கறுப்பு ஜூலை
இச்சின்னஞ்சிறிய தீவு
1958,1977,1981 ஆம்
ஆண்டுகளில்
இனக் கலவரங்களைக்
கண்டு மனிதவளம், பொருளாதாரவளம்
என்றெல்லாம்
மிகவும் பாதிக்கப்பட்டது.
ஆனால், இவற்றிற்கெல்லாம்
சிகரம் வைத்தாற்போல
1983 ஆம் ஆண்டு
ஜூலை கலவரம்
அமைந்தது.
அதனால்தான் 1983 ஜூலை
மாதம் "கறுப்பு ஜூலை' என்று
அழைக்கப்படுகிறது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின்
"தார்மிக
அரசு' பதவிக்கு
1977 ஆம் ஆண்டு
ஜூலை 22 இல்
வந்த பின்னர்
1977,1980,1981,1982 இல் வடக்கு,கிழக்கில்
அரச படையினரும்
மத்திய மலைநாட்டில்
சிங்கள வன்முறைக்
கும்பலும்
தமிழ் மக்கள் மீது வன்முறை
வைத்து தாக்குதல்
நடத்தி ஒத்திகை பார்த்துவிட்டு
1983 இல் அதனைக்
காட்டுமிராண்டித்தனமாக
அரங்கேற்றியபோது
அகில உலகமும்
அதிர்ந்தது.
கொழும்பிலும்
தமிழ் மக்கள் சிறுபான்மையாக
வாழ்ந்த இடங்களிலும்
இக்கும்பல்
வன்முறைத்
தாண்டவமாடித்
தமிழ் மக்களை ஆண்,பெண்,
பச்சிளம்
பாலகர் என வயது
வித்தியாசமின்றி
தேடித்தேடி
வேட்டையாடி
நூற்றுக்கணக்கில்
வெட்டிக்
கொன்றதை, உயிருடன் தீமூட்டி எரித்ததை,தமிழ்
மக்களின்
விலை மதிக்க
முடியாத சொத்துகளை
சூறையாடியதையும்,
கொளுத்தி
எரித்து ஆனந்தக் களிநடம் புரிந்ததையும்
உணர்ச்சி
வசப்பட்டுச்
சிங்கள மக்கள் ஆவேசத்தில்
செய்த காரியம் என ஜெயவர்த்தன
அரசு நியாயப்படுத்தியது
கண்டு நாகரிக உலகம் நாணித்
தலைகுனிந்தது.
இப்படி ஒரு பேரழிவைச்
சந்திக்க
ஈழத்தமிழினம்
செய்த தவறுதான் என்ன?
தமது வாழ்வில்
வளம் சேர்க்க
முனைந்தது
தவறா? அன்றேல் பெரும்பான்மைச்
சமூகத்துடன்
இன,மத,மொழி
சமத்துவம்
கேட்டது தவறா? அல்லது
சமூக,கலாசார,
அரசியல், பொருளாதார
மேம்பாட்டுக்கான
முடிவுகளைத்
தாங்களே மேற்கொள்ள
முயன்றது
தவறா? அன்றி
நாட்டின்
ஒற்றுமைக்குப்
பங்கம் வராமல் சர்வதேச நியதிகளின்படி
தமக்குச்
சுயநிர்ணய
உரிமை கோரியது தான் தவறா?
1983 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம்
திகதி இலங்கையில்
உள்ள 37 நகர,
மாநகர சபைகளுக்குத்
தேர்தல்களும்
18 பாராளுமன்றத்
தொகுதிகளுக்கு
இடைத் தேர்தலும்
நடைபெற்றன.
தேர்தலுக்கு இரண்டு
வாரங்களுக்கு
முன்னர் பருத்தித்துறையிலும்
சாவகச்சேரியிலும்
ஆளும் கட்சி ஐ.தே.க.
வேட்பாளர்
இருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
தமிழர் கூட்டணி,தமிழ்க் காங்கிரஸ்
போன்ற தமிழ்க் கட்சிகள் தேர்தலில்
போட்டியிடக்கூடாதென
தமிழ்த் தீவிரவாத இளைஞர்களால்
எச்சரிக்கப்பட்டனர்.
தேர்தலின்போது கந்தர்மடம்
வாக்குச்
சாவடியில்
காவலுக்கு
நின்ற ஒரு இராணுவ
அதிகாரியும்
ஒரு பொலிஸ்
வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
இவை எல்லாவற்றையும்
சிறு,சிறு
சம்பவங்களாகவே
ஜே.ஆர்.அரசு
கணித்தது.
இதைவிடச்
சிக்கல்களும்
சிரமங்களும்
பல மடங்கு
அதிகரிக்கப்
போகின்றன
என்பதை அரசியல் மேதாவி எனக் கருதப்படும்
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால்
கூட அனுமானிக்க
முடியாமலிருந்தது
பெரிய துரதிர்ஷ்டமே!
1983 ஜூலை 22 ஆம் திகதி
கொழும்பில்
ஆடிவேல் விழா இரதபவனி
அதைத் தடுத்து நிறுத்துவதா
அல்லது வழமைபோல அனுமதிப்பதா
என்று தடுமாறிய பொலிஸ் அதிகாரிகள்
பலத்த யோசனையுடன்
மேலதிகாரிகளின்
உத்தரவுடன்
ஆடிவேல் விழாவை நடத்தவும்
இரத பவனிக்கும்
அனுமதியளித்தனர்.
எனினும் தமிழகத்திலிருந்து
வருகை தந்திருந்த
தென்னிந்தியப்
பாடகி திருமதி எம்.எல். வசந்தகுமாரியின் இசைக்
கச்சேரியையும்
ஏனைய நிகழ்ச்சிகளையும்
கோயிலின்
திறந்த வெளியில் நடத்தத் தடை விதித்தனர்.
அதேதினத்தன்று யாழ்ப்பாணக்
குருநகர்
முகாமிலிருந்து
இரவு நேர
ரோந்துப்
பணிக்காகப்
பதினைந்து
இராணுவ வீரர்கள் கிளம்பினார்கள்.
அவர்களது
பாதை குருநகர்
முகாமலிருந்து
புறப்பட்டு
யாழ்ப்பாணம்
நாகவிகாரை,நல்லூர், கோப்பாய், உரும்பிராய்,
கோண்டாவில்,
கொக்குவில்,
கல்வியங்காடு
வழியாக மீண்டும் குருநகர் முகாமிற்குத்
திரும்பியது.
அன்று பௌர்ணமி
தினத்திற்கு
முதல் தினம் முழு
நிலவுநல்ல
வெளிச்சம்.
எனவே, 15 வீரர்களும்
அஞ்சாமல்
முன்னேறினார்கள்.
இக்குழுவுக்குத் தலைமை
தாங்கியவர்
கப்டன் வாஸ் குணவர்த்தன
என்பவர்.
உரும்பிராய் சந்தியைக்
கடந்து இரு வாகனங்களில்
வந்த வீரர்கள்
திருநெல்வேலிச்
சந்தியில்
மின்கம்பம்
நடுவதற்காகக்
குழிகள் வெட்டப்பட்டுக்
கிடந்ததை
அவதானித்தார்கள்.
எனவே, இரண்டு
வாகனங்களும்
மெதுவாக நகரத் தொடங்கின.
அப்போதுதான்
அந்த அனர்த்தம்
நடந்தேறியது.
இரண்டு வாகனங்களும்
நிலக்கண்ணிவெடியில்
சிக்கிச்
சிதறுண்டன.
அதேநேரத்தில்
துப்பாக்கி
வேட்டுகளும்
எல்லாப் பக்கங்களிலுமிருந்து
சரமாரியாக
வாகனத்தில்
வந்தோரைத்
தாக்கின. பதின்மூன்று
இராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே
மரணமானார்கள்.
8 ஸ்ரீ 4889
என்ற ஜீப்
வண்டியும்
26 ஸ்ரீ 3193 என்ற ட்ரக்
வண்டியும்
நிலக்கண்ணிவெடியில்
சிக்கிச்
சிதலமாகியது.
உயிர்தப்பியோர்
இருவர் மட்டுமே!
அந்த இருவரில்
இரண்டு கால்களிலும்
குண்டடிபட்ட
ஆர்.ஏ.யு.பெரேரா
என்பவர் இரண்டு கிலோமீற்றர்
தூரத்தைச்
சிரமப்பட்டுக்
கடந்து கோண்டாவில்
பஸ் டிப்போவிற்கு
வந்து குருநகர் முகாமிற்கு
தகவல் தந்தபோது நேரம் இரவு
ஒரு மணி.
பின்னர் பெரேராவிற்குப்
பதவி உயர்வு
கிடைத்தது
என்பது பிறிதொருவிடயம்.
இந்த அனர்த்தத்தில்
உயிர் தப்பிய மற்றொருவர்
ஐ.எச்.சுமதிபால
என்பவர் ஆவார்.
அப்போதைய
குருநகர்
இராணுவ முகாமிற்குப்
பொறுப்பாக
இருந்தவர்
பிரிகேடியர்
பல்த்சார்,
இராணுவத்தளபதி
திஸ்ஸ வீரதுங்க, பாதுகாப்பு
அமைச்சின்
கூடுதல் செயலாளர் இராணுவத் தளபதிப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற
ஜெனரல் சேபால ஆட்டிகல,
படைகளின்
தலைமைத் தளபதி ஜனாதிபதி
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.
படுகொலைகள் பதின்மூன்று
நடைபெற்ற
அடுத்த நாள் 23.07.1983 ஞாயிற்றுக்கிழமை
போயாதினம்.
படைகளின் தலைமைத்
தளபதி ஜனாதிபதிக்கு
சேபால ஆட்டிகல அதிகாலை கூறிய அதிர்ச்சிச்
செய்தி படுகொலைகள்
பதின்மூன்று
பற்றியதுதான்.
அதிர்ச்சியடைந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை.
ஜே.ஆர்.சாணக்கியவாதியல்லவா? உறவினர்களிடம் சடலங்களை
ஒப்படைத்து
13 இடங்களில்
இறுதிக் கிரியைகள்
நடந்தால்
13 இடங்களில்
கலவரம் ஏற்படலாம்.
எனவே, யாழ்ப்பாணத்திலேயே
புதைத்துவிடும்படி
திஸ்ஸ வீரதுங்கவிடம்
சொல்லுங்கள்
என ஆட்டிகலவைப்
பணித்தார்.
ஜெனரல் சேபால
ஆட்டிகல இச்செய்தியை
இராணுவத்
தளபதி திஸ்ஸ வீரதுங்கவிடம்
தெரிவித்தபொழுது
திஸ்ஸ இந்த முடிவிற்குச்
சம்மதிக்கவில்லை.
அப்படிச் செய்வது
சிங்கள இனப் பெருமைக்கு
இழுக்கு எனக் கூறி
மறுத்துவிட்டார்.
இக்கருத்து
ஜே.ஆரிடம்
தெரிவிக்கப்பட்டபோது
அவர் முப்படைத்
தளபதிகள்,
அமைச்சர்கள்,
பாதுகாப்பு
அதிகாரிகளுடன்
கலந்தாலோசித்து
கொழும்பில்
பாதுகாப்புப்
பலமாக இருப்பதாகவும்
13 இடங்களுக்கும்
13 சடலங்களை
அனுப்பும்போது
இனக்கலவரம்
ஏற்படும்
சாத்தியம்
அதிகமுண்டு
எனவும் எனவே ஒரே
நேரத்தில்
13 சடலங்களையும்
கொழும்புக்கு
எடுத்து வந்து கனத்தை
மயானத்தில்
சகல இராணுவ
மரியாதைகளுடன்
அடக்கம் செய்வதே சாலச் சிறந்தது
எனவும் கருத்துகள்
தெரிவிக்கப்பட்டு
அவ்வாறே இறுதி முடிவும்
எடுக்கப்பட்டது.
ஜே.ஆரின் இந்த முடிவு யாழ்ப்பாணத்திலிருந்த
திஸ்ஸ வீரதுங்கவிற்கு
ஆட்டிகல சேபாலாவால்
தெரிவிக்கப்பட்டது.
ஞாயிறு பிற்பகல் 2 மணிக்குள்
சடலங்களை
கனத்தை மயானத்திற்குக்
கொண்டு வருவதெனவும்
நெருங்கிய
உறவினர்கள்
மட்டும் கூடியிருக்க
பொழுது சாய்வதற்கு
முன்னர் அடக்கம் செய்வதாகவும்
தீர்மானிக்கப்பட்டது.
13 இறந்த
வீரர்களின்
நெருங்கிய
உறவினர்கள்
ஞாயிறு நண்பகலுக்குள்
கனத்தை மயானத்திற்கு
அழைத்து வரப்பட்டார்கள்.
அவர்களைத் தவிர, கொலையுண்டவர்களுடன்
எந்தத் தொடர்பும்
இல்லாதவர்களும்
ஏராளமாய்த்
திரண்டனர்.
நேரம் செல்லச்
செல்ல கூட்டம் அதிகரித்தது.
கூட்டத்தோடு கூட்டமாக
சமூக விரோதச்
சக்திகளும்
கலந்துவிட்டன.
பொழுது சாய்ந்ததும்
பகலவன் மறைந்த பின்னரும்
சடலங்கள்
யாழ்ப்பாணத்திலிருந்து
கனத்தைக்கு
வந்து சேரவில்லை.
காரணம் சிதைந்திருந்த
சடலங்களை
பலாலியில்
பதப்படுத்தும்
வசதியில்லை.
சிதைந்து சின்னாபின்னமான
உடலுறுப்புகளை
இனங்கண்டு
பொலித்தீன்
பைகளில் அடைப்பது சிரமமாக இருந்தது.
பின்னர் சடலங்கள்
இரத்மலானை
விமான நிலையத்திலிருந்து
அங்கிருந்து
பனாகொடை இராணுவ முகாமிற்குக்
கொண்டு செல்லப்பட்டன.
அதேசமயம்,
கனத்தை மயானத்தில்
பதற்றம் ஏற்பட்டதால்
சடலங்கள்
கனத்தைக்குக்
கொண்டுவரப்படமாட்டா,
தயவுசெய்து
அமைதியாகக்
கலைந்து செல்லுங்கள்
என இராணுவம்
தொடர்ச்சியாக
இடைவிடாமல்
அறிவித்துக்
கொண்டிருந்தது.
எனினும், சனக்கூட்டம்
கலைந்தபாடில்லை.
இதற்கிடையில் தமிழ்
மக்களுக்கு
எதிராக வன்முறைகள்
கட்டவிழ்ந்துவிடப்பட்டன.
ஒரே இரவில்
எங்கே சடலங்கள், எங்கே புதைத்தார்கள்
என்பது அறியாமலே தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன,
கடைகள் கொளுத்தப்பட்டன,
தமிழ் மக்கள் வயது வித்தியாசமின்றி
வெட்டிக்
கொலை செய்யப்பட்டார்கள்.
கொழும்பில் பரவிய
கலவரம் எங்கும் பரவத் தொடங்கியது.
தவிர, காலி
முகத்திடலில்
உள்ள இராணுவத்
தலைமையகத்தில்
வைத்து வழியில் எங்கும் சவப்பெட்டிகளைத்
திறந்து பார்க்கக்கூடாது
என்ற உத்தரவுடன்
13 இராணுவ வீரர்களின்
சடலங்களும்
திங்கட்கிழமை
காலை அதாவது
ஜூலை 24 ஆம்
திகதி காலை அவர்
தம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டன.
அவ்வாறிருக்க ஞாயிறு
இரவே இனக்கலவரம்
நாடு பூராவும்
பரவியது.
எப்படி? தமிழ்
மக்களுக்கு
எதிரான வன்முறைகளை,
திருட்டுக்களை,சூறையாடல்களைக்
கட்டவிழ்த்து
விட்டது யார்? ஆயிரக்கணக்கான தமிழரை
நிர்க்கதியாக்கிய
திரை மறைவுச்
சக்தி எது?
சர்வசக்தி படைத்த
அன்றைய ஜனாதிபதியால்
இவற்றை நிறுத்த முடியாமல்
போனது ஏன்?
இன்றும் விடை காண
முடியாமல்
தவிக்கிறது
தமிழ்ச் சமூகம்! விடிவுக்கும்
ஏங்கி நிற்கிறது!
அதேநேரத்தில், மீண்டும்
ஒரு "கறுப்பு
ஜூலை' வந்துவிடக்
கூடாது என எல்லாம்
வல்ல இறைவனை
இறைஞ்சி நிற்கிறது
தமிழ்ச்சமூகம்!
(தினக்குரல்)