|
||||
|
ஜெனீவாவில் தீர்மானமும்
உளவியல் யுத்தமும் (சபா நாவலன்)
ஐக்கிய நாடுகள் சபையின் “மனித உரிமை”
ஆணையகம் 27ஆம்
திகதி ஆரம்பமாகவுள
அதன் கூட்ட
அமர்வுகளில்
இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம்
ஒன்றை நிறைவேற்றலாம்
என எதிர்வுகூறப்படுகிறது. சில மேற்கு நாட்டு அரசுகளால்
இலங்கை அரசிற்கு எதிரான பரிந்துரை
முன்மொழியப்படும்
எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
இது வரை எந்த மேற்கு
நாடுகளும்
இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம்
நிறைவேற்றப்படும்
என்று உத்தியோகபூர்வமாக
அறிவிக்கவில்லை.
உலகமக்களை
அதிர்ச்சியில்
உறையவைத்த,
குறுகிய நாட்களில்
திட்டமிட்டு
நிகழ்த்தப்பட்ட
மனிதப்படுகொலைகள்
நிறைவேற்றப்பட்ட
மூன்றாவது
ஆண்டை அண்மித்துக்கொண்டிருக்கிறோம்.
சாரி சாரியாக
மக்கள் கொல்லப்பட்ட
வேளைகளில்
செய்மதிகளில்
அவற்றைப்
பார்த்துக்
கொண்டு வாழாவிருந்த
அமரிக்காவையும்
யுத்தத்திற்கான
அழிவு ஆயுதங்களை
வழங்கிய மேற்கு நாடுகளையும்
மீண்டும்
ஒரு முறை
நம்புங்கள்
எனக் கோரிக்கை
முன்வைக்கப்படுகின்றது.
மேற்கு நாடுகள்
ராஜபக்ச அதிகாரத்திற்குத்
தண்டனை வழங்கும் என மக்களின்
உணர்வுகளில்
அறைந்து சொல்லப்படுகின்றது.
1986
ஆம் ஆண்டு
இலங்கை மனித் உரிமைகள்
ஆணயகத்தில்
அரசிற்கு
எதிராக மனித உரிமை
மீறல் பரிந்துரைகள்
முன்வைக்கப்படன. அதனை முன்வைத்தது
இந்தியா.
அதற்கு எதிர்ப்புத்
தெரிவித்ததோ
அமரிக்காவும்
ஏனைய மேற்கு
நாடுகளும்.
இந்திய அரசு இந்த
முன்மொழிவை
முன்வைத்த
போது அன்று
இந்தியாவை
நோக்கி அண்ணார்ந்து
பார்த்து
ரசித்துக்கொண்டிருந்த
அதே மனோநிலை
கொண்ட ஒரு கூட்டம்
இன்று அமரிக்காவை
ஆண்டவனாகப்
போற்றுகின்றது.
இந்தியா இந்தத்
ஐக்கிய நாடுகள் ஆணையகத்தில்
இலங்கைக்கு
எதிராக தீர்மான நிறைவேற்ற
முற்பட்டது
தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களின்
அடிப்படையில்
அல்ல, மாறாக
தனது அதிகாரத்தை
இலங்கையில்
நிறுவிக்
கொள்வதற்கான
ஆயுதமாகவே
அதனைப் பயன்படுத்திக்கொண்டது.
இந்தியா எவ்வாறு
தனது சொந்த
ஆதிக்க நலனுக்காக
இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானத்தை
நிறைவேற்ற
முற்பட்டதோ
அதற்குச்
சற்றும் குறைவற்ற கொடிய நோக்கத்துடனேயே
அமரிக்காவும்
அதன் நேச
அணிகளும்
இன்று செயலாற்றுகின்றன.
இந்தியா அன்று
பங்களாதேஷ்
என்ற நாட்டை
உருவாக்கிய
அந்த நாட்டில்
பட்டினியால்
செத்துப்போகும்
மக்கள் கூட்டம் ஒன்றை உருவாக்கியது
போன்றே இன்று அமரிக்கா
இனக்குழுக்களை
மோதவிட்டு
வேடிக்கை
பார்க்கும்
தென் சூடானை
உருவாக்கியிருக்கிறது.
இந்தியா தனது அதிகாரவர்க்கம்
சார்ந்த பிராந்திய
நலனுக்காக
உருவாக்கிக்
கொண்ட பங்களாதேஷ்
போன்றே தென் சூடானும்
அமரிக்க நலனுக்காக
உருவக்கப்பட்டு
அழிக்கப்படுகிறது.
இந்த இரண்டு
நாடுகளுமே
உரிமைக்கான
போராட்டங்களையும்,
தேசிய விடுதலைப்
போராட்டங்களையும்
அழித்துச்
சிதைத்துச்
சின்னாபின்னமாக்கிய
குருதிக்
கறைகளை வரலாறு முழுவதும்
கண்டுகொள்ளலாம்.
விடுதலை பெற்றுக்கொள்வதற்காக
அதிகார வர்க்கத்தை
நம்பக் கோரும் தலமைகளின்
வியாபார-வர்க்க
நலன்கள் மக்கள் நலன் போலப்
பிரச்சாரப்படுத்தப்படுகின்றன.
இவை அனைத்துக்கும்
மத்தியில்
1986 ஆம் ஆண்டில்
இலங்கை அரசிற்கு எதிராக அமரிக்காவின்
அனுசரணையோடு
முறியடிக்கப்பட்ட
தீர்மானம்
இன்று 2012 இல் நிறைவேற்றப்படுமானால்
அதனை மக்கள்
பற்றுள்ள
யாரும் நிராகரிக்க
முடியாது.
அதே வேளை
இந்தத் தீர்மானத்தைப்
பயன்படுத்திக்கொள்ளும்
அரசியல் தலைமை அற்ற
நிலையில்
அமரிக்கா
இதனைப் பயன்படுத்திக்கொள்ளும்
என்பதையும்
மக்கள் மத்தியில்
தெளிவுபடுத்த
வேண்டும்.
இந்தியாவிற்கு எதிராக
உருவாக்கத்தவறிய
விழிப்புணர்வு
அமரிக்க ஏகாதிபத்தியத்திற்கு
எதிராக உருவாக்கப்பட
வேண்டும்.
லொபி அரசிய என்ற பெயரோடு
அலையும் அரசியல் போலிகளுக்கு
எதிரான கருத்தியலும்
இதனோடு இணைந்தே உருவாக்கப்பட
வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை
ஆணையகத்தில்
ராஜபக்ச அரசு தண்டிக்கப்படலாம்
என்ற தவறான
அபிப்பிராயம்
குறுக்கு
வழி அரசியல்
வியாபாரிகளால்
திட்டமிட்டே
உருவாக்கப்படுகின்றது. மனித உரிமை ஆணையகத்திற்குத்
தீர்மானங்களை
நிறைவேற்றும்
அதிகாரம்
மட்டுமே உண்டு. இவ்வாறான தவறான நம்பிக்கைகளை
மக்கள் மத்தியில்
தொடர்ச்சியாக
விதைக்கப்படுகின்றன.
இதனூடாக, ஒரு புறத்தில்
மக்கள் மத்தியில்
வெறுப்புணர்வை
ஏற்படுத்தும்
இந்த அரசியல்
வியாபாரிகள்
மறுபுறத்தில்
ஒடுக்குமுறைக்கு
எதிரான மக்கள் போராட்டங்களைத்
தடுக்கின்றனர்.
தமிழ்ப் பேசும்
மக்களை ஒடுக்கும்
அதிகாரவர்க்கத்தின்
திட்டமிட்ட
உளவியல் யுத்ததின்
ஒரு பகுதியா
இதுவென ஐயம் கொள்வதில்
எந்தத் தவறும் இருக்க முடியாது.
அமரிக்காவைப் பொறுத்த வரையில் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம்
நிறைவேற்றுவதை
விட அவ்வாறான
ஒரு விம்பத்தை
உருவாக்குவதே
போதுமானது. இதனூடாக இலங்கை
அரசை மிரட்டி
தனது நலனை
உறுதிப்படுத்திக்கொள்ள
அமரிக்காவிற்குப்
போதிய வலு உண்டு.
புலம் பெயர் நாடுகளில்
வாழுகின்ற
அரசியல் வியாபாரிகளோ
அமரிக்கா
முயற்சித்துத்
தோற்றுப்
போய்விட்டது
என தமது
கைக்கூலி
அரசியலை மீண்டும் ஆரம்பிக்கச்
சந்தர்ப்பத்தை
உருவாக்கிக்
கொள்வார்கள்.
அமரிக்க அணி புலம் பெயர்
தமிழர்களையும்
இலங்கை அரசையும் ஒரே நேரத்தில்
திருப்திப்படுத்த
இலகுவான வழிமுறையாவும்
இது காணப்படும்.
இலங்கைக்கு வெளிப்படையாக
ஆதரவளிக்க
சீனா, ரஷ்யா
போன்ற நாடுகள் முன்வரும்
நிலை காணப்படுவதால்
பாதுகாப்புச்
சபை வரை
இந்தத் தீர்மானம்
கொண்டு செல்லப்பட்டு
இலனக்கொலையாளிகள்
தண்டிக்கப்படுவார்கள்
என்பதெல்லாம்
வெற்றுக்
கற்பனைகள்.
சீனா, ரஷ்யா போன்ற
நாடுகள் ஆரம்பத்தில்
சோசலிச நாடுகளாக வெற்றிபெற்றிருந்தன. சோசலிச
நாடுகளில்
காணப்பட்ட
பரந்த, ஆழமான மக்கள்
ஜனநாயகம்
மேற்கின்
ஆசியுடன்
அழிக்கப்பட்டு
கட்சிகள்
அதிகாரத்தைக்
கப்பற்றிக்கொண்டு
இப்போது பல தசாப்தங்கள்
ஓடி மறைந்துவிட்டன.
அங்கெல்லாம்
காணப்பட்ட
ஆழமான ஜனநாயகம் அழிக்கப்பட்ட
பின்னர், முதலாளித்துவ
நாடுகளில்
காணப்படும்
குறைந்தபட்ச
ஜனநாயகம்
கூட
மீளமைக்கப்படவில்லை. அப்பட்டமான கொடிய சர்வாதிகாரிகளும்
மக்கள் விரோதிகளும்
ஆட்சியைக்
கைப்பற்றிக்கொண்டனர்.
தமது சொந்த
அரசியல் நலன்களுக்காக
மொத்த மக்களின் எதிர்காலத்தைமே
அழிக்க முனைகின்ற
“தேசிய அரசியல் வியாபாரிகள்”
அமரிக்கா,
ஐக்கிய நாடுகள் சபை என்ற
போலி நம்பிக்கைகள்
ஊடாக நடத்தும்
உளவியல் யுத்தம் எதிர்கொள்ளப்பட
வேண்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |