Contact us at: sooddram@gmail.com

 

உலகை எதிர்நோக்கிய பேராபத்து இன்று தெய்வாதீனமாக நீங்கியுள்ளது

அண்டவெளியில் கோடானகோடி நட்சத்திரங்களும், நாம் வாழும் உலகைப் போன்று உயிர்கள் நிலைத்திருக்கும் லட்சக்கணக்கான விண்கோள்களும் இருக்கின்றன. இவை காலத்திற்கு காலம் ஒன்றோடு ஒன்று மோதி, இயற்கை அழிவை எதிர்நோக்குவதுண்டு. இதுபோன்று எங்கள் உலகமும் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், இத்தகைய பேரழிவை எதிர்நோக்கியது. அன்று, அரை கிலோமீற்றர் அகலத்தையும், ஒரு கிலோமீற்றர் நீளத்தை யும் கொண்ட வேறு ஒரு கோளத்திலிருந்து உடைந்து சூரியமண்ட லத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த ஒரு பாரிய கற்பாறை பூமியில் வந்து மோதுண்டது. இந்த கற்பாறை தற்போதைய மெக்சிக்கோ நாட்டின் மீது விழுந்து பேரழிவை ஏற்படுத்தியது. இன்றும் கூட மெக்சிக்கோவில் ஒரு கல்வெட்டைப் போன்று இதனால் ஏற்பட்ட தாக்கத்தை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

அன்று, இந்த கற்பாறை உலகில் வந்து விழுந்ததனால் நாம் வாழும் இந்த பூமியில் ஒரு பெரும் பிரளயமே ஏற்பட்டது. இதன் தாக்கத் தினால் பூமியில் நெருப்பு விஸ்வரூபம் எடுத்து, எரிய ஆரம்பித்தது. நெருப்பு சுவாலைகள் சுமார் 5,6 கிலோ மீற்றர் வரை உயர்ந்து, உலகிலுள்ள மனித மற்றும் விலங்கினங்களையும், தாவரங்களையும் முற்றாக அழித்துவிட்டது. இதனால் தான் உலகில் வாழ்ந்த இராட்சத இன டைனோசர்ஸ் என்ற விலங்கினமும் அழிந்துபோனது.

இந்த நெருப்பினால் ஏற்பட்ட கரும் புகை உலகை முற்றாக சூரிய ஒளி பரவாத வகையில் மூடிவிட்டது. அதனால் 10 ஆண்டுகளுக்கு சூரிய ஒளி உலகின் மீது விழாத காரணத்தினால் உலகம் ஒரு ஐஸ் கட்டி யாக மாறிவிட்டது. பத்தாண்டுகளுக்கு பின்னர் படிப்படியாக கரும் புகை அண்டவெளியில் மற்ற இடங்களுக்கு பரவ ஆரம்பித்ததை அடுத்து, உலகின் மீது சூரிய ஒளி விழுந்தது.

அதனால், படிப்படியாக உயிரினங்களும், தாவரங்களும் மீண்டும் உரு வாகின. இவ்விதம் மீள்வாழ்வைப் பெற்ற உலகிலேயே நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்று, இயற்கை அன்னையின் சீற்றம் உலகில் இத்தகைய பேர் அனர்த்தத்தை ஏற்படுத்தியது. இன்று மனிதனின் சுயநலம் காரணமாக இதுபோன்ற பிரளயங்கள் ஏற்படு வதற்கு மனிதனே சுற்றாடலை அழித்துவிடுவதனால், அதுபோன்ற பிரளயம் ஏற்படுவதற்கான சிறந்ததோர் அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருக்கிறான்.

65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உலகின் மீது விண்ணிலிருந்து வந்து விழுந்த பாரிய கற்பாறை பேரழிவை ஏற்படுத்தியது. இது போன்று இன்னுமொரு பேராபத்து இன்று திங்கட்கிழமை இவ்வுல கின் மீது வந்து விழும் விண்கல்லினால் ஏற்படவிருந்தது. எங்களை என்றும் காப்பாற்றும் எல்லாம்வல்ல இறைவனின் அனுக்கிரகத்தி னால் மயிரிழையில் தவிர்த்துக்கொள்ளக் கூடிய மகிழ்ச்சிக்குரிய சம்பவம் இடம்பெறவுள்ளது.

நியூமெக்சிக்கோ நகரில் உள்ள ஒரு இராட்சத ரெலஸ்கோப் மூலம் கடந்த புதன்கிழமை உலகத்திற்கு அருகில் 10 முதல் 50 யார் விட்டத்தை கொண்ட ஒரு கருங்கல் பாறை உலகை நோக்கி வேக மாக வந்து கொண்டிருப்பதை விண்வெளி விஞ்ஞானிகள் அவ தானித்து ஊர்ஜிதம் செய்துள்ளார்கள். இந்த கற்பாறை பூமிக்கும், சந்திரனிற்கும் இடையில் உள்ள தூரத்தை விட 23 தடவைகள் நெருக்கமாக அதாவது பூமிக்கு மிக அருகில் 11 ஆயிரம் மைல் தொலைவில் பூமியை கடந்து செல்லும் என்பதை விஞ்ஞானிகள் இப்போது ஊர்ஜிதம் செய்துள்ளார்கள்.

விண்வெளியின் தூரத்தை கணக்கிடும் போது, 11 ஆயிரம் மைல் என் பது பூமியில் சுமார் 50,60 மீற்றர் தூரத்துடன் ஒப்பிடக்கூடிய இடைவெளி என்பதை நாம் உணர்ந்துகொண்டால் இன்று நடை பெறவிருந்த பேரனர்த்தத்தை இறைவனை விட வேறு யாரும் தவிர்த் திருக்க முடியாது என்ற உண்மையை புரிந்துகொள்ள முடியும்.

இன்று பூமியின் தென்பகுதியில் கடந்து செல்லவுள்ள இந்த கற்பாறை க்கு இந்த விஞ்ஞானிகள் 2011 எம்.டி. என்று பெயர் சூட்டியுள்ளார் கள். இதனை நாளை தென் அமெரிக்காவிலிருந்து சில விநாடிக ளுக்கு அவதானிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பிரிட்டனில் உள்ள விண் கற்பாறைகள் பற்றிய நிபுணரான டொக்டர் எமிலி வோல்ட்வின், இந்த கற்பாறை உலகின் மீது வந்து விழாது என்பதை நாம் இப்போது திட்டவட்டமாக கூறமுடியும் என்று அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு நவம்பர் 8ந் திகதியன்று 400 மீற்றர் விட்டத்தைக் கொண்ட 500 மில்லியன் தொன் எடையுடைய 2005 வை. யூ. என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் ராட்சத கருங்கற் பாறை ஒன்று சந்திரனை சுற்றி வலம் வரலாம் என்றும் விஞ்ஞா¡னிகள் இன்னுமொரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த கற்பாறை பூமியிலிருந்து 2 இலட்சத்து ஓராயிரம் மைல் தொலை வில் கடந்து செல்லும் என்றும், இதுவே 65 மில்லியன் ஆண்டுக ளுக்கு பின்னர் பூமிக்கு மிக அருகில் செல்லவுள்ள ஒரு கற்பாறை என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தெய்வாதீனமாக இந்த கற்பாறை நவம்பர் 8ந் திகதியன்று சந்திரனின் மீது போய் மோதுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு அசம்பாவிதம் நடந்திருந்தால் நிச்சயம் அது எமது பூமிக்கும், பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக் கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இன்றைய நவீன உலகில் பணத்தையும், புகழையும் தேடி நேரத்தை போக்கிக்கொண்டிருக்கும் மனித இனம் நாளொன்றுக்கு சிறிது நேரமாவது எங்களை பேராபத்துக்களிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் எல்லாம்வல்ல இறைவனை துதித்து அவருக்கு நன்றி செலுத்தவும் மறக்கக் கூடாது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com