சூழும் ஆபத்தும்
மீளும் வழியும்!
(பேராசிரியர்
பிரபாத் பட்நாயக்)
உலகம்
தற்போது இரண்டு
நெருக்கடி களைச்
சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று, பரவலாக
விவாதிக்கப்பட்டுக்
கொண்டிருக் கிற
பொருளாதாரச் சரிவு
மற்றும் வேலை வாய்ப்பின்மை.
இந்த நெருக்கடி
2008ம் ஆண்டு அமெரிக்க
வீட்டுவசதிக்
கடன் என் னும்
குமிழ் வெடித்துச்
சிதறியபோது துவங்
கியது. இது
உலகம் முழுவதும்
பரவியுள்ளது.
இரண்டாவது
நெருக்கடி என்னவென்றால்,
உலகம் முழுவதும்
ஏற்பட்டுள்ள கடுமையான
உணவு நெருக்கடி.
தலைக்கு சராசரியாக
கிடைக்க வேண்டிய
உணவு தானியத்தின்
அளவு 1980-களின் ஆரம்பக்
கட்டத்திற்குப்
பிறகு முழுமையாக
வீழ்ச்சியடைந்துள்ளது.
எங்கும் நிறைந்துள்ள
நவீன தாராளமயமாக்
கல் ஆதிக்கப்பிடியின்
கீழ் உலகம் முழுவதும்
உள்ள சாதாரண மக்களின்
வாங்கும் சக்தி
மிக அதிகமாக சுரண்டப்பட்ட
நிலையில், 2008ம் ஆண்டிற்குப்
பிறகு உணவு தானியங்களின்
விலையில் ஒரு செங்குத்தான
உயர்வு ஏற் பட்டது.
இரண்டு விதமான
காரணங்கள்
சாதாரண மக்களின்
வாங்கும் சக்தி
மிக அதிகமாக சுரண்டப்பட்டது
என்பதையும் தாண்டி,
முன்னெப்போதும்
இல்லாத விதத் தில்,
உலக அளவில் உணவு
தானியங்களின்
விலை சமீப காலமாக
ஒரு செங்குத்தான
உயர் வினை அடைவதற்கு
இரண்டு விதமான
கார ணங்கள் உள்ளன.
முதலாவது காரணம்-
சமீப காலமாக உணவு
தானிய உற்பத்தியின்
கணிசமான பகுதியினை
உயிரி எரிபொருளுக்காக
திருப்பி விட்டதன்
காரணமாக, ஒப்பீட்டளவில்
நோக் கும்போது,
ஒரு தனி மனிதனுக்கான
உணவு தானிய உற்பத்தியின்
அளவு குறைந்துவிட்டது
என்பதை விட, அவனுக்குக்
கிடைக்க வேண் டிய
தானியத்தின் அளவு
குறைந்துவிட்டது
என்பதுதான் அதிகம்.
இரண்டாவது காரணம்
- உணவு தானிய உற்பத்தி
என்பது இப்படி
உயிரி எரிபொருளுக்
கானதாக மாற்றப்பட்டதன்
காரணமாகவும், சர்வதேச
எண்ணெய் விலையுடன்
ஏற்பட்ட தொடர்பின்
காரணமாகவும், உணவு
மற்றும் எண்ணெய்
என இரண்டு சந்தைகளிலுமே
நிலவும் ஊக வணிக
ஆதிக்கத்தின்
காரண மாகவும் உணவு
தானியங்களின்
விலையில் இப்படி
ஒரு கடுமையான-செங்குத்தான
விலை உயர்வு ஏற்படுகிறது.
நாம் முதலில்
குறிப்பிட்ட பொருளாதாரச்
சரிவு மற்றும்
வேலைவாய்ப்பின்மை
நெருக் கடி என்பது,
பயன்படுத்தப்படாத
ஆதார வளங் களின்
இருப்பை குறிப்பாக
உணர்த்துகிறது.
அதாவது, போதுமான
கிராக்கி இல்லாததன்
காரணமாக, மிகப்
பெரிய அளவில் தொழிலாளர்
சக்தியானது பயன்படுத்தப்படாமல்
விடப்பட் டுள்ளது.
உற்பத்தியை
உருவாக்கக்கூடிய
சாத னமும் இயங்கவிடாமல்
நிறுத்தப்பட்டுள்ளது.
இப்படிப் பயன்படுத்தப்படாத
ஆதாரங்கள் “சமூகத்தில்
பாழாக்கப்பட்ட
ஆதாரங்க ளாகும்”.
இப்படி பாழாக்கப்படாமல்
அரசாங் கம் தலையீடு
செய்வதன் மூலமாக,
மக்களை தற்போதுள்ளதை
விட நல்ல நிலைக்குக்
கொண்டு வர முடியும்.
அப்படியானால்,
அரசாங்கம் சமூகச்
செலவினங்களை செய்யலாமே?
அதற்கான செலவினம்
அதிகரிக்கப்படலாமே?
அரசாங் கத்தின்
தலையீடு என்பது
இருக்கலாமே? இவையெல்லாம்
இல்லாமல் இருப்பதற்கு
என்ன காரணம் என்ற
கேள்வி இயல்பாகவே
எழுகிறது.
உணவு நெருக்கடியின்
உண்மை முகம்
இதற்கான பதிலைப்
பெறுவதற்கு முன்பு
இரண்டாவது நெருக்கடியான
உணவு நெருக்கடியின்
உண்மையான பிரச்சனை
என்னவென்று பார்ப்போம்.
தனி நபருக்கான
சராசரி உணவு தானிய
உற்பத்தி குறைந்ததற்கான
காரணம், உலகம்
முழுவதும் உள்ள
விவசாயிகளை துன்பத்
திற்கு உள்ளாக்கியுள்ள
விவசாய நெருக்
கடியே ஆகும்.
விவசாயம் என்பது
விவசாயி களுக்கு
வருமானம் தரக்கூடிய
துறையாக இல்லை
என்பது தான் விவசாய
நெருக்கடி. ஒரு சதுர அடி
பயிர் செய்ய ஆகும்
செலவினை ஈடுகட்டும்
அளவிற்குக் கூட
அதிலிருந்து வரும்
வருமானம் அமைவதில்லை
என்பது தான் இதற்கு
பொருள். நவீன
தாராளமயமாக் கல்
கொள்கையின் காரணமாக
சிறு உற்பத்தி
யாளர்களுக்கான
அரசாங்க ஆதரவு
குறைந்து போயுள்ளதும்
ஒரு காரணம். எனவே,
விவ சாயிகள் மறு
உற்பத்தி செய்வதற்கு
பொது வாகத் தேவைப்படும்
ஆதாரங்கள் கூட
போது மான அளவில்
அவர்களுக்குக்
கிடைப்ப தில்லை
என்பதில் தான்
உணவு நெருக்கடி
யின் உண்மையான
பிரச்சனை அடங்கியுள்ளது.
முதல் நெருக்கடியான
பொருளாதார நெருக்கடி,
சமூக ஆதாரங்களை
சரிவரப் பயன் படுத்தாமல்
பாழாக்குவதினால்
ஏற்படுகிறது.
இன்னொரு நெருக்கடியான
உணவு நெருக் கடி,
விவசாய உற்பத்தியாளர்களின்
கை களில் போதுமான
ஆதாரங்கள் கிடைக்காத
தால் ஏற்படுகிறது.
இரண்டுமே விநோதமான
நிகழ்வுகள்.
எனவே, இப்படி வீணாக்கப்படும்
சமூக ஆதாரங்களை
விவசாயத் துறையில்
ஈடுபடுத் தினால்,
எந்தவொரு பகுதியினருக்கும்
நஷ்ட மில்லாமல்
இரண்டு நெருக்கடிகளுக்கான
தீர்வினையும்
காண முடியும்.
ஆனால், சமூக அமைப்பில்
சமகாலத்திய முதலாளித்துவம்
ஏற்படுத்தியுள்ள
ஏற்றத் தாழ்வுகள்,
நெருக்கடியில்
இருந்து மீண்டு
வருவதற்குப் பதிலாக,
மனித குலம் தொடர்ந்து
இரண்டு நெருக்கடிகளுக்கும்
ஆளாகும் வகையிலேயே
உள்ளன.
தீர்வு என்ன?
இந்த விவாதத்தினை
இன்னும் ஆழமாகப்
பரிசீலிப்போம்.
வீழ்ச்சியின்
பிடியிலும், வேலையின்மை
நெருக்கடியிலும்
சிக்கியுள்ள எந்தவொரு
பொருளாதாரமும்,
அந்த நாட்டு அரசாங்கம்
தனது செலவினத்தை
அதிகரிக்கு மானால்,
உற்பத்தி அதிகரிக்கும்.
அதன் கார ணமாக
வேலைவாய்ப்பு
அதிகரிக்கும்,
அதிலிருந்து நுகர்வும்
அதிகரிக்கும்.
இது எல் லாமே
எந்தவொரு பகுதியினரையும்
சுரண்டு கிற அல்லது
உறிஞ்சுகிற அவசியம்
இல்லா மலே சாத்தியமாகும்.
(இன்னும் சொல்லப்
போனால், முதலாளிகளும்
வசதி படைத்தவர்
களும் அரசாங்கத்
தலையீடு இல்லாமல்
இருந்தால் என்ன
நிலையில் இருப்பார்களோ
அந்த நிலையிலேயே
தக்க வைக்கப்படு
வார்கள்).
நமது பூவுலகின்
முன்னணி நாடுகளது
அரசாங்கங்கள்
ஒன்று சேர்ந்து,
பல்வேறு வழி களில்
உலகின் ஒட்டுமொத்த
விவசாயத் திற்குத்
தேவையான செலவினங்களை
அதி கரிப்பதாக
வைத்துக் கொள்வோம்.
அப்படி அதிகரிக்கும்போது,
உலக அளவில் வேலை
வாய்ப்பு அதிகரிக்கும்,
உற்பத்தி பெருகும்.
நாளாவட்டத்தில்
உலகின் உணவு தானிய
உற்பத்தி வளர்ச்சியடையும்.
அப்படி உற்பத்தி
பெருகுவதன் காரணமாக,
பொருளாதாரச்சரி
வினால் பாதிக்கப்பட்ட
உலகின் பல்வேறு
பகுதிகளிலும்
உற்பத்தியான பொருட்களுக்
கான கிராக்கி என்பது
அதிகரிக்கும்.
அதன் காரணமாக,
மேலும் வேலைவாய்ப்பும்
உற் பத்தியும்
அந்தப் பகுதிகளில்
பெருகும். இத னால் எந்தவொரு
குறைபாடும் காண
முடி யாத ஒரு சுழற்சி
ஏற்பட்டு, மனிதகுலத்தை
இந்த இரண்டு நெருக்கடிகளிலிருந்தும்
வெளிக் கொண்டு
வந்துவிடும்.
ஆனால் இது முதலாளித்துவ
முறையின் கீழ்
சாத்தியமில்லாத
ஒன்றாகும்.
எது தடை?
இதற்கு முதலாவது
தடையாக இருப்பது
உலக அளவில் ஒரு
அரசாங்கம் இல்லை
என்பது. ஆனாலும்,
உலகம் முழுவதும்
நிறைந் துள்ள ஏராளமான
தேசிய அரசாங்கங்களில்
முன்னணி அரசாங்கங்கள்
என்று எடுத்துக்
கொண்டோமானால்,
அந்த நாடுகள் ஏகாதி
பத்திய நாடுகளாக
இருக்கின்றன. இந்த ஏகாதி பத்திய
நாடுகளது அரசாங்கங்களின்
மீது தான் உலக
அளவில் விவசாயத்திற்கான
செலவி னங்களை அதிகரிக்கும்
பொறுப்பு விழுகிறது.
இந்த நாடுகள்
மூன்றாம் உலக நாடுகளின்
விவசாயத்தை முன்னேற்றும்
என்று எதிர் பார்க்க
முடியாது. அப்படியே ஒரு
முன்னேற் றம் ஏற்பட்டாலும்,
அது தங்களது பொருட்
களுக்கான கிராக்கியை
உருவாக்குவதாகும்.
தங்களது நாட்டுப்
பொருளாதாரங்களை
முன் னேற்றும்
வகையில் வேலைவாய்ப்பையும்
உற் பத்தியையும்
பெருக்குவதாகவும்
தான் அமையும்.
இரண்டாவது
தடையாக சர்வதேச
நிதி மூலதனம் அமையும்.
அப்படியே ஏதேனும்
ஒரு முன்னணி நாடு
தலைமை தாங்கி,
தனது பொருளாதாரத்திற்கு
பங்கம் விளைவிக்காமல்,
எந்தவொரு நஷ்டமும்
ஏற்பட்டுவிடாமல்
எல்லா ஏற்பாடுகளும்
பிசிறில்லாமல்
செய்து நடவடிக்கை
எடுக்க முன் வந்தாலும்,
தேசிய அரசாங்கங்களின்
தலையீட்டினை விரும்பாத
சர்வதேச நிதி மூலதனம்
தேசிய அரசின் செயல்பாடு
என்பது அதனுடைய
நலனை தாண்டி இருக்குமானால்,
அப்படிப்பட்ட
நடவடிக்கையை மிகப்
பலமாக எதிர்க்கும்.
உண்மையில்
உலகப் பொருளாதாரச்
சரிவின்போது, சர்வதேச
நிதி மூலதனமானது
தேசிய அரசுகளின்
மீது “சிக்கன” நடவடிக்
கைகளைத் தான் திணித்தது.
இந்த தேசிய
அரசாங்கங்கள்
தங்களுடைய செலவினங்
களை வெட்டிச் சுருக்க
வேண்டுமென பலத்த
எதிர்ப்புகளுக்கிடையிலும்
நிர்ப்பந்திக்கப்
பட்டன. எனவே,
சர்வதேச நிதி மூலதனம்
என்பது அரசாங்கச்
செலவின விரிவாக்கத்
தினை மிகத் தீவிரமாக
எதிர்க்கும்.
இதுதான் அதன்
குணம்
இது ஏதோ புதிதாக
நிகழும் அபூர்வமான
செயலல்ல. இது தான்
நிதி மூலதனத்தின்
இயற்கை குணம்.
1930களில் உலகப் பெரு
மந்தம் ஏற்பட்டபோது,
தொடரும் நெருக்கடி
யில் சிக்கித்
தவிக்கும் முதலாளித்துவத்திற்கு
சோஷலிசம் என்பது
பலமான சவாலாக அமைந்துவிடும்
என்பதால், முதலாளித்துவ
அமைப்பினை பெருமந்த
நெருக்கடியிலிருந்து
மீட்டெடுக்க வேண்டியது
அவசியம் என்ற அடிப்படையில்,
ஜே.எம். கீன்ஸ்
என்ற புகழ் பெற்ற
முதலாளித்துவ
பொருளாதார வல்லுநர்,
உலகத்தைப் பெருமந்தத்திலிருந்து
விடுவிக்க வேண்டுமென்றால்,
முன்னேறிய முதலாளித்
துவ நாடுகளின்
அரசாங்கங்கள்
எல்லாம் ஒன்றிணைந்து
தங்களது செலவினங்களை
விரிவாக்கம் செய்ய
வேண்டும் என்று
கூறி னார். ஆனாலும்,
அவரது ஆலோசனைக்கு
சர்வதேச நிதி மூலதனத்திடமிருந்து
மிகத் தீவிரமான
எதிர்ப்பு எழுந்தது.
“பலமான பொருளாதாரம்”
என்ற பெயரில் அதன்
குணாம் சங்களை
காக்கிறோம் என்ற
பெயரில், அர சாங்கச்
செலவினங்கள் கட்டுப்பாட்டிற்குள்
வைக்கப்பட வேண்டும்
என்று சர்வதேச
நிதி மூலதனத்தால்
திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்
பட்டது. இதன்
காரணமாக, உலகம்
பெருமந் தத்திலிருந்து
விடுதலை பெற இரண்டாவது
உலகப் போர் எனும்
“ஊக்கத் தொகை” கிடைக்கும்
வரை காத்திருக்க
வேண்டி வந் தது.
எனவே, வேலைவாய்ப்பைப்
பெருக்கு வது என்ற
விஷயத்தில் அரசாங்கத்தின்
செயல்பாட்டினை
சர்வதேச நிதி மூலதனம்
எதிர்க்கும் என்பது
ஏற்கனவே உள்ள பழைய
மற்றும் உறுதி
செய்யப்பட்ட உண்மையாகும்.
எனவே இன்றைக்கு
இந்த இரண்டு நெருக்கடிகளில்
இருந்தும் வெளி
வருவதற் காக உலகின்
முன்னணி நாடுகளுக்கிடையே
ஏதேனும் ஒரு ஒருங்கிணைந்த
அரசாங்க நடவடிக்கை
எடுக்கப்படுமானால்,
சந் தேகத்திற்கிடமில்லாமல்,
சர்வதேச நிதி மூல
தனம் என்பது கட்டாயமாக
அதனை மிகப் பல
மாக எதிர்க்கும்.
சர்வதேச நிதி மூலதனத்திற்கு
அரசாங்கத் தலையீட்டினால்
பெரிய அளவிற்கு
எந்தவித இழப்பும்
இல்லாத நிலையில்,
நெருக்கடியி லிருந்து
மீள்வதற்கான அரசாங்க
நடவடிக் கையை எதிர்க்க
வேண்டிய அவசியம்
என்ன என்ற கேள்வி
எழலாம்.
பொருளாதாரச் சரிவிலிருந்து
வெளியே வருவதற்கு
பெரிய அளவில் தேவைப்படும்
அரசாங்கச் செலவினத்தை
இப்படி சர்வதேச
நிதி மூலதனம் எதிர்ப்பது
என்பது “தவறு” என்றும்,
ஒரு தவறான கோட்பாட்டு
புரிதலின் வெளிப்பாடு
என்றும் முதலாளித்துவ
தாராள மயப் பொருளாதார
நிபுணர்களே கூட
கருது கிறார்கள்.
ஒரு முறை உண்மையான
கோட் பாடு என்னவென்று
நிதி மூலதனத்திற்கு
விளக்கிவிட்டோமென்றால்,
அரசாங்கத் தலை
யீட்டிற்கு எதிரான
தனது எதிர்ப்பினை
அது விலக்கிக்
கொள்ளும் எனக்
கூறுகிறார்கள்.
பொருளாதாரச்
சரிவிலிருந்து
வெளிவருவதற்கு
அரசாங்கத் தலையீட்
டினை ஏன் நிதி
மூலதனம் எதிர்க்கிறது
என் பதற்கான உண்மையான
பதில் இதில்தான்
அடங்கியுள்ளது.
அரசின் தலையீட்டை
அனு மதித்தால்
இந்த சமூகத்தின்
நலன்களைக் காக்க
நிதி மூலதனத்தால்தான்
முடியும் என்று,
விடாமல் பிரச்சாரம்
செய்து கொண்டிருக்கும்
முதலாளித்துவ
வர்க்கத்தினரின்
சமூக நியாயம் வீழ்ந்துவிடும்;
வேலைவாய்ப்பை
அதிகரிக்க அரசாங்கத்
தலையீட்டினை அதி
கரிப்பது என்பது
நிதி மூலதனத்திற்கு
உடனடி யாக லாபம்
அளிக்கும் என்றாலும்,
தன்னுடைய ஆதிக்கத்தை
நிலைநாட்டுவதற்காக
அது நிர் மாணித்துப்
பேணி பாதுகாத்து
வருகிற ஒட்டு மொத்த
சமூக ஏற்பாடும்
பலவீனமடையும்.
இந்தியாவில்
மட்டுமாவது
செய்ய முடியாதா?
சரி, உலக அளவில்
இல்லையென்றாலும்,
ஒரு குறிப்பிட்ட
நாட்டில் இதற்கான
நடவடிக் கைகள்
ஏன் எடுக்கப்படக்
கூடாது என்ற கேள்வி
எழுவதும் இயல்பு.
உதாரணத்திற்கு,
இந்தியப் பொருளாதாரத்தை
எடுத்துக் கொள்
வோம். இந்தியப்
பொருளாதாரமே கூட
சரி வினை நோக்கி
நகர்ந்து கொண்டிருப்பதால்
இந்திய நாட்டின்
பொருளாதாரத்திற்குள்ளேயே
இதனை சரி செய்யும்
வகையில் ஏன் இந்திய
அரசாங்கத்தின்
செலவினத்தை அதிகரிக்க
முடியாது? அப்படி
அதிகரிப்பதன்
மூலம் விவ சாயத்திற்கு
பெரிய அளவில் ஆதரவினை
நல்க முடியுமே;
அதன் மூலம் உணவு
உற் பத்தியை பெருக்க
முடியுமே; அதன்
காரண மாக உணவு
நெருக்கடிக்கும்,
மிகப் பிரம்மாண்
டமாக அச்சுறுத்திக்
கொண்டிருக்கும்
பொரு ளாதார சரிவிற்கும்
முடிவு கட்ட முடியுமே!
ஏன் இதனை இந்திய
எல்லைக்குள் இந்தியப்
பொருளாதாரத்தில்
செய்ய முடியாது?
மேலும் ஏற்கனவே
பணவீக்கம் என்பது
மிக அபாயக் கட்டத்தை
நெருங்கிக் கொண்டிருப்பதால்,
இப்படிப்பட்ட
அரசாங்கத் தலையீட்டுடன்
சேர்த்து சீரான
பொது விநியோகத்
திட்டத்தின் மூலம்
இந்தியா முழுமைக்கும்
அத்தியாவ சியப்
பொருட்களை கட்டுப்படுத்தப்பட்ட
“நியாயமான” விலையில்
கொடுக்கும் திட்டத்
தையும் அமல்படுத்தலாமே?
அரசியல் துணிவு
உண்டா?
அப்படிப்பட்ட
எந்தவொரு அரசாங்க
நடவடிக்கையும்
சர்வதேச நிதி மூலதனத்தை
ஆத்திரமூட்டும்.
எனவே, அது நாட்டை
விட்டு பெரிய அளவில்
வெளியேறும். அதன் காரணமாக,
இந்திய ரூபாயின்
மதிப்பு மேலும்
வீழும். உள்நாட்டு
விலைகளில் இறக்குமதிச்
செலவினங்கள் அதிகரிப்பதன்
காரணமாக எழும்
சுமை அதிகரிக்கும்.
எனவே, இப்படிப்
பட்ட அரசாங்கத்
தலையீடுகளை எடுக்கும்
போது, கூடவே சர்வதேச
நிதி மூலதனங்கள்
நாட்டை விட்டு
வெளியேறுவதையும்
உள்ளே வருவதையும்
கட்டுப்படுத்தும்
வகையிலான சட்ட
திட்ட நடவடிக்கைகளும்
எடுக்கப்பட வேண்டும்.
அதாவது, எல்லைகளைக்
கடந்து பாய்ந்து
செல்லும் நிதி
மூலதனச் சூறாவளி
யில் இருந்து பாதுகாப்பு
வளையம் ஒன்று நமது
பொருளாதாரத்திற்கு
அமைக்கப்பட வேண்டும்.
அதற்கு - தற்போதைய
இந்திய அரசாங்
கத்திற்கும் சரி
அல்லது உள்ள வேறு
ஏதே னும் முதலாளித்துவ
அரசு வந்தாலும்
சரி, சர்வ தேச நிதி
மூலதனத்தின் ஆளுமையை
பல வீனப்படுத்தும்
வகையிலான இந்த
நட வடிக்கையை எடுக்கத்
தேவையான அர சியல்
துணிவு இருக்க
வேண்டும்.
இந்திய ஆளும்
வர்க்க ஆட்சியாளர்
களுக்கு அந்தத்
துணிவு இருக்கிறதா?
பீப்பிள்ஸ் டெமாக்ரசி
(ஜூலை 1)
தமிழில்: ஆர். எஸ். செண்பகம்,
திருநெல்வேலி.