|
||||
|
தமிழ்த் தேசியத்தை
வைத்து பத்திரிகை
வியாபாரம்
செய்வதை இனியும் அனுமதிக்க
முடியுமா?
ஜனாதிபதி, பாதுகாப்புச்
செயலாளர்
மற்றும் அரசாங்கத்திலுள்ள
அமைச்சர்களையும்,
அரசின் தீர்வு முயற்சிகளையும்,
அபிவிருத்தித்
திட்டங்களையும்
கண்மூடித்தனமாகவும்,
பொய் கலந்த
கற்பனையான
கருத்துக்களுடனும்
விமர்சித்துவரும்
யாழ். கொழும்பு
இணைந்த இரு பத்திரிகைகள்
இன்று அதே அரசாங்கத்தின்
கீழ்வரும்,
திணைக்களங்கள்,
வங்கிகள்,
நிறுவன விளம்பரங்களை
பல மில்லியன்
ரூபாய்களுக்குப்
பக்கம் பக்கமாக பெற்றுவருவது
மட்டுமல்லாது
பாதுகாப்புச்
செயலாளர்
உட்பட முக்கிய பல அமைச்சர்களின்
பேட்டிகளையும்
பக்கம் பக்கமாகப்
பிரசுரிக்கும்
அளவிற்கு
இந்த நாட்டில்
இன்றைய அரசாங்கத்தினால்
ஊடகச் சுதந்திரம்
வழங்கப்பட்டுள்ளது.
இதே நிறுவனம்
விடுதலைப்
புலிகள் இருந்த காலத்தில்
அரசாங்கத்தின்
விளம்பரங்களைப்
பெற்றுக்
கொள்வதில்லை
எனும் கொள்கையைக்
கொண்டிருந்தது
மட்டுமல்லாது
அரசாங்க அமைச்சர்கள்
மற்றும் முக்கியஸ்தர்கள்
எவரையும்
பேட்டி காண்பதையும்
தவிர்த்து
வந்தது. ஜனாதிபதிக்கும்
அவரது தலைமையிலான
அரசாங்கத்திற்கும்
மிகவும் அவதூறான செய்திகளை
வேண்டுமென்றே
பிரசுரித்துவரும்
இப்பத்திரிகையின்
உரிமையாளர்
ஜனாதிபதி
மாளிகையில்
விருந்துபசாரத்தில்
கலந்துகொள்ளும்
சந்தர்ப்பங்களில்
ஜனாதிபதி
இவ்விடயத்தை
நன்குணர்ந்தும்
இவரை அன்புடனேயே
வரவேற்பார்.
அந்தளவிற்கு இன்று ஜனாதிபதியினால்
ஊடகச் சுதந்திரம்
வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம்
வாரமஞ்சரியில்
வெளியிடப்பட்ட
கரவெட்டி
கந்தசாமியின்
முதலாவது
கடிதத்தில்
அவரால் தெரிவிக்கப்பட்டிருந்த
மன ஆதங்கங்களை
பார்வையிட்ட
இந்த பத்திரிகை
நிறுவன உரிமையாளர்
தனது நிறுவன
ஊழியர்களுடன்
உருத்திர
தாண்டவ நடனமாடியதாக
உள்வீட்டுத்
தகவல்கள்
தெரிவித்தன.
தலையிடியும்
காய்ச்சலும்
தனக்கென்று
வந்தால்தான்
அதன் வலியையும்
தாக்கத்தையும்
வேதனையையும்
உணரமுடியும்
என்பது போல பிறரை
தனிப்பட்ட
முறையிலும்,
அவர்களது
பொது வாழ்வையும்
கொச்சைப்படுத்தி
தமக்குப்
பிடிக்காவிட்டால்
தாறுமாறாக
எழுதிவரும்
இவரது பத்திரிகை
தொடர்பாகவும்
தமிழ்த் தேசியத்தை
வைத்து போடும் இரட்டை வேடத்தையும்
கிழிக்கத்
தொடங்கியதை
பொறுக்கமுடியாதவர்களாக
அங்குள்ள
சிலர் காணப்பட்டனராம்.
விடுதலைப் புலிகள்
இருந்த காலத்தில்
சகோதரச் சண்டை மூலமாக
ஒரே கொள்கைக்காகப்
போராடிய மாற்று இயக்க இளைஞர்கள்
புலிகளால்
துரத்தித்
துரத்திப்
படுகொலை செய்யப்பட்டபோது
இவரது பத்திரிகை
வாய் திறந்ததா?
இல்லை. புலிகள் செய்த தவறுகளை இந்தப் பத்திரிகைகள்
எப்போதாவது,
ஒருசிறு சம்பவத்தையாவது
தவறென்று
சுட்டிக்காட்டினவா?
இல்லை. அன்று புலிகளுக்கு
வேண்டப்படாதவர்களைத்
துரோகிகளாக
புலிகளுடன்
சேர்ந்து
சித்தரித்தனர்.
இது தாம்
புலிகளுக்கு
ஆதரவானவர்கள்
எனக் காட்டி
தமிழ் மக்களை மடையர்களாக்கி
தமது பத்திரிகை
விற்பனையைக்
கொண்டு செல்ல இவர்கள்
நடித்த நாடகம் என்பது இப்போது வெளிச்சத்திற்கு
வந்துள்ளது.
புலிகளுக்கு அன்று வாக்காலத்து
வாங்கியது
போலவே இன்று தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புக்கும்
எதிராக வாயே திறப்பதில்லை. இதற்குக் காரணம்
இவர் ஒரு
கல்லில் இரு மாங்காய்களை
விழுத்த முனைந்து வருவதாகும்.
தமிழ்க் கூட்டமைப்பை
விமர்சித்தால்
தனக்கு அடுத்த தேர்தலில்
வேட்பாளர்
பட்டியலில்
இடம் கிடைக்காது
என்பதுவும்
இவருக்கு
நன்கு தெரியும்.
அதேபோன்று தனது மைத்துனரை
வடக்கு மாகாண தேர்தல்
தள்ளிச் சென்றால் பரவாயில்லை
கிழக்கிற்காவது
முதலமைச்சராக்கிவிடுவது
என்பதும்
இவரது மற்றொரு எதிர்பார்ப்பாகவுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரியின்
பழைய மாணவர்
சங்கக் கிளையில் பாரிய நிதி
மோசடி எனக் குறிப்பிட்டு
ஒருவரை அவரது அரசியல்
மற்றும் குடும்ப வாழ்வு தொடர்பாகவும்
தாறுமாறாகத்
தாக்கி எழுதி அவரது
அரசியலுக்கே
உலை வைத்த
இந்தப் பத்திரிகையின்
உரிமையாளர்
இன்று அதே நபருடன்
யாழ்ப்பாணத்தில்
நில அபகரிப்புப்
போராட்டத்தில்
கைகோர்த்துக்
கொண்டு படமெடுத்துத்
தனது பத்திரிகையிலேயே
பிரசுரிக்கிறார்.
இவ்விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து
ஒதுங்கி புதிய கட்சிகளை
ஆரம்பித்துச்
செயற்படும்
வடபகுதி இளம் அரசியல்வாதிகளுக்கு
நன்கு தெரியும்.
தனக்குத் தேவை
என்றால் எதுவும் செய்யத் துணியும் சுயநலம் கொண்ட இவர்
தமிழ்த் தேசியத்தை
வைத்துப்
பிழைப்பு
நடத்திவருவது
குறித்து
அவரது பத்திரிகை
அலுவலக ஊழியர்களே
மனம் வெதும்பி
பல விடயங்களைக்
கசியவிட்டு
வருகின்றனர்.
முன்னொரு காலத்தில்
யாழ்ப்பாணத்தில்
தனது பத்திரிகையைத்
தவிர எதுவுமே
பிரசுரமாகக்
கூடாது என்பதில் தீவிர கவனமாக
இருந்த இவர் அவ்வாறு
சில பத்திரிகைகள்
பிரசுரமாகிவிட்டால்
புலிகளைக்
கொண்டு அவற்றைத் தடை செய்த
வரலாறும்
மறைமுகமாக
உள்ளது. ஆனால் இன்று அரசாங்கத்தின்
ஊடக சுதந்திரக்
கொள்கை காரணமாக இவர் தலை
கீழாக நின்ற போதிலும்
யாழ்ப்பாணத்தில்
ஏழு தினசரிப்
பத்திரிகைகள்
வெளியாகி
வருகிறது.
இப்போது தமிழ் இணையத்தளங்கள்
பலவும் செய்திகளை
உடனுக்குடன்
பிரசுரித்து
பிரசித்தமாகி
வருவதால்
தனது பத்திரிகை
வீழ்ச்சி
கண்டு வருவதாகப்
புலம்பித்
திரியும்
இவர் அதனைக்
கவிழ்க்க
என்ன செய்யலாம்
என்றுகூட
யோசித்து
வருவதாகவும்
அவரது ஊழியர்கள்
சிலரே தெரிவிக் கின்றனர்.
எல்லாவற்றையும்விட புலிகளின்
காலத்தில்
பிரபல்யமான
பத்திரிகையா
ளர்களாக லசந்த விக்கிரமதுங்க,
தராக்கி சிவராம், நடேசன், நிமலராஜன்
போன்ற பலர் கொலைசெய்யப்பட்ட
போதும் இவரது நிறுவனத்தின்
சாரதி, பாதுகாவலர்,
ஒப்புநோக்குனர்
ஆகி யோரே
சுடப்பட்டமையானது
பெரும் சந்தேகத்தை
எழுப்பிய
ஒரு சம்பவ
மாகவே இன்றும் நோக்கப்படுகின்றது
என்று அவரது ஊழியர்களே
தெரிவித்தனர்.
இவரது நிறுவனத்தைச்
சேர்ந்த எந்தவொரு பத்திரிகையாளரும்
சுட்டுக்
கொல்லப்படவில்லை. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |