|
||||
|
முஸ்லிம்
கட்சிகளிடையே
இணக்கப்பாடு
அவசியம்
முஸ்லிம் அரசியலில்
இன்று பாரியதொரு
திருப்புமுனை
ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பெயர்குறிப்பிடத்தக்க
அனைத்து முஸ்லிம் கட்சிகளுமே
அரசாங்கத்துடன்
இணைந்து செயற்பட்டு
வருகின்றன.
தமக்கிடையே
எதிரும் புதிருமாகவிருந்த
கட்சிகள்,
பிரிந்து
சென்று இரண்டாகச்
செயற்பட்ட
முஸ்லிம்
கட்சிகள்
யாவும் இன்று ஓரணியில்
நின்று அரசாங்கத்தின்
அபிவிருத்திப்
பணிகளுக்குத்
தமது பாரிய
பங்களிப்பைச்
செய்து வருகின்றன.
இது ஒரு வரவேற்கத்தக்க
ஆரோக்கியமான
விடயமாகும்.
இலங்கை தேசிய அரசியலில்
முஸ்லிம்
அரசியல்வாதிகளின்
பங்களிப்பானது
நாடு சுதந்திரம்
அடைவதற்கு
முன்பாகவும்,
பின்னராகவும்
அதிகமாகவே
இருந்து வந்துள்ளது. அதிலும்
இவர்கள் சிங்களத் தலைமைகளைக்
கொண்ட பெரும்பான்மையினக்
கட்சித் தலைவர்களுடன்
இணைந்து தமது சமூகத்திற்காகவும்,
முழு நாட்டிற்காகவும்
பாரிய பங்களிப்பைச்
செய்துள்ளார்கள்.
இதனால் சிங்களத்
தலைமைகளின்
நன்மதிப்பிற்கும்,
விசுவாசத்திற்கும்
இவர்கள் ஆளாகியிருந்தனர்.
வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின்
நலன்கருதி
மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப்
அவர்களினால்
ஸ்ரீலங்கா
முஸ்லிம்
காங்கிரஸ்
கட்சி ஆரம்பிக்கப்பட்ட
பின்னர், அக்கட்சி அதன் சின்னமான
மரம் போன்று
பலமான ஆணிவேர் கொண்டுபல கிளைகளாகப்
பரவி பெரு
விருட்சமானது.
முஸ்லிம் காங்கிரஸின்
உதயத்தின்
பின்னர் முஸ்லிம் அரசியல் இந்நாட்டில்
இன்னும் வலுப்பெற்றது.
எடுத்த எடுப்பிலேயே
பல ஆசனங்களைக்
கைப்பற்றிய
அஷ்ரஃப் தலைமையிலான
முஸ்லிம்
காங்கிரஸ்
அரசாங்கத்தை
அமைப்பதற்குத்
தேவையான ஆசனங்களை பிரதான சிங்களக் கட்சிகளுக்கு
வழங்குவதில்
பெரும் செல்வாக்குப்
பெற்றிருந்தது.
இதனால்தான் அன்றுமுதல்
காங்கிரஸ்
ஒரு பேரம்
பேசும் கட்சியாக மாற்றம் பெற்றது. தலைமைகள் கிழக்கிலிருந்து
திடீரென்று
உதயமான அக்கட்சியைப்
பார்த்துப்
பயந்தனர்.
காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃப் அவர்களது திடீர் மறைவையடுத்து
கட்சி ஆரம்பத்தில்
இரண்டாகியது. நாளடைவில் உள்வீட்டுப்பூசல்
வலுவடைந்து
மூன்றாகியது.
அதன்பின்னர் நான்காகியது.
இன்று காங்கிரஸ்
மரமாக நின்றாலும்,
கிளைகள் தனித்தனியாக
ஆனால் அஷ்ரஃப் அவர்களின்
பாசறையில்
வளர்ந்ததனால்
பலமுள்ள கிளைகளாக பிரிந்த நிலையிலும்
பரிணமித்து
நிற்கின்றன.
அங்கும் இங்குமாக
இருந்து வந்தாலும்
காலத்தின்
தேவைகளை கருத்திற்கொண்டும்,
தமது மக்களின்
நலனுக்கும்
முக்கியத்துவம்
அளித்தும்
முஸ்லிம்
காங்கிரஸ்
இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான
அரசாங்கத்திற்குத்
தனது முழுமையான
ஆதரவை வழங்கி வருகின்றது.
சாணக்கியத்
தலைமையும்,
தூரநோக்கிய
சிந்தனையும்
கொண்ட செயலாளர் மற்றும் உயரிய எண்ணம்
கொண்ட அரசியல் உயர்பீடம்
என்பவற்றின்
சிறந்த முடிவு காங்கிரஸ¤க்கு
வாக்களித்த
முஸ்லிம்
மக்களுக்கு
நிச்சயம்
மகிழ்வைத்
தந்திருக்கும்.
இதேபோன்று ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில்
தொடர்ச்சியாக
அங்கம் வகித்து தமது பூரண
ஒத்துழைப்பை
வழங்கிவரும்
அமைச்சர்கள்
றிசாத் பதியுத்தீன்,
அதாவுல்லா
ஆகியோர் தலைமையிலான
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்,
தேசிய காங்கிரஸ்
ஆகிய கட்சிகளும்
தொடர்ச்சியாக
அரசாங்க தரப்பிலிருந்தே
வெற்றிகளைக்
கண்டு வருகின்றன.
இந்த அமைச்சர்கள்
சார்ந்த இக்கட்சிகள்
மீதும் மக்கள் பெரு நம்பிக்கை
வைத்தே செயற்பட்டு
வருகின்றனர்.
அவ்வாறு இவர்களுக்கு
வாக்களித்தவர்களில்
பெரும்பாலானோர்
முஸ்லிம்
மக்களாகவும்
காணப்படுகின்றனர்.
இப்போது பிரச்சினை
என்வென்றால்
ஒட்டுமொத்த
முஸ்லிம்
மக்களும்
அரசாங்கத்திற்கு
நேரடியாகவும்,
அரசாங்கத்திற்கு
ஆதரவு வழங்கும் கட்சிகளுடனும்
இணைந்து இருப்பதால்
இந்தக் கட்சிகள் மட்டும் ஏன் தமக்கிடையே
மட்டும் வேறுபாட்டைக்கொண்டிருக்க
வேண்டும்
என்பதே ஆகும். குறிப்பாக அரசாங்கக்
கட்சியில்
உள்ள முஸ்லிம்
அமைச்சர்கள்
ஒருசிலரைத்
தவிர ஏனைய
முஸ்லிம்
அமைச்சர்கள்
இதர முஸ்லிம்
கட்சிகளைச்
சார்ந்தவர்களே.
இவர்கள் அனைவரும் முன்னர் போன்று ஒன்று சேர்ந்து
ஒரே கூட்டணியில்
செயற்பட்டு
ஒரே கருத்தைக்
கொண்டியங்க
வேண்டும்
என்பதே மக்களது எதிர்பார்ப்பாக
உள்ளது. அதன் மூலம் அரசாங்கத்தின்
கரங்களைப்
பலப்படுத்துவதுடன்
தமது பலத்தையும்
அதிகரிக்கலாம்.
இவர்கள் அனைவரும்
முன்னர் ஒன்றாக ஒற்றுமையாக
ஓரணியில்
இருந்தவர்களே.
சிறுசிறு கருத்து
வேறுபாடுகள்
இன்று இவர்களைக்
கூறுபோட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்விதத்திலும் அரசாங்கத்தை அமைக்க முடியாது. எனவே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும். அதனுடன் இணையலாம் என நினைப்போருக்கு அது வெறும் பகற்கனவாகவே அமையும். மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் நடந்துவந்த பாதையில் முஸ்லிம் மக்களும், அவர்களை வழிநடத்தும் அரசியல்வாதிகளும் பயணிக்க வேண்டுமாயின் எல்லோரும் தலைவராவதை விடுத்து திறமையுள்ள ஒருவரைத் தலைவராகத் தெரிவு செய்து அல்லது இணைத்தலைமை மூலமாக பிளவுபட்டிருக்கும் கட்சிகளை ஒற்றுமைப்படுத்த வேண்டும். தலைமைகள் பிரிந்து நிற்பதால் மக்கள் பாடுபெரும் திண்டாட்டமாகவே உள்ளது. இதனைத் தலைவர்கள் உணர வேண்டும் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |