Contact us at: sooddram@gmail.com

 

மக்களின் மனம் கவர்ந்த தலைவன் அமரர் அருணாசலம் தங்கத்துரை

1970 ம் ஆண்டு மூதூர்த் தொகுதியின் "கிளிவெட்டி" எனும், கிராமத்திலிருந்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக அமரர், தந்தை செல்வ நாயகத்தால், அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இளைஞர் தான் அருணாசலம்- தங்கத் துரை. இதற்கு முந்திய காலங்களில், தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றாலும், மூதூர் தொகுதியின் தமிழர் பிரதி நிதித்துவம் பாதுகாக்கப்பட்டாலும், மூதூர் தொகுதியின் தமிழ் கிராமங்களின் அபிவிருத்தி, இளைஞர்களின் தொழில் விருத்தி, தமிழ் மக்களின் அடிப்படைத் சேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலை காணப்படவில்லை. இவ்வாறாக தமிழர்கள் அநாதைகளாக விடப்பட்ட நிலையில்தான், அமரர் அருணசாலம் தங்கத்துரை என்ற இளைஞனின் அரசியல் பிரவேசம் அமைந்திருந்தது.

இருண்ட வானில் ஒளிக் கீற்றுப் போல, அறிமுகமாகிய அமரர், 1970 பொதுத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான, மூதூரின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

தெரிவுச் செய்தியானது, தமிழ் கிராமங்களில், பட்டாசு ஒலியை எழுப்பியதுடன், கிராமங்களில், அருணாசலம்- தங்கத்துரைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பானது, அவரைத் தமிழ் மக்களின் தலைவான மாற்றியது.

குறிப்பாக மூதூர் தொகுதியினதும், பின்னர் திருகோணமலை மாவட்டதினதும், கல்வித்துறை சார்ந்த அபிவிருத்தி, குடியேற்றம் மற்றும் வீதி அபிவிருத்தி சுகாதார சேவைகள், தபாலக வசதிகள் பொருளாதாரத் துறைசார் அபிவிருத்திகளை தனது திறமையினாலும், அரசியல் சாணக்கியத்தின் மூலமும் செயற்படுத்தினார்.

மூன்று மொழிகளிலும், முதிர்ச்சி பெற்ற, அவரது கணீர் என்ற குரல், இன,மத,பேத மற்ற சேவை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற விரைவு, அரச அதிகாரிகளுடன், உடனடித் தொடர்புகளை ஏற்படுத்தி மக்களுக்கான தீர்வுகளை உடனடியாகப் பெற்றுக் கொடுக்கும் விதம் என்பவற்றுக்கு, தங்கத்துரைக்கு நிகராக யாராலும் நிற்க முடியாது.

தமது உறவினர்களுக்கு மட்டும், உதவி புரிய வேண்டும், வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் அமரருக்கு இருந்ததில்லை. அரச துறைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு மூதூர்த் தொகுதியின் அனைத்து கிராமங்களின் இளைஞர்களுக்கு அவர் சம வாய்ப்பினையே வழங்கினார்.

பதவிகள் மூலம் தம்மை பிரபல்யப்படுத்தும் மாந்தர்கள் வாழும் இவ்வுலகில், தங்கத்துரை என்ற பெயரின் மூலம், அவர் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வலிமை, பெருமை சேர்த்துக் கொடுத்தவர் மதிப்புக்குரிய அமரராகும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தவர் அமரர் அருணாசலம் தங்கத்துரையாகும்.

1981ல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். இதில் சிங்கள, முஸ்லிம் மக்களும் அமரர் தங்கத்துரையை ஆதரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1994ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் கூடிய வாக்குகளைப் பெற்று தங்கத்துரை தெரிவு செய்யப்பட்டமையானது அவரை திருகோணமலை மாவட்ட மக்கள் எவ்வாறு நேசித்தார்கள் என்பதற்கு சான்றாக அமைந்தது.

மக்கள் சேவகனாக தம்மை மாற்றிக் கொண்ட மூதூரின் தலைவன், கிழக்கின் விடிவெள்ளி மூதூர் வாழ், திருகோணமலை மாவட்டம் வாழ் தமிழ் மக்களின் துரதிருஷ்டமோ, மக்களின் தலைவன், மக்களுக்கான சேவையின் போது வீழ்த்தப்பட்டான்.

ஏழை மக்களின் கலங்கரை விளக்கு மறைந்து விட்டது. மூதூர் விடி வெள்ளி தனது ஒளியை இழந்து விட்டது. அவரின் பூத உடல் மறைந்து 15 வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் அவரது புகழ் உடம்போ அழிய வில்லை. அமரர் தங்கத்துரையின் அரசியல் பாதையானது, துணிச்சல் மிக்க சாணக்கியம் நிறைந்த தனி வழியாகும். தங்கத்துரையின் அரசியல் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

தமிழர்கள் வாழும் வரை, தங்கத்துரை என்ற மனிதனின், நாமம் வாழ்ந்து கொண்டே இருக்கும். அமரர் தங்கத்துரையின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போமாக...

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com