|
||||
|
குழந்தையை கொலை
செய்யாத றிஸானாவுக்கு
அநியாய சிரச்சேதம்!
றிஸானாவின் உருக்கமான
கடிதம்
றிஸானா தான் குழந்
தையை கொல்
லவென அதன்
கழுத்தை நெரிக்கவில்லை
என்று அல் லாஹ்வின்
மீது சத்தியம்
செய்து இறுதி வாக்குமூலம்
அளித்துள்ளார். அவரது
வாக்கு மூலம் இந்தப்
பக்கத்தில்
சேர்த்துக்
கொள்ளப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில்
செய்யாத குற்றத்திற்காக
மரண தண்டனையை
அனுபவித்த
நம்நாட்டு
வீர மங்கையான
றிஸானா நபீக் 2007ம் ஆண்டு ஜனவரி
30ம் திகதியன்று
அளித்த வாக்கு மூலத்தில்
அல்லாஹ்வின்
மீது சத்திய
மாக குழந்
தையை கொல்லவென
அதன் கழுத்தை
நெரிக்க வில்லை என்று உண்மையை
எடுத்து ரைத்திருக்கிறார்.
அபலைப் பெண் ணான
றிஸானா குழந் தைகளை
பராமரிப்பதில்
எவ்வித அனுபவமும்
இல்லாத காரணத்தினால்
தனது பொறுப்பில்
விடப் பட்ட அந்த
குழந்தைக்கு
பால் ஊட்டும்
போது தற்செயலாக
ஏற்பட்ட ஏதோ ஒரு
விபரீதத்தினால்
தான் அக்குழந்தை
மரணித்திருக்கிறதென்பது
றிஸானா அளித்த இறுதி வாக்கு
மூலம் சான்று பகர்கின்றது.
றிஸானாவை இந்த
தொல்லையில்
மாட்டிவிடு
வதற்காக அவரது வயதை
6 வருடங்களினால்
அதிகரித்து
போலிக் கடவுச்சீட்டை
பெற்றுக்
கொடுத்த அந்த முகவர்
மன்னிக்க
முடியாத குற்றம் இழைத்து, றிஸானாவின்
மறைவுக்கான
முழுப் பொறுப்பையும்
ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த துரோகச்
செயலை செய்த அவருக்கு
காலப்போக்கில்
நல்ல தண்டனை
கிடைக்கும்
என்ற நம்பிக்கை
றிஸானாவின்
மறைவினால்
வேதனைப்படும்
மக்களின்
மனதில் வலுப்பெற்று
வருகிறது.
தனது குடும்பத்தின்
வறுமையை போக்குவதற்காகவும்
தேசத்தின்
பொருளாதாரத்தை
கட்டியெழுப்ப
உதவுவதற்காகவும்
சவுதி அரேபியாவுக்கு
பணிப்பெண்ணாக
சென்று தனது உயிரையே
தியாகம் செய்த றிஸானா
நபீக் என்ற இளம்
பெண்ணை நம் நாட்டு
மக்கள் இன்று ஒரு
வீர மங்கையாக
மதித்து கண்ணீர் அஞ்சலி செலுத்து கிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில்
நம்நாட்டில்
உள்ள பலரும்
றிஸானாவுக்காக
அனுதாபச்
செய்திகளை
பத்திரிகைகளுக்கும்,
வெகுஜன ஊடகங்களுக்கும்
எழுதி தங்கள் அஞ்சலியையும்
செலுத்தி
வருகிறார்கள்.
இவ்விதம் நம்
நாட்டின்
இந்த வீர
மங்கையை ஒரு தேசிய
வீராங்கனையாக
மதித்து நாம் அஞ்சலி
செய்ய வேண்டுமாயின்
அந்தப் பெண் தன்
குடும்பத்தை
வாழ வைப்பதற்காக
சென்ற நோக்கத்தை
நம்நாட்டு
மக்கள் அனைவரும் நிறைவேற்றுவது
அவசியமாகும்.
றிஸானாவின் பெற்றோர்
இன்றும் கூட வறுமை
நிலையில்
குடிசை வாழ்க்கை வாழ்ந்து வேதனை அனுபவித்து
வருகிறார்கள்.
அவர்களுக்கு இது வரையில்
எவரும் பொருளாதார
ரீதியில்
உதவி செய்ததாகவோ,
அவர்களின்
வீட்டை திருத்தி அமைக்கவோ முன்வந்ததாக
தெரியவில்லை. இனிமேலாவது
றிஸானாவுக்கு
அஞ்சலி செலுத்தும்
நம்நாட்டவர்
அனைவரும்
அவளது ஏழைப் பெற்றோரையும்
இரண்டு தங்கைகளையும்
நிம்மதியாக
வாழ வைப்பதற்கு
பொருளாதார
உதவிகளை செய்ய வேண்டும்.
றிஸானா சிரச்சேதம்
செய்யப்பட்டதனால்
பலர் சவுதிஅரேபியாவின்
மீது ஆத்திரமடைவது
ஒரு பெரும்
முட்டாள்தனமாகும். சவுதி
அரேபியாவில்
மன்னன் முதல் சாதாரண
மனிதன் வரை ஷரிஆ
சட்டம் எவ்வித பாகுபாடுமின்றி
சீரான முறையில் நிறைவேற்றப்
படுகின்றது.
அந்நாட்டில் குற்றம்
இழைத்தவர்கள்
தண்டிக்கப்
படுகிறார்கள்.
றிஸானாவின் சோகக் கதையை
நாம் திரும்பிப்
பார்க்கும்
போது மிகவும்
வேதனையாக
இருக்கிறது. றிஸானா இறக்கும்
போது அவளுடைய
வயது 23 ஆகும்.
றிஸானா மூதூர்
ஷாபி நகரில்
வாழ்ந் தவர். 2005ம் ஆண்டில் குடும்பத்தின்
வறுமை சுமையை தாங்க வேண்டு
மென்ற உன்னத நோக்கத்துடன்
17 வயதான பாவம் எதுவும்
அறியாத றிஸானா சவுதி அரேபி
யாவுக்கு
பணிப்பெண்ணாக
சென்றாள்.
அதே ஆண்டில்
அவள் அன்
போடு பராமரித்து
வந்த அவ்வீட்டு
எஜமானியின்
நான்கு மாத குழந்தை
றிஸானாவினால்
கொலை செய்யப்பட்டதாக
குற்றம் சாட்டப்பட்டு
கைது செய்யப்
பட்டு சிறையில் அடைக்கப் பட்டாள். நடந்த உண்மை இது வரை
எவருக்கும்
தெரிய வில்லை. றிஸானா தெரியாத்
தனமாக குழந்தையை
பராமரித்த
போது, ஏற்பட்ட
ஒரு விபரீதத்தினால்
குழந்தை மரணித்திருக்கலாம்.
அப்போது றிஸானா விடலைப் பருவத்தைச்
சேர்ந்த ஒரு பெண்ணாக
இருந்ததனால்
தனது செயற்பாட்டின்
தாக்கத்தை
அந்த அப்பாவி
பெண் அறியாதும்
இருந்திருக்கலாம். இதைப்பற்றி தொடர்ந்தும்
பேசுவதனால்
மன வேதனையைத்
தவிர வேறு
எந்தப் பயனும் கிடைக்கப்
போவதில்லை.
இப்படியான சூழ்நிலையில்
றிஸானாவின்
சோக மரணத்தை
அரசியலாக்கி
மக்கள் ஆதரவை திரட்டுவதற்கு
ஐக்கிய தேசியக்கட்சி
முயற்சி எடுப்பது றிஸானாவின்
மரணத்தினால்
ஏற்பட்ட வேதனையை விட பெரும்
வேதனையை எமக்கு அளிக்கிறது.
றிஸானாவின் ஜனாஸாவை
உடனடி யாக இலங்கைக்கு
கொண்டு வருவதற்கு
அரசாங்கம்
ஏற்பாடு செய்து அதனை றிஸா
னாவின் சொந்த ஊரிலேயே
நல்லடக்கம்
செய்ய வேண்டுமென்று
ஐக்கிய தேசியக்கட்சி
பாராளுமன்ற
உறுப்பினர்
ரஞ்சன் ராமநாயக்க
ஒரு கோமாளித்தனமான
வேண்டுகோளை
விடுத்து
ள்ளார்.
இஸ்லாமிய மார்க்க
த்தின்படி
மரணித்தவரின்
ஜனாஸா 24 மணித் தியாலங்
களுக்குள்
நல்லடக்கம்
செய்ய வேண்டு மென்பதை தெரியாத வர்கள் தான் இவ்விதம்
இன்று அரசியல் நடத்து கிறார்கள்.
றிஸானாவை மரணப் பிடியில்
இருந்து விடு தலை
பெறச் செய்வதற்கு
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களும்
அரசாங்கத்தின்
சிரேஷ்ட அமைச்சர்கள்
பலரும் அரும்பா டுபட்டார்கள். ஜனாதிபதி அவர்கள்
றிஸானாவை
மன்னித்து
விடுவிக்குமாறு
சவுதி அரேபியாவின்
மன்னருக்கே
நேரடியாக
ஒரு வேண்டு
கோளையும்
விடுத்திருந்தார்.
எப்படியாயினும் காலன் இந்த நல்ல
உள்ளங்களை
ஏமாற்றிவிட்டு
றிஸானாவின்
உயிரை பறித்து, எங்கள் அனைவரையும்
சோகத்தில்
ஆழ்த்தியுள்ளான்.
அமைச்சர் டிலான்
பெரேரா பாராளுமன்றத்தில்
றிஸானாவின்
மறைவு குறித்து வேதனையுடன்
பேசுகையில்,
அரசாங்கம்
எடுத்த சகல முயற்சிகளும்
தோல்வியில்
முடிவடைந்துவிட்ட
போதிலும்
எவ்வாறாயினும்
நாம் றிஸானாவின்
குடும்பத்தை
கைவிட மாட்டோம் என்று தெரிவித்திருப்பது
றிஸானாவின்
மறைவினால்,
வேதனையில்
மூழ்கியுள்ள
அனைவருக்கும்
மன ஆறுதலை
கொடுப்பதாக
இருக்கிறது.
நாம் றிஸானா மீது உண்மையான
அன்பை வைத்திருந்தால்
றிஸானாவின்
குடும்பத்தை
வாழ வைப்பதற்கு
உடனடியாக
நடவடிக்கை
எடுக்க வேண்டும். இந்த
வீரப் பெண்ணின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு
அவள் சுவர்க்கம்
செல்வதற்கு
வழியமைக்க
வேண்டுமெ
ன்ற பிரார்த்தனையில்
நாம் ஈடுபடு
வோமாக.
. . ! |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |