|
||||
|
உயிருக்கு
குறி? நான்காவது
கட்ட ஈழப்
போரை இலங்
கைக்கு சாதகமாக மாற்றியதில்,
ஆழ ஊடுருவும்
அணியின் பங்கு மிகப்பெரியது. எதிரி களின் அரண்களுக்குள்
நுழைந்து
உளவுபார்க்கும்
இந்தப் பிரிவு, வாய்ப்புக்
கிடைக்கும்
நேரத்தில்
அங்கு அழித் தொழிப்பு
நடவடிக்கைகளையும்
மேற்கொள்ளும்.
2001-ம் ஆண்டு
தொடங்கப்பட்ட
இந்த உளவுப்
பிரிவு, அப்போது விடுதலைப்
புலிகளின்
முக்கியத்
தளபதியாக
விளங்கிய
கேணல் சங்கரைப் படு கொலை
செய்தது.
இப்போது கடைசியாக பிரான்ஸ் நாட்டில் அத்துமீறி
நுழைந்து,
விடுதலைப்
புலிகளின்
வெளிநாட்டுக்கான
அரசியல் மற்றும் நிதி சேகரிப்புப்
பொறுப்பாளராக
இருந்த கேணல் பரிதியைப்
படுகொலை செய்து இருக்கிறது. ஆழ
ஊடுருவும்
பிரிவுக்கு
ஆட்களைத்
தேர்வுசெய்வதில்
இலங்கை அரசாங்கம்
மிகக் கவனமாக இருந்தது. சிங்களர்கள் யாரையும்
இந்த அணியில்
சேர்க்கவில்லை.
மாறாக, நன்றாகத்
தமிழ் பேசத் தெரிந்த
மலையகத் தமிழர்களையும்,
புலிகளுக்கு
எதிரான நிலைப்பாட்டைக்
கொண்ட ஒரு சில
தமிழர்களையும்
மட்டுமே பயன்படுத்தியது.
இந்த உளவுப்பிரிவுதான்
தமிழகத்துக்கு
வந்துள்ளது.
தமி ழகத்தில்
இருந்து இலங்கை அரசுக்குத்
தொடர்ந்து
எதிர்ப்பைப்
பதிவுசெய்துவரும்
பழ.நெடுமாறன்,
வைகோ, கொளத்தூர்
மணி, சீமான்,
வேல் முருகன்
போன்றவர்களை
ஒடுக்க நினைக்கிறது.
அதற்காகத்தான் இந்த ஆபரேஷனைத்
தொடங்கி இருக்கிறது.
இவர்களின் உயிர்களுக்கு
எந்த நேரத்
திலும் ஆபத்து ஏற்படலாம்''
என்கிறார்கள். ''தமிழகத்தில்
இந்தப் பிரச்னையை
அணையாத விவகாரமாக
இவர்கள் ஆக்கி வைத்துள்ளனர். இது, தமிழ் மக்கள் மத்தியில்
முக்கியமான
விஷயமாக மாறுவது பற்றி எங்களுக்கு
எந்தக் கவலையும் இல்லை. ஆனால், அது இந்திய அரசாங்கத்தின்
நிலைப்பாட்டைத்
தீர்மானிப்பதற்குத்
தடையாக இருக்கிறது.
இவர்கள் மட்டும்
ஆர்ப்பாட்டங்கள்,
போராட் டங்கள் நடத்தாமல் இருந்தால்,
ஐக்கிய நாடுகள் அவையில் இலங்கைக்கு
எதிரான நிலைப்பாட்டை
இந்தியா எடுத்து இருக்காது.
இது பல் வேறு அழுத்தங்களுக்குக்
காரணமாக அமைந்துவிட் டது.
எனவே, தமிழகத்தில்
ஏதாவது ஒரு மூலையில்
ஒரு கூட்டம்
நடக்கிறது
என்று கவலைப்படாமல்
இருக்க முடியாது.
இவை அனைத்தும்
உலக நாடுகளின்
முடிவை மாற்றுவதாக அமைந்துள்ளன''
என்ற ரீதியில்
இலங்கை நினைப் பதாகச் சொல்கிறார்கள்.
இத்தகைய ஈழ ஆதரவுத்
தலைவர்களில்
யாராவது ஒருவரை அச்சுறுத்தினால் அடுத்து யாரும் இந்தப் பிரச்னை குறித்துப்
பேச மாட்
டார்கள் அல்லது செயல்பாடுகளைக்
குறைத்துக்
கொள்வார்கள்
என்று நினைக்கிறார்களாம். ஈழத்
தமிழர்கள்
போர்வையில்
இதுபோன்ற
உளவாளிகள்
இருப்பது
சமீபத்தில்தான்
தெரிந்தது. 'எனவே இதுபோல வருபவர்களிடம்
எச்சரிக்கையாக
இருங்கள்’
என்று ஈழ ஆதரவுத்
தலைவர்களுக்கு
வெளிநாடுகளில்
இருந்து ரகசியத் தகவல்கள் வந் துள்ளன. தமிழர்
தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனிடம் இதுபற்றிக்
கேட்டோம். ''நீங்கள்
சொல்வது உண்மைதான்.
மிகவும் நம்பத்தகுந்த
வட்டாரத்தில்
இருந்து எனக்கும் இந்தத் தகவல் வந்தது.
அஹமது, பண்டாரா,
ரோகித் என்ற மூவர்
தலைமையில்
உளவுப்படைத்
தமிழகத்துக்குள்
நுழைந்து
இருக் கிறது. என்னையும் என்னைப்போன்ற
செயல்பாடு களை
உடைய தலைவர்களையும்
இந்தப் படை கண்காணிக்கிறதாம். கடந்த
சில நாட்களுக்கு
முன், பல்லாவரத்தில்
உள்ள எனது
அலுவலகத்தையும்
மாடம்பாக்கத்தில்
உள்ள வீட்டையும்
ஒருவர் புகைப்படம்
எடுத்து இருக்கிறார். மற்ற தலைவர்களின்
அலுவலகங்களும்
வீடுகளும்
நோட்டமிடப்பட்டு
இருக்கிறது.
சிங்கள உளவுப்
படையின் இந்தத் தீய நடவடிக்கைகள்
இங்குள்ள
காவல் துறைக்கும்
உளவுத் துறைக்கும்
தெரியாமல்
இருக்க வாய்ப்பு இல்லை. இதுபோன்ற சதி வேலைகளால்,
எங்களது பணியையும்
புலிகளுக்கு
ஆதரவான எங்களது குரலையும்
முடக்கிவிட
முடியாது.
நாங்கள் மக்களை
நம்பிப் பணியாற்றிக்கொண்டு இருப்பதால்,
இதற்கு எல்லாம் அஞ்சி ஒதுங்கி
விட மாட்டோம்''
என்றார் தெம்போடு. சிங்கள
உளவுப்படை
தமிழகத்தில்
ஊடுருவி இருப்பது உங்களுக்குத்
தெரியாதா? என்று மத்திய
உளவுப்பிரிவு அதிகாரி ஒருவரிடம்
கேட்டோம்.
''அப்படி
இருக்க வாய்ப்பே இல்லையே'' என்று மறுத்
தவர், ''இலங்கைத்
தமிழர்கள்
என்று யார் இங்கே
வந்தாலும்,
அவர்களைத்
தீவிர விசாரணைக்கு
உட்படுத்திய
பிறகே அனுமதிக்கிறோம்.
அவர்களைத் தொடர்ந்து
எங்களது கண்காணிப்பிலேயே
வைத்து இருக்கிறோம்.
நாங்கள் அப்படிக்
கண் காணிக்கும்
போதும் எங்களுக்கு
எதிர்ப்புதான்
கிளம்புகிறது.
இலங்கை அகதிகள்
என்ற பெயரில்
வேண்டுமானால்,
நீங்கள் சொல்வதுபோல
சிலர் சதித் திட்டத்துடன்
உள்ளே வந்து இருக்கலாம்.
இந்த விஷயத்தில்
கூடுதல் அக்கறை காட்டப்படும்''
என்றார். தமிழகத்தில் இருக்கும்
தலைவர்களைக்
காப்பாற்றும்
பொறுப்பு
தமிழக அரசுக்குத்தான்
இருக்கிறது! -
ஜோ.ஸ்டாலின் (நன்றி: ஆனந்த விகடன்) விகடன் வாசகர் கருத்துக்கள்: RADHAKRISHNAN செய்தி நம்பும்படி இல்லை. இந்த தலைவர்கள் யாருக்குமே மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. இலங்கை அரசு புலிகளை அழித்து, ஈழ தமிழர்களை ஒரு வழி செய்து விட்டனர். புலிகளை அழித்த பிறகு, இந்த பூனை குட்டிகள் என்ன செய்யப் போகிறது? இருந்தாலும், இவர்கள் நம்மவர்கள். அந்த வகையில், இவர்களின் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு...... Albert அட போங்கப்பா, சும்மா தமாசு பண்ணிகிட்டு. இந்தக்கூட்டம் வெளிநாட்டு பணத்துக்காக இங்கு குரல் கொடுக்கும் கூட்டம். அந்த வரவு செலவில் தகராறு வந்து எதாவது நடந்தால் தான் உண்டு. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |