|
||||
|
இஸ்ரேலை
பலப்படுத்தும்
மத்திய கிழக்கின்
முதிர்ச்சியில்லா
ராஜதந்திரம்
பவஸ்தீனத்திற்கு
வயது 64. உலக வரைபடத்தில்
எகிப்து, சிரியா, ஜோர்தான், லெபனானுக்கு
அருகில் சிறிய கோடொன்று
இருக்குமே
அதுதான் இஸ்ரேல். 64 ஆண்டுகளுக்கு
முன்னருள்ள
வரைபடத்தையோ,
ஈ மொய்க்கும்
வரைபடத்தையோ
எடுத்து ஆராயாதிர்கள்.
ஒன்றில் இஸ்ரேல்
என்ற நாடே
இருக்காது.
மற்றதில் ஈ மொய்த்து
மறைத்திருக்கக்
கூடும். இந்த சிறு புள்ளி அரசியல்தான்
உலகையே ஆட்டிப்படைக்கிறது.
இங்கே பலஸ்தீனத்தை
பற்றி கேட்டால் அது வாய்மொழியாக
மட்டுமே இருக்கிறது.
தப்பித் தவறி உலக வரைபடத்தில்
தேடிவிடாதீர்கள்.
அங்கே பலஸ்தீனம்
இருக்காது.
இஸ்ரேல் என்ற புள்ளிக்குள்
மேற்குக்கரை
என்று ஒரு கோணத்திலும்
காசா என்று
மற்றொரு கோணத்திலும்
எழுதப்பட்டிருக்கும்.
இவைகளைச் சேர்த்துத்தான்
பலஸ்தீனம்
என்கிறார்கள்.
ஆனால்
இதனை ஒரு
நாடாக சொல்ல முடியாது. வேண்டுமென்றால் நாடுபோன்றது
என்று வைத்துக்கொள்ளலாம்.
அடிப்படை பொருளாதார
கட்டமைப்பு
இல்லை, அரசியலமைப்பு
ஒன்றில்லை,
எல்லாவற்றுக்கும்
மேலாக இஸ்ரேலிடம்
இருந்து இன்னும் சுதந்திரம்
இல்லை. நினைத்த நேரத்தில்
நினைத்த இடத்திற்கு
இஸ்ரேலால்
போக முடியும்,
கட்டிடங்களை
கட்ட முடியும்.
இவைகள் அத்துமீறலாக
கூறப்படுவதில்லை.
ஒரு இறையாண்மையுள்ள
நாட்டுக்குள்
இவ்வாறு நடப்பதை நீங்கள் கனவிலும் பார்க்க முடியாது.
பலஸ்தீனம் என்பது
வெறும் பெயரளவுதான்.
பலஸ்தீனத்தில்
ஏற்பட்ட வரலாற்றுத்
துரோகங்கள்
நீண்டது. மேற்கு நாடுகள்,
இஸ்ரேல் மட்டுமல்ல
பலஸ்தீனத்தை
ஆதரிப்பதாகக்
கூறும் அயலில் இருக்கும்
அனைத்து அரபு முஸ்லிம்
நாடுகளும்
இந்த துரோகத்திற்கு
பங்குதாரர்கள்தான்.
இயலாமை, முதிர்ச்சியற்ற
ராஜதந்திர
நடவடிக்கை,
ஆயுதத்தையும்
மனிதரையும்
மாத்திரம்
வைத்துக்கொண்டு
யுத்தம் செய்ய முடியும்
என்று சிறுபிள்ளைத்தனமான
நம்பிக்கை
போன்ற அரபு நாடுகளின்
செயல்களால்
இந்த 64 ஆண்டுகளில்
பலஸ்தீன பிரச்சினை
இன்னும் சிக்கலானதே
ஒழிய வேறு
எதுவும் நடக்கவில்லை.
1350
ஆண்டுகள்
கொண்ட அகன்ற இஸ்லாமிய
சாம்ராஜ்யமான
துருக்கியை
மையமாகக்
கொண்டு செயற்பட்ட
உஸ்மானிய
சாம்ராஜ்யத்தின்
ஒரு அங்கம்தான்
இந்த பலஸ்தீனம். முஸ்தபா கமால் அதாதுர்க்
இந்த சாம்ராஜ்யத்தை
1924இல் கேள்வி
கணக்கின்றி
கலைத்துவிட்டது
மத்திய கிழக்கில்
தற்போது நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும்
அடிப்படை
காரணமாக அமைகிறது என்பது வேறுகதை. ஆனால் 1917 இல் பலஸ்தீனப்
பகுதியை கைப்பற்றிய
பிரிட்டன்
அதனை ஐ.நாவில்
இஸ்ரேலுக்கான
நாடாக உருவாக்குவதில்
சூட்சுமமாக
செயற்பட்டு
விட்டு 1948 மே 15ஆம் திகதி
அங்கிருந்து
மூட்டையை
கட்டியது.
ஆனால் அதற்குள் பலஸ்தீன நிலம் குறித்து
ஐ,நா ஒரு தீர்மானத்தை
எடுத்திருந்தது.
அதன் சுருக்கம்
இந்த நிலத்தில்
பலஸ்தீனம்,
இஸ்ரேலுக்கு
பாதிபாதி
இடம் புனித
நகர் ஜெரூசலேம்
சர்வதேச கட்டுப்பாட்டில்
இருக்கும்
என்றிருந்தது.
ஆனால் இவையெல்லாம்
வெறும் ஆவணத்தில்தான்
இருந்தது.
இதற்கு மாறாக பிரிட்டன்
வெளியேறுவதற்கு
ஒரு தினத்திற்கு
முன்னரே அதாவது 1948 மே 14 ஆம்
திகதி இஸ்ரேல் சுதந்திர பிரகடனத்தை
செய்தது.
இதற்கு
எதிராக அடுத்த தினமே அயல்
நாடுகளான
எகிப்து, ஈராக், ஜோர்தான்,
சிரியா, லெபனான், பலஸ்தீன் போராளிகள்
இணைந்து இஸ்ரேலுக்கு
எதிராக போரை தொடுத்தது. எந்த யுத்த தந்திரமும்
இல்லாமல்
களமிறங்கிய
அரபு நாடுகள்
ஓர் ஆண்டாக
நீடித்த போரில் அந்த சிறு
நாட்டுக்கு
எதிராக எதுவும் செய்யவில்லை.
இதன்
பின்னர் ஏற்பட்ட யுத்த நிறுத்தம்தான்
சுவாரஸ்யமானது. சம்பவம் முடிந்த
பின்னர் வரும் பொலிஸ்காரர்
போல் தலையிட்ட
ஐ.நா இந்த
மோதலுக்கு
முடிவு கட்டியது.
இதன்போது செய்துகொள்ளப்பட்ட
யுத்தநிறுத்தத்தில்
சம்பிரதாயமாக
எந்தெந்த
நாடுகள் எந்த இடம்வரை
முன்னேறினார்களோ
அதுவரை அவர்களுக்கு
சொந்தமானது.
இதனால் காசா வரை வந்த
எகிப்து காசாவை எடுத்துக்கொண்டது.
மேற்குக்கரை வரை வந்த ஜோர்தான்
அதை கைப்பற்றியது.
கிடைத்தது லாபம் என்று சுருட்டிக்கொண்டு
அரபு நாடுகள்
ஓட இஸ்ரேலுக்கு
லாபம்தான்.
இந்த யுத்தத்தில்
இஸ்ரேல் ஐ.நா வகுத்ததை
விடவும் அதிக நிலத்தை
கைப்பற்றியது.
அவை அனைத்தையும்
இஸ்ரேல் தனதாக்கிக்
கொண்டது.
ஐ.நா
தீர்மானித்த
பாதிக்குப்பாதி
நிலத்தை வைத்திருந்தால்
கூட பலஸ்தீனம்
என்ற நாடு
கூடிய நிலப்பரப்புடன்
அப்போதே உருவாகியிருக்கும். அரபு நாடுகள்
இராஜதந்திரம்,
யுத்த தந்திரம் இல்லாமல் மூக்கை நூழைத்ததால்
இருந்ததும்
இல்லாமல்
போய்விட்டது.
இது இத்தோடு
முடியவில்லை.
பின்னர் சர்வதேச கப்பல்கள்
செல்லும்
சுயேஸ் கால்வாயை எகிப்து மூட அதனால்
அதிகம் பாதிக்கப்பட்ட
இஸ்ரேல், பிரிட்டன்,
பிரான்ஸ¤டன்
இணைந்து
1956இல் எகிப்து
மீது நடத்திய
கடுமையான
தாக்குதலால்
அது மீண்டும்
மூக்கை உடைத்துக்கொண்டது.
அரபு
நாடுகளின்
எதிர்ப்பு
நடவடிக்கைகள்
அனைத்தையும்
இஸ்ரேல் தனக்கு சாதகமாகவே
மாற்றிக்கொண்டது. 1967இல் இடம்பெற்ற
ஆறு நாள்
யுத்தம் அல்லது மத்திய கிழக்கு யுத்தம் அரபு நாடுகளின்
முதிர்ச்சி
இல்லாத செயலுக்கு
மற்றுமொரு
எடுத்துக்காட்டு.
இஸ்ரேலை மீண்டும்
செயல்களில்
ஈடுபட்டுக்கொண்டிருந்த
இந்த அரபு
நாடுகளுக்கு
1967 ஏப்ரல் 7ஆம்
திகதி இஸ்ரேல் எதிர்பார்க்காத
தருணத்தில்
பதில் கொடுத்தது.
அன்றைய தினம் சிரிய ஆளுகைக்குட்பட்ட
கோலன் குன்றுக்குள்
ஊடுருவி இஸ்ரேல் பிரச்சினையை
பெரிதாக்கி
ஒட்டுமொத்த
கோலன் பகுதியையும்
கைப்பற்றியது.
இதன்போது இஸ்ரேல்
சிரியாவின்
7 யுத்த விமானங்களை
சுக்குநூறாக்கியது.
இதனையடுத்து
எகிப்து, சிரியா, ஜோர்தான், யுத்தத்தில்
இறங்கியது. ஈராக், சவூதி அரேபியா, குவைட், அல்ஜீரியா
ஆகிய நாடுகளும்
இஸ்ரேலுக்கு
எதிராக படையை அனுப்பின.
1967ஆம் ஆண்டு
ஜுன் 5 முதல்
10ஆம் திகதி
வரைதான் உக்கிர மோதல் நீடித்தது.
இஸ்ரேல் அதற்குள்
தனக்கு தேவையான அனைத்தையும்
செய்துவிட்டது.
அதாவது 1948இல் இழந்த
காசா மற்றும்
மேற்குக்
கரையை கைப்பற்றியதோடு
எகிப்துக்கு
சொந்தமான
சினாய் சிரியாவுக்கு
சொந்தமான
கோலன் குன்றுகளையும்
ஆக்கிரமித்தது.
இந்த
யுத்தத்தில்
இஸ்ரேல் இழந்த இராணுவத்தின்
எண்ணிக்கை
வெறும் 338தான். ஆனால் எகிப்து
15 ஆயிரம் வீரர்களை பலி கொடுத்தது.
ஜோர்தான் தரப்பில்
800 வீரர்களும்
சிரியாவின்
2500 வீரர்களும்
பலியாகினர்.
யுத்தம் என்பது
ஆயுதம், மனிதர்களை
வைத்து நடத்தும் தெருச் சண்டை அல்ல
என்று அரபு நாடுகள்
மீண்டும்
ஒருமுறை புரிந்துகொண்டது.
இஸ்ரேல் 1967ஆம்
ஆண்டு கைப்பற்றிய
மேற்குக்
கரை, கிழக்கு
ஜெரூஸலம்
பகுதிகளில்
இஸ்ரேல் இன்றுவரை தன்பாட்டுக்கு
யூதக்குடியிருப்புகளை
அமைத்து தமது நிலப்பகுதியாக
மாற்றிவருகிறது.
காசாவிலிருந்து
2005 ஆம் ஆண்டு
இஸ்ரேல் வெளியேறினாலும்
இந்த பகுதி
மீது பொருளாதார,
பயணத் தடைகளை விதித்து நச்சரித்து
வரும் இஸ்ரேல் நினைத்த நேரத்தில்
குண்டுகளையும்
போட்டு செல்கிறது.
இஸ்ரேல்
யுத்தபலத்திற்கு
முன்னால்
மத்திய கிழக்கு நாடுகளால்
இன்றும் நின்று பிடிக்க முடியாதுள்ளது. இதனால் இஸ்ரேலின்
அநியாயங்களுக்கு
அவைகளால்
அறிக்கைகள்தான்
விட முடிகிறது.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |