|
||||
|
றம்பொடை
பிரதேசத்தில்அடிப்படை
வசதிகள் இன்றி பல
வருடங்களாக
வாழும் தமிழ் மக்கள்
நுவரெலிய மாவட்டத்துக்குட்பட்ட
றம்பொடை டிவிசனில்
அமைந்துள்ள
ஆறு தோட்டங்களை
உள்ளடக்கிய
புரட்டொப்
குறூப் ( பெரட்டாசி
தோட்டம்) என்ற தோட்டப்பகுதியில்
வாழும் மக்கள் பலவருடங்களாக
அடிப்படை
வசதிகள் கூட இன்றி
கடும் சிரமத்துக்கு
மத்தியில்
அவல வாழ்க்கை
வாழ்ந்து
வருகின்றனர்.
கல்வி, சுகாதார, போக்குவரத்து, தபால், தொடர்பாடல்
போன்ற வசதிகள் இல்லாததால்
இப்பகுதிகளில்
வாழும் மக்களுக்கு
தொடர்ந்தும்
கொத்தடிமைகளாகவே
வாழ வேண்டிய
துர்ப்பாக்கிய
நிலை ஏற்பட்டுள்ளது.
புரட்டொப் குறூப்பில்
அமைந்துள்ள
பூச்சிக்கொடை,
அயரி, மேரியல்,
ரஸ்புருக்,
பெரட்டாசி,
மேமலை ஆகிய தோட்டங்களில்
தமிழ் மக்களே முழுமையாக
வாழ்கின்றனர். இவர்கள் வாழும் பகுதிகளில்
மொத்த வியாபார நிலையங்கள்,
பாடசாலை உபகரணங்களை
விற்பனை செய்யும் நிலையங்கள்,
ஆடை விற்பனை
நிலையங்கள்,
சிகை அலங்கார
நிலையங்கள்,
பாமசி, தொடர்பாடல்
நிலையங்கள்
என தேவையான
எதுவுமே இல்லை. இருக்கும் சில்லறை
வியாபார நிலையங்களிலும்
உச்ச விலை
என பிரதேச
மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே, ஏதாவது முக்கிய பொருட்களை
வாங்கவேண்டுமென்றாலோ
அல்லது சேவையை
பெற்றுக்கொள்ளவேண்டுமென்றாலோ
புசல்லவை
நகருக்கே
மக்கள் செல்லவேண்டும். ரஸ்புருக்கிலிருந்து
புசல்லாவைக்கு
1 மணித்தியாலயத்தில் செல்லக்கூடியதாக
இருந்தாலும்,
பெரட்டாசி
- புஸல்லாவை
வீதி குன்றும்
குழியுமாக
காணப்படுவதால்
இரண்டு மணித்தியாலயத்துக்கும்
மேலாக கடும் சிரமத்துக்கு
மத்தியில்
பயணம் செய்ய வேண்டியுள்ளது.
கட்டிக்குத்தலை, காச்சாமலை,
வீடன் ஆகிய தோட்டத்து
மக்களும்
இந்த வீதியையே
போக்குவரத்துக்காகப்
பயன்படுத்துவர். அதுவும்
உரிய நேரத்துக்கு
போக்குவரத்து
வசதிகள் இல்லாததால்
தோட்டத்தொழிலாளர்கள்
வேலைக்குச்
செல்லாமல்
விடுமுறை
எடுத்துவிட்டே
நகருக்கு
வரவேண்டியுள்ளது. காலையில் சென்றால்
பொருட்களை
வாங்கிக்கொண்டு
வீட்டுக்கு
வருவதற்கு
மாலையாகிவிடும்.
எனவே, எங்களுக்கு
உரிய வசதிகளை
ஏற்படுத்திக்கொடுக்க
வேண்டும்
என தோட்டப்பகுதி
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன்,
மழைக்காலங்களில்
வீதிகளில்
நீர் தேங்கிவிடுவதால்
அதிக விபத்துகளும்
ஏற்படுகின்றன. பெரட்டாசி - புசல்லாவை
வீதியில்
போக்குவரத்தில்
ஈடுபடும்
தனியார் பஸ்கள் அடிக்கடி சேதத்துக்குள்ளாகின்றன.
இலங்கை போக்குவரத்து
சபைக்குச்
சொந்தமான
பேருந்து
முன்னர் சேவையில் ஈடுபட்டிருந்தாலும்
அந்த சேவை
தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனால்,
நகரப் பகுதிக்கு
உயர் கல்வி
பயிலவரும்
தோட்டத்தொழிலாளர்களின்
பிள்ளைகளுக்கு
தனியார் பேருந்துகளுக்கு
அதிக கட்டணங்களை
செலுத்தவேண்டியுள்ளது. ஆசன எண்ணிக்கைக்கும்
அதிகமாக பேருந்துகளில்
ஏற்றப்படுவதால்
நெரிச்சலுக்கு
மத்தியில்
பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக
மத்திய மாகாண சபைத்
தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில்
தோட்டத் தொழிலாளர்களின்
வாக்குகளை
வேட்டையாடுவதற்காக
குறித்த வீதி புனரமைக்கப்படும்
என உறுதிமொழிகள்
அள்ளிவீசப்பட்டன.
ஆனால், புனரமைப்பு
பணிகள் பல மாதங்களாகியும்
இன்னும் தொடங்கவில்லை
என்று பெரட்டாசி
தோட்டத்தில்
வசிக்கும்
இளைஞர் ஒருவர் தெரிவித்தார். பல வருடங்களுக்குப்
பிறகு அயரி என்ற
தோட்டத்தில்
அமைக்கப்பட்ட
வைத்தியாலையில்
அனுமதிக்கப்பட்டு
கிசிச்சைப்பெறுவதற்கான வசதி அமைத்துக்கொடுக்கப்பட
வில்லை. அத்துடன், அவசர சிகிச்சைப்
பிரிவோ அல்லது சத்திரசிகிச்சைப்
பிரிவோ, கதிரியக்கப்பிரிவோ
அதில் அமைக்கப்படவில்லை.
இதனால், திடீர்
விபத்துகளால்
பாதிக்கப்படுவோரைக்கூட
புசல்லாவைக்கு
அல்லது கம்பளை வைத்தியாலைக்கு
கொண்டுச்
செல்லவேண்டிய
துன்ப நிலை காணப்படுகின்றது. அம்புலன்ஸ்
வசதிகள் இல்லாததால்
கொழுந்து
ஏற்றும் லொறியிலேயே
நோயாளர்கள்
கொண்டுச்
செல்லப்படுவார்கள். வீதி சீர்கேடு
காரணமாக நோயாளி இடைநடுவே இறந்து விடுகின்றனர்.
கர்ப்பினி தாய்மார்களுக்கும்
வழியிலேயே
பிரசவம் ஏற்பட்டுவிடுகின்றது. நாய்க்கடி, பாம்புக்கடி, குளவிகொட்டு
போன்றவற்றுக்கு
உரிய மருத்துவ
வசதிகள் இல்லாததால்
நகரத்துக்கு
வருவதற்கு
சிரமப்பட்டு
பலர் நாட்டு
வைத்தியத்தை
அணுகுவதால்
அதனாலும்
பல சிக்கல்கள்
ஏற்படுகின்றன. இதற்கு புறம்பாக, முறையாக
மின் விநியோகம்
வழங்கப்படாததால்
லயன் அறைகள்
அடிக்கடி
தீப்பற்றி
எறிதல், சுகாதார ஆலோசனைகள்
இன்மை, சிறுவர் துஷ்பிரயோகங்கள்,
முகவர் நிலையங்களால்
வெளிநாடுகளுக்குச்
செல்லும்
பெண்கள் ஏமாற்றப்படுகின்றமை,
சுயதொழிலில்
ஈடுபடுகின்றவர்களுக்கு
கடன் உதவி
இன்மை, ஆசிரியர்கள்
பற்றாக்குறை,
கல்வி வீழ்ச்சி உட்பட மேலும்
பல பிரச்சினைகள்
காணப்படுகின்றன. எனவே, ஊடகங்களும் குறிப்பாக
தமிழ் ஊடகங்களும்
மலையக சிவில் அமைப்புகளும்
எமது பிரச்சினைக்கு
விடிவைத்
தேடிதரவேண்டும்
என புரட்டொப்
தோட்டத்தில்
வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |