Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்கா உலக அரங்கில் நடுநிலை கொள்கையை கடைப்பிடித்தல் நல்லது

லகத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பலம் மிக்க பொலிஸ்காரனாக இருக்கின்றேன் என்று மார்பு தட் டிக்கொள்ளும் அமெரிக்கா, மற்ற நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து எந்நேரமும் பிழை கண்டுபிடி த்து, கண்டனக்குரல் எழுப்புகின்ற போதிலும், அந்நாட்டின் ஆட் சியாளர்கள் தங்கள் நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல் கள் குறித்து உதாசீனப் போக்கை கையாண்டு வருவது மிகவும் வேதனையை அளிக்கின்றது. ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க சிறைக் கூட ங்களில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது மனித உரிமை மீற ல்கள் மேற்கொள்ளப்பட்டன என்ற குற்றச்சாட்டுகள் இப்போது பகிரங்கமாகி இருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள் குறித்து தெளிவான சாட்சியங்கள் இன்று வெளியாகிக் கொண்டிருப்பதனால் இன்றைய அமெரிக்க ஜனாதி பதி பராக் ஒபாமா அது குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்தி குற்றம் இழைத்தவர்களை தண்டிக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டிருக்கும் 107 பக்க இணை யத்தள அறிக்கையொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

டார்பூர், லிபியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று குற்றம் சாட்டி இந்நாடு கள் மீது சர்வதேச ரீதியில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி வரும் அமெரிக்க அரசாங்கம், இது விடயத்தில் இரட்டை வேடம் அணிந்து வேற்று நாடுகளை தண் டிக்கவும், தங்கள் நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் களை மூடி மறைக்கவும் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் இவ் வறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் பலம் வாய்ந்த நாடான அமெரிக்காவில் ஜனநாயக சுதந்தி ரம் தழைத்தோங்கி, வலுப்பெற்று வருகின்றது என்பதை உலக நாடு களுக்கு அமெரிக்க அரசாங்கம் எடுத்துக்காட்ட வேண்டுமாயின், ஒரு மனிதனின் அந்தஸ்து, அவர் வகித்த பதவி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் மனித உரிமை மீறல்களை எவ்வளவு செல்வாக்கு வாய்ந்தவர்கள் மேற்கொண்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுப்பது மிக வும் அவசியமாகும்.

ஈராக்கின் மீது உலகையே அழிக்கவல்ல படுபயங்கரமான இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என்ற ஆதாரமற்ற போலிக் குற்றச் சாட்டுகளை சுமத்தி அன்றைய ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹ¥சைனின் அரசாங்கத்தின் மீது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளான பிரிட்டன் போன்றவையும் ஒன்றிணைந்து மேற்கொ ண்ட நியாயமற்ற யுத்தத்தினால் சதாம் ஹ¥சைனும், அவரது மகன்மாரும் அமெரிக்கப் படைகளினால் படுகொலை செய்யப் பட்டது மட்டுமன்றி, யுத்தம் முடிவடைந்து பல்லாண்டு காலமாகி யும் ஈராக்கில் தொடர்ந்தும் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஈராக் கிய மக்களை ஆறாத்துயரில் இன்று ஆழ்த்தியுள்ளதை நாம் மற ந்துவிட முடியாது.

இலங்கை போன்ற சிறிய நாடுகள் விடயத்தில் அநாவசியமாக தலை யிட்டு அவை மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகின் றன என்று குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா, தனது குற்றங்க ளையும் ஒரு தடவை திரும்பிப் பார்த்து அவற்றை சரிசெய்து கொள்ளும் மனப்பக்குவத்தை கொண்டிருப்பது அவசியமாகும்.

இவ்விதம் அமெரிக்கா பக்கச் சார்பற்ற முறையில் அனைத்து நாடுக ளையும், நீதியாகவும் நடுநிலையாகவும் அன்பு செலுத்தி அரவ ணைக்கும் கொள்கையை கடைப்பிடித்தால், அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் இன்று உலகில் நாலாபக்கங்க ளிலும் அதிகரித்து வருவதை, அந்நாடு புத்திசாதுரியமாக தவிர் த்துக் கொள்ள முடியும்.

தான் விரும்பும் ஒரு நாட்டில் அராஜகங்கள் ஏற்படும் போது அத னைப் பார்த்தும் பாராமுகப் போக்கை அமெரிக்க அரசாங்கம் கடைப்பிடிப்பதை இனிமேலாவது தவிர்த்துக் கொள்வது அவசிய மாகும். இஸ்ரேல், பலஸ்தீனிய மக்களின் காணிகளை பறித்து, அம்மக்களுக்கு எதிரான கொடுமைகளை புரியும் போது, அது குறித்து பாராமுகக் கொள்கையை கடைப்பிடித்து வரும் அமெரி க்கா, மற்ற நாடுகள் மீது மாத்திரம் கடுமையான முறையில் நட ந்து கொள்வது சரிதானா என்பதை சிந்தித்து, இனிமேலாவது இத் தகைய தவறான போக்கை தவிர்த்துக் கொள்வது நல்லது.

அமெரிக்கா உலக அரங்கில் நடுநிலைக் கொள்கையை கடைப்பிடி த்து மனித உரிமை மீறல் குற்றம் இழைக்கும் நாடுகள் மீது பார பட்சமற்ற முறையில் கண்டனக்குரலை எழுப்பி அவற்றை தண்டி க்க எடுக்கும் முயற்சிகளை நாம் மனப்பூர்வமாக ஆதரிக்கின் றோம்.

அவ்விதம் அமெரிக்கா ஒரு நடுநிலைக் கொள்கையை சர்வதேச ரீதி யில் கடைப்பிடித்தால் உலகநாடுகள் அனைத்தும் அமெரிக்காவை தங்கள் உண்மையான தோழமை நாடு என்று ஏற்றுக் கொள்ள என்றுமே தயக்கம் காட்டப் போவதில்லை.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com