Contact us at: sooddram@gmail.com

 

மீட்சி பெறுகிறதா உலகப் பொருளாதாரம்?

தபன்சென் எம்.பி.

உலகப் பெருமுதலாளிகள், பொருளாதார நெருக்கடி முற்றுப்பெற்றுவிட்டது என்றும், உலகப் பொருளாதாரம் நெருக்கடியிலி ருந்து மீட்சிபெற்று வருகிறது என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியப் பெரு முதலாளிகளோ, இந்தியாவை பொருளாதார நெருக்கடியின் தாக்கம் பெரிய அளவிற்கு பாதிக்கவில்லை என்று கூறிக்கொண்டிருக் கிறார்கள். உண்மையில் நெருக்கடியிலிருந்து உலகம் மீட்சிபெறத்துவங்கிவிட்டதா என்ற கேள்வியை இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தபன்சென்னிடம் முன்வைத்தோம். மதுரையில் நடைபெற்ற சிஐடியு 40ம் ஆண்டு விழாவிற்காக வந்திருந்த அவர் அளித்த பதிலின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

நெருக்கடி தீர்ந்துவிட்டது என்று உலக முதலாளித்துவம் சொல்கிறது. அவர்கள் அப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள், நெருக்கடி எங்களை தாக்கிவிட்டது என்று அலறுகின்றன.

நெருக்கடி தீர்ந்துவிட வேண்டும் என்பது முதலாளித்துவத்தின் விருப்பம். ஆனால் அது மேலும் ஆழமான எல்லைகளைத் தொட்டிருக்கிறது என்பதே எதார்த்தம்.

உலகப் பொருளாதார நெருக்கடி அமெரிக் காவில் மையம் கொண்டது. அது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. அமெரிக்காவில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் பொரு ளாதாரம் மேலும் கடுமையான நெருக்கடிக் குள் சிக்கியுள்ளது என்பதே உண்மை. அமெ ரிக்காவில் மீட்சிக்கு வழிகாண சில முயற்சி களை மேற்கொண்டாலும், எதிர்பார்த்த பலனை அது தரவில்லை. அந்த உண்மைகளிலி ருந்து உலக மக்களின் கவனத்தை திருப்பும் விதமாக ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி முன்னுக்கு வந்துள்ளது.

இது நிதி மூலதனத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. நிதி மூலதனத்திற்கு தேவை லாபம்; கொள்ளை லாபம். எனவே லாபம் கிடைக்காத இடத்திலிருந்து லாபம் கிடைக் கும் இடத்தை நோக்கி பாய்வதற்கு அது தயா ராகிறது. இதனால் ஏற்கெனவே நெருக்கடி யில் சிக்கியுள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் மேலும் ஆழமான நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

உலகப் பொருளாதாரத்தின் இந்த இரண்டு பெரும் பிரதேசங்களிலும் நெருக்கடி முற்றியி ருப்பதால் இந்தியப் பொருளாதாரத்திலும் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெருமள விற்கு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. உல கம் முழுவதிலும் லட்சக்கணக்கான தொழி லாளர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டி ருப்பது போலவே இந்தியாவிலும் லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த பாதிப்பிலிருந்து தொழிலாளர்களையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு முயற்சி மேற் கொள்ளாத காங்கிரஸ் தலைமையிலான ஐக் கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த பாதிப் பை மேலும் தீவிரப்படுத்தும் விதத்திலேயே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுடனான தாராள வர்த்தக உடன்பாட்டை மேற்கொள்ள அரசு துடிக்கிறது.

ஏற்கெனவே தாராளமயக் கொள்கை களின் தீவிரமான அமலாக்கத்தின் விளைவு களை தற்போதைய கடும் நெருக்கடியின் மூலம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் பொரு ளாதாரத்தை காவுகொடுக்கும் விதத்தில் தாராள வர்த்தக உடன்பாட்டை மேற்கொண் டால் அது இந்திய தொழில்களுக்கு, அனைத் துவிதமான சிறு மற்றும் குறு தொழில்களுக்கு சமாதி கட்டும் பேரழிவாகவே அமையும்.

இந்தியாவுடன் தாராள வர்த்தக உடன் பாடு மேற்கொள்வதால் ஐரோப்பிய நாடுக ளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. ஏனென்றால் விவசாயம் உட்பட அனைத்து துறைகளுக்கும் அந்நாடுகளில் அரசு மிகப்பெருமளவிற்கு மானியங்கள் வழங்குகிறது. இந்நிலையில் இந் தியா போன்ற மிகப்பெரும் சந்தை கொண்ட நாடு, தங்களுடன் தாராள வர்த்தக உடன்பாடு மேற்கொண்டால், ஏற்கெனவே தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை இந்த வர்த்தகத் தின் மூலம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து விட்டு, தங்களது பொருளாதாரத்தை மீட்டுக் கொள்ள முடியும் என்று ஐரோப்பிய நாடுகள் நம்புகின்றன.

ஆனால், இதை உணர மறுக்கும் காங் கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, ஐரோப் பிய நாடுகளுடனான தாராள வர்த்தக உடன் பாடு என்ற பெயரில் நெருக்கடியை விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறது.

இந்திய மக்களின், இந்தியப் பொருளா தாரத்தின் நலனை காவுகொடுத்து; ஐரோப்பிய பொருளாதாரத்தை பாதுகாக்க - அதாவது உலக முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு முட்டுக்கொடுக்க மன்மோகன் சிங் அரசு முயற்சிக்கிறது.

இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் தொழி லாளர்கள் போராடிப்பெற்ற பாதுகாப்புச்சட்டங் களையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அனைத்துத் தரப்பு ஊழியர்களையும் தினக் கூலிகளாக, அத்தக்கூலிகளாக மாற்றி, முத லாளிகள் தங்களது சுரண்டலை தீவிரப்படுத்த மத்திய அரசு வழி ஏற்படுத்திக்கொடுத்து வரு கிறது. ஆலைத் தொழிலாளர்களாக, அரசுத் துறை நிறுவனங்களின் தொழிலாளர்களாக, ஊழியர்களாக 1980களில் 30 சதவீதம் தொழி லாளர்கள் இருந்தனர். 1990களில் இது பாதி யாகக் குறைந்து 15 சதவீதமானது. 2000ஆம் ஆண்டில் 12 சதவீதமாகக் குறைந்த இந்த எண்ணிக்கை, இன்றைக்கு வெறும் 6 சத வீத மாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தத் துறை களில் புதிதாக வேலைக்கு ஆள் எடுக்கவில் லை என்பது மட்டுமின்றி, ஏற்கெனவே இருந் தவர்களும் வெளியேற்றப்பட்டு தினக்கூலி களாகவும் அத்தக்கூலிகளாகவும் மாற்றப்பட் டுள்ளனர்.

ஆனால், இந்திய தனியார் பெருமுதலாளி களின் மொத்த லாபமானது, 15 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த தொழிலாளர்களுக்கான செல வினத்துடன் ஒப்பிடும் போது 44 சதவீதமாக இருந்தது; அது இன்றைக்கு 176 சதவீதமாக மிகப்பெருமளவிற்கு அதிகரித்துள்ளது.

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மொத்த உழைப்பையும் ஒட்டச்சுரண்டுகிற இந்த வகையிலான சுரண்டலுக்கு எதிராக, நெருக் கடியில் சிக்கியிருக்கிற உலக முதலாளித்து வத்தின் கரங்களில் இந்திய தொழிலாளி வர்க் கத்தின் நலன்களை காவுகொடுக்கிற அநீதி யான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதி ராக ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் ஒன்றுபட்ட குரலில் உரத்து முழங்குவதே இன்றைய காலத்தின் கட்டாயம்.

சந்திப்ப : எஸ்.பி.ராஜேந்திரன்,
ச.நல்லேந்திரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com