|
||||
|
வைகோ, சீமான்,
தொல்.திருமர்
இலங்கைத்
தமிழரை நிம்மதியாக
வாழவிடுங்கள்!
(க.
சிவராசா)
இலங்கைத் தமிழருக்காகக்
குரல் கொடுத்து வருவதில் தமிழகத்திலுள்ள
அரசியல் தலைவர் எனக் கூறும்
வைகோவும்,
சினிமா பட இயக்குநர்
சீமானும்
அண்மைக் காலமாகப் போட்டி போட்டுச் செயற்பட்டு
வருகின்றனர்.
மூத்த அண்ணா பழ. நெடுமாறன் இப்போது
தனது குரலைச்
சற்றுத் தளர்த்தியுள்ளார்.
வயது போய் விட்டது போலுள்ளது.
அதுவும் ஒரு வகையில் இலங்கைத் தமிழருக்கு
நிம்மதி தரும் விடயம்தான்.
கலைஞருடன் இணைந்த
பின்னர் தொல். திருமாவளவன் சில புதிய பாணியில்
கூட்டங்களை
நடத்தி இலங்கைத் தமிழரை மட்டுமல்லாது,
உலகத் தமிழ் மக்களையே
ஏமாற்றி வருகிறார்.
இன்னும் சிலர் அவ்வப்போது
குரல் கொடுப்பதும்
பின்னர் ஓய்வெடுப்பதுமாக
காலத்தைக்
கடத்தி வருகின்றனர்.
மேற்குறிப்பிட்ட அனைவருமே இலங்கைத் தமிழர் நலனுக்காக
ஒருபோதும்
குரல் கொடுப்பதில்லை. மாறாக
இலங்கைத்
தமிழரை வைத்து தமிழகத்தில்
தமது அரசியல்
இருப்பைத்
தக்க வைத்துக்கொள்ளவும்,
தம்மை சினிமாத் துறையில் பிரபலப்படுத்தவும்,
ஏதோ ஒரு
வகையில் வருமானத்தை
ஈட்டிக்கொள்ளவுமே
இவ்வாறு நடந்து கொள்கின்றனர்
என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இலங்கையில் புலிகள் முப்பது வருடமாக நடத்திய போராட்டத்தில்
நன்மை அடைந்தவர்கள்
புலிகளின்
பெயரைச் சொல்லி தமிழகத்திலும்,
உலக நாடுகளிலும்
அரசியல் நடத்தியவர்களே. மாறாக
இலங்கைத்
தமிழர் எவ்விதமான
நன்மையையும்
அடையவில்லை.
இருந்தவற்றையும் இழந்ததுதான்
கண்ட பலன். இன்று
புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட
பின்னரும்
அவர்களது
பெயரை வைத்து இவ்வாறானவர்கள்
நடத்தும்
கேலிக் கூத்தான விடயங்களால்
தமிழ் மக்கள் வெறுப்படைந்து
உள்ளதுடன்,
மறைமுகமான
பாதிப்புக்கும்
உள்ளாகி வருகின்றனர்.
‘நாள் குறியுங்கள்
முதல்வரே,
நாங்கள் போகிறோம் இலங்கைக்கு’
என்று கூறிய பழ. நெடுமாறான்
ஐயா, கருங்குரலால்
கருத்துத்
தெரிவித்து
திரைப்படம்
எடுக்கப்
புறப்பட்ட
பாரதிராஜா
அண்ணன், தலைமுடியை
இடைவிடாது
மேலே வாரிவிட்டு
முடிவில்லாமல்
தொடர்கதை
சொல்லும்
டி. ராஜேந்திரன்
எனப் புலிகளுக்கு
வால்பிடிப்பது
போலப் புறப்பட்டு
தமிழ் மக்களுக்காக
எனக் கதையை
முடித்துக்
கொண்டவர்கள்
இப்போது நிலைமையைப்
புரிந்துகொண்டு
ஒதுங்கியே
உள்ளனர்.
அவர்களைப் பாராட்டவே
வேண்டும். இலங்கையில் புலிகள்
அழிக்கப்பட்ட
பின்னர் இந்த அரசாங்கத்தின்
மனிதாபிமான
செயற்பாடுகள்
தமிழ் மக்களை தாராளமாகவே
சென்றடைந்து
வருகிறது.
மிகவும் பின்தங்கியிருந்த
வடக்கின்
பல பகுதிகளும்,
கிழக்கின்
பல தமிழ்க்
கிராமங்களும்
துரித வளர்ச்சி கண்டு வருகின்றது. இருபது வருடங்களுக்கு
மேலாக மின்சார வசதியே இல்லாதிருந்த
பல பிரதேசங்கள்
இன்று வளர்ச்சி கண்டுள்ளன.
புலிகள் இன்னமும்
இருந்திருந்தால்
மூன்றாவது
தலைமுறையும்
இருட்டிலேயே
வாழ்ந்திருக்க
வேண்டிய நிலை வந்திருக்கும்.
இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மகனும்
சீமான், வைகோ, தொல். திருமாவளவன் போன்ற சுயநலன் கொண்ட தமிழக
அரசியல் வாதிகளின்
பிரசாரத்தை
ஒருபோதும்
விரும்பமாட்டார்கள்.
ஒருவேளை புலிகள் இருந்த போது அவர்களது
மயக்கத்திலிருந்த
போது மக்கள்
இவர்களது
திருவிளையாடல்களை
அறியாது அல்லது அறிந்து அறியாதது போன்று புலிகளுக்குப்
பயந்து விரும்பியது
போன்று நடித்திருக்கலாம்.
ஆனால் அந்த நிலையில் மக்கள் துளியளவும்
இல்லை.
இந்தியாவிலுள்ள பின்தங்கிய
குப்பங்களிலும்,
கிராமங்களிலும்
வாழ்பவர்கள்
அல்ல வடக்கு,
கிழக்குத்
தமிழர்கள். அவர்களை பத்து ரூபா பணத்தை
பிரித்து
வழங்கினால்கூட
உங்களால்
இலகுவாக ஏமாற்றலாம்.
அல்லது உங்களது
ஒரு திரைப்படத்தை
இலவசமாகப்
போட்டுக்
காட்டினால்
போதும். நீங்கள் சொல்வதே
அவர்களுக்கு
வேத வாக்காக
இருக்கும்.
அந்தப் பாவப்பட்ட
மக்களுடன்
இலங்கைத்
தமிழர்களை
ஒப்பிட வேண்டாம்.
ஒரு இலட்சத்திற்காகப்
புறப்பட்ட
உண்மையான
போராட்டம்
தனிப்பட்ட
சிலரது கைகளில் சிக்கி ஹிட்லரின்
ஆட்சி போன்று மாறி உடன்
பிறப்புக்களையே
பிணமாக்கி,
அதன் மீது
நின்று கொள்கையும்,
இலட்சியமும்
மாறிப் பயணித்த போதுதான் மக்கள் வெறுப்படைந்தார்கள்.
ஒரு கட்டத்தில்
ஏதோ ஒரு
அரசாங்கத்துடனாவது
பேச்சுவார்த்தையை
நடத்தி ஒத்துப் போவதை விடுத்து
தனிமனித சுகபோகத்திற்காகப்
போராட முற்பட்டதன்
விளைவுதான்
இன்று சகலவற்றையும்
இழந்து நிற்கும் நிலை.
இன்று இலங்கைத் தமிழ் மக்களுக்குள்ள
ஒரே ஆதரவு
அரசாங்கமே. அதன் அரவணைப்பில்தான்
அல்லல்பட்ட
மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
இன்றுதான் அந்த மக்கள் நிம்மதிப்
பெருமூச்சு
விடுகின்றனர்.
அதனைக் கெடுக்காதீர்கள்.
அன்று புலிகள் செய்த தொடரான
அட்டூழியங்களைத்
தட்டிக் கேட்க துப்பில்லாத
நீங்கள் இன்று தமிழ்
நாட்டிலிருந்து
கொண்டு செய்யும் சுயநலச் செயல்களால்
இங்குள்ள
மக்களின்
வயிற்றில்
அடித்து விடாதீர்கள்.
உண்மையில் இங்கு மக்கள்
நிம்மதியாக
வாழ்ந்து
வருகின்றார்கள். முகவரியில்லாது
வெளிநாடுகளிலிருந்து
இயங்கும்
இணையத் தளங்களில்
வெளியாகும்
சோடிக்கப்பட்ட
பொய்யான செய்திகளையோ
அல்லது உங்களைப் போலவே வெளிநாடுகளிலிருந்து
கூக்குரலிடும்
புலம் பெயர் மக்களின்
புலம்பல்களையோ
சீரியஸாக
எடுக்காதீர்கள்.
அவை அனைத்துமே
அலங்கரிக்கப்பட்ட
புனைகதைகள்.
விரும்பினால் நீங்களே
நேரடியாக
வந்து மக்களது வாழ்வைக் காணுங்கள்.
அன்று உங்களில்
பலர் கள்ளத்தோணியில்
இரகசியமாக
வந்து பிரபாகரனைப்
பார்த்துச்
சென்ற போதிருந்த
கிளிநொச்சியையும்,
முல்லைத்தீவையும்
இன்று சர்வதேச விமான நிலையமூடாக
விஸா பெற்று
வந்து பாருங்கள்.
அந்த மக்களுடன்
உரையாடிப்
பாருங்கள்.
அப்போது உண்மையான
வித்தியாசத்தை
உணருவீர்கள்.
புலிகள் அழிந்த
பின்னரும்
நாம் கூக்குரலிடுவது
தேவையற்ற
செயல் என்பதை உணரூ வீர்கள்.
அங்கு நீங்கள்
நடத்தும்
ஆர்ப்பாட்டங்களுக்கும்,
உண்ணாவிரத
நாடகங்களுக்கும்,
போலியான நடைப் பயணங்களுக்கும்
செலவிடும்
பணத்தை மீதப்படுத்தி
இயல்பு வாழ்வுக்குத்
திரும்பிக்
கொண்டிருக்கும்
மக்களுக்குச்
செலவு செய்யுங்கள்
தமிழக மக்களுக்கு
உண்மையை எடுத்துரையுங்கள்.
பொய்யான வீரவசனங்களுக்கு
மட்டுமல்ல
உண்மையை வெளிப்படுத்தி
னாலும் மக்கள் உங்களுக்கு
நிச்சயம்
ஆதரவு வழங்குவார்கள்.
இலங்கைத் தமிழருக்காக
வீரவசனம்
பேசி, ஆர்ப்பாட்டம்
செய்து, சிறைக்குச்
சென்று வருவதை ஊடகங்களில்
விளம்பரப்படுத்துவதால்
உங்களது அடுத்த படம் வெற்றிப்படமாகி
வசூலில் சாதனை படைக்கும்
என்பதற்காக
சொந்த உறவுகளையும்,
கணக்கிட முடியாத உடமைகளையும்
பறிகொடுத்துவிட்டு
உயிரை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு
தப்பியோடி
வந்த களைப்பு
ஆறாத மக்களது
எதிர்கால
வாழ்வுடன்
விளையாட வேண்டாம்.
உங்களது நாட்டில் ஆயிரத்தெட்டுப்
பிரச்சினைகள்
உள்ளன. தமிழகத்தில் இரண்டாயிரத்து
எட்டுப் பிரச்சினைகள்
உள்ளன. சாதிக்கலவரத்தில் தினமும்
நூறு பேருக்கு
மேல் சாகிறார்கள்.
வீதி விபத்துக்களில்
தினமும் நூறு பேருக்கு
மேல் இறக்கிறார்கள்.
அரசியல் சண்டையில்
தமிழகத்தில்
மட்டும் தினமும் பத்துப் பேராவது சாகடிக்கப்படுகிறார்கள். பட்டினியால் தினமும்
பலர் இறக்கிறார்கள்
இவையெல்லாம்
உங்களுக்குப்
பிரச்சினையாகத்
தெரியவில்லையா?
இதுபற்றி போராட்டம்
நடத்த வேண்டாம்.
ஒரு அறிக்கையாவது
விட்டதுண்டா?
இலங்கை எத்திசையில்
இருக்கிறது
என்று கூடத் தெரியாத
தமிழகத்துப்
பாமர மக்களிடம்
சிங்களவர்
எமது உடன்பிறப்பான
தமிழரைக்
கொல்லுகிறார்கள்
என்ற கருத்தை
மட்டுமே திணித்து உங்களது அரசியலை அருமையாகவே
காய்நகர்த்தி
வருகிaர்கள்.
இனியும் இந்த விளையாட்டுக்கள்
வேண்டாம்.
புலிகள்தான் இல்லையென்று
ஆகிவிட்டது.
இனி யாருக்குக்
காட்ட உங்களது கடல்கடந்த
பிரசாரங்கள்?
தமிழக மீனவர்களையும்
உங்களது அரசியல் விட்டுவைக்கவில்லை. நடுக்கடலில்
தத்தளித்த
உங்களது மீனவர்களை
இலங்கை கடற்படை காப்பாற்றிக்
கரை சேர்த்து
உதவியளித்த
போதும், சுட்டுக் கட்டியிழுத்துச்
செல்வதாகப்
பிரசாரம்
செய்து மூக்குடைபட்டீர்கள்.
உங்களை எப்படித் திருத்துவது? யார் சொன்னால் நீங்கள் எல்லாம் கேட்பீர்கள்?
ஒருவேளை பிரபாகரன்
ஆவியாக வந்து சொன்னால்
கேட்பீர்களோ?
எனவே இலங்கைத்
தமிழ் மக்களை நிம்மதியாக
வாழவிடுங்கள்.
இனியும் கஷ்டங்களைத்
தாங்க அவர்களால்
முடியாது.
களைத்து விட்டார்கள்.
இப்போது அரசாங்கத்தின்
உதவிகளுடன்
உண்மையாகவே
அவர்கள் நிம்மதியாக
வாழ்ந்து
வருகிறார்கள். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |