|
||||
|
இலங்கையில் முன்னோடி
மாவட்டமாக
மிளிர்ந்து
வரும் மீன்பாடும்
தேன்நாடு
(எம். எஸ். பாஹிம்)
(அரசாங்க தகவல் திணைக்களத்தின்
ஏற்பாட்டில்
மட்டக்களப்பு
மாவட்ட அபிவிருத்தி
தொடர்பான
ஊடகவியலாளர்களின்
சுற்றுப்
பயணத்தின்
பின்னர் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.)
(நேற்றைய தொடர்ச்சி)
இந்த வருட முடிவுக்குள்
அனைவருக்கும்
மின்சார வசதி அளிக்கும்
நோக்குடன்
கிராமிய மின்சாரத்
திட்டங்கள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 563.91 மில்லியன்
செலவில் இடம்பெறும்
இந்தத் திட்டங்கள்
மூலம் மக்களும் 24
மணி நேரமும்
தடையின்றி
மின்சாரம்
வழங்கப்படும்.
அடுத்த ஜனவரி மாதம்
ஆகும் போது மட்டு
மாவட்டத்தில்
மின்சார வசதி இல்லாத
எந்த ஒரு
வீடும் இருக்காது
என பிரதி
அமைச்சரும்
மட்டு மாவட்ட அபிவிருத்திக்
குழு இணைத்
தலைவருமான
எம். எல். ஏ.
எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
50
ஆயிரம் வீடுகள்
கடந்த கால போர்ச்
சூழல், சுனாமி அனர்த்தம்
காரணமாக அழிவடைந்த
வீடுகளுக்குப்
பதிலாக வீட்டு வசதி அளிக்கும்
நடவடிக்கையும்
வெற்றிகரமாக
முன்னெடுக்கப்படுகிறது. கடந்த
5 வருடம் காலத்தினுள்
50 ஆயிரத்துக்கும்
அதிகமான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருப்பது
மிகப் பெரிய வெற்றியாகும்.
இந்த வீடமைப்பு
திட்டங்களுக்கு
சுமார் 26 ஆயிரம் மில்லியன்
ரூபா வரை
செலவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம்
ஆகிய துறைகளும்
கிழக்கில்
குறிப்பாக
மட்டு மாவட்டத்தில்
மெச்சத்தக்க
வளர்ச்சியை
எட்டி வருகிறது. பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள்
என்பன முன்னேற்றப்பட்டு
வரும் அதேவேளை இவற்றினூடாக
மக்களுக்கு
சிறந்த சேவை அளிக்கவும்
ஒழுங்குகள்
செய்யப்பட்டிருக்கிறது.
தேசத்துக்கு
மகுடம் திட்டத்தின்
கீழ் மட்டு
மாவட்டத்தின்
கல்வித்துறை
மேம்பாட்டுக்காக
முன்னுரிமை
அளிக்கப்பட்டிருப்பதாக
பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி
முரளிதரன்
கருத்துத்
தெரிவித்தார்.
மட்டு மாவட்டத்தில்
25 ஆயிரத்துக்கும்
அதிகமான விதவைகள் இருப்பதாக
யாராவது கூறினால் நம்ப முடியுமா. ஆனால்
இந்த கசப்பான
உண்மையை எற்கத்தான்
வேண்டும்.
கணவன் இறந்ததாலும்
யுத்தத்தில்
பலியானதாலும்
இங்கு அதிகளவு விதவைகள் காணப்படுகின்றனர்.
இவர்களின் நலன் தொடர்பிலும்
கவனம் செலுத்தப்படாமல்
இல்லை. இவர்களுக்கு சுயதொழில்
வாய்ப்பு
மற்றும் தொழில் வாய்ப்புக்கள்,
தொழிற் பயிற்சிகள்
என்பன வழங்கப்பட்டு
வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்தும்
பிரதி அமைச்சர்கள்
எம்.பிக்கள்
போன்றே ------ மட்டக்களப்பு
மாவட்டத்தின்
அபிவிருத்தி
தொடர்பில்
முன்னின்று
செயற்படுபவர்களின்
முன்னாள்
முதலமைச்சர்
சிவநேசத்துரை
சந்திரகாந்தனுக்கும்
முக்கிய பங்குள்ளது.
மோசமான பின்னடைவை
சந்தித்திருந்த
கிழக்கு மாகாணம் இன்று தலை
நிமிர்ந்து
நிற்பதாக
கூறும் அவர், கல்வித்
துறை மேம்பாடு
வறுமை ஒழிப்பு, வீட்டு வசதி அளிப்பது
என்பவற்றுக்கு
எதிர்காலத்தில்
முன்னுரிமை
அளிக்க இருப்பதாக
குறிப்பிடுகிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின்
முன்னேற்றத்தில்
பங்காற்றி
வரும் மாவட்ட செயலாளர் திருமதி பி.
எஸ். எம். சாள்ஸ¤ம் மட்டு அபிவிருத்தி
குறித்து
எமக்கு எடுத்துக்
கூறினார்.
மஹிந்த சிந்தனையின்
கீழ் வட
கிழக்கில்
பல பாரிய
அபிவிருத்தி
திட்டங்கள்
முன்னெடுக்கப்படுகிறது. இதனூடாக மூவின மக்கள் வாழ்விலும்
மறுமலர்ச்சி
ஏற்பட்டு
வருகிறது.
இங்கு பிரதான
பிரச்சினையாக
இருந்த குடிநீர் பிரச்சினைக்கு
நிரந்தர தீர்வுகாணப்பட்டுள்ளது.
உன்னிச்சைக்குள நீர்ப்பாசன
திட்டத்தின்
காரணமாக மக்கள் நிம்மதிப்
பெருமூச்சு
விடுகின்றனர்
என்றார் அவர்.
அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ள
நிலையில்
இப்பிரதேசத்தில்
சுற்றுலாத்துறையும்
வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. உள்நாட்டு வெளிநாட்டு
சுற்றுலாப்
பயணிகளினால்
பாசிக்குடா
கடற்கரை நிறைந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா
பயணிகளின்
வருகை அதிகரித்து
வரும் நிலையில் அவர்களின்
தேவையை நிறைவு செய்வதற்காக
மேலும் 900 ஹோட்டல் அறைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு
வருகிறது.
விளையாட்டுத் துறை மேம்பாட்டிலும்
அதிக கவனம்
செலுத்தப்பட்டிருப்பது
வரவேற்கத்தக்கதாகும். வெபர்
விளையாட்டு
மைதானத்தை
325 மில்லியன்
ரூபா செலவில்
புனரமைக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
18 மாத காலத்தினுள்
சகல வசதிகளுடன்
கூடிய விளையாடடு
மைதானம் தயாராகிவிடும்.
மொத்தத்தில் நாட்டின் முன்மாதிரி
மாவட்டமாக
மட்டு. மாவட்டம் மிளிரும்
நாள் வெகு
தூரமில்லை.
அனைத்து வளங்களும்
நிறைந்த மீன் பாடும்
தேன் நாடு
சகல துறைகளிலும்
முன்னேற்றம்
கண்டு சாதனை படைக்கும்
என்பதில்
மாற்றுக்
கருத்து கிடையாது.
அந்தப் பெருமை
அரசியல் தலைமைகள், அரச நிர்வாகத்தினர்
மட்டுமன்றி
பொதுமக்களையும்
சாரும். (முற்றும்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |