|
||||
|
''ஈழத்தில் நடந்ததை மறந்து விடாதீர்கள்!'' -
கைகூப்பிக் கேட்ட சிங்களப்
பெண்! ஐந்தரை மணி நேரம்
தொடர்ந்து
பேச்சாளர்கள்
முழங்கிக்
கொண்டே இருந்தாலும்,
ஆயிரத்துக்கும்
மேற்பட்டவர்களைக்
கட்டிப்போட்டிருந்தது,
'என்ன செய்யலாம்
இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னை, தி.நகர், செ.தெ.நாயகம்
பள்ளியில்
கடந்த 9-ம்தேதி
நடந்த இந்த புத்தக
வெளியீட்டுக்
கூட்டத்தில்,
ஒட்டுமொத்தக்
கவனத்தையும்
ஈர்த்தவர் நிமல்காஃபெர்னாண்டோ. இலங்கையில் இருந்து
வந்திருந்த
இவர், பிறப்பால்
சிங்களவர்.
பாகுபாடுகள்
மற்றும் இன வெறிக்கு
எதிரான சர்வதேச இயக்கத்தின்தலைவரான
நிமல்கா பேசப் பேச,
'ஒரு சிங்களப்
பெண்ணுக்கு
இருக்கும்
அக்கறை இங்கு உள்ள
தமிழர்களுக்கு
இல்லையே?’ என்றகவலை எல்லோர் முகத்திலும்
முளைத்தது.
இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின்
ஆங்கிலப்
பேச்சில்
அழுத்தமான
அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல்
இருப்பதற்கு
முதலில் வருந்துகிறேன்.
இலங்கைக் குடிமகளான
நான், எங்கள்
நாட்டில்
பேசப்படும்
தமிழைப் பேசத் தெரியாமல்
இருப்பதே,
அங்கு உள்ள அரசியல்
முரண்பாட்டைக்
காட்டும்.
பெரும்பான்மை இனத்தின்
ஆதிக்கம்
எங்கள் தீவில் நிலவுகிறது.
அநீதியின் வரலாற்றைப்
பகுப்பாய்வதற்காக, நான் வரவில்லை.
அந்த வரலாறு,
தமிழ் மக்கள் படுகொலையில்
முடிந்ததை
நீங்கள் அறிவீர்கள்.
போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில்,பெண்களுக்குஏற்பட்ட
தைத்தான்
மோசமான கதியாகக் கருதுகிறேன்.
எந்த இனத்தைச்
சேர்ந்தவளாகவும்
நான் இங்கு
வரவில்லை.
இலங்கைத் தீவில்
இருந்து ஒரு பெண்ணாகவே
நான் இங்கு
நின்று பேசுகிறேன்.
அண்மையில் மான்குளம்,
கிளிநொச்சி
பகுதிகளுக்குச்
சென்று வந்தேன். அடுத்த கட்டம்
என்ன? அடுத்த நேர உணவுக்கு வழி என்ன?
யாரிடமும் போய்க்
கேட்க வாய்ப்பு இல்லாமல்...
சிதிலமடைந்த
வீடுகளைக்
கட்டி எழுப்ப முடியாமல்
இருக்கிறார்கள்.
அநேகமாக எல்லாப்
பெண்களும்
என்னிடம்,
'எங்கே என் கணவர்?
எங்கே என் பிள்ளைகள்?’
என்றே கேட்டார்கள்.
அவர்களுக்கு
என்ன பதில்
சொல்வதென்றே
தெரியவில்லை...''
என்றவர்,
''அங்கே, 'பிள்ளைகளைத்
தனியாக வீட்டில் விட்டுப் போக முடியுமா? அதிலும் முடமாக்கப்பட்ட
பெண் பிள்ளைகளைத் தனியாகவிட்டு
நான் வேலைக்குப்
போக முடியுமா?
ஆனால், குறைந்தபட்சம்
கஞ்சி காய்ச்சுவதற்கான
ஊதியம் பெறுவதற்காவது
நான் போக
வேண்டுமே...
எப்படி?’ என்று கதறுகிறார்கள்
அந்தப் பெண்கள்.
மறுகுடியமர்த்தப் பணிகளுக்காகப்
பல நாடுகள்
கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துள்ளன. ஆனால், என்ன நடந் தது?
சில வீடுகள்
மட்டுமே கட்டப்பட்டு
உள்ளன. ஒவ்வொரு வீட்டைச்
சுற்றிலும்
ராணுவ நிலைகளை வலுவாக அமைத்து இருக்கிறார்கள்.
மக்கள் சுதந்திரமாகப்
பேசிக்கொள்ளக்கூட
முடியவில்லை.
நான் என்னுடைய
மக்களுடன்
பேசினால்,
மூன்றாவது
நபரால் கண்காணிக்கப்படுகிறேன்.
தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கள
மக்களும்
சுதந்திரமாகப்
பேசிக்கொள்ள
முடியவில்லை.. இங்கே கூட்டம்
போட்டுப்
பேசுவதுபோல இலங்கையின்
வடக்கில்,
கிழக்கில்
யாரும் பேசிவிட முடியாது.
அரசியல்வாதிகள் பேசினால்,
கேள்விக்கு
உள்ளாக்கப்படுவார்கள்.
அரசுக்கு எதிராகப்பேசியதாகக்
குற்றம் சாட்டப்படுவார்கள்,
பின்னர் காணாமல் போவார்கள்.
போர், தமிழ்
மக்களின்
சுயமரியாதை,, தன்மானத்தின்
நாடிநரம்புகளையும்
சேர்த்தே
நசுக்கி இருக்கிறது.
இலங்கையின் வடக்கு,
கிழக்கு தமிழ் மக்கள்
பிச்சைக்
காரர்களாக
இதுவரை இருந் தது
இல்லை. போரால் வாழ்வு
இழந்தவர்கள் எல்லோரும்,
மீனவர்களாகவும்
விவசாயிகளாகவும் உணவு உற்பத்தியில்
ஈடுபட்டும்
இருந்தவர்கள்.
அரசனாகவோ அரசியாகவோ
வாழாவிட்டாலும்,
உங்களைவிட
என்னைவிட
வசதியாக வாழ்ந்தவர்கள்தான்
அவர்கள்.
ஆனால், இன்று கையேந்தி
நிற்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில்
நல்ல வளங்கள்
இருந்தபோதும்...
மக்கள் வேலையின்றி,
வறுமையில்தான்
வாடுகிறார்கள். இதனால், தமிழ் மக்கள் சொந்த கிராமங்களைவிட்டு
வெளியேறுகிறார்கள்.
உடனடியாக, அந்தப்
பகுதிகளில்
மற்றவர்களைக்
குடியமர்த்தி,
அங்கே இனப்பரப்பல்
விகிதத்தை
மாற்றிவிடுகிறார்கள்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போன்றதொரு
மிக மோசமான
நிலைமை இலங்கையில்
உருவாகிறது.
அதுவும் சீனா போன்ற
நாடு களின்
உதவியுடன்
நடக்கிறது!
தமிழ் மக்கள்,
சிங்கள ஊடகங்கள், பொதுஜன நியாயத்துக்கான
குரலை இலங்கை அரசு கடுமையாக
ஒடுக்குகிறது. நடந்ததை மறந்துவிடுமாறு
அரசாங்கம்
திரும்பத்
திரும்பச்
சொல்கிறது.
போரினால் அழிக்கப்பட்ட
எந்த ஒன்றையும்
எளிதில் மறந்துவிட
முடியாது.
நீங்களும் மறந்துவிடாதீர்கள்.
இலங்கையின் அனைத்து
மக்களும்
இன்றைய நிலையில் இருந்து விடுதலை பெற வேண்டும். இந்தப் போராட்டத்துக்காக,
வெளிநாட்டில்
இருந்துநாங்கள்
ஆதரவைப் பெறப்போவதில்லை.
தமிழர்கள், சிங்களர்கள்,
முஸ்லிம்களின்
கூட்டு முயற்சியுடன்,
ஆட்சிக் கட்டிலில்
இருந்து மகிந்த ராஜபக்ஷே வெளியேறும்
காலம் வரும். அந்த நாளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு
இருக்கிறோம்!''
என்று நிமல்கா முடித்தபோது,
அரங்கம் அதிரக் கைதட்டல்கள்.
இன வெறி தலைக்கேறி,
பிஞ்சுக்
குழந்தைகளின்
உயிரைக் குடித்த சிங்களத்தில்
பிறந்தாலும்,
நியாயத்துக்
காக நிற்கும்
நிமல்கா போன்றவர்கள்தான்,
நிஜமான 'தகத்தகாயக்
கதிரவன்’கள்!
- இரா.தமிழ்க்கனல்
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |