|
||||
|
கருணாநிதியின் டெசோ மாநாடும் இந்தியாவும்
இலங்கையில் பல பிரச்சினைகள்
காணப்படுகின்றன. அத்தகைய
பிரச்சினைகளில்
இருந்து விடுவிப் புக்கான இலங்கையே தட்டுத்தடு
மாறிக் கொண்டுள்ள
தருணத்தில்
தமிழ்நாடு
முன்னாள்
முதலமைச்
சர் முத்துவேல்
கருணாநிதி
இலங்கைக்குள்
மூக்கை நுழைத்துக்
கொண்டு உத்தேசமாக
நடக்கக் கூடியதையும்
நடக்க இருப்பதையும்
குழைத்துக்கொட்டு
வதற்கு புடம் போடுவது
போன்று தமிழீழக் கனவு காண்பதும்,
டெசோ மாநாட்டை
நடத்தவுள்ளமையும்
நிச்சயமாக
இலங்கைத்
தமிழ் மக்களை குறிப்பாக
வடக்கு கிழக்கு தமிழ் மக்களை
மாத்திரமின்றி
தமிழ் பேசும் மக்களையும்
இக்கட்டான
நிலைக்குத்
தள்ளும் என இலங்கை
மற்றும் இந்திய சிரேஷ்ட அரசியல் முக்கியஸ்தர்கள்
கூறிவருகின்றனர்.
சர்ச்சைக்குரிய விஷயங்களை
முக்கிய ஸ்தர்கள் வெளியிடுவது
பதவியிலிந்து
இறங்கிய பிறகு அல்லது
ஓய்வுபெற்ற
பிறகு என்பதை அநேகர் அறிந்து கொள்வர். அந்தவகையில் முதலமைச்சர்
பதவியிலிருந்து
அகன்ற நிலையில் வயதான காலத்தில்
கனவுகளை நன வாக்க
முயல்வதில்
எந்தவித அர்த்தமும்
இல்லை. முதிர்வான காலத்தில்
நிறை வேறாத,
நிறைவேற்றமுடியாத
வீச்சான்
பேச்சுகளை
பேசுவதில்
சிலருக்கு
அலாதியான
பிரியமிருப்பதுண்டு.
ஏனெனில் அத்தனை
கருத்துக்களுக்கும்
அபிப்பிராயங்களுக்கும்,
ஆலோசனை களுக்கும்
எத்தகைய பெறுமானங்களும்
இருக்கப்போவதுமில்லை.
சுய வீழ்ச்சி
ஏற்படப்போவதுமில்லை
என்பதனாலாகும்.
தமிழீழ ஆதரவாளர்கள்
மாநாட்டை
நடத்துவதன்
மூலம் இலங்கையின்
வட புல
தமிழர்களின்
போராட்டத்துக்கு
பின்னடைவே
ஏற்படும். உள்ளக
போரா ட்ட
முனைப்புகளின்
ஸ்தரத்தன்மையை
சீர்குலைப்பதற்கென்றே
முனைகின்ற
கருணாநிதி
- ஆக்ரோஷமாகவும்
அகம்பாவம்
பிடித்தவர்
போன்றும்
செயல்படுவதாக
பிறர் உணரும்படி
அடையாளப்படுத்தப்படக்கூடாது.
தமிழ்மக்களின்
பல்வேறு பிரச்சினைகள்
தொடர்பாகவும்,
இனப்பிரச்சினைக்கான
தீர்வு தொடர்பாகவும்
அரசாங்கமும்,
தமிழ் கூட்டமைப்பும்
ஒரு புரிந்துணர்வு
க்கு வரமுடியாதுள்ள
சூழ்நிலையில்
அல்லது அதற்கான முயற்சி இன்னும் கைவிடப் படவில்லை என்ற அடிப்படை
யில் குறித்த
டெசோ மாநாடு
நிலைமை களை இலங்கைக்கு
மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
இணைந்த வடகிழக்கு
மாகாண சபையின் அந்தி காலத்தில்
பிரகடனப்படுத்தப்பட்ட
தமிbழத்தையும்
கூட இலங்கையோ,
தமிழ் மக்களோ ஏற்கக்கூடியதான
காலச்சூழலோ
புறச்சூழலோ
நாட்டில்
இருக்கவில்லை.
புஷ்வாணமாகிய அந்த முயற்சியை
அன்று பலத்துடன்
இருந்த விடுதலை புலிகளும்
தட்டிக்கழித்தனர்.
களத்தில் இருந்த
இந்தியா கூட பாராமுகமாக
இருந்தது.
அதனைச்சட்டை செய்ய வில்லை. பதிலாக அதனைச்
செய்த முக்கியஸ்தரை
ஒரிஸ்ஸா மாநிலத்தில்
புகலிடத்துக்குள்ளாக்கியது.
இந்த நிலையில்
இந்திய மத்திய அரசாங்கத்தின்
பங்காளிக்கட்சி
என்ற ஒரே
காரணத்துக்காக
தமிழ்நாட்டில்
தமிbழம் காண முயலும்
கருணாநிதியின்
கைங்கரியத்துக்கு
இந்தியா கைகொடுக் குமா? என்பது கேட்கப்பட
வேண்டிய கேள்வியாகும்.
இந்திய உள்துறை
அமைச்சர்
பி. சிதம்பரமும் ஒரு தமிழ் நாட்டுப்
பிரஜையே.
அவரது எச்சரிக்கை
காரணமாக குறித்த நாட்டில் தமிழீழத் தீர்மானம்
எதனையும்
நிறைவேற்றும்
எண்ணத்தை
கைவிடுவதாக
கருணாநிதி
கூறியிருந்தாலும்
மாநாட்டை
கைவிடுவ தாக அறிவிக்கவில்லை.
திட்டமிட்ட படி ஆகஸ்ட் 12 இல் மாநாடு
நடைபெற்றே
ஆகும். என்பதை அறிய முடிகிறது.
திர்மானம்
நிறைவேற்றினாலும்
நிறைவேற்
றாவிட்டாலும்
தமிழீழ ஆதரவாளர்கள்
இயக்கம் என்ற பெயரில்
ஒரு மாநாடு
நடைபெறுவது
முற்றிலும்
விரும்பத்தகா
தது என்பது
இலங்கையின்
விருப்பமாக
வுள்ளது.
முன்னாள் முதல்வர் போன்று, முதல்வ ராக இருந்த
காலஞ் சென்ற முதலமைச்
சர் அண்ணாதுரையும்
சுதந்திர
இந்தியா வில் ஒரு
தனியான திராவிடதேசத்தை
கோரியவரே. 1963இல்
இந்தியசீன
போரைத் தொடர்ந்து
தனியான திராவிட தேசத்தை உருவாக்குவதற்கான
கோரிக் கையை கைவிட்டார்.
சீனப்படையெடுப் புக்கு
எதிராக கிளர்ந்தெழுமாறு
ஒவ்வொரு இந்தியரையும்
கேட்டுக்கொண்டார்.
தனது கோரிக்கையை
அண்ணாத்துரை
கைவிட் டபோதிலும்
மெட்றாஸ்
மாநிலத்தை
தமிழ்நாடு
மாநிலமாக
மாற்றுவதில்
வெற்றி கண்டார். அக்காலப்பகுதியில் 1967 முதல்
1969 வரையாக மாநிலத்தின்
முதலமைச்சராக
இருந்தமை
குறிப்பிடத்
தக்கது.
இந்திய சுதந்திரப்போர்
உச்சக்கட்
டத்தில் இருந்த தருணம் மகாத்மா காந்தி - ஜவஹர்லால்
நேரு போன்ற
சுதந்திர
போராட்டக்காரர்கள்
தமிழ் நாட்டுடன்
நெருங்கிய
தொடர்புகளை
கொண்டிருந்தனர்.
அங்கு காங்கிரஸ்
கட்சியின்
பலம் பொருந்தியவராக
இருந்த கே. காமராஜ் - திராவிட
முன்னேற்றக்கழக
அரசியல்வாதிகளை
தீவிரவாத
மனப்பாங்குகளுக்குள்
சங்க மிக்க
விடவில்லை.
தமிழ்நாடு
மற்றும் வடக்குப்பகுதியிலிருந்து
தோன்றிய இந்திய சுதந்திரப்
போட்டக் காரர்களுக்
கிடையிலான
தொடர்புகள்
- மகாத்மா காந்தியின்
மகன் மாரில்
ஒருவரை முதல் இந்திய
ஆளுனரான சக்கரவர்த்தி
ராஜகோபாலாச்சாரியார்
(ராஜாஜி) அவர்களின்
மகள் மணம்
முடித்ததைத்
தொடர்ந்து
மிகக் கெட்டியாகின.
இந்தியா சுதந்திரம்
பெற்றதன்
பின்னரான
காலப் பகுதியில்
தமிழ்நாட்டில்
பிறஹ்மிஷ்ட்
களின் ஆதிக்கம் உச்சக் கட்டத்தில்
இருந்தது.
அண்ணாத்துரையால் பிராமணர்களின்
ஆதிக்கத்துக்கு
எதிராக செயல்பட வேண்டியதாயிற்று.
எவ்வாறாயினும் ஒரு தனியான
திராவிட மாநிலம் - தமிழ் நாடு
கோரிக் கையை அண்ணாதுரை
எடுத்துரைத்தமை
போன்று, அவரது வாரிசான
மு. கருணாநிதி மாநிலத்தில்
மொழிப்பிரச்சினையைக்
காரணங்காட்டி
தமிழ் தீவிரவாதத்தை
தூக்கிப்பிடித்தார்.
தமிழ் நாட்டு
அரசியலில்
எம்.ஜி.ஆர்.
மற்றும் அவரது வாரிசான
ஜெயலலிதா
போன்ற வலுவான அரசியல் சக்திகளின்
வெளிவருகையைத்
தொடர்ந்து
எதிர்பார்க்கப்பட்டமை
போன்று தமிழ் விவகாரங்கள்
தொடர்பான
கருணாநிதி
யின் தீவிரப்
போக்குகளால்
தாக்குப்
பிடிக்க முடியவில்லை.
தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியில்
இருந்த வேளையில் இலங்கையில்
தமிழ் இராணுவ நடவடிக்கை
80களின் ஆரம்பத்தில்
தோற்றம் பெற்றது. இலங் கைத் தமிழர்
விவகாரத்தில்
எம்.ஜி.ஆர்.
இரக்க சுபாவம் கொண்டவராக
இருந்த போதிலும், குறித்த விஷயம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு
குந்தகத்தை
ஏற்படுத்
திவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டை
யும் பேசியதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
ராஜீவ் காந்தி கொலையைத் தொடர்ந்து,
தமிழ் நாட்டில் புலிகளின்
நடவடிக்கைகள்
ஜெயலலிதாவால்
முடக்கப்பட்டன. இலங்கைத் தமிழர்கள்
மீது இரக்கம்
கொண்ட சுபாவத்தை
அவர் கடைப்பிடித்தபோதும்,
அவரது மாநிலத்தில்
புலிச் செயற்பாடுகளுக்கு
ஒருபோதும்
ஆதரவளிக்கவில்லை.
அதேவேளை தற்போது கிட்டத்தட்ட
50 ஆண்டுகள்
கடந்துவிட்டது. அண்ணாதுரை அத்தகைய
தனிநாட்டுக்
கோரிக்கையை
அன்று கைவிட்டார்.
ஆனால் அதுபோன்ற நிலைமை மீண்டும் சீனா - பிராந்திய
ரீதியாகவும்,
பொருளாதார
ரீதியாகவும்
இந்தியாவுக்கு
ஒரு அச்சுறுத்தலாகி
வருவதால்
தோன்றியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
காரணம் - இலங்கையுடனான
சீனாவின்
உறவுகள் கடந்த சில
வருடங்களில்
குறிப்பிடத்தக்களவு
வளர்ச்சி
கண்டுள்ள
மையாகும்.
அந்த வகையில்
கடந்த ஆண்டுகளில்
இந்தியா பிராந்திய
தளபதி யாக திரும்பிக்
கொண்டிருப்பதால்,
அந்த நாட்டின்
இறைமை, ஆள்புல ஒருமைப்பாடு
தொடர்பான
கவலை இலங்கையின்
விவகாரம்
காரணமாக அமையக் கூடாது என்று அந்த
நாடு உணருகிறது
போலும். தனது நாட்டு
பாதுகாப்பு
படையினர்களுக்கு
எதிராக நெக்ஸலைட்டுகள்
மற்றும் மாக்ஸிட்களால்
மேற்கொள்ளப்பட்ட
பல்வேறு தாக்குதல்
களை இந்தியா
கண்டுணர்ந்துள்ளது.
இந்தக் கட்டமைப்பில்
இந்திய அரசாங் கம், அண்டைய
நாடான இலங்கையில்
ஈழம் விவகாரத்தை
இந்திய அரசாங்கம்
சரிகாணாது. தமிழ்
நாட்டிலிருந்து
கருணா நிதி மேற்கொள்ளும்
முயற்சிக்கான
இந்திய ஆதரவு, அந்த
நாட்டின்
ஒட்டு மொத்த அச்சுறுத்தல்களுக்குள்ளாகலாம்
என்பது ஆய்வாளர்களின்
கருத்தாகும்.
சட்டத்தரணி |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |