|
||||
|
எனக்கு
உணர்ச்சி
இல்லையா?
இலங்கை எம்.பி. க்களிடம்
எகிறிய முதல்வர்!
எதற்காக வருகிறார்கள்...
என்ன செய்தியைக்
கொண்டு செல்கிறார்கள்...
ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும்
ஏதாவது ஒரு நாள்
திடீரென்று
டெல்லியில்
முகாமிடும்
இலங்கைத்
தமிழ் எம்.பி-க்கள்...
பிரதமர், வெளியுறவுத்
துறை அமைச்சர்,
வெளியுறவுத்
துறை செயலாளர்கள்
எனப் பேச்சுவார்த்தைகள்
நடத்தத் தவறுவது இல்லை. பலன்?
டெல்லியில் இருந்து
கொழும்புவில்
இறங்கும்போது
தமிழ் எம்.பி. ஒருவருக்கு மூக்கில்
சின்னக் கொப்பளம்.
பேண்டேஜ் போட்டிருந்தார்.
விமான நிலையத்தில்
அவரைச் சந்தித்த பிரமுகர் ஒருவர் ஏதோ கேட்க,
'இந்தியாவில்
இருந்து மூக்குடைபட்டு
வருகிறோம்'
என்றாராம்
அந்த எம்.பி.
நிலைமை அப்படித்தான்
இருக்கிறது!
இந்நிலையில்,
சம்பந்தன்
தலைமையில்
மாவை சேனாதிராசா,
சுரேஷ் பிரேமச்சந்திரன்,
செல்வம் அடைக்கலநாதன்,
சுமந்திரன்
ஆகிய ஐந்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எம்.பி-க்கள்,
கடந்த 20-ம்
தேதி சென்னைக்கு
வந்து முதல்வர் கருணாநிதியை
சந்தித்தனர்.
ஒரு மாதத்துக்கு
முன்பே நடந்திருக்க
வேண்டிய நிகழ்வு இது.
முதல்வர் கொடுத்த
தேநீர் இதமாக இருந்தாலும்,
இந்த சந்திப்பு
சற்று சூடாகவே இருந்தது. ஈழத்தில் அரசியல் போராட்டம்
முடிந்து
ஆயுதப் போராட்டம்
உச்சத்துக்குப்
போய் மீண்டும்
பூஜ்ஜியத்துக்கு
வந்துள்ள
நிலையில்...
செல்வநாயகம்,
அமிர்தலிங்கம்
காலத்து சங்கதிகளை
நினைவுகூர்ந்து
வழக்கமாகச்
சொல்லும்
கருணாநிதி,
இந்த சந்திப்பில்
கறார் குரலை எழுப்ப...
கூட்டமைப்பினர்
அதை எதிர்பார்க்கவில்லை!
'இனத் துரோகி' பட்டம் சூட்டும் எதிர்க்கட்சி
அரசியலுக்கு
இடையில், கோபாலபுரத்தில்
வெளிப்பட்ட
வார்த்தைகள்
கடுமையாகவும்
உறுதியாகவும்
வந்து விழுந்திருக்கின்றன. ''நீங்கள்
என்னைப்பற்றி
என்ன நினைக்கிறீர்களோ...
எனக்குத்
தெரியாது.
நான் இந்தியா
வின் எதிர்க்
கட்சித் தலைவர் இல்லை. இந்திய இறையாண்மைக்குக்
கட்டுப்பட்ட,
ஒரு மாநிலத்தின்
முதலமைச்சர்.
நீங்கள் நினைப்பதை
எல்லாம் நான் இங்கு
பேச முடியாது.
தமிழர்களுக்காக என்னால்
என்ன செய்ய
முடியுமோ...
அதைத்தான்
செய்ய முடியும்.
இந்த நாடு ஒரு தலைவரை
இழந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்
இந்த நாட்டை
ஆட்சி செய்கிறார்கள்.
அவர்களின் உணர்வில்
நான் குறுக்கிட
முடியாது!''
என்றபடி தேர்ந்தெடுக்கப்பட்ட
வார்த் தைகளைக் கோத்ததுபோல
இருந்திருக்கின்றன,
தமிழக முதல்வரின்
வார்த்தைகள்.
''இந்திரா
காந்தி பிரதமராக இருந்தபோது,
பார்த்தசாரதி
நடுநிலையுள்ள
பிரதிநிதியாக
இலங்கைக்கு
அனுப்பப்
பட்டார். அதைப்போன்ற பிரதிநிதியாக
ஒருவரை நான் அனுப்பிவைக்க
பிரதமரைக்
கேட்டுள்ளேன்.
அது நிச்சயம்
நடக்கும்.
நீங்கள் சாணக்கியத்துடன்,
சாதுர்யத்துடன்
அரசியல் பண்ணுங்கள்!''
என்றும் கூட்டமைப்பினரிடம்
முதல்வர்
கூறியிருக்கிறார்.
''புலிகள்
இல்லை, போர் இல்லை. வேரோடு வீழ்ந்துகிடக்கும்
வாழ்க்கையை
மீட்க உலக சக்திகள்
யாரோடும்
உறவாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தயாராக இருக்கிறது.
இந்தியா எம்மாதிரியான
நடவடிக்கை
எடுத்தாலும்
நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம்!''
என்று இவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
''அந்த நம்பிக்கையை
விட்டுவிடாதீர்கள்!''
என்றாராம்
முதல்வர்.
கொழும்புக்குப் புறப்பட்ட
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவிடம்
பேசினோம்.
''முகாம்களில்
அடைக்கப்பட்ட
தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு
விட்டதாக
இந்தியாவில்
பிரசாரம்
செய்யப்படுகிறது. ஆனால், போருக்கு
முன்பு மக்கள் எங்கு வசித்தார்களோ,
அங்கு மீள்குடியேற்றப்படவில்லை.
வவுனியா, யாழ்ப்பாண
முகாம்களில்
இருந்தவர்கள்
அவரவர் ஊர்களுக்கு
அருகில் மீண்டும் முகாம்களில்தான்
வைக்கப்பட்டுள்ளார்கள்.
உயர் பாதுகாப்பு
வலயம் எனக் கூறி,
தமிழர்களின்
நிலங்கள்
அபகரிக்கப்படுகின்றன.
முல்லைத் தீவு, கிளிநொச்சி,
மன்னார், வவுனியா மாவட்டங்களில்
10 ஆயிரம் ஏக்கர் தமிழர் மண்ணை அரசாங்கம்
கையகப்படுத்தி
உள்ளது. இந்த இடங்களில்
நிரந்தர ராணுவ முகாம்களும்
ஒரு லட்சம்
ராணுவத்தினர்
குடும்பத்துடன்
தங்க வீடுகளும்
அதிவேகமாக
அமைக்கப்படுகின்றன.
தமிழர் பகுதிகளில்
நிர்வாகத்தை
ராணுவமயம்
ஆக்குவது
ஓர் ஆபத்து.
அதைவிட அபாயமானது,
10 லட்சம் தமிழர்களின்
பாரம்பரியப்
பிரதேசமான
வடக்கு, கிழக்கு மாகாணத்தில்
நான்கு லட்சம் சிங்களர் குடியேறவுள்ளனர்.
ஏற்கெனவே,
சிறுபான்மையினராக
இருக்கும்
தமிழர்கள்
செறிந்து
வாழும் பகுதிகளில்,
சிங்களர்களைக்
குடியேற்றி,
தமிழர்களை
மேலும் சிறுபான்மையினர்
ஆக்குவதுதான்
அரசாங்கத்தின்
திட்டமாகத்
தெரிகிறது.
அதாவது, படிப்படியாக
தமிழர்கள்
நாடாளுமன்ற,
மாகாண சபைகளுக்குத்
தேர்வுசெய்யப்படுவது
குறைந்து
ஒருகட்டத்தில்
சிங்களர்
மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாக
ஆகும் நிலை ஏற்படும்.
போரால் பாதிக்கப்பட்ட
மக்களை மீள்குடியேற்ற
வேண்டிய அளவுக்கு இந்த அபாயத்தைத்
தடுத்து நிறுத்துவதும்
உடனடியாகச்
செய்யப்பட
வேண்டும்.
நாங்கள் ஜனநாயக
அமைப்பு என்ற வகையில்
இந்தியாவுடன்
பேசியே ஆக வேண்டும்.
ராஜபக்ஷேவை அழைத்துப்
பேசிய டெல்லி, எங்களையும்
கூப்பிட்டுப்
பேசி இருக்கிறது.
இந்தியாவின் நிலைப்பாடுபற்றி
எங்களிடம்
திரும்பத்
திரும்பக்
கேட்கப்படுகிறது.
எங்களைப் பொறுத்தவரை,
நடுக் கடலிலே கைவிடப்பட்டு
கட்டுமரம்
கிடைக்காதா
என்ற நிலையில்
இருக்கிறோம்.
இந்திய அரசின்
உதவியைக்
கேட்பதில்
எந்தத் தவறும் இல்லை. எங்கள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்
இதுதான்.
'இந்திய
அரசுடன் பேசுவதுபோலவே
இலங்கை அரசுடனும்
தொடர்ந்து
பேசுங்கள்;
அதே சமயம்
உங்கள் நிலையை விட்டுக்கொடுக்க
வேண்டாம்'
என்று டெல்லி எங்களுக்குச்
சொல்லியிருக்கிறது.
இவற்றை முதல்வர்
கருணாநிதியிடம்
சொல்வதற்காகவே
நாங்கள் சென்னை வந்தோம்'' என்றார் மாவை சேனாதிராசா.
''எட்டி எட்டி உதைக்கிற
காலைக்கூட
இறுக்கமாகப்
பற்றிக்கொள்வதைத்
தவிர, எங்களுக்கு
வேறு வழி
இல்லை!'' என்று இலங்கைத்
தமிழ்த் தலைவர் ஒருவர் சொல்வதுதான்
இன்றைய பரிதாபகரமான
யதார்த்தம்!
(விகடன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |