|
||||
|
டொலர் நோட்டுகளுக்காக
செயற்பட்டு
வந்த புலம்பெயர்ந்த
தமிழர் பிளவுபட்டுள்ளார்கள்
தாங்கள் பிறந்த
தாய்நாடான
இலங்கைக்கு
பல வகையிலும்
துன்புறுத்தல்களை
செய்து வந்த, இங்கிருந்து
புலம்பெயர்ந்த
தமிழ்க் குழுக்களிடையே
தங்களுக்கு
கிடைக்கும்
கோடிக்கணக்
கான பணத்தை
பங்கு போட்டுக் கொள்வதில்
ஏற்பட்ட முரண்பாடு
காரணமாக புலம்பெயர்ந்த
தமிழ் அமைப்புகள்
இன்று பல பிரிவுகளாக
பிரிந்து
சீர்குலைந்து
போயுள்ளன.
2009ம்
ஆண்டில் பயங்கரவாத
யுத்தம் முடிவடைந்த
பின்னர் இலங்கையில்
உள்ள யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட
தமிழ் மக்களுக்கு
விமோசனத்தை
பெற்றுக்
கொடுக்க வேண்டுமென்பதற்காகவும்
யுத்தக்குற்றச்சாட்டுகள்
மற்றும் மனித உரிமை
மீறல்களில்
ஈடுபட்டதாக
கூறப்படும்
ஆயுதப் படை வீரர்களை
தண்டிப்பதற்கு
தாங்கள் கூட்டாக செயற்பட வேண்டு மென்ற நோக்கத்துடனும்
புலம்பெயர்ந்த
தமிழர்கள்
ஒன்று சேர்ந்து செயற்பட ஆரம்பித்தார்கள்.
பிரிட்டனின் தமிழர்
அமைப்பு, புலம்பெயர்ந்த
தமிழர் அமைப்புகளில்
உருவாகிவரும்
ஊழல் மோசடி
காரணமாக உலகளாவிய தமிழர் பேரவையில்
இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
உலகளாவிய தமிழர்
பேரவை உலகெங்கிலும்
உள்ள 14 நாடுகளில்
இருக்கும்
புலம்பெயர்ந்த
தமிழர் அமைப்புகளை
ஒரே குடையின்
கீழ் கொண்டு
வந்து செயற்பட்டு
வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில்
உலகளாவிய
தமிழர் பேரவைக்கு
கிடைக்கும்
சன்மானப்
பணம் மற்றும்
நிதி உதவிகளை
இவ்வமைப்பு
தங்களின்
அங்கத்துவ
அமைப்புகளுக்கு
சரிசமமாக
பிரித்து,
இலங்கை அரசாங்கத்திற்கு
எதிரான பிரசார பணிகளுக்கான
செலவுக்காக
கொடுத்து
வந்தது. உலகளாவிய தமிழர் பேரவைக்கு
பொறுப்பாக
இருக்கும்
தலைவர்கள்
சுயநல நோக்கத்துடன்
தங்களுக்கு
கிடைக்கும்
பணத்தை சூறையாடி வருவதனால்,
புலம்பெயர்ந்த
தமிழர் அமைப்பு இன்று பணம்
இன்றி ஸ்தம்பித நிலை அடைந்திருக்கிறது
என்பதனால்,
தங்களுக்கு
தொடர் ந்தும் இவ்வமைப்பில்
இருந்து செயற்பட முடியாதென்று
பிரிட்டிஷ்
தமிழர் பேரவை அதிலிருந்து
விலகியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள
புலம்பெயர்ந்த
தமிழர் அமைப்புகளில்
ஏற்பட்டி
ருக்கும்
இந்த ஒற்றுமையின்மையும்
பிளவுகளும்
இலங்கை அரசாங்க த்திற்கு சாதகமான விளைவுகளை
ஏற்படுத்தக்கூடியதாக
அமைந்திருக்
கிறதென்று
ஒரு சர்வதேச
அரசியல் விமர்சகர்
கூறுகிறார்.
புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளைச்
சேர்ந்தவர்கள்
பெரும்பாலும்
அவ்வமைப்புகளின்
பணிகளுக்கு
தங்கள் சொந்தப் பணத்தை செல விடுவதில்லை. அவர்கள்
சில வெளிநாடுகளினதும்
உதவி வழங்கும்
அமைப்புகளினதும்
பொம்மைகளாக
செயற்பட்டு
வருவதனால்,
இந் நாடுகளும்
இவ்வமைப்புகளும்
கொடுக்கும்
பணத்தை வைத்தே இலங்கைக்கு
எதிரான போலிப் பிரசாரங்களை
மேற்கொண்டு
வருகின்றனர்.
வெளிநாடுகளில் வாழும்
புலம்பெயர்ந்த
தமிழர்களில்
பெரும்பாலானோர்
தாங்கள் செய்யும் தொழிலுக்கு
மேலதிகமாக
புலம்பெயர்ந்த
அமைப்புகளை
வைத்துக்
கொண்டு இலட்சக்கணக்கான
பணத்தை சூறையாடி வருவதனால்
தான் இந்த
நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருசிலர் பணத்தை
சூறையாடி
சுகபோக வாழ்க்கையை
அனுபவிக்கும்
போது, நாம்
மாத்திரம்
எவ்வித பயனும் இன்றி ஏன்
புலம்பெயர்ந்த
அமைப்பு களில் இருக்க
வேண்டுமென்ற
எண்ணத்தில்
பல புலம்
பெயர்ந்த
தமிழர் கள், இவ்வமைப்புகளின்
அரசியல் செயற்பாடுகளில்
இருந்து ஒதுங்கி, இலங் கைக்கு
எதிரான போலிப் பிரசாரங்களில்
ஈடுபடுவதை
தவிர்த்துக்
கொள்வ தென்றும் தீர்மானித்திருப்பதாக
அரசியல் அவதானிகள்
தெரிவித்துள்ளார்கள்.
பொதுவாக மார்ச்
மாதங்களில்
வருடந்தோறும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்
பேரவையின்
உச்சிமாநாடு
நடைபெறும்
போது பல
மாதங் களாக முடங்கிக்
கிடக்கும்
புலம்பெயர்ந்த
தமிழ் அமைப்புகள்
செயற்பட ஆரம்பிக்கின்றன.
இலங்கைக்கு
எதிராக சில சர்வதேச
அமைப்புகளும்,
அரசசார்பற்ற
அமைப்புகளும்
புலம்பெயர்ந்த
தமிழர்களை
தங்கள் கையாட்களாக
பயன்படுத்தி
தங்களின்
இலங்கைக்கு
எதிரான செயற் பாட்டினை
நிறைவேற்றுவதற்கு
முனைகின்றன.
தங்களுக்கு உத்தரவு
பிறப்பிக்கும்
அமைப்புகளிடம்
இருந்து ஆயிரக் கணக்கான டொலர்களைப்
பெறும் புலம்பெயர்ந்த
தமிழ் அமைப்பு களைச் சேர்ந்த
முக்கியஸ்தர்கள்
ஒவ்வொருவரும்
தங்கள் மனைவி மக்களை
லண்டன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து,
அமெரிக்கா
போன்ற நாடுகளில்
இருந்து ஜெனீவா நகருக்கு அழைத்து வந்து அங்குள்ள
ஐந்து நட்சத்திர
ஹோட்டல்களில்
சுமார் ஒரு மாத
காலம் தங்கியிருந்து
ஆடம்பர வாழ்க்கையை
நடத்தி மகிழ்ச்சியில்
மூழ்குகிறார்கள்.
இலங்கைக்கு எதிரான
தீர்மானங்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்
பேரவைக் கூட்டத்தில்
பரிசீலனைக்கு
எடுத்துக்
கொள்ளும்
நாட்களில்
ஜெனீவாவில்
உள்ள ஐக்கியநாடுகள்
மனித உரிமை
தலைமையகத்திற்கு
வெளியில்
ஓரிரு மணித்தியாலங்கள்
பதாகைகளையும்
சுலோக அட் டைகளையும்
தாங்கி இலங்கைக்கு
எதிரான துர்பிரசாரங்களை
செய்து, இரண்டு மணித்தியாலங்களின்
பின்னர் தங்கள் கடமை முடிந்துவிட்ட
தென்று கொடிகளையும்,
சுலோக அட்டைகளையும்
மடித்துக்
கொண்டு தங்கள் ஹோட்டல்களுக்கு
சென்று அங்கு மதுபோதையில்
மூழ்கி மகிழ்ச்சியாக
இருப்பதுண்டு.
இவ்விதம் ஒரு
மாத காலம்
மற்றவர்கள்
கொடுக்கும்
பணத்தில்
ஜெனீவா நகரில் தங்கள் விடுமுறையை
கழித்துவிட்டு
இந்த புலம்பெயர்ந்த
தமிழர்கள்
தாங்கள் வாழும் நாடுகளுக்கு
திரும்பிய
பின்னர் இலங்கை யைப் பற்றியோ,
இங்குள்ள
தமிழர்களைப்
பற்றியோ, சிந்திக்காமல்
தங்களுடைய
சுகபோக வாழ்க்கையை
நிம்மதியாக
கழிப்பதுண்டு.
மீண்டும் மார்ச்
மாதம் அடுத்தாண்டில்
வரும்போது
இதே துரோகத்தை
இலங்கைக்கு
எதிராக செய்கிறார்கள்.
உலகளாவிய தமிழர்
பேரவை இன்று பிளவுபட்டிருப்பதனால்,
இனிமேலும்
புலம்பெயர்ந்த
தமிழர்கள்
தொடர்ந்தும்
தங்களின்
போலி நாடகத்தை
ஜெனீவாவில்
மேடையேற்ற
முடியாத நிலை உருவாகி
வருகிறது.
(நன்றி: தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |