விஞ்ஞானமும் தொழில் நுட்பமும்
வறுமை ஒழிப்பில்
பாரிய பங்களிப்பு
(பீ. ஏ. அந்தோனிமார்க்)
30
வருட போராட்டங்களின்
பின்பு வளர்ந்து வரும் பொருளாதாரம்
என்ற வகையிலும்,
குறை வருமானம்
பெறும் நாடு என்ற
வகையிலும்,
இடைத்தர வருமானம் பெறும் நாடு என்ற
நிலைக்கு
உயரும் நிலையிலும்
நீடித்து
நிலை நிற்கக்
கூடிய செயல் திட்டங்களை
முன்வைப்பது
மிகவும் முக்கியமாகும்.
இப்படியான ஒரு உள்நாட்டு
சூழ் நிலைக்கு
பொருத்தமாக
விஞ்ஞானமும்
தொழில் நுட்பமும்
பங்களிக்க
வேண்டும்.
எதிர்காலத்தில் அபிவிருத்தியில்
வெற்றியளிக்கக்
கூடிய முன் உரிமைப்படுத்தப்பட்ட
மாற்றம் வேண்டுமாயிருந்தால்
விஞ்ஞானமும்
தொழில் நுட்பமும்
பலன் தரக்கூடிய
முறையில்
பயன்படுத்தப்பட
வேண்டும்.
உலக பொருளாதாரம்
பாரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள
நிலையில்
விஞ்ஞானமும்
தொழில் நுட்பமும்
மக்களின்
நன்மைக்காக
ஓர் அளவு
தான் பயன்படுத்
தப்பட்டுள்ளது.
நாம் இலங்கையில்
பல்வேறு பட்ட சவால்களுக்கு
முகம் கொடுக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
துரதிஷ்ட வசமாகத்
தேவைகளுக்கு
ஏற்ற விதமாக
தொழில் நுட்பம் வளர்ச்சியடையவில்லை.
அல்லது
சவால்களுக்கு
முகம் கொடுக்கும்
விதத்தில்
பயன்படுத்தப்படவில்லை. அதேபோன்று அதிகப்படியான
அரச நிறுவனங்களும்
விஞ்ஞானத்தை
சரியான முறையில் பயன்படுத்த
வில்லை. இலங்கையைப்
போன்ற ஒரு நாட்டில்
விஞ்ஞானத்தையும்
தொழில் நுட்பத்தையும்
பயன் படுத்துவதின்
அடிப்படை
நோக்கம் ஆராட்சியையும்
பயிற்சிகளையும்
நடத்தி ஆபத்தான நேரங்களில்
ஸ்தாபனங்களின்
பொறுப்பான
தலைவர்களுக்கு
தகுதியான
நடவடிக்கை
எடுக்கும்படி
அறிவுரைகளை
வழங்குவதாகும்.
விஞ்ஞானத்தின்
முக்கியத்துவத்தை
அறிந்தபடியினால்
1994 அம் ஆண்டு
11 ஆம் இலக்க
விஞ்ஞான தொழில் நுட்ப சட்டங்கள்
நாடாளுமன்றத்தில்
இயற்றப்பட்டன. இந்தச் சட்டத்தின்
அடிப்படை
நோக்கம் விஞ்ஞானத்தையும்
தொழில் நுட்பத்தையும்
வளர்த்து
அதன் மூலம்
ஓர் வேகமான
பொருளாதார
வளர்ச்சியைப்
பெற்று மக்களின் வாழ்க்கையை
பலப்படுத்துவதன்
மூலம் வறுமையை ஒழித்தலாகும்.
விஞ்ஞான தொழில்
நுட்ப அமைச்சு 1998 ம் ஆண்டு
ஏப்ரல் மாதம் ஓர்
உயர் நிலை
விஞ்ஞான ஸ்தாபனம் ஒன்றை அமைத்தது.
அது
தான் தேசிய
விஞ்ஞான தொழில் நுட்ப ஆணைக்குழு. இந்தக் குழுவின்
முக்கிய கடமை விஞ்ஞானமும்
தொழில் நுட்பமும்
அபிவிருத்தி
அடைவதற்கான
கொள்கைத்
திட்டங்களை
வகுப்பதற்கான
ஆலோசனைகளை
அரசுக்கு
வழங்குவதாகும்.
ஒட்டு மொத்தமாக
கூறுவதாக
இருந்தால்
விவசாயம்,
மீன்பிடி
சம்பந்தமான
தொழில் நுட்ப முயற்சிகளின்
தரத்தையும்
வெற்றி வாய்ப்பையும்
கூட்டுதலாகும்.
மேலும் விஞ்ஞானமும்
தொழில் நுட்பமும்
உள்நாட்டில்
இருக்கும்
சகல வளங்களையும்
பயன்படுத்தி
அபிவிருத்தியை
மேற்கொள்ள
உதவி செய்ய
வேண்டும்.
ஆராய்சி செயல்பாடுகள்
இந்த நோக்கத்தை
அடைவதற்கான
வழிவகைகளை
காண்பிக்க
வேண்டும்.
இது
இந்த நாட்டின்
பொருளாதாரத்தில்
நேரடியான
பங்களிப்பைச்
செய்வதுடன்,
மக்களை பாதிக்கும்
செயற்பாடுகளை
அகற்ற வேண்டும். அயல் நாடுகள்
பாரிய அபிவிருத்தியை
அடையும் போது நாங்கள்
விஞ்ஞான தொழில் நுட்பங்களை
சீரான முறையில் பயன்படுத்துவதில்
பின்னோக்
கியுள்ளோம்.
நமது நாட்டில்
பலவிதமான
விஞ்ஞானத்துறையில்
அர்ப்பணிப்புள்ள
விஞ் ஞானிகள்
வேலை செய்
கிறார்கள்.
ஆனால் அவர்களின்
முயற்சி வெற்றியளிக்க
வில்லை.
காரணம்
குறிப் பிட்ட நேரத்தில்
தேவை யான
இரசாயன பொரு ட்களையும்
உபகரணங் களையும் பெறுவதில்
குறைபாடுகள்
காணப்பட்டன. அத்துடன் அனுபவம்
உள்ள தகுதி
வாய்ந்த விஞ்ஞானி களின் குறைபாடு,
விஞ் ஞானத்தையும்
தொழில் நுட்பத்தையும்
பயன் படுத்துவதற்கு
ஓர் தடையாக
இருந்து வந்துள்ளது.
ஏராளமான விலை கூடிய விஞ்ஞான
உபகரணங்கள்,
விஞ்ஞான ஆய்வு கூடங்களில்
பழுதுபட்ட
நிலையில்
பயன்படுத்த
முடியாமல்
தேங்கிக்
கிடக்கின்றன.
விஞ்ஞானிகள் தாம் பெற்ற கல்வியை
மற்றவர்களுக்கு
பயன்படுத்த
வேண்டும்.
அரச சேவை யில்
உள்ள உயர்
அதிகாரிகளின்
முக்கிய கடமை என்ன
வென்றால்,
தகுந்த கொள்கைத் திட்டங்களை
உருவாக்கி
அதன் மூலம்
இந்த பட்டதாரிகளை
விஞ்ஞான தொழில் நுட்ப முயற்சிகளில்
பயன்படுத்து
வதாகும். ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்
அரச வேலைத்
தளங்களில்
தரம் குறைந்த
வேலைகளில்
உதாரணமாக
லகிதர் அல்லது சில நேரங்களில்
பியோனாகவும்
வேலை செய்கிறார்கள்.
பல பட்டதாரிகள்
வேலையற்றும்
இருக்கிறார்கள்.
திட்டமிடல் அமைச்சு விசேடமாக மிகவும் கவனமெடுத்து
தொழில் நுட்ப விஞ்ஞானத்தில்
திறமையான
முறையில்
பயிற்சி பெற்றவர்களின்
சேவையை பெறு வதற்கான
முயற்சிகளை
எடுக்க வேண்டும். விஞ்ஞானத்தை, தொழில்
நுட்பத்தை
பயன்படுத்தும்
போது, நாட்டின்
அபிவிருத்தியோடு
சம்பந்தப்பட்ட
பிரச்சினையான
விடயங்களை
நாம் சரியாக
விளங்கிக்
கொள்ள வேண்டும்.
தற்போது நம்மிடம்
உள்ள அறிவைப்
பயன்படுத்தி
பல புதிய
தொழில் நுட்பங்களை
கண்டு பிடிக்க வேண்டும்.
இன்று
வெளியேறும்
விஞ்ஞான பட்டதாரிகள்
முக்கியமான
பொறுப்புக்களைப்
பாரமெடுக்க
வேண்டும். இன்று இலங்கை
எதிர்நோக்கும்
முக்கியமான
சவால் எரிபொருள்
சக்தி சம்பந்த மானதாகும்.
இது ஆபத்தான
நிலையாகும்.
எரிபொருள் வளங்களை
உற்பத்தி
செய்வதற்கான
தொழில் நுட்ப முறைகள்
மிகவும் அவசியம். எரிபொருட்களின் அதி கூடிய விலையேற்றத்தினால்
இலங்கையின்
பொருளாதார
அபிவிருத்தி
பாதிக் கப்பட்டதுடன்
சாதாரண மக்களின் தொழில்களும்
பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்
காரணமாக வறுமை அதி
கரித்துள்ளது. இதை நிவர்த்தி
செய்யும்
பொறுப்பு
விஞ்ஞானிகளையும்
அரசாங்கத்தையும்
சாந்ததாகும்.
இதுவரை மனிதன்
பயன்படுத்திய
அனல் மின்சாரம்
எரிபொருள்
மற்றும் அணுசக்திகளினால்
ஓசோன் படலம் மோசமான
பாதிப்பை
எதிர் நோக்கியுள்ளது.
காற்று, நீர், சூரியஒளி போன்றவற்றைப்
பாவித்து
தேவையான மின் சாரத்தை
உற்பத்தி
செய்து சகல தொழில்களையும்
மேற்கொள்ள
முடியும்.
எரிபொருளுக்கு பதிலாக
மின்சாரம்
மூலம் ஓடும் வாக
னங்களையும்
பயன்படுத்த
முடியும்.
தண்ணீர்
என்று கூறும் போது நீர்
வீழ்ச்சி
மூலம் உற்பத்தியாகும்
மின்சாரத்தை
கூறலாம். சூரிய ஒளி என்று கூறும்
போது சோலர்
மின்சாரத்தையும்
காற்று என்று கூறும்
போது காற்றாடி
மூலம் உற்பத்தியாகும்.
மின்சாரத்தையும் கூறலாம்.
உயர் விலையுள்ள
எரிபொருள்
இறக்குமதி
மூலம் சாதாரண எரிபொருளான
பெற்றோல்,
டீசல் இவற்றின் விலை உயர்ந்ததுடன்,
உணவு, பஸ்
போக்குவரத்து,
ரயில் கட்டணம் போன்ற எல்லா
விதமான பொருட்களின்
விலைகளும்
உயர்ந் துள்ளன. பல நாடுகளில்
பெற்றோலிய
பொருட்களுக்காக,
பலவிதமான
மாற்aடான எரிபொருட்கள்
பயன்படுத்துகின்றன.
மாற்aட்டு
பொருளாக எத்தனோல் எனப்படும்
உயிர் எரிபொருள்
பயன்படுத்தப்
படுகின்றன. ஆகவே சகல தரங்களிலும்
உள்ள விஞ்ஞானிகளின்
கடமை ஓர்
மாற்aட்டு
எரிபொருளைக்
கண்டுபிடித்து
அதை அபிவிருத்தி
செய்தலாகும்.
எங்களது எரிபொருள்
தேவைக்கு
நாம் வெளி
நாடுகளில்
உள்ள எரி
பொருட்களை
இறக்குமதி
செய்வதில்
தங்கி நிற்கக் கூடாது. இலங்கை ஓர் விவசாய நாடு. நமக்கு தேவையான
உணவு வகைகளை
உள்நாட்டிலேயே
உற்பத்தி
செய்ய முடியும்.
காபோ ஹைதரேற்று,
புரதம், கொழுப்பு போன்ற அடிப்படை
போஷாக்கு
உணவுகள் நமது தேவைக்கு
போதுமானவையாக
இல்லை.
ஆனாலும்
எண்ணிலடங்காத
சகல வித
இயற்கை வளங்களையும்
தன்னகத்தே
கொண்ட நமது நாடு
பல கோடிக்கணக்கான
பணத்தை செலவு செய்து
தேவையான பொருட்களை
இறக்குமதி
செய்கிறது. 2008 ஆம் ஆண்டு இறக்குமதி
செய்த உணவுப் பொருட்களின்
பெறுமதி 122
கோடியாகும்.
காபோஹைதரேற்று, புரதம்,
கொழுப்பு
போன்ற அடிப்படை போசாக்கு உணவுகளை இறக்குமதி
செய்ய 100 கோடி ரூபா
செலவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக எம்மிடம்
இருக்கும்
உணவு நுகர்வுக்கு
போதுமானதல்ல.
உணவு பற்
றாக்குறைக்கான
காரணம் உணவு உற்பத்திக்கு
ஏற்படும்
உயர் உற்பத்திச்
செலவாகும்.
இதற்குக்
காரணம் உரம் கிருமி
நாசினிக்கு
ஏற்பட்டுள்ள
உயர் உற்பத்தி
செலவாகும். நைதரசன் கலந்துள்ள
உர வகைகளை
இறக்குமதி
செய்வதற்கு
40 கோடி ரூபா
வருடா வருடம் செலவு செய்யப்படுகிறது.
மாற்று மருந்தாக நைதரசனை உற்பத்தி செய்யும் கணுக்களுக்குள்ள
தாவர வர்க்கங்களைப்
பயிரிடுவதன்
மூலம் அமோனியம் சல்பேற், யூரியா போன்ற உரங்களின்
இறக்குமதியைக்
குறைக்கலாம்.
தாவர இயல் விஞ்ஞானிகளால்
செய்யப்பட்ட
ஆராய்ச்சிகளின்படி
30 சதவீதமான
நைதரசன் தேவைகள் உள்நாட்டிலே
உற்பத்தி
செய்யப்பட்டுள்ளதாக
அறியக் கிடக்கின்றது.
30
வருடங்களுக்கு
முன்பு அனுராதபுரம்
மாவட்டத்தில்
உள்ள எப்பாவெல
என்னும் கிராமத்தில்
பொஸ்பரஸ்
உரமுள்ள தாது பொருட்கள்
கண்டுபிடிக்கப்பட்டு
அவை இன்று
வரையும் பயன் படுத்தப்பட்டு
வருகின்றன.
இதனாலும் உர இறக்குமதி
குறைக்கப்பட்டுள்ளது.
பூச்சி கொல்லிகளை
இறக்குமதி
செய்வதற்கு
ஒரு கோடி
ரூபா வரையும்
செலவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நமது நாட்டில் பூச்சிகளை
அழிப்பதற்கும்
பல மாற்aட்டு
முறைகளும்
உள்ளன.
பூச்சிகளை
வேறு பூச்சிகளை
கொல்லக் கூடிய மருந்துகள்
உள்ள தாவரங்கள்
உண்டு நிக்கட்டின்
(புகையிலை)
வேம்பு போன்ற வேறு
பல தாவரங்களும்
இலங்கையில்
உண்டு. இவற்றை பயன்படுத்துவதன்
மூலம் பூச்சிகளால்
ஏற்படும்
நோய்களைத்
தடுக்கலாம்.
இதனால் கிராமங்களில்
பலருக்கு
வேலை வாய்ப்புகளும்
ஏற்பட இடம் உண்டு.
மேலும் பூச்சிகளை
கொண்டு வந்து அழிக்கும்
முறைகளும்
உண்டு. வெளிச்சங்கள், லாம்புகள்
வைத்து அவற்றின் மூலம் பூச்சிகளை
அழிக்கும்
முறைகளும்
உண்டு.
(தொடரும்)