|
||||
|
ஜிம்மி கார்ட்டரின்
பார்வையில்
இன்றைய அமெரிக்கா
மனித உரிமைகள்,
தனியார் சுதந்திரம்
உள்ளிட்ட
ஏனைய அடிப்படை
உரிமைகள்
குறித்த அமெரிக்காவின்
இன்றைய போக்குகள்
ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக
அந்நாட்டின்
முன்னாள்
ஜனாதிபதி
ஜிம்மி கார்ட்டர்
கவலை வெளிப்படுத்தியுள்ளார்.
மனித உரிமைகள்,
ஜனநாயகம்
போன்றவற்றில்
உலகின் உச்சக்கட்ட
நம்பிக்கையை
வென்றிருந்த
அமெரிக்கா
இன்று எல்லா வகையான
மனித, தனிப்பட்ட,
மத உரிமைகளை
மீறி நடப்பதாகவும்
ஜிம்மி கார்ட்டர்
வேதனைப்படுவதை
அவரது கருத்துக்களிலிருந்து
உணர முடிகிறது.
2002 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான
நோபல் பரிசை வென்ற
கார்ட்டர்
32 வருடங்களுக்கு
முன் அமெரிக்காவின்
ஜனாதிபதியாக
இருந்தவர்.
1980 ஆம் ஆண்டு அவர்
வெள்ளை மாளிகையைவிட்டு
வெளியேறி
அரசியலிலிருந்து
ஓய்வு எடுத்துக்கொண்டார்.
அன்றைய காலங்களில்
அமெரிக்காவுக்கிருந்த
மதிப்பு, நம்பிக்கை
கெளரவம் என்பன இன்று
அடியோடு இல்லாமல் போயுள்ளது. இவ்வாறான நிலைக்கு
அமெரிக்காவை
இட்டுச் சென்றது வொஷிங்டனின்
வெளிநாட்டுக்
கொள்கைகளே.
பொருளாதார வளர்ச்சியை
மையமாகக்
கொண்ட திட்டங்களல்லாமல்
இராணுவ நலனை நோக்கிய
பார்வைகள்
உலகெங்கும்
அமெரிக்காவுக்கு
எதிரிகளையுண்டாக்கியுள்ளது.
பிழையான புலனாய்வுகள்,
எல்லோரையும்
அடிபணியவைக்கும்
மனோபாவம்
ஒரு தலைப்பட்சமான
முடிவுகளே
இவற்றுக்கு
காரணமென்றும்
ஜிம்மிகார்ட்டர்
விளக்குகிறார்.
உலகின் எந்தவொரு
மூலையிலும்
பிரபலமான
மக்கள் எழுச்சிகள்
தலைதூக்கியபோது
அமெரிக்கா
பலவீனமடையாமல்
நிதானத்துடன்
செயற்பட்டு
உறுதியான
தீர்மானங்களை
எடுக்கும்.
இவை ஒருவேளை தோல்வியில்
முடிந்தாலும்
அமெரிக்காவுக்கு
அவமானத்தையோ
அழிவையோ தேடித்தந்ததில்லை. நியூயோர்க்
டைம்ஸ் பத்திரிகையில்
அண்மைக் காலமாக அமெரிக்கா
செய்த பாரிய பிழைகள்
சம்பந்தமாக
வெளியான ஆய்வுக்கட்டுரைகளையும்
ஜிம்மிகார்ட்டர்
கவனத்திற்
கொண்டுள்ளார்.
அபு கைறாப்
சிறைச்சாலையில்
ஈராக்கியர்கள்
துன்புறுத்தப்பட்டமை,
குவான்தமோ
சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டு
சித்ரவதைக்குள்ளாகும்
தலிபான் அல் கைதா
சந்தேக நபர்கள் இதுபோல அமெரிக்க இராணுவம் நிலைகொண்டுள்ள
நாடுகளில்
நடைபெறும்
அட்டகாசங்களால்
உலக நாடுகளிலிருந்து
அமெரிக்கா
தனிமைப்படுத்தப்படுவதையும்
ஜிம்மி கார்ட்டர்
கோடிட்டுக்
காட்டத் தவறவில்லை.
ஈராக்கிலிருந்த
அபு கைறாப்
சிறைச்சாலையில்
கைதிகள் நிர்வாணமாக்கப்பட்டு
மோப்ப நாய்களால்
கடித்துக்
குதறப்பட்டமையும்
பெண் கைதிகளை
நிர்வாணமாக்கி
ஆண்களுக்கு
முன்னால்
மலம் கழிக்க
வைத்ததெல்லாம்
அமெரிக்காவின்
அண்மைக்கால
கொடூரங்கள்.
இதேபோன்று குவான்தனமோ
சிறையில்
கைதிகளின்
தலைகளை மூச்சுத்திணறும்படி
நீருக்குள்
அமிழ்த்தி
மின்சாரத்தை
பாய்ச்சிய
கொடூரங்களெல்லாம்
மனித வரலாறுகளால்
மறக்கப்படாதவை.
இத்தனை கொடிய சித்திரவதைகளால்தான்
இன்று அமெரிக்கா
அகெளரவமான
நிலைக்குப்போய்
கேவலமடைந்துள்ளது.
சமாதானத்தின் காவலன்.
ஜனநாயகத்தின் ஏகன் என்ற அமெரிக்காவின்
கெளரவங்கள்
காற்றில்
கரைந்துவிட்டது.
ஆப்கானிஸ்தான்,
ஈராக், பாகிஸ்தான்,
பலஸ்தீன்
போன்ற நாடுகளில்
அமெரிக்கா
இன்று செய்பவையும்
ஈரான் நைஜீரியா சீனா, சிரியா,
யெமன் உள்ளிட்ட நாடுகளில்
செய்யத் துடிக்கின்ற
காரியங்களுமே
அமெரிக்காவை
ஆபத்தில்
மாட்டியுள்ளது.
2001ஆம்
ஆண்டு அமெரிக்காவின்
இரட்டைக்
கோபுரம் தாக்கப்பட்டதையடுத்து
அமெரிக்கா
எடுத்துக்கொண்ட
கோலம் உலக பொலிஸ்காரனிலிருந்து
உலக சண்டியனாக்கிவிட்டது. கடந்த
ஒரு தசாப்த
காலமாகத்தான்
கடுமையான
தவறுகளும்
மோசமான நடத்தைகளும்
அமெரிக்காவில்
கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளன.
நவீன கருவிகளைக்
கொண்டு ஒட்டுக்கேட்டல்,
நவீன ஒலி,
ஒளிப்பதிவு,
எதிரிகளின்
மறைவிடங்களைப்
படம் பிடிக்கும்
ஆளில்லா விமானம் என்பன அமெரிக்காவின்
எல்லை தாண்டிய தனி மனித
உரிமை மீறல்கள் என்கிறார்
முன்னாள்
ஜனாதிபதி
ஜிம்மி கார்ட்டர்.
இதன் விளைவாக
உலகில் எந்த தேசத்தில்
அமைதிக்கான
மாநாடு, உரிமை, சுதந்திரம்,
நாடுகளின்
இறைமை போன்ற கூட்டங்கள்,
கருத்தரங்குகள்,
மாநாடுகளில்
அமெரிக்காவால்
எவ்வித கருத்துக்களையும்
முன்வைக்க
முடியாமலுள்ளது.
முன்னாள்
ஜானதிபதி
ஜோர்ஜ் புஷ்ஷ¤டைய நிர்வாகத்திலே
இவ்வாறான
மனித உரிமைக்கெதிரான
இராணுவ செயற்பாடுகள்
எல்லை தாண்டியதாகவும்
இன்று பராக் ஒபாமாவின்
நிர்வாகத்தில்
இவை தொடர்வதையும்
காண முடிகின்றது.
வெள்ளை மாளிகையின்
இவ்வாறான
போக்குகளால்
அமெரிக்காவின்
எதிரிகளின்
எண்ணிக்கை
நாளாந்தம்
பெருகிச்
செல்கின்றது.
பழிவாங்க துடிக்கும்
எத்தனையோ
உள்ளங்கள்
சந்தர்ப்பத்துக்காக
காத்துக்கொண்டிருக்கிறன. இதனால் அமெரிக்கர்
சென்ற இடமெல்லாம்
கடத்தப்படுகின்றனர்.
காணாமல் போகின்றனர்.
பணயக் கைதியாக்கப்படுகின்றனர்.
அமெரிக்க
மக்கள் சொத்துகளுக்கு
போதுமான பாதுகாப்பு
ஏற்பாடுகளை
அமெரிக்காவிலே
செய்ய முடியும் அவையும் இன்றைய காலகட்டங்களில்
கேள்விக்குள்ளாகியுள்ள
நிலையில்
வெளிநாடுகளிலுள்ள
அமெரிக்கர்களின்
நிலையென்ன.
ஆசியா ஐரோப்பா, அமெரிக்கா
அவுஸ்திரேலிய
கண்டங்களிலுள்ள
அமெரிக்கர்களையும்
இங்கு தொழிலுக்காகவும்
சுற்றுலாவுக்காகவும்
செல்லும்
அமெரிக்கர்களையும்
எவ்வாறு பாதுகாப்பது,
பத்திரமாகக்
கொண்டுவந்து
சேர்ப்பது.
இந்நிலைமையும்
போக்கும்
நீடித்தால்
இப்போதுள்ளதைவிட
வெளிநாடுகளில்
குறிப்பாக
இஸ்லாமிய
நாடுகளில்
வாழும் அமெரிக்கர்களின்
நிலைமைகள்
சிக்கலுக்குள்ளேயே
முடியும்.
எனவேதான் வெளிநாடுகளில்
அமெரிக்கா
முன்னெடுக்கும்
இ¡ணுவ நடவடிக்கையின்
உபாயங்களை
மீளாய்வு
செய்ய வேண்டியுள்ளது.
இந்தாண்டு மாத்திரம்
ஆப்கானிஸ்தானில்
30 வான்தாக்குதல்கள்
நடத்தப்பட்டுள்ளன. இதில்
உடல் சிதறி
பலியான பெண்கள். முதியோர், சிறுவர்களின்
எண்ணிக்கைகள்
வேண்டுமென்றே
மறைக்கப்படுவதுண்டு.
ஆகாய மார்க்கமான
தாக்குதலில்
பொதுமக்களின்
இழப்புகள்
தவிர்க்க
முடியாதது
என்பதைக்
கொண்டு வான் தாக்குதல்களை
நியாயப்படுத்தினாலும்
அதே வேளை
பொதுமக்களின்
எதிர்ப்பை
இது பெரிதும்
சம்பாதிக்கிறது.
இவைகைள அடியோடு
இல்லாமல்
செய்து அமெரிக்காவின்
அந்தஸ்து,
கெளரவங்களை
முன்னரிருந்த
நிலைக்கு
கொண்டுவர
வேண்டுமென்கிறார்
ஜிம்மி கார்ட்டர்.
பெரும்பான்மையான மக்களின்
நிலைப்பாட்டோடு
ஒன்றிச்செல்லல்
மத அமைப்புகள்,
நம்பிக்கைகளை
கெளரவித்தல்,
இராணுவ நலன்களுக்கான
செயல்பாடுகளை
குறைத்தல்,
பிராந்திய
வல்லரசு நாடுகளின்
உறவை பேணல்
போன்ற முக்கியமான
கொள்கைகளை
உடனடியாக
கடைப்பிடிக்க
வேண்டும்
என்கிறார்
சமாதான பரிசை வென்ற
ஜிம்மி கார்ட்டர்.
(தமிழ்நேசன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |