|
||||
|
இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும்
அவசரத்தில்
முறை தவறுகிறதா
பிபிசி தமிழ்? தமக்கு சாதகமான விடயங்களை
திரித்துக்
கூறுவதில்
அன்றைய லங்கா புவத்தையே
(1980-1990) மிஞ்சும்
அளவுக்கு
முன்னேறி
வரும் பி.பி.சி தமிழ் சேவை
இஸ்லாத்தைக்
கொச்சைப்படுத்துவதிலும்
முஸ்லிம்களுக்குள்
பிரிவினையை
உண்டாக்குவதிலும்
மும்முரமாகச்
செயற்படுவதாக
விமர்சனங்கள்
எழுந்துள்ளது.
சமீபத்தில்
இஸ்லாமிய
பெண் எழுத்தாளர்
ஒருவரை சிக்கலில்
மாட்டிவிட்டு
அழகு பார்த்த
பி.பி.சி ஊடக தர்மம்
தவறிச் செயற்படுகிறதா
எனும் சந்தேகம் எழுந்த போது, அதனடிப்படையில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட
சில விசாரணைகள்
பி.பி.சி தமிழ்சேவையினர்
தமது இஸ்லாமிய விரோத மனப்பான்மையை
அரங்கேற்றுகிறார்களா
எனும் சந்தேகத்தை
வலுவடையச்
செய்கிறது. பி.பி.சி எனும் நன்கறிந்த,
புகழ்பெற்ற,
சர்வதேசப்
பெயரினைப்
பயன்படுத்தித்
திடீர் திடீர் என தொலைபேசி
அழைப்புகளை
மேற்கொண்டு,
காரணங்களை
முழுமையாக
விளக்காது
பேட்டிகள்
மேற்கொள்வதையும்,
அந்தப் பேட்டிகளிலிருந்து
குழப்பத்தை
உருவாக்கக்கூடிய
கருத்துகளை
மாத்திரம்
வெட்டி – ஒட்டி அதன்
மூலம் முஸ்லிம் சமூகத்தை எள்ளி நகையாடுவதையும்
தன் திட்ட
நிரலில் இணைத்து பி.பி.சி தமிழ் சேவை
செயற்படுவது
போன்று இருப்பது கவலைக்குரிய
விடயமாகும். நடுநிலைமையில் இருந்து செய்தி வெளியிடுவதிலோ,
விமர்சனங்களை
முன்வைப்பதிலேயோ
தவறில்லை,
அதை இலங்கை
முஸ்லிம்
சமூகம் நிச்சயமாக
வரவேற்கும்
என்பதிலும்
மாற்றுக்
கருத்து இல்லை, ஆனால்
திட்டமிட்ட
விஷ நடவடிக்கைகளை
பி.பி.சி தமிழ் சேவையினர்
அரங்கேற்றுவது
சமூகத்துக்கெதிரான
விடயமாகவே
பார்க்கப்படுகிறது. இவ்விடயத்தில் அங்கு பணியாற்றும்
இலங்கை, கிழக்கு மாகாணத்தைச்
சேர்ந்த ஒரு நபர்
மும்முரமாகச்
செயற்படுகிறாரா
எனும் சந்தேகம் எம்மோடு உரையாடிய மூத்த முஸ்லிம்
ஊடகவியலாளர்கள்
மத்தியில்
தற்போது வலுத்து வருகின்றது. விபச்சாரம் பற்றி ஏறாவூரைச்
சேர்ந்த எழுத்தாளர்
சர்மிளாவிடம்
கருத்தறிவதாகக்
கூறி அவரை
பேச வைத்த
இக்குறிப்பிட்ட
நபர் அவர்
விபச்சாரத்தை
அங்கீகரிக்கும்
முஸ்லிம்
பெண் எனும்
ரீதியில்
செய்தி வெளியிட்டு
சமூகத்திற்குள்
குழப்பத்தை
ஏற்படுத்தியது
மாத்திரமன்றி
அந்தப் பெண் எழுத்தாளரை
சங்கடத்திலும்
மாட்டி விட்டிருந்தார்
என்பது நினைவுகூரப்படும்
அதேவேளை, ரிஸானாவின்
மரண தண்டனையின்
பின் ஊர்
நிலையை அறிய முயற்சிக்கிறோம்
எனும் அடிப்படையில்
ஊரைச் சேர்ந்த ராஜிஸ் என்பாரைச்
செவ்வி காண்கிறோம்
என்று எப்படியாவது
அவர் வாயால்
தான் எதிர்பார்க்கும்
ஒரு முடிவினை
சொல்ல வைக்க வேண்டும்
என்பதில்
இந்நபர் எவ்வாறு முயற்சி செய்கிறார்
அதைப் பேட்டி தருபவர் எவ்வாறு தவிர்க்க முனைகிறார்
என்பதை பி.பி.சி. தமிழ் இணையத்திலேயே
கேட்கலாம்.
(http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/01/130110_raajiis.shtml) ஊடகவியலாளனாக உண்மையைக்
கொண்டு வர முயற்சிப்பதற்கும்
தான் உண்மை
என நம்பும்
“அந்த விடயம்”
மாத்திரம்
தான் வெளியில்
வர வேண்டும்
எனும் அடிப்படையில்
அழுத்தங்கள்
மேற்கொள்வதற்குமிடையில்
இருக்கும்
வித்தியாசத்தை
அறியாத நிலையில் குறிப்பிட்ட
நபரோ பி.பி.சி
ஊடகவியலாளர்களோ
இல்லை ஏனெனில் தற்போதைய பி.பி.சி தமிழ் சேவையில்
பணியாற்றுவோர்
பெரும்பாலும்
நீண்ட காலமாக (வேறு யாரையும்
உள்ளே வரவிடாமல்)
தங்கித் தரித்திருப்போருமாகும். இந்நிலையில் செய்திகளை
வெளியிடும்
போது ஏதோ
தற்செயலாக
இடம்பெற்றது
போன்ற தோரணையில் வேண்டுமென்றே
இஸ்லாமிய
வார்த்தைகளில்
எழுத்துத்
திரிவாக்கம்
செய்வது ( எ.கா: ஷரியாவை
ஒரு இடத்தில்
ஷரியா என்றும் இன்னொரு இடத்தில் ஷாரியா என்றும் எழுதுவது) நடு நிலையில்
உண்மையைத்
தெரிவிக்கத்
தவறுவது, உதாரணம் அவர்களது ஷரியா சட்டமும்
சவுதி அரேபியாவும்
எனும் இம்மாதம் 16ம்
திகதியிட்டு
பிரசுரிக்கப்பட்ட
கட்டுரையில்
“வெள்ளைத்தோலுக்கு
மரியாதை” என்ற விளக்கத்தின்
கீழ் சவுதியில்
மரண தண்டனை
விதிக்கப்பட்டிருந்த
வில்லியம்
சாம்சன் என்பார் தனது பாஸ்போட்
தான் தன்
தலையைக் காப்பாற்றியது
என்று கூறிய விடயத்தை
மாத்திரம்
வெளியிட்டிருக்கிறார்கள்
(http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130116_saudikilling.shtml) ஆனால், உண்மையில் வில்லியம் சாம்சனின் விடுதலை விவகாரம் முடிவுறுவதற்கு அவருக்கு வழங்கப்பட்ட “மன்னிப்பு” எனும் காரணம் இருந்தது என்பது மாத்திரமன்றி கனேடிய பிரிட்டிஷ் பிரஜையாக இருந்தும் கூட சவுதி அரேபிய சிறைக் கொடுமைகளில் இருந்து அவர் தப்பவில்லை என்பதை ஏலவே நாம் தெரிவித்திருந்தோம். (பார்க்க: பழிக்குப் பழி மாற்றீடே கிடையாதா ?) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |