|
||||
|
இறுதி இலக்கு எதுவாயினும்
கட்சிகளின்
கூட்டுச்
செயற்பாடு
இன்றைய அவசியத் தேவை (ஜீவகன்)
தமிழ்க் கட்சிகளுக்கிடையே
ஒற்று மையான செயற்பாட்டுக்கு
வழி வகுக்கும்
முயற்சியொன்று
சில தினங்களுக்கு
முன் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்
வாசஸ்தலத்தில்
சில கட்சிகள்
சந்தித்துப்
பேசின. மற்றைய தமிழ்க் கட்சிகளையும்
உள்வாங்கும்
நோக்கத்துடன்
பேச்சுவார்த்தை
இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர்களான
சித்தார்த்தனும்
சிவாஜிலிங்கமும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்
தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப்
பேசினார்கள்.
அதன் பின்னர்
எந்த முன்னேற்றமும்
இடம் பெற்றதாகத்
தெரியவில்லை.
ஒற்றுமைக் கோஷம்
தமிழ் மக்களுக்குப்
புதியதல்ல.
முதலாவது
பாராளுமன்றத்
தேர்தலில்
தொடங்கிய
இக் கோஷம்
இன்றுவரை
தொடர்கின்றது. ஆனால் ஐக்கியமான
செயற்பாடு
மாத்திரம்
இன்னும் இடம்பெறவில்லை.
ஒன்றையொன்று எதிர்க்கும்
நீண்ட பாரம்பரியத்தைக்
கொண்டிருந்த
தமிழரசுக்
கட்சியும்
அகில இலங்கைத்
தமிழ்க் காங்கிரஸ்
கட்சியும்
தமிழர் விடுதலைக்
கூட்டணி என்ற பெயரில்
ஒன்றிணைந்தன.
அதிலும் உறுதியான
ஐக்கியம்
ஏற்படவில்லை.
தமிழர் விடுதலைக்
கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதற்குப்
பின்னர் நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத்
தேர்தலில்
(1977) தமிழ்க்
காங்கிரஸ்
கட்சி பிளவுபட்டது.
குமார் பொன்னம்பலம்
சுயேச்சையாக
யாழ்ப்பாணத்
தொகுதியில்
போட்டியிட்டார்.
அதன் பின் காங்கிரஸ்
கட்சியின்
ஒரு பிரிவினர்
கட்சியின்
பெயரிலும்
இன்னொரு பிரிவினர்
தமிழர் விடுதலைக்
கூட்டணியிலும்
செயற்பட்டனர்.
பின்னர் தமிழர்
விடுதலைக்
கூட்டணியுடன்
தமிழ்க் காங்கிரஸ்
கட்சியும்
வேறு கட்சிகளும்
இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
உருவாகியது. அந்த ஐக்கியமும்
நிலைக்கவில்லை.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பிலிருந்து
ஆனந்தசங்கரி
வெளியேறித்
தமிழர் விடுதலைக்
கூட்டணி என்ற பெயரில்
செயற்படுகின்றார்.
கடந்த பொதுத்
தேர்தலில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மீண்டும்
பிளவுபட்டது.
சிலர் அரசாங்கத்துடன்
இணைந்தனர்.
வேறு சிலர் தமிழ்த் தேசிய விடுதலைக்
கூட்டமைப்பு
என்ற பெயரில்
புதுக் கட்சி அமைத்தனர்.
இப்போது தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பும்
தமிழ்த் தேசிய விடுதலைக்
கூட்டமைப்பும்
அங்கீகாரத்துக்கா
கத் தேர்தல்
ஆணையாளரிடம்
விண்ணப்பித்திருக்கின்றன.
முன்னாள் ஆயுதக்
குழுக்களும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
அங்கம் வகிக்கின்றன. அவை கூட முழுமையாகத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
இணையவில்லை.
அவை எல்லாமே
பிளவுபட்டு
ஒரு பிரிவு
தமிழ்த் தேசியக் கூட் டமைப்புடன்
செயற்பட இன் னொரு
பிரிவு கூட்டமைப்புக்கு
எதிராகச்
செயற்படுகின்றது.
கொள்கை உடன்பாடு
தமிழ்க் கட்சிகளுக்கிடையே
ஐக்கியம்
என்பது கொள்கை ரீதியானதாக
இருக்க வேண்டும். ஆனால் கடந்த காலங்களில்
ஐக்கியம்
பாராளுமன்ற
ஆசனங்களை
மையப்படுத்தியே
ஏற் படுத்தப்பட்டது.
அதனாலேயே ஒவ்வொரு
ஐக்கிய முயற்சியும்
பிளவுகளுக்கு
வழிவகுத்ததோடு
தமிழ் மக்களுக்கு
எந்தப் பலனையும் தரவில்லை.
தமிழர் விடுதலைக்
கூட்டணியின்
சார்பில்
யாழ்ப்பாணத்
தொகுதியில்
போட்டியிடுவது
யார் என்ற
பிரச்சினையிலேயே
குமார் பொன்னம்பலம்
சுயேச்சையாகப்
போட்டியிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
சார்பில்
தேசியப் பட்டியலில்
யாரை நிமிப்பது
என்ற பிரச்சினையிலேயே
ஆனந்த சங்கரி பிரிந்து சென்று தமிழர் விடுதலைக்
கூட்டணியாகச்
செயற்பட்டார்.
‘வெறுங்கை
முழம் போடாது’ என்பது போல வெறும்
ஐக்கியம்
பலன் தராது. சரியான கொள்கையின்
அடிப்படையில்
ஏற்படும்
ஐக்கியமே
பலன் தரும்.
ஒவ்வொரு கட்சியும்
அதன் அடிப்படைக்
கொள்கையைக்
கைவிடாமலேயே
ஐக்கிய செயற்பாட்டில்
பங்காளியாக
முடியும்.
கட்சிகளின் இறுதி இலக்கைப் பொறுத்த வரையில் வேறுபாடு இருக்கலாம்.
சில கட்சிகள்
சோஷலிச சமுதாயத்தை
இறுதி இலக்காகக்
கொள்ளலாம்.
வேறு சில கட்சிகள் முதலாளித்துவ
பொருளாதாரத்தில்
நம்பிக்கை
உடையனவாக
இருக்கலாம்.
இவ்வாறாக என்னதான்
வேறுபாடு
இருந்தாலும்
பொதுவான உடன்பாடொன்றுக்கு
வந்து கூட்டாகச்
செயற்பட வேண்டிய கடப்பாடு எல்லாத் தமிழ்க் கட்சிகளுக்கும்
உண்டு. இது தான் இன்றைய யதார்த்தம்.
பின்னடைவு
தமிழ் மக்களின்
அரசியல் உரிமைப் போராட்டம்
கடந்த கால் நூற்றாண்டு
காலத்தில்
வெகுவாகப்
பின்னடைவு
கண்டு விட்டது. இந்திய - இலங்கை
ஒப்பந்தத்தின்
கீழ் செயற்பாட்டுக்கு
வந்த வடக்கு
- கிழக்கு மாகாண சபை
தொடர்ந்து
செயற்பட முடியவில்லை.
அது முதலாவது
பெரிய பின்னடைவு.
அன்றைய ஐக்கிய
தேசியக் கட்சி அரசாங்கமும்
புலிகளும்
இணைந்து இப்பின்னடைவை
ஏற்படுத்
தினார்கள்.
மிதவாத அரசியல்
தலைவர்கள்
என்று கருதப்பட்டவர்கள்
மனச்சாட்சிக்கு
விரோதமாக
மெளனம் சாதித்தார்கள்.
மாகாண சபைத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கோ
வேறொரு தீர்வுத் திட்டத்தை
முன்வைப்பதற்கோ
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம்
சிந்திக்கவில்லை.
பொதுசன ஐக்கிய
முன்னணியின்
அதிகாரப்
பகிர்வுத்
தீர்வுத்
திட்டம் பாராளுமன்றத்தில்
நிறைவேற முடியாமற்
போனமை மற்றைய பெரிய பின்னடைவு. தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பாக
உருவெடுத்த
அரசியல் கட்சிகள் இப்பின்னடைவுக்குப்
பிரதான பொறுப்பாளிகள்.
அதிகாரப் பகிர்வுத்
தீர்வுத்திட்டம்
மாகாண சபையிலும்
பார்க்கக்
கூடுதலான
அதிகாரங்களைக்
கொண்டது. சமஷ்டித் தீர்வுக்கு
மிகவும் அண்மையானது.
அத்தீர்வின் கீழ் அமையும் பிராந்திய
சபைகளின்
எல்லைகளையோ
அதிகாரங்களையோ
சம்பந்தப்பட்ட
சபையின் சம்மதம் இல்லாமல் எவ்விதத்திலும்
மாற்ற முடியாது.
இது ஒரு மிகச்சிறந்த
பாதுகாப்பு
ஏற்பாடு.
இந்தத் தீர்வுத் திட்டத்துக்குத்
தமிழ்ப் பாராளுமன்ற
உறுப்பினர்கள்
ஆதரவளித்திருந்தால்
அது பாராளுமன்றத்தில்
மூன்றிலிரண்டு
பெரும்பான்மையுடன்
நிறைவேறியிருக்கும்.
ஐக்கிய தேசியக்
கட்சியின்
பாராளுமன்ற
உறுப்பினர்கள்
சிலர் ஆதரவாக வாக்களிக்கத்
தயாராக இருந்தனர்.
தமிழ்ப் பாராளுமன்ற
உறுப்பினர்களின்
ஆதரவு இல்லாமல் மூன்றிலிரண்டு
பெரும்பான்மை
கிடைக்காது
என்ற நிலையில்
அவர்கள் பின்வாங்கிவிட்டனர்.
இவ்விரு பின்னடைவுகளும்
தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தின.
புலிகளின்
தனிநாட்டு
நிகழ்ச்சி
நிரல்தான்
இப்பின்னடைவுகளின்
நதி மூலம். தமிழ்த் தலைவர்கள்
அரசியல் தீர்வு பற்றிப் பேசிக்கொண்டு
புலிகளின்
தனிநாட்டு
நிகழ்ச்சி
நிரலின் கீழ் செயற்படத்
தொடங்கியதால்
தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கையைச்
சிங்கள மக்கள் பிரிவினையின்
மறுவடிவமாகப்
பார்க்கும்
நிலை தோன்றியது.
மறுபுறத்தில் நடைமுறைச்
சாத்தியமற்ற
கொள்கையின்
கீழ் மக்களை
அணிதிரட்டியதால்
மக்களுக்கு
ஏற்பட்ட இழப்புகளும்
துன்பங்களும்
கொஞ்சநஞ்சமல்ல.
சரியான அணுகுமுறை
முழுமையான அரசியல் தீர்வுக்குச்
சாதகமற்ற
சூழ்நிலை
உருவாகியிருப்பதையும்
இழப்புகளுக்கும்
அழிவுகளுக்கும்
உள்ளாகி நொந்து போயிருக்கும்
மக்களுக்கு
நிரந்தரமான
நிம்மதி தேவை என்பதையும்
தமிழ்க் கட்சிகள் கவனத்தில்
எடுத்துக்
கூட்டுச்
செயற்பாட்டைத்
தீர்மானிக்க
வேண்டும்.
உடனடியான தீர்வு
எது என்பதிலும்
அதை அடைவதற்குச்
சரியான அணுகுமுறை
எது என்பதிலும்
உடன்பாடு
இல்லாமல்
கூட்டுச்
செயற்பாடு
சாத்தியமாகாது.
மேலே குறிப்பிட்ட
பின்னடைவுகளின்
விளைவாகவே
இன்றைய சிக்கலான நிலை உருவாகியிருக்கின்றது. இப் பின்னடைவுகளுக்கான
காரணத்தைப்
புரிந்துகொள்ளும்
போது இப்போது
என்ன செய்ய
வேண்டும்
என்பது தெளிவாகும்.
பின்னடைவுகளுக்குத் தனிநாட்டுக்
கொள்கை பிரதான காரணம். தனிநாட்டுக்
கொள்கையின்
அடிப்படையிலேயே
ஆயுதக் குழுக்கள்
உருவாகினவெனினும்,
தமிழர் விடுதலைக்
கூட்டணியின்
வட்டுக்கோட்டைத்
தீர்மானமே
அக்கொள்கையை
வலுவாக்கியது.
தனிநாடு சாத்தியமில்லை
என்பது தெரியாமல்
தமிழர் விடுதலைக்
கூட்டணி இத் தீர்மானத்தை
நிறைவேற்றவில்லை.
வெறும் தேர்தல்
கோஷமாக நிறைவேற்றிய
இத் தீர்மானம்
பின்னர் கூட்டணித்
தலைவர்களையே
பலிகொண்டது.
வடக்கு - கிழக்கு
மாகாண சபை செயற்பட
முடியாத நிலையை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன்
சேர்ந்து
புலிகள் ஏற்படுத்தினார்கள். அதிகாரப் பகிர்வுத்
தீர்வுத்
திட்டத்தைத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்
கட்சிகள்
எதிர்த்ததற்குப்
பின்னால்
புலிகளே இருந்தார்கள்.
எனவே பின்னடைவுகளுக்குப்
பிரதான காரணம் தனிநாட்டுக்
கொள்கை என்பதைப் புரிந்து கொள்ளலாம். தனிநாட்டு நிகழ்ச்சி
நிரலின் கீழ் செயற்பட்ட
புலிகள் யுத்த முனையில்
தோற்கடிக்கப்பட்டதுடன்
அரசியல் தீர்வுக்கான
தடை நீங்கிவிட்டது
எனக் கருத
முடியாது.
அந்த மாயைக்குள்
சிக்கியிருக்கும்
அரசியல் தலைவர்களும்
அதிலிருந்து
விடுபட்டு
நடைமுறைச்
சாத்தியமான
தீர்வின்
பக்கம் திரும்ப வேண்டும்.
அப்போது தான் அரசியல் தீர்வு முயற்சியில்
முன்னேற்றம்
காண்பது இலகுவாகும்.
அடுத்து பின்பற்ற
வேண்டிய அணுகுமுறை
என்ன என்ற
கேள்வி.
இனப் பிரச்சினையின்
தீர்வுக்குச்
சர்வதேசத்தில்
நம்பிக்கை
வைக்கும்
மனோபாவம்
எங்கள் அரசியல் தலைவர்களிடம்
ஆழமாக வேரூன்றியிருக்கின்றது. சர்வதேச சமூகத்தில்
நம்பிக்கை
வைத்து இதுவரையில்
நாம் எந்த
நன்மையையும்
அடையவில்லை.
இனப் பிரச்சினைக்கான
தீர்வு இலங்கை மக்களின் அங்கீகாரத்துடனேயே
நடைமுறைக்கு
வர முடியும். இதில் சிங்கள
மக்களின்
பாத்திரம்
முக்கியமானது.
சிங்கள மக்கள் மத்தியில்
செயற்படும்
நட்பு சக்திகளுடன்
நல்லுறவை
வளர்ப்பதும்
இலங்கையில்
பதவியிலுள்ள
அரசாங்கத்துடன்
பேச்சுவார்த்தை
நடத்துவதும்
அரசியல் தீர்வுக்கான
முயற்சியை
முன்னெடுப்பதற்கு
முக்கியமானவை.
கூட்டுச் செயற்பாடு
பற்றிச் சிந்திக்கும்
தமிழ்க் கட்சிகள் பலன் தரக்கூடிய
அணுகுமுறையைப்
பின்பற்ற
வேண்டியது
அவசியம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |