Contact us at: sooddram@gmail.com

 

ஹிட்லரை ஆதரித்தவர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற அற்புத வரிகளுக்குச் சொந்தக்காரர் கணியன் பூங்குன்றனார் என்பதறிவோம்; ஆனால் அவரைப்பற்றி மேலதிக விபரங் கள் எதுவும் அறிய இயலவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டதால் அன்று வரலாற்றை எழுதிவைக்கும் வழக்கம் இல்லாததால் அவ்வாறு நேர்ந்தது எனலாம்.

எங்கெல்லாம் அடக்குமுறை கோலோச்சுகிறதோ- எங்கெல்லாம் பாசி சம் கவ்வுகிறதோ- எங்கெல்லாம் சர்வாதி காரம் கோலோச்சு கிறதோ- எங்கெல்லாம் மத, இன, பிரதேச வெறி ஆட்டிவைக்கி றதோ அங்கெல்லாம் மேற்கோள்காட்டப் படும் கவிதை ஒன்று உண்டு.

முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்கவந்தனர்/ நான் பேசவில்லை; ஏனெனில் நான் யூதன் அல்ல/ பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர்/ நான் பேசவில்லை; ஏனெனில் நான் கம்யூனிஸ்டு அல்ல/ பின்னர் அவர் கள் தொழிற்சங்க வாதிகளைப் பிடிக்க வந் தனர்/ அப்போதும் நான் பேசவில்லை; ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல/ பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்/ அப்போது எனக்காகப் பேச யாரும் இல்லை

மனித மனங்களை நுட்பமாகப் படம் பிடித்து பாசிசத்துக்கு எதிராக ஆவேச உணர்வை ஊட்டிய இக் கவிதை வரிகளை எழுதியவர்யார்? அவர் வரலாறு என்ன? எதுவுமே தெரியாமல் கூட அன்றாடம் உல கெங்கும் பலரால் இக்கவிதை மேற்கோள் காட்டப்பட்ட வண்ணம் உள்ளது.

இக்கவிதையை எழுதியவர் பாஸ்டர் மார்டின் - நீய்- மொல்லர். இவர் ஒரு கிறிஸ்தவ மதபோதகர். இதில் வேடிக்கை என்னவெனில் இவர் கப்பற்படை அதி காரியாக பணி புரிந்தவர் என்பதும், முத லில் ஹிட்லரின் தேசிய வாதத்தை ஆத ரித்தவர் என்பதும் நாமறிய வேண்டிய செய்தி.

1892 ஜனவரி 14 ஆம்நாள் ஜெர்மனி யில் லிப்ஸ்டாப் என்ற சிறிய கிராமத்தில் லூத்தரன் தேவாலய பாதிரியாரின் மகனாக மார்டின் பிறந்தார். இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். 1915 ஆம் ஆண்டு ஜெர்மன் சாம்ராஜ்ய இம்பீரியல் கப்பற்படையில் ஒரு அதிகாரியாகச் சேர்ந்தார். தாய் நீர் மூழ்கி கப்பல் என அழைக்கப்படும் வல் கன் நீர்மூழ்கிக் கப்பலில் தளபதிக்கு அடுத்த நிலைக்கு விரைவில் உயர்ந்தார்.

இவர் போர்க்களத்தில் பல்வேறு தாக்கு தல்களுக்கு தலைமையேற்று வெற்றி பெற் றார். பிரெஞ்சு கப்பலை மூழ்க வைத்து பிரெ ஞ்சு துறைமுகத்தை தற்காலிகமாக மூடவை த்தார். இவருடைய தொடர் சாதனைகளுக் காக இவருக்கு முதல்தர இரும்புச் சிலுவை (ஐயர்ன் கிராஸ் ஃபர்ஸ்ஃட் கிளாஸ்) விருது வழங்கப்பட்டது. ஆனால் அவர் மனம் யுத் தங்களை விட மக்கள் மனதில் பீடித்திருக் கும் கொந்தளிப்புகளை அமைதிப்படுத் தும் போதனைகளிலேயே நாட்டம் கொண் டது. அவர் மதபோதகராக விரும்பினார். அவர் எழுதிய சுயசரிதை அவர் போத கரான கதையைக் கூறும்.

1919 ஜூலை 20 ஆம் நாள் எலிஸா-நீ பெர்ல் என்பவரை மணந்து கொண்டார். மூனஸ்டர் பல்கலைக்கழகத்தில் புராட்டஸ் டண்ட் இறையியல் பட் டம் பயின்றார்.

அதன்பின் தேவாலயப்பணிகளி லும் மதபோதனைகளிலும் ஈடுபட்டு அதில் பல பொறுப்புகளை ஏற்று திறம்பட செயலாற்ற லானார்.

ஆரம்பத்தில் ஜெர்மன் குடியரசுக் கட்சியின் தீவிர தேசியவாதத்தை புராட் டஸ்ட்டண்ட் சர்ச்சுகள் பகிரங்கமாகவே ஆதரித்தன. மொல்லரும் ஆதரித்தார். 1933 ஆம் ஆண்டு ஹிட்லர் பதவிக்கு வர விழைந்தார். பதவிக்கு வந்ததை வரவேற் றார். தேசிய உணர்வு வலுப்பெறுமென புகழ்ந்தார்.

ஆனால் விரைவிலேயே தன் தவறை உணரலானார். ஆரியர்களின் மேன்மை குறித்து தற்பெருமையும் யூதர்களுக்கு எதி ரான விஷமும் மிகுந்த ஹிட்லரின் போத னைகள் வழி தவறுவதாக உணரலானார். இதே போல் மேலும் பல மதபோதகர்கள் எதிர்க்கலானார்கள்.

வெகுண்ட ஹிட்லர் தன் குணத்தை காட்டினான். மொல்லர் உட்பட 800 மதபோத கர்களைக் கைது செய்து வழக்குத் தொடர்ந் தான். மொல்லர் இதர சர்ச்சுகளை ஒருங்கி ணைத்து யூத கிறிஸ்தவர்கள் மீது காட்டப் படும் பாரபட்சத்துக்கு எதிராகவும் புராட் டஸ்ட்டண்ட் மதத்தையே நாசிச கருத்தோட் டத்திற்கு திருப்புவதை எதிர்த்தும் வலு வான ஒன்றுபட்ட குரல் எழுப்பினார். இவரது மனவலிமை எல்லோராலும் பாராட் டப்பட்டது.

ஆயினும் முதலில் சுயபாதுகாப்பு என் கிற தன்சர்ச் நிலைபாட்டிலிருந்து நாசி சித்தை எதிர்க்கத் துவங்கியவர் படிப்படி யாக முழுமையாக நாசி சத்தை, ஹிட்லரை எதிர்த்து குரல் எழுப்பலானார். யூதர்களை எதிர்ப் பது சரியென்று கருதியே ஹிட்லரை ஆதரித்த மொல்லர் அனுபவ பட்ட றையில் அடிபட்டு அதற்கு எதிராக எழுந்தார் என்பதே வரலாற்று உண்மை.

ஆரம்பத்தில் ஹிட்லரை ஆதரித்த போதிலும் எதிர்க்க துவங்கியதும் ஒரு பரந்த ஒற்றுமையைக் கட்ட பல்வேறு சர்ச்சு களை ஒருங்கிணைத்து ஜனநாயக மேடை அமைத்தார். இதனால் ஹிட்லர் சினம் கொண் டார்.

1937 ஜூன் முதல் நாள் மொல்லர் கைது செய்யப்பட்டார். அரசுக்கு எதிராகசதி செய்ததாக குற்றஞ் சாட்டப்பட்டு நீதிவிசாரணை என்ற நாடகம் நடத்தப்பட்டு 2000 ஜெர்மன் ரூபாய் அபராதமும் 7 மாத கடுஞ் சிறைத்தண்டனையும் விதிக்கப் பட்டன. சிறையிலிருந்து விடுதலையாகிற நாளில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு 1938 முதல் 1945 வரை சித்ரவதைக்கு ஆளா னார். 1945 ஆம் ஆண்டு நேசநாட்டுப் படைகள் இவரையும் இவரோடு 140 பிற கைதிகளையும் விடுதலை செய்தன. அது வரை வதை முகாமில் கொடுமைகளுக்கு ஆளானார்.

லியோஸ்டின் என்ற சக வதை முகாம் கைதி ஒரு முறை மொல்லரிடம் தாங்கள் ஒரு போதும் ஹிட்லரை ஆதரித்ததில்லையா என்று கேட்டபோது, மொல்லர் சொன்ன பதிலை அவர் பதிவு செய்திருக்கிறார்.

அதில் ஹிட்லரை தான் நம்பியதாக வும்; யூதர்களுக்கு கட்டுப்பாடு மட்டுமே விதிப்பார் அழித் தொழிக்க மாட்டார் என அவர்கொடுத்த வாக்குறுதிகளை நம்பியதா கவும் கூறியுள்ளார். ஆனால் ஹிட்லர் நம் பிக்கை மோசம் செய்து விட்டதாக குற்றஞ் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்ல, அன்று ஜெர்மனியில் நாத்திகவாதமும் கம்யூனிச மும் வளர்ந்து வந்ததால் அதிலிருந்து சர்ச்சு களை பாதுகாக்க ஹிட்லர் தேவை என்று தாம் கருதியதாகவும், அது தவறென உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

என் தவறுகளுக்கு நான் இப்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்; நான் மட்டுமல்ல இங்கு வதை முகாமில் உள்ள பலர் நிலையும் அது தான்என்றார். ஆம் பாசிசமும் நாசிசமும் வரம் கொடுத் தவனையே பதம் பார்க்கும் என்பதுதான் வரலாறு. விடுதலைக்குப் பிறகு மதபோத னைகளிலும் ஈடுபட்டு உலக அளவில் பல பொறுப்புகள் வகித்தார். 92வது வயதில் 1984 மார்ச் 6 ஆம் நாள் மரணமடைந்தார்.

அவரது கவிதை வரிகள் அவ்வளவு உயிர்த்துடிப்புடன் இன்றும் வாழ்வதன் ரகசியம்; அது அவரது வாழ்க்கை அனுபவத்தின் சாரமாக பிழியப்பட்ட வரிகள் என்பது தான்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com