வரும் நெருக்கடிகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வது அல்லது விலகிக் கொள்வது.

2. தன்னைச் சூழ்ந்துள்ள நெருக்கடிகளை முறியடிப்பது. (இவற்றை அது நிலைமைக்குத் தக்கமாதிரிக் கையாண்டு கொள்கிறது).

3. எதிரணிகளை தனக்குச் சாதகமாக இயங்க வைப்பது அல்லது, எதிர்த்தரப்பின் உபாயங்களுக்குள் தன்னுடைய உபாயங்களையும் இணைத்துக் கொள்வது.

இவ்வாறு மிக நுட்பாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் அபாயங்கள் அதிகமானதுமாக உள்ள பிராந்தியத்திலேயே பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் எப்படித் தமிழர்கள் ஒரு அரசியற் தீர்வை நம்பிக்கையோடு எதிர்பார்க்க முடியும்?

(Posted by tbcuk)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com