Contact us at: sooddram@gmail.com

 

வடபகுதி ரயில் சேவையும் தென்பகுதி மக்களின் பங்களிப்பும்

ஓமந்தை ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணி கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு ள்ளது. இரண்டு கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இப் புனரமைப்புப் பணிக்குக் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் உதவி புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதை யைப் புனரமைக்கும் பணியும் விரைவில் மேற் கொள்ளப்படவுள்ளது. இப்போது ஓமந்தை வரை யிலான ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய புனரமைப்பு வேலைக்காக ஐகோன் இன்ரர் நாஷனல் லிமிடெட் என்ற இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின்வட க்கின் வசந்தம்அபிவிருத்தித் திட்டத்தில் காங்கேசன் துறை வரையிலான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது முக்கிய இடம் வகிக்கின்றது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற ஆயுத மோதலின் விளைவாகவே இந்த ரயில் சேவை நிறுத்தப் பட்டது. இச்சேவை நிறுத்தப்பட்டதால் வடபகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களின் அன்றாட வாழ்க்கை இதனால் சீர் குலைந்தது எனக் கூறலாம்.

பயங்கரவாதத்தின் விளைவாக வடக்கும் தெற்கும் மெய் நடப்பில் பிரிந்திருந்தன என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். யுத்த களத்தில் புலிகள் தோற் கடிக்கப்பட்ட பின் வடக்கும் தெற்கும் அரசியல் ரீதி யாக ஒன்றிணைந்துள்ள நிலையில் உணர்வு ரீதியான ஒன்றிணைவுக்கான செயற்பாடு அரசாங்கத்தினால் ஒவ்வொன்றாக முன்னெடுக்கப்படுகின்றது. வடபகுதிக் கான புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிப்பது இச் செயற்பாட்டில் பிரதான இடம் வகிக்கின்றது.

கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான புகையிரத சேவை மீண்டும் இடம்பெறுவதால் வட பகுதி மக்கள் மிகவும் நன்மை அடைவார்கள் என்பது வடபகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாததல்ல. யாழ்ப்பாணத்தையும் வன்னிப் பெருநிலப் பரப்பையும் வதிவிடமாகக் கொண்ட மக்களின் அன்றாட வாழ்வில் இச் சேவை சிறப்பான பலனை அளிக்கும் என்பது எல்லோரும் அறிந்த விடயம்.

ஆனால் இப்பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளு மன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தில் மெளனம் சாதிப்பது புதிராக இருக்கின்றது. மக்களின் நாளாந்த வாழ்க்கையில் நன்மை பயக்கும் நிகழ்வுகள் இடம் பெறுவதை இவர்கள் விரும்பவில்லையா என்ற கேள்வி எழுகின்றது.

கொள்கை வேறுபாடுகள் இருப்பினும் மக்களுக்கு நன்மை பயக்கும் காரியங்கள் இடம்பெறும் போது ஆதரவளிப்பவர்களே உண்மையான மக்கள் பிரதிநிதிகள். வடபகுதி மக்கள் நன்மை பெறும் விடயங்கள் பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மெளனம் சாதிப்பது துரதிஷ்டமானது.

அன்றாட வாழ்வில் வடபகுதி மக்கள் பெறும் நன்மைகளையிட்டு அவர்களின் பிரதிநிதிகள் அக்கறை இல்லாதவர்களாக இருக்கின்ற போதிலும் தென்பகுதி மக்கள் தங்கள் அக்கறையை வெளிப்படுத்துவது மகிழ்ச்சியளிக்கின்றது. ஓமந்தை முதல் காங்கேசன் துறை வரையிலான பல ரயில் நிலையங்களைப் புனரமைப்பதற்கு உதவியளிக்கத் தென்பகுதி மக்கள் முன்வந்திருக்கின்றார்கள்.

இனப் பிரச்சினையின் தீர்வுக்கு அத்தியாவசியமான இன ஐக்கியத்தைத் தோற்றுவித்து வளர்ப்பதில் தென்பகுதி மக்களின் இப்பங்களிப்பு முக்கிய பாத்திரம் வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வடபகுதி மக்களும் இந்த வளர்ச்சிப் போக்குக்கு அமைவான விதத்தில் தங்கள் பிரதிபலிப்பை வெளிப்படுத்துவார்களென நம்புகின்றேம்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com