|
||||
|
ஆசிரிய சமூகத்துக்கு
ஒரு வேண்டுகோள்!
‘ஆசிரியரால்
மூர்க்கத்தனமாக
தாக்கப்பட்ட
மாணவர் வைத்தியசாலையில்
அனுமதி’ என்ற தலைப்பிலான
செய்திகளை
பத்திரிகைகளில்
நாம் அடிக்கடி
காண்கின்றோம். கிராமப் புறங்களில்
மாத்திரமன்றி
நகரப் பகுதிகளிலும்
மாணவர்கள்
உடல் ரீதியில்
துன்புறுத்தப்படும்
சம்பவங்கள்
பரவலாக இடம்பெற்று
வருகின்றன.
அரசாங்கப் பாடசாலைகளில்
இடம்பெறுகின்ற
இது போன்ற
சம்பவங்களால்
மாணவர்கள்
உடல் ரீதியில்
துன்புறுத்தப்படுவது
ஒருபுறமிருக்க
உளரீதியாகவும்
பெரும் தாக்கத்துக்கு
உள்ளாகின்றனர்.
மாணவர் மீது அதிபரால் அல்லது ஆசிரியர்களால்
மேற்கொள்ளப்படுகின்ற
துன்புறுத்தல்களை
பலவாறாக வகைப்படுத்தலாம். பிரம்பு அல்லது தடி கொண்டு
மோசமாகத்
தாக்குதல்;
தலையில் உள்ள உறுப்புகள்
பாதிக்கப்படும்படியாக
கையினால்
அடித்தல்,
பாடநேரம்
முடியும்
வரை முட்டுக்காலில்
நிற்க வைத்தல், கதிரையில்
ஏறி நிற்குமாறு
பணித்தல்,
பல தடவைகள்
தோப்புக்
கரணம் போடுமாறு கூறுதல் போன்றவை மாணவர்களுக்கு
வழங்கப்படும்
பொதுவான தண்டனைகளாக
உள்ளன.
அதிபரோ அல்லது
ஆசிரியர்களோ
வழங்குகின்ற
இத்தகைய கொடூரமான தண்டனைகளால்
மாணவர்கள்
மோசமாகப்
பாதிக்கப்பட்டு
வைத்தியசாலைகளில்
அனுமதிக்கப்படுவதுமுண்டு. இந்த அநீதியை
எதிர்த்து
ஒருசில பெற்றோர் பொலிஸ் நிலையத்தை
நாடுவதுமுண்டு.
இவ்விடயமானது நீதிமன்றம்
வரை சென்றிருப்பதையும்
நாமறிவோம்.
அதேசமயம் தங்களது
பிள்ளை ஆசிரியரால்
கொடூரமாகத்
தாக்கப்பட்டதையிட்டு
மனம் குமுறும்
பெற்றோர்
பலர் அப்பாடசாலையின்
அதிபரிடம்
கூட இதனை
முறையிடத்
தயங்குகின்றனர். தங்களது பிள்ளை
திட்டமிட்டுப்
பழிவாங்கப்படலாமென
பெற்றோர்
அஞ்சுவதே
இதற்கான காரணமாகும்.
இந்த எண்ணம்
சரியாக இருக்கலாம். ஆனால் அத்தகைய
அச்சத்தினால்
பெற்றோர்
தயங்குவது
பெரும் தவறு... மாணவர்
மீதான துன்புறுத்தல்கள்
மற்றும் திட்டமிட்ட
புறக்கணிப்புகள்
நிகழுமாக
இருந்தால்
அது குறித்து
பெற்றோர்
முறையிடுவதற்கு
நிறையவே இடங்கள் உள்ளன.
கல்வி அலுவலகம்,
கல்வியமைச்சு
ஆகியவற்றில்
முறையிட்டு
உரிய தீர்வு
கிடைக்காமல்
போனால் மனித உரிமைகள்
ஆணைக்குழுவிலும்
முறையிடலாம். மாணவருக்கு அநீதி இழைக்கப்படுமாக
இருந்தால்
அதனைப் பொறுத்துக்
கொண்டு அசமந்தமாக
இருப்பது
பெற்றோர்
இழைக்கும்
தவறாகவே கருதப்படும்.
அதேசமயம் பெற்றோரின்
அலட்சியத்தையே
பலவீனமெனக்
கருதி குறித்த ஆசிரியர் அம்மாணவன்
மீது தொடர்ச்சியான
புறக்கணிப்பை
கடைப்பிடிக்க
இடமுண்டு.
‘அடி போடாமல் விட்டால் மாணவர்களைத்
திருத்த முடியாது’ என்று ஆசிரியர்கள்
வெளிப்படையாகவே
கூறுவதை நாம் கேட்கிறோம். இக்கூற்றில் சிறிதளவாவது
நியாயம் இருக்கக் கூடும். மூர்க்கத்தனமும்
வன்முறை சுபாவமும்
கொண்ட மாணவனை தண்டனை கொடுத்து மிரட்டி வைப்பதன் மூலமே ஏனைய
மாணவர்கள்
சுமுகமாக
கல்வியைத்
தொடருகின்ற
சூழலை ஏற்படுத்த
முடியுமென்ற
வாதத்தை ஏற்காமலிருக்கவும்
முடியாது.
ஆனாலும் அத்தகைய
மோசமான மாணவர்களுக்கு
உடலியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும்
கடும் தண்டனைகளை
வழங்குவது
குற்றமாகவே
கருதப்படும். அம்மாணவனின் பெற்றோர்
மூலமாக மாற்று நடவடிக்கைகளை
மேற்கொள்வதே
அதிபரின்
பொறுப்பாகும்.
இது ஒருபுறமிருக்க
வகுப்பிலுள்ள
ஒரு மாணவன்
இழைக்கின்ற
குற்றத்துக்காக
அனைத்து மாணவர்களையும்
பிரம்பினால்
தண்டிக்கின்ற
ஆசிரியர்களும்
உள்ளனர். கொழும்பிலுள்ள பிரபல தமிழ்க் கல்லூரியொன்றில்
இத்தகைய சம்பவம் தினமும் இடம்பெறுவதாக
பெற்றோர்
தரப்பிலிருந்து
பரவலாகப்
புகார்கள்
வருகின்றன.
வகுப்பில் ஆசிரியர் இல்லாத நேரத்தில்
சில மாணவர்கள்
சத்தம் எழுப்பினால்
அருகிலுள்ள
வகுப்பில்
கற்பிக்கும்
ஆசிரியர்
இவ்வகுப்புக்கு
வந்து அனைத்து மாணவர்களையும்
கையை நீட்டுமாறு
கூறி பிரம்பினால்
கடும் தண்டனை வழங்குகிறார்.
ஒரு சில
மாணவர்களின்
குறும்புத்தனத்துக்காக
அவ்வகுப்பிலுள்ள
அனைத்துச்
சின்னஞ்சிறார்களும்
மூர்க்கத்தனமாகத்
தண்டிக்கப்படும்
கொடுமை அப்பாடசாலையில்
சர்வசாதாரணமாக
இடம்பெறுவதாக
பெற்றோர்
வேதனைப்படுகின்றனர்.
இது போன்று
ஆசிரியர்
இல்லாத வகுப்புகளில்
உள்ள மாணவர்களை
பாட நேரம்
முடியும்
வரை முட்டுக்காலில்
நிற்க வைக்கும் பரிதாபமும்
அங்கு இடம்பெறுகிறது. இதற்கெல்லாம்
அப்பால் சின்னஞ்சிறு
மாணவர்களை
மாணவத் தலைவர்கள்
பிரம்பு கொண்டு தண்டிப்பது,
முட்டுக்காலில்
நிற்க வைப்பது போன்ற கொடுமைகளும்
அக்கல்லூரியில்
இடம்பெறுவதாக
பெற்றோர்
கூறுகின்றனர்.
மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு
ஒரு உதாரணமாக
இதனைக் கொள்ளலாம். பெரும்பாலான ஆசிரியர்கள்
உளரீதியில்
பக்குவத்தைக்
கொண்டிருப்பதில்லை.
தங்களது குழந்தை
போன்றதே ஏனைய பிள்ளைகளும்
என்ற சாதாரண
பச்சாதாபமும்
ஆசிரியர்
பலரிடம் இல்லையென்றே
கூற வேண்டும்.
அதேவேளை அப்பாவியான
சின்னஞ்சிறு
மாணவன் ஒருவனுக்கு
அநீதியான
முறையில்
தண்டனை வழங்குவதன்
மூலம் அம்மாணவனுக்கு
ஏற்படக் கூடிய மனத்தழும்புகள்
எத்தகையதென்பதைப்
புரிந்து
கொள்ளும்
உள முதிர்ச்சியையும்
பெரும்பாலான
ஆசிரியர்களில்
காண முடியாதிருக்கிறது.
தண்டனை பெறுகின்ற
மாணவர்களா
அல்லது தண்டனை வழங்கும் ஆசிரியரா உளவளம் குன்றியவர்
என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.
பாடசாலையென்பது கல்வியை மட்டும் ஊட்டுகின்ற
நிறுவனமல்ல...
மாணவனுக்கு
ஒழுக்கவிழுமியங்களையும்
ஊட்டி எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும்
ஆளுமையுள்ள
பிரஜையாக
அம்மாணவனை
உருவாக்கும்
இடமாகவும்
பாடசாலை விளங்குகிறது.
எனவேதான் ஆசிரிய
சமூகமென்பது
பொறுப்பு
மிகுந்ததாகப்
போற்றப்படுகிறது.
இத்தகைய பொறுப்புமிகுந்த
ஆசிரிய சமூகத்திடம்
பெற்றோர்
தங்களது பிள்ளைகளை
ஒப்படைக்கின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர்கள்
தங்களுக்குள்ள
பொறுப்பை
உணர்ந்து
செயற்படுவது
அவசியம். மாணவர்களுக்காக தம்மையே
அர்ப்பணித்து
இமயமாக உயர்ந்து நிற்கும் ஆசிரியர்களும்
எம்மத்தியில்
உள்ளனரென்பதை
மறுப்பதற்கில்லை.
ஏனையோரும் அது போன்ற அர்ப்பணிப்பை
பின்பற்ற
வேண்டுமென்பதே
எமது வேண்டுகோள்
ஆகும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |