Contact us at: sooddram@gmail.com

 

தேசிய பாரம்பரிய இடங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்

இலங்கையின் தேசிய பாரம்பரிய சின்னங்களான, நக்கில்ஸ் மலைத்தொடர், ஹொர்டன் பிளேன்ஸ் மற்றும் சிவனொளி பாதமலை ஆகியவற்றை யுனெஸ்கோ ஸ்தாபனம் உலகின் இயற்கை பாரம்பரிய சின்னங்களாக பிரகடனம் செய்திருப்பதை அடுத்து, அவற்றிக்கு சட்டபூர்வமான முறையில் பூரண பாதுகாப்பை வழங்குவதற்கு சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு புதிய சட்டங்களை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவுள்ளது. எங்கள் நாட்டின் தேசிய பாரம்பரிய சின்னங்களை வெளிநாட்டவர்கள் இங்கு வந்து சீர்குலைப்பதில்லை. எங்கள் நாட்டு பிரஜைகளே இந்த மனவேதனைக்குரிய தேசத்துரோகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். உல்லாசப்பிரயாணிகளாக இவ்விடங்க ளுக்கு பொழுதை மகிழ்ச்சியோடு கழிப்பதற்காக செல்லும் இவர்கள், இவ்விடயங்களில் மதுபான போத்தல்களையும், பொலித் தீன் பைகளையும் வீசி எறிந்து, அங்கு சுற்றாடலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்துகிறார்கள்.

இவ்விதம் அசுத்தப்படுத்தப்பட்ட தேசிய பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள இடங்களை மீண்டும் சுத்தப்படுத்தி, பழைய நிலைக்கு கொண்டு வருவது அவ்வளவு இலகுவான செயலல்ல. அதனை திருத்தியமைப்பதற்காக, சுற்றாடல் பாதுகாப்புத் துறை அமைச்சு, பல இலட்ச ரூபாவை அநாவசியமாக விரயம் செய்ய வேண்டியிருக்கிறது.

எனவே, சுற்றாடல் அசுத்தப்படுத்தப்படும் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபடுவோர்களை கைது செய்து, பொலிஸாரின் உதவியுடன் சட்டபூர்வமாக தண்டிக்கக் கூடிய வகையில் சுற்றாடல் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, புதிய சட்டமூலம் ஒன்றை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகளை செய்து வருகிறார்.

இதற்கென அமைச்சர் நியமித்துள்ள நிபுணர்கள் குழு, இது பற்றி விசாரணைகளை நடத்தி, தனது ஆய்வு அறிக்கையை கூடிய விரைவில் சமர்ப்பித்தவுடன், இந்த புதிய பணியை அமைச்சர் உடனடியாக மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பிரேசிலில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 34 வது உலக சம்மேளனத்தில், இலங்கையி லுள்ள, நாம் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களை உலகின் இயற்கையான பாரம்பரிய ஸ்தானங்களாக பிரகடனம் செய்வது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இவை மட்டுமன்றி, கடந்த காலத்திலும் யுனெஸ்கோ ஸ்தாபனம் உலகின் வரலாற்று முக்கியத் துவம் கொண்ட பிரதேசங்களை உலகின் இயற்கை பாரம்பரிய ஸ்தானங்களாக பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

நக்கில்ஸ் மலைப்பிரதேசத்தில் மேற்கு நாடுகளில் இருப்பதை போன்று குளிர்ந்த பிரதேசத்தில் வாழும் மரை என்ற மிருங்கள் பெரிய கொம்புகளுடன் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பது இந்த மலைப்பிரதேசத்திற்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.

இவற்றுடன் அங்கு அழகிய சிறுத்தைகளும், பெருமளவில் காணப்படுகின்றன. இந்த பிரதேசத்தின் இயற்கைக்கு மெருகூட்டி வரும் இந்த அப்பாவி வனவிலங்குகளுக்கும் உல்லாசப்பிரயாணிகள் என்ற பெயரில் அப்பிரதேசங்களுக்கு செல்லும் எமது நாட்டவர்கள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள்.

இந்த உல்லாசப்பிரயாணிகளுடன் சேர்ந்து கொள்ளும் சில சுயநலவாதிகள் அங்குள்ள பெரிய மரைகளை இறைச்சிக்காக வேட்டையாடும் எத்தனையோ சம்பவங்களும் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன. இவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஓரிவருக்கு எதிராக மாத்திரமே நட்டநடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மற்றவர்கள் எவ்வித பிரச்சினையுமின்றி தப்பி விடுகிறார்கள்.

இப்பிரதேசங்களில் உள்ள வனவிலங்குகளை இந்த சமூகவிரோதி களிடமிருந்து காப்பாற்றுவதற்காக இப்போது பொலிஸார் வன விலங்கு பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தக்க சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இலங்கையின் இயற்கையான தேசிய பாரம்பரியங்களையுடைய பிர தேசங்கள் எமது நாட்டின் உல்லாசப்பிரயாணத்துறையை மேலும் வளர்ப்பதற்கும், அதன் மூலம் தேசிய வருமானத்தை பெருக்கு வதற்கும் பேருதவியாக அமைகின்றன.

எனவே, அதற்கு வசதி களையும் செய்து கொடுக்க இருக்கும் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு, அபிவிருத்தி என்ற பெயரில் அப்பிரதேசங்களில் சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் கடைகளை திறப்பதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதி கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித் துள்ளது. இப்பிரதேசங்கள் வர்த்தக பிரதேசங்களாக மாற்றப்படும் போது, அங்கு சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது என்ற காரணத்தினால் தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாரம்பரியங்களின் சின்னங்களாக விளங்கும் இப்பிரதேசங்கள் இயற்கையான மெருகுடன் இருந்தால் மட்டுமே, அதன் புனிதத் தன்மையும் முக்கியத்துவமும் வலுப்பெறும் என்று அமைச்சு கருதுகிறது.

இதனால் அப்பிரதேசங்களில் குறிப்பாக 5000 அடி உயரத்திற்கும் மேலான இடங்களில் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் அமைச்சு தடை விதித்துள்ளது. சுற்றாடல் துறை அமைச்சின் இந்த நல்ல திட்டங்களுக்கு அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில் செல்வாக்குமிக்கவர்கள் தடையாக இருப்பதற்கும், அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா இடமளிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com